மதங்கள் தரும் நம்பிக்கைகள்....
Saturday, June 6, 2009
1. யாரோ ஒரு சமுதாயம்தான் கடவுளை தொட அனுமதிக்கப்பட்டவர்கள்....
2. தீ மிதிச்சா கடவுள் அருள் பாலிப்பார்...
3. உண்டியல்ல லஞ்சம் போட்டா கடவுள் நமக்கு ஸ்பெஷல் கவனம் செலுத்துவார்.....
4. இன்ன டிரெஸ் போட்டுட்டு வந்தாதான் கடவுள் கோவிச்சுக்க மாட்டார்.....
5. ஆளக்கொன்னா குத்தம்...ஆட்டகொன்னா குத்தமில்லே....
6. ரோட்டுல போனாக்க முள் குத்தினா , சகுனம் செரியில்லே...
7. ஒருவனுக்கு ஒருத்தி...அந்த ரூல்ஸ் ஆண்டவனுக்கு பொருந்தாது....
8. நாகரீகத்தை மதிப்போம்...அரைநிர்வாண சாமிகளையும் மதிப்போம்.....
9. சொந்த முயற்சியில் அடையாத வெற்றியை கல்கி சாமியார் செய்து கொடுப்பார்...
10. கடவுளைத் தொழு....ஆனால் உன் கடவுளை மட்டும் தொழு....
11. உன் கடவுளை எதிர்ப்பவன் மனித இன விரோதி.....
12. ரோட்டில் பசிக்காக பிச்சையெடுப்பவன் பைத்தியக்காரன்....பசிக்கு சோறிடாமல் முக்குக்கு முக்கு கோயில் கட்டு....புண்ணியம் கிடைக்கும்..
13.கோயிலில் புலால் உண்ணாதே , கஞ்சா குடி......
14.உன் சாமியின் கோயிலைக்கட்டு.....அடுத்தவன் சாமியின் கோயிலை இடி..
15.ஆயிரம் வருசம் வாழும் பாபாவும் உண்டு.....அஞ்சு நாளே வாழும் குழந்தையும் உண்டு...அது அவனவன் செய்த பாவத்தை பொருத்தது.....அஞ்சு வயசுக்குழந்தை நடுராத்திரியில் அழுது அம்மாவின் தூக்கத்தை கெடுத்தது பாவம்தானே??
16.குலத்தொழிலை செய்யாதவன் மகா பாவி.....
17.அரசியல்ல பிரச்சினையா....ராம்ராம் சொல்லி ரத யாத்திரை நடத்து........ ஆண்டவன் அருளுவார்....
18.சமயத்தில் ஆண்டவன் கடலுக்கு கீழேயும் பாலம் கட்டுவார்....
19.ஆதாமையும் , ஏவாளையும் ஆண்டவன் படைத்தார்......(பட்டாம்பூச்சிகளை மனிதனா படைத்தான்?)
20.வானுயர்ந்த கோபுரம் கட்டு...அதற்குமேல் மக்கள் குடியிருக்க மாடிகளை கட்டாதே ( மதுரை..)
21.கங்கையில் குளித்தால் பாவம் தீரும்........( பாவம் பண்ணிவிட்டு கங்கை நோக்கிச்செல்..)
22. மகாமகத்தில் குளித்தால் பாவங்கள் தீரும் ......( சமயத்தில் மக்களே தீருவார்கள்......)
23. ஆசையை விடு ..புத்தர்...( ஆனால் ஆளும் ஆசைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை...சிங்களம்..)
24. எல்லா வியாதிகளையும் பரிசுத்த ஆவி குணப்படுத்தும்...( போதகரின் மகன் மருத்துவமனையில்..)
25. ஆட்டைக்கொல்லலாம்.....ஆனால் மாட்டைக்கொல்லாதே மகாபாவம்...
குறிப்பு : இது ஒரு மீள்பதிவு.!
'‘.
8 பின்னூட்டங்கள்:
Bala,
have a look at it
http://dharumi.blogspot.com/2009/05/308_27.html
கருணாநிதி தேர்தலில் தோத்துவிட்டால் ஒரு புலம்பல் புராணமே நிகழ்த்துவார். அது போல் உள்ளதே.
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. யாரும் உங்கள் மீது திணித்தால் வாருங்கள். அதைவிட்டு விட்டு கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி என்று அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட்டு நாகரிகமே இல்லாத காட்டுமிராண்டியாகிவிடக்கூடாது.
நண்பர் ராஜாரமன் அவர்களுக்கு, பதிவில் சொன்னதெல்லாம் அடுத்தவர் நம்பிக்கையை குறை கூறுவதல்ல.. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நிகழும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும்.. இங்கே குறிப்பிடுவது கடவுளின் 'கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி' என்பதல்ல.. தன்கடவுள் என்ற பெயரால் அடுத்தவர்களின் உள்ளத்தை நிந்தனை செய்வது.. இப்படி அடுத்தவரைப் புண்படுத்த கடவுளைக் கும்பிடுகிறவன் 'காட்டு மிராண்டிதான்'..
Bala,
have a look at it
http://dharumi.blogspot.com/2009/05/308_27.html//
நன்றி நண்பர் பதி.
மிகச்சிறந்த கட்டுரை.....
அனைத்து நண்பர்களும் படிக்கவேண்டிய ஒன்று.
கருணாநிதி தேர்தலில் தோத்துவிட்டால் ஒரு புலம்பல் புராணமே நிகழ்த்துவார். அது போல் உள்ளதே.//
இது வேறு தளம். அது வேறு தளம். இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் அன்பு நண்பர் இராஜாஇராமன்.
***
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. யாரும் உங்கள் மீது திணித்தால் வாருங்கள். அதைவிட்டு விட்டு கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி என்று அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட்டு நாகரிகமே இல்லாத காட்டுமிராண்டியாகிவிடக்கூடாது.//
கடவுளை கும்பிடுபவன் காட்டுமிராண்டியோ இல்லையோ கடவுளை கும்பிடாதவன் காட்டுமிராண்டியாக இருக்க வாய்ப்பில்லை.
இன்னொன்று இந்தப் பதிவு முழுக்க முழுக்க மதம் என்ற மூடநம்பிக்கையின் பால் நாம் செய்து கொண்டிருக்கும் முட்டாள் தனங்களையே சுட்டுகிறது. கடவுள் மறுப்பு என்ற தளத்திற்குள் போகவே இல்லை.
இங்கே சொல்லியிருக்கும் வாதங்களின் பாலான உங்கள் கருத்து இருக்குமானால் ஆரோக்கியமான விவாதத்திற்கு வழியுன்டு...
நண்பர் ராஜாரமன் அவர்களுக்கு, பதிவில் சொன்னதெல்லாம் அடுத்தவர் நம்பிக்கையை குறை கூறுவதல்ல.. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நிகழும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும்.. இங்கே குறிப்பிடுவது கடவுளின் 'கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி' என்பதல்ல.. தன்கடவுள் என்ற பெயரால் அடுத்தவர்களின் உள்ளத்தை நிந்தனை செய்வது.. இப்படி அடுத்தவரைப் புண்படுத்த கடவுளைக் கும்பிடுகிறவன் 'காட்டு மிராண்டிதான்'..//
நன்றி நண்பர் அறிவுமணி....! அருமையான பதில்
//நண்பர் ராஜாரமன் அவர்களுக்கு, பதிவில் சொன்னதெல்லாம் அடுத்தவர் நம்பிக்கையை குறை கூறுவதல்ல.. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் நிகழும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும்.. இங்கே குறிப்பிடுவது கடவுளின் 'கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி' என்பதல்ல.. தன்கடவுள் என்ற பெயரால் அடுத்தவர்களின் உள்ளத்தை நிந்தனை செய்வது.. இப்படி அடுத்தவரைப் புண்படுத்த கடவுளைக் கும்பிடுகிறவன் 'காட்டு மிராண்டிதான்'..//
வழிமொழிகிறேன்....
சிந்தனையைத் தூண்டும் பதிவு.
நன்றாயிருக்கிறது.
Post a Comment