தமிழகம் முழுக்க ஆங்கிலக்கல்வி - விஜயகாந்த்

Monday, July 28, 2008

தே.மு.தி.க., சார்பில், மின்வெட்டு, காவிரி நீர் பிரச்னை, உரத்தட்டுப்பாடு, விவசாய கடன் தள்ளுபடியில் குளறுபடியை கண்டித்து தஞ்சாவூர் அண்ணாதுரை சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பச்சை துண்டால் முண்டாசு கட்டியபடி, கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:


தேமுதிக ஆட்சிக்கு வந்தால் முதல் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஆங்கிலம் பேசும் வகையில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் விஜயகாந்த்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080727125941&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=7/28/2008&dName=No+Title&Dist=

நம் கேள்வி

சமச்சீர் கல்வி என்றால் அனைவரும் ஆங்கிலம் படிப்பதா?????

அனைவரும் ஆங்கிலம் படித்தால் தமிழ் நாட்டில் தமிழை யார் படிப்பது???

ஏற்கெனவே புற்றீசல் போல பெருத்து வரும் ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளால் தமிழ் காணாமல் போய்விடும் போல இருக்கிறது....முழுக்க ஒழிக்க திட்டமிட்டு விட்டாரோ புரட்சிக்கலைஞர்......தன் தாய்மொழியான தெலுங்கு வழிக்கல்வி என்று கூவாத வரைக்கும் மகிழ்ச்சியே!!

அடுத்த முக்கியமான கேள்வி -

ஏற்கெனவே சம்பந்தமில்லாமல் உளருகிறார் விஜய்காந்த் என்ற குற்றச்சாட்டு நிலவுகையில் மேற்கண்ட ஆர்ப்பாட்டத்திற்கான கருத்திற்கு சம்பந்தமில்லாத சம்ச்சீர் கல்வி எங்கு வந்தது???

--------------

விஜயகாந்த் பேசியதாவது:

"உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்,' என்றதில் விவசாயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தொழில் துறைக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விவசாயிகளுக்கு நீர், விதை, உரம், மின்சாரம் என எதுவும் கிடைப்பதில்லை.

நம் கேள்வி

மின்வெட்டு என்பது தொழிற்சாலைக்கும் அதிகமாக இருப்பதாக தொழிற்சாலைகளும் புகார் தெரிவிக்கின்றனவே..?????? ஒரு வேளை தொழிற்சாலைகள் அதிகமிருக்குமிடத்திற்கு சென்றால் தமிழக அரசு விவசாயிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறது தமிழக அரசு என்று உளருவீர்களோ??????

-------------------

விஜயகாந்த் பேசியதாவது:

மற்றவர்கள் பதவி, சொத்து, செங்கோல் மீது பைத்தியமாக உள்ளனர். நான் மக்கள் மீது பைத்தியமாக உள்ளேன்.//////

இதற்கு அடுத்த வரியை இவ்வாறு பேசுகிறீர்களே.....உங்களை நாடகம் போடுபவர் என்றும் பிதற்றுபவர் என்றும் சொல்வதில் என்னதான் தவறு??


///////நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜாதி, மதம், ஏழை, பணக்காரர்கள் வித்தியாசமில்லாத சமூகத்தை உருவாக்குவோம்.///////

---------------------

விஜயகாந்த் பேசியதாவது


விளைபொருட்களுக்கு விலையில்லாமல் விவசாயிகள் தினம், தினம் நஷ்டத்தை சந்திக்கின்றனர். கூடுதல் விலை கொடுத்து வெளிநாட்டில் இருந்து அரிசி, பருப்பு, பாமாயில் இறக்குமதி செய்கின்றனர


நம் கேள்வி

அரிசி ஓக்கே...பாம் மரங்கள் விளைவிப்பதற்கும் , விளைவதற்கும் தகுந்த சூழல் இல்லாத தமிழ்நாட்டில் பாமாயில் இறக்குமதி பண்ணாமல் என்ன செய்வதாம்???? பேசுவதற்கு முன் தெரிந்து பேசுங்களேன் புரட்சிக்கலைஞரே!!

--------------------


விவசாய கடன் ரூ.71 ஆயிரம் கோடியை மத்திய அரசும், ரூ.ஏழாயிரம் கோடியை மாநில அரசும் தள்ளுபடி செய்தது. இது, பினாமி பெயர்களில் நிலம் வைத்துள்ள பெரிய பணக்காரர்களுக்குத்தான் தள்ளுபடியானது. சிறு, குறு விவசாயிகளுக்கு வங்கியில் கடனே கொடுக்கவில்லை

நம் கேள்வி

நிருபிக்க இயலாத இதுபோன்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்களை சொல்லி மக்களிடம் கைதட்டு வாங்க முயலும் ஒரு நாலாந்தர அரசியல்வாதியான உங்களை மாற்றத்திற்கான திறவுகோலாக மக்களை நம்பச்சொல்கிறீர்களே????

இது எவ்விதத்தில் நியாயம்??

-----------------------------------

கீழ இருக்குறது நம்ம கமெண்ட் கெடையாதுங்கோவ்...தினமலரின் கமெண்ட்........வெகுஜன ஊடகங்கள் கூட விஜயகாந்தின் கோயபல்ஸ் பிரச்சாரத்தை கண்டு கொள்ள துவங்கி விட்டது நல்லதொரு மாற்றமே!

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=2792&cls=row4&ncat=TN

* ஆர்ப்பாட்டத்துக்காக கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியபோது, விஜயகாந்த் வேனில் வந்தார். போலீசார் அனுமதி வழங்க மறுத்த அண்ணா சிலை அருகே வேனில் நின்றவாறு விஜயகாந்த் பேசத்துவங்கினார். அதனால், பந்தலில் காத்திருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் தொண்டர்கள் நொந்து போயினர். பேசிய தகவலையை திரும்பத்திரும்ப விஜயகாந்த் பேசியதுடன், பல முறை டென்ஷன் ஆகி வேனுக்குள் அமர்ந்து கொண்டார். தொண்டர்களை பல முறை ஒருமையில் கடிந்து கொண்டார். விஜயகாந்த் மீது தொண்டர்கள் பச்சை துண்டுகளை வீசினர். அதை பிடித்து மீண்டும் தொண்டர்களை நோக்கி அவர் வீசி எறிந்தார். காவிரி பிரச்னை உட்பட பல தகவல்களை அவர் தவறான தகவல்களுடன் பேசியது, டெல்டா விவசாயிகளை குழப்பம் அடையச்செய்தது.

------------------


இன்னும் தோலுரிப்பேன்!


மதிபாலா

112 பின்னூட்டங்கள்:

Robin July 28, 2008 9:06 PM  

//சமச்சீர் கல்வி என்றால் அனைவரும் ஆங்கிலம் படிப்பதா?????

அனைவரும் ஆங்கிலம் படித்தால் தமிழ் நாட்டில் தமிழை யார் படிப்பது???// -
ஏன் ஏழைகள் மட்டும் தமிழ் வழியில் படிக்க வேண்டும்? விஜயகாந்த் சொல்வது தான் சரி. அனைவருக்கும் ஆங்கில மொழியில் கற்பிப்பதன் மூலம் சமசீர் கல்வியை கொண்டு வர முடியும். இன்று தமிழ் மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்று முழங்குபவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஆங்கில மொழி வழியில் தானே படிக்கின்றனர். பின்னர் ஏன் இந்த பித்தலாட்டம்? இன்றுள்ள நவீன உலகில் ஆங்கில வழி படிப்பதுதான் சிறந்தது. இது தமிழ், தமிழ் என்று அரசியலுக்காக முழங்குபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். தமிழ் ஒரு படமாக வைக்கப்படவேண்டுமே தவிர, எல்லாப் பாடங்களையும் தமிழில் தான் அதுவும் ஏழைகள் மட்டும் படிக்க வேண்டும் என்று வற்ப்புறுத்துவது என்பது வெறும் மோசடி வேலை.

மதிபாலா July 28, 2008 9:42 PM  

வாங்க ராபின் ....
சவுக்கியமா இருக்கீகளா?????

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா????

உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான ஜப்பானில் யாருக்குமே ஆங்கிலம் தெரியாது.......

தொழில்நுட்பத்தில் முன்னணி நாடான ஜெர்மனியில் ஆங்கிலத்தில் பேசினால் உங்களை இழிவாகத்தான் பேசுவான்.......

நாகரீகத்தின் தொட்டிலான பாரீஸ் நகரத்துக்கும் ஆங்கிலத்துக்கும் சம்பந்தமே கிடையாது!!

இன்றைக்கு ஆசியாவில் நம்மை விட முன்னேறிய நாடுகளான சீனா , தாய்லாந்து , தென்கொரியா , தைவான் நாடுகளுக்கும் ஆங்கிலத்துக்கும் காத தூரம் !!!!!!

வல்லரசுகளில் ஒன்றாக திகழ்ந்த ரஷ்யாவில் யார் ஆங்கிலம் படித்தார்கள்???

வல்லரசு நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் ரஷ்யா , சீனா , பிரான்ஸ் நாடுகளில் ஆங்கிலமில்லையே

முன்னேற்றத்துக்கு தாய்மொழி வழிக்கல்விதான் முக்கியம்னு அவுங்க எல்லாம் அறிஞ்சு தெளீஞ்சிகிட்டதுனாலதான் அவுனுக முன்னேறிகிட்டே இருக்காங்க.....

நம்ம ஆளுங்க அமெரிக்கன் எம்பஸில கால் கடுக்க காத்துக்கெடக்காங்க!!! ஆங்கிலம் அறிஞ்சா நாடு முன்னேறும்னு சொல்றீங்களே ....

கடந்த 30 வருசத்தில ஆங்கிலக்கல்வி பரவலாக்கப்பட்ட பிறகு கூட ஏன் ஒரு இன்வென்சன் கூட தமிழகத்தில் இருந்து வரல??????

ராஜன் July 28, 2008 10:02 PM  

அது சரிதான் ...ஆனால் , ஆங்கில கல்வி ரொம்ப விரும்பப்படறதா ஆனதுக்கு என்ன காரணம்?

Robin July 28, 2008 10:05 PM  

படித்த ஜெர்மானியர்கள் எல்லாருக்கும் ஆங்கிலம் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று சீனர்கள் ஆங்கிலம் படிக்கத் தொடக்கி விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலும் தமிழ்நாடு என்பது தனி நாடு அல்ல. இந்தியாவின் ஒரு சிறு பகுதி மட்டுமே. எனவே தமிழை மட்டும் தெரிந்து காலத்தை ஓட்டலாம் என்பது முடியாத காரியம். இன்று சர்வதேச அளவில் பரவலாக பேசப்படுவது ஆங்கிலம் மட்டுமே. இன்று பன்னாட்டு நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில், இந்திய நிறுவனங்களும் பல நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஆங்கிலத்தில் புலமை இருந்தால் மட்டுமே ஒருவரால் முன்னேற முடியும். இன்று அமேரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளில் கணிசமான அளவினர் இந்தியர் என்பதை மறக்க வேண்டாம். ஏன் உங்கள் குழந்தைகளைக்கூட கண்டிப்பாக ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளிலேயே சேர்ப்பீர்கள் அல்லது சேர்த்திருப்பீர்கள்.

மதிபாலா July 28, 2008 10:57 PM  

படித்த ஜெர்மானியர்கள் எல்லாருக்கும் ஆங்கிலம் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? /////

ஜெர்மானியர்கள் எல்லாரும் படித்தவர்கள் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறேன்.........???? என் துறையிலிருக்கும் சவுரர் , டிரட்ஜ்லர் , வோல்க்மேன் , ரீனர்ஸ் & பர்ஸ்ட் கம்பெனிகளிலிருந்து சற்றேறக்குறைய அரை டஜன் நண்பர்கள் எனக்குண்டு.........இங்கே இந்தோனேசியாவிற்கு வரும் அவர்கள் எல்லாம் மெத்தப்படித்தவர்கள்.....ஆனால் ஆங்கிலமறியாமல் ட்ரான்ஸ்லேட்டர் வைத்துக்கொண்டே உலாவுகிறார்கள்...!

மதிபாலா July 28, 2008 10:59 PM  

இன்று பன்னாட்டு நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில், இந்திய நிறுவனங்களும் பல நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஆங்கிலத்தில் புலமை இருந்தால் மட்டுமே ஒருவரால் முன்னேற முடியும்.//////

நான் பன்னாட்டு நிறுவனங்களை நாமே ஏன் உருவாக்கக்கூடாது என்று பேசிக்கொண்டிருக்கிறேன்...நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக நம் மூளையை அடகு வைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்...ஒன்றும் சொல்வதற்கில்லை!!

மதிபாலா July 28, 2008 11:05 PM  

ஏன் உங்கள் குழந்தைகளைக்கூட கண்டிப்பாக ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளிலேயே சேர்ப்பீர்கள் அல்லது சேர்த்திருப்பீர்கள்.////

இன்னும் எனக்கு குழந்தைகளே இல்லை............எனவே அதுபற்றி பிறகு பார்ப்போம்...ஆமாம் , கொள்கைகளை பற்றி விவாதித்துக்கொண்டிருக்கையில் ஏன் என் வீட்டிற்குள் புகுந்து பார்க்கிறீர்கள்??

------


இன்று சீனர்கள் ஆங்கிலம் படிக்கத் தொடக்கி விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சீனா என்னும் மிகப்பெரிய சந்தையில் தன் கடையை விரிக்க எத்துனை அமெரிக்கர்கள் மாண்டரீன் படிக்கத்துவங்கி விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா???

தாய் மொழிவழிக்கல்வியே உலகத்தில் மிகச்சிறந்தது................

பிதற்றல் விஜயகாந்திற்கு
பின்பாட்டு பாடப்போய் தாய்மொழிவழிக்கல்வியையே புறந்தள்ளுவது ுறையாகாது...
அவர்தான் விபரம் தெரியாமல் உளருகிறாரென்றால் படித்த , விபரம் தெரிந்த உங்களை போன்றவர்கள் அதற்கெல்லாம் ஜால்ரா போடக்கூடாது நண்பரே!

மதிபாலா July 28, 2008 11:07 PM  

அது சரிதான் ...ஆனால் , ஆங்கில கல்வி ரொம்ப விரும்பப்படறதா ஆனதுக்கு என்ன காரணம்?

--------

அக்கரைக்கு இக்கரை பச்சை...அதான் காரணம்.....இங்கிலீஷ் படிச்சவந்தான் அறிவாளிங்கிற முட்டாள்தனமான கருத்துதான் காரணம்............மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிறதுதான் கல்வி முறைன்னு இருக்கிற முட்டாள்தனமான கல்வி முறை காரணம்...........நமக்கு தெரியாத ஒரு விசயம் எப்பவுமே நல்லதுன்னு சொல்ற மாக்களின் கருத்துத்தான்..மக்களின் மனநிலைதான் ஒரே காரணம்!!!

Robin July 29, 2008 4:50 AM  

//இன்னும் எனக்கு குழந்தைகளே இல்லை............எனவே அதுபற்றி பிறகு பார்ப்போம்...//இதைத்தான் பித்தலாட்டம் என்றேன். தங்களாலேயே தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை தமிழ் வழிக் கல்வியில்தான் படிக்கவைபேன் என்று உறுதியாகக் கூற முடியாத நிலையில் ஏன் ஊருக்கு மட்டும் உபதேசம்?
//ஆமாம் , கொள்கைகளை பற்றி விவாதித்துக்கொண்டிருக்கையில் ஏன் என் வீட்டிற்குள் புகுந்து பார்க்கிறீர்கள்??// எனென்றால் நீங்கள் மற்றவர்களுடைய குழந்தைகள் மட்டும் தமிழ் வழியில் படிக்கவெண்டும என்று வலியுறுத்தும்போது உங்களுடைய குழந்தைகள் எந்த மொழி வழியாக் படிக்கிறார்கள் என்று அறிந்துக் கொள்ள நினைப்பதில் என்ன தவறு? கொள்கையை முதலில் நீங்கள் பின்பற்றிக்காட்டிவிட்டு மற்றவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்.
//.........இங்கே இந்தோனேசியாவிற்கு வரும் அவர்கள் எல்லாம் மெத்தப்படித்தவர்கள்.....ஆனால் ஆங்கிலமறியாமல் ட்ரான்ஸ்லேட்டர் வைத்துக்கொண்டே உலாவுகிறார்கள்...!// - எனக்குத் தெரிந்த ஜெர்மானியர்கள் எல்லாரும் நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள். ஆங்கிலம் தெரியாத ஜெர்மானியர்களும் படித்தவர்களில் இருக்கலாம், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஆங்கிலம் தெரிந்திருந்தால் ஏன் translators வைத்துக்கொண்டு அலைய வேண்டும். உங்களை அறியாமலேயே same-side goal அடித்து விட்டீர்கள். இனிமேலாவது தமிழர்கள் எல்லாம் மடையர்கள், என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்று நினைக்காமல், சற்று நிதானித்து எழுதவும்.

Robin July 29, 2008 5:02 AM  

//பிதற்றல் விஜயகாந்திற்கு
பின்பாட்டு பாடப்போய் தாய்மொழிவழிக்கல்வியையே புறந்தள்ளுவது ுறையாகாது...// நல்லக் கருத்துக்களை விஜயகாந்த் சொன்னால் என்ன ரஜினிகாந்த் சொன்னால் என்ன, அதை ஆதரிப்பதில் எந்த தவறும் கிடையாது. தாய்மொழியைப் புறந்தள்ளுவதற்கும், ஆங்கிலமொழி வழிக் கல்வி பயில்வதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.

மதிபாலா July 29, 2008 7:03 AM  

இதைத்தான் பித்தலாட்டம் என்றேன். தங்களாலேயே தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை தமிழ் வழிக் கல்வியில்தான் படிக்கவைபேன் என்று உறுதியாகக் கூற முடியாத நிலையில் ஏன் ஊருக்கு மட்டும் உபதேசம்?

--------------

என் பித்தலாட்டத்தை கண்டு பிடித்ததற்கு நன்றி....என்னைப்பற்றி அறியாமல் , நான் யார் என்று கூட தெரியாமல் உன் குழந்தையை ஆங்கிலப்பள்ளியில்தானே சேர்த்தாய் / சேர்ப்பாய் என்று குற்றம் சாட்டியது நீங்கள்....!!!! அதற்கு நான் ஆம் என்றும் பதில் கூறவில்லை...இல்லை என்றும் பதில் கூறவில்லை......இதைப்பித்த்லாட்டம் என்று சொல்கிறீர்களே நண்ப்ரே.....உங்களுக்கு தெரியாத அல்லது அறியாத ஒரு விசயத்தை பற்றி பேசுவது மட்டும் பித்தலாட்டம் இல்லையா என்ன???

மதிபாலா July 29, 2008 7:06 AM  

னென்றால் நீங்கள் மற்றவர்களுடைய குழந்தைகள் மட்டும் தமிழ் வழியில் படிக்கவெண்டும என்று வலியுறுத்தும்போது உங்களுடைய குழந்தைகள் எந்த மொழி வழியாக் படிக்கிறார்கள் என்று அறிந்துக் கொள்ள நினைப்பதில் என்ன தவறு? கொள்கையை முதலில் நீங்கள் பின்பற்றிக்காட்டிவிட்டு மற்றவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்.//////

இது எப்படி கீதுன்னா , காமராஜர் எல்லாரையும் படிக்க சொன்னார்......அவர்ட்ட போயி நீ ஏன் படிக்கல...நீ படிச்சிருந்தா தானே அடுத்தவன படிக்கச்சொல்லணும்ன்ற மாதிரி இருக்குது.......அப்புறம் என்னோட ஒரே பதிவ பாத்துட்டு என்ன பத்தி எப்படி இவ்ளோ உண்மைய கண்டு பிடிச்சீங்களோ????? நீங்களும் உங்க தலைவர் மாதிரிதான்.....நுனிப்புல் மேயறதுல!

மதிபாலா July 29, 2008 7:15 AM  

நல்லக் கருத்துக்களை விஜயகாந்த் சொன்னால் என்ன ரஜினிகாந்த் சொன்னால் என்ன, அதை ஆதரிப்பதில் எந்த தவறும் கிடையாது. /////

அண்ணே...

இதே மாதிரி தாய்மொழி வழிக்கலவியை பத்தி நான் சொன்ன போது மட்டும் ஏன் பாரபட்சம் காட்டறீங்க???????எங்க வூட்ல எப்படி இருக்கேன்னு ஏன் பூந்து பாக்கறீங்க????

விஜயகாந்த் சொன்னா மட்டும் நல்ல கருத்தா இல்லியான்னு பாப்பீங்க!!! நான் சொன்னா மட்டும் என் வீட்ல பாலோ பண்ணறேனா இல்லியான்னு பாப்பீங்க.......அத பித்தலாட்டம்னு வேற சொல்வீங்க.....

இத எந்த கணக்குல சேர்க்கலாம்???

-------------------

தாய்மொழியைப் புறந்தள்ளுவதற்கும், ஆங்கிலமொழி வழிக் கல்வி பயில்வதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.//////

ஆங்கில மொழி வழிக்கல்வி என்பது தாய்மொழியை புறந்தள்ளுவதாகாதாம்......என்னங்க நீங்க...அதிகமா விஜயகாந்த் அறிக்கையை படிச்சி குழம்பிப்போய்ட்டீங்கன்னு நினைக்கிறேன்!!!

கொஞ்சம் தெளிவா வாங்க .....விஸ்கிகாந்தைப்பத்தி இன்னும் விவாதிப்போம்!!

மதிபாலா July 29, 2008 8:11 AM  

எனக்குத் தெரிந்த ஜெர்மானியர்கள் எல்லாரும் நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள். ஆங்கிலம் தெரியாத ஜெர்மானியர்களும் படித்தவர்களில் இருக்கலாம், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஆங்கிலம் தெரிந்திருந்தால் ஏன் translators வைத்துக்கொண்டு அலைய வேண்டும். உங்களை அறியாமலேயே same-side goal அடித்து விட்டீர்கள். இனிமேலாவது தமிழர்கள் எல்லாம் மடையர்கள், என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்று நினைக்காமல், சற்று நிதானித்து எழுதவும்.//////////////

என்ன சேம் சைடு கோல் போட்டாங்க தலீவா???? ஜெர்மானியன் அவன் பொருளை மொழி தெரியாட்டாலும் ட்ரான்ஸிலேட்டர் வெச்சி விக்கிறான்...இதுல ஆங்கில மொழி புலமையில்லைங்கிற மேட்டரே வரலயே????

நான் சொல்ற கருத்தையே புரிஞ்சிக்காம நீங்கதான் தப்பா பேசறீங்க....நான் சொன்ன விசயம் , உலகத்தின் அறிவு ஜீவிகளெல்லாம் , உலகத்தின் கண்டு பிடிப்புக்களை நிகழ்த்துபவனெல்லாம் அவனவன் தாய்மொழியிலேயே படிக்கிறான் என்றுதான்....

ஆங்கிலம் தெரிந்தவன் மட்டுமே உலகத்தில் முன்னேற முடியும் என்று சொன்னால் , அல்ல என்று என்னால் உதாரணம் காட்ட முடியும் ...
பிலிப்பைன்ஸில் சற்றேறக்குறைய எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள்...........ஆனால் உலக்த்தில் பிலிப்பைன்ஸ் நிலைமை என்ன ??? ஆங்கிலமே தெரியாத தைவானின் நிலைமை என்ன??


ஆக , கை நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை தேட மட்டுமே ஆங்கிலம் உதவும்...உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள அல்ல.........

இங்கே டிகிரி முடித்த எல்லோரையும் கேட்கிறேன்......உங்களால் நீங்கள் ஆங்கிலம் மூலமாக படித்ததை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்ததா என்றால் பெரும்பாலானோர் சந்தேகத்தொனியிலேயே பதிலளிப்பர்........

நல்லதந்தி July 29, 2008 9:33 AM  

//இன்னும் எனக்கு குழந்தைகளே இல்லை............எனவே அதுபற்றி பிறகு பார்ப்போம்...ஆமாம் , கொள்கைகளை பற்றி விவாதித்துக்கொண்டிருக்கையில் ஏன் என் வீட்டிற்குள் புகுந்து பார்க்கிறீர்கள்??//
ஏன் வீட்டில் புகுந்து பார்கிறீர்கள் ராபின், ஊரார்களுக்கு மட்டும்தானே கொள்கை நம் வீட்டிற்கு இல்லையே? :)

நல்லதந்தி July 29, 2008 9:40 AM  

முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மதி!.மற்ற முன்னேறிய தேசத்தவர்கள் ஆங்கிலம் படிக்காமல் இருப்பது பிழையில்லை. எனென்றால் அவர்கள் மற்ற நாடுகளுக்கு பிழைப்பைத் தேடி செல்வதில்லை.நம்மைப் போன்ற ஏழை நாடுகளில் உள்ளவர்தாம் மற்ற நாடுகளுக்குப் பிழைப்பைத் தேடிச் செல்கிறோம்.நமக்கு ஆங்கில அறிவு இருப்பதால்தான் நம் நாடு மற்ற ஏழை நாடுகளை விட இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது.

மதிபாலா July 29, 2008 10:00 AM  

ஏன் வீட்டில் புகுந்து பார்கிறீர்கள் ராபின், ஊரார்களுக்கு மட்டும்தானே கொள்கை நம் வீட்டிற்கு இல்லையே? :)

////////////

இதற்கான பதிலை ஏற்கெனவே சொல்லியாகிற்று.......!!நான் உமக்காகவும் கூடத்தான் பேசுகிறேன் நல்லதந்தி அண்ணே......ஒரு தந்தி எப்போதுமே நல்ல செய்தியை கொடுத்துக்கொண்டிருக்க முடியாது என்பது உங்களுக்கு புரிந்தால் சரி!!!


-----------------------------------


முதலில் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மதி!.மற்ற முன்னேறிய தேசத்தவர்கள் ஆங்கிலம் படிக்காமல் இருப்பது பிழையில்லை. எனென்றால் அவர்கள் மற்ற நாடுகளுக்கு பிழைப்பைத் தேடி செல்வதில்லை.நம்மைப் போன்ற ஏழை நாடுகளில் உள்ளவர்தாம் மற்ற நாடுகளுக்குப் பிழைப்பைத் தேடிச் செல்கிறோம்.நமக்கு ஆங்கில அறிவு இருப்பதால்தான் நம் நாடு மற்ற ஏழை நாடுகளை விட இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது.

-----------------------------------

நாம் தாய்மொழி வழிக்கல்வியை பெற்றிருந்தோமானால் இதைவிட பன் மடங்கு முன்னேறியிருப்போம் என்பதே என் கருத்து..!!!

நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதெல்லாம் "ஆங்கிலத்தை" ஒரு மொழி என்ற அளவில் படிப்பதில் தவறில்லை..அது தேவையான ஒன்றே........!!!!

ஆனால் தாய் மொழி தவிர்த்த மற்றைய மொழி மூலம் கல்வி கற்பதென்பது நமது மனனக்கல்வி முறை மூலம் முட்டாள்களை அல்லது மனனம் செய்யும் மெசின்களை உருவாக்க மட்டுமே உதவும்!!

முன்னேறிய நாடுகளெல்லாம் முன்னேறிய நாடுகளாகவே தோன்றினவா என்ன?????அவையும் நம் போலவே........முட்டி மோதி முன்னேறிக்கொண்டுதான் வருகின்றன.............தாய் மொழி வழிக்கல்வி பெற்ற எந்த ஒரு நாடும் அம்முன்னேற்றத்தின் முதல் படியில் நிற்கின்றன.....!!!

நம் போன்ற முட்டாள்தேசங்கள் செலவுக்கு மேல் செலவு செய்து டாக்டரையும் , என் ஜினியரையும் உருவாக்கி அந்நியச்செலாவணிக்காக தம் பிள்ளைகளின் மூளைகளை வாடகைக்கு விட்டு பிழைக்கின்றன..!!!

அத்தகைய இளைஞர்களின் , படிப்பாளிகளின் உழைப்பு மொத்தமும் இந்தியாவிற்கு கிடைத்தால் இந்தியா இன்று வளர்ந்த நாடாகி இருக்கும்......

2020 - 2025 என்று கனவுகளை தள்ளிப்போட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவலமும் நேர்ந்திருக்காது!

mrcritic July 29, 2008 11:23 AM  

//நாம் தாய்மொழி வழிக்கல்வியை பெற்றிருந்தோமானால் இதைவிட பன் மடங்கு முன்னேறியிருப்போம் என்பதே என் கருத்து..!!!//

நீங்கள் மேற்கூறியவற்றை இந்தியாவில் தமிழர்கள் யாரேனும் சாதித்துக்காட்டினால் ஒத்துக்கொள்ளலாம். மற்ற படி பேச்செல்லாம் ஏட்டுச்சுறைக்காய் தான்.

அது மட்டுமல்ல மொழி உபயோகமும் நாட்டு வளர்ச்சியையும் முடிச்சிப்போடுவது நிரூபனமாகத சமாச்சாரம்.

ஆங்கிலம் கற்றதால் அனைவரும் அறிவு ஜீவிகளல்ல. தமிழ் கற்றதால் பிழைக்காதவரல்ல.

விஜயகாந்தைவிட உங்க எழுத்து சாட்சிகளின்றி சவடாலாகவே தோன்றுகிறது.

Anonymous July 29, 2008 3:03 PM  

மதிபாலா,
மிக சரியான கருத்தை தெரிவிதததிற்கு நன்றி.

மதிபாலா July 29, 2008 6:53 PM  

நீங்கள் மேற்கூறியவற்றை இந்தியாவில் தமிழர்கள் யாரேனும் சாதித்துக்காட்டினால் ஒத்துக்கொள்ளலாம். மற்ற படி பேச்செல்லாம் ஏட்டுச்சுறைக்காய் தான்.

/////

எப்படி சாதிக்க முடியும்??? அதற்கான சூழல் எங்கே இங்கு இருக்கிறது???? பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழில் படிக்கும் ஒருவனுக்கு கல்லூரி சென்றதும் அனைத்தும் ஆங்கிலமயமாகவே இருக்கிறதே....அத்தகைய சூழல் கழையப்படும்போது தமிழன் நிச்சயம் சாதிப்பான்!!

------------

மதிபாலா July 29, 2008 6:56 PM  

""""""""""""""""
ஆங்கிலம் கற்றதால் அனைவரும் அறிவு ஜீவிகளல்ல. தமிழ் கற்றதால் பிழைக்காதவரல்ல.
"""""""""

இந்தக் கருத்தில் நீங்கள் நூறு சதம் ஒத்துப்போனீர்கள் எனில் கீழ்க்கண்ட உங்கள் வாதம் தவறென்று புரிந்துவிடும்......ஆங்கிலம்தான் அறிவுக்க வழி என்று சமச்சீர் கல்வி கொண்டு வருவேன் என முழங்குவது எவ்வளவு தவறான சிந்தனை....மக்களின் தலைவன் , அவர்களை ஆளப்போவதாக கூறிக்கொள்ளும் ஒருவன் இத்தகைய தவறான வழிகளில் மக்களை வழிநடத்தத்துணிவானா என்பதை சிந்தித்துப்பார்த்தாலே நான் விடுவது வெறும் வாய்ச்சவடால் அல்ல என்று புரிந்து கொள்வீர்கள்!!

""""""

விஜயகாந்தைவிட உங்க எழுத்து சாட்சிகளின்றி சவடாலாகவே தோன்றுகிறது.

"""""""

அது மட்டுமல்ல...இங்கே மக்கள் மன்றத்திற்கு எத்துணையோ வழக்குகள் வந்திருக்கின்றன.........சாட்சிகள் இல்லாத காரணத்துக்காக மட்டுமே சவடாலாகிப்போன வழக்குகளும் உண்டு...ஆனால் அவ்வழக்கு மெய்யா , பொய்யா என்றாராய்வதே பகுத்தறிவு!!

Anonymous July 29, 2008 11:53 PM  

//தமிழ் ஒரு படமாக வைக்கப்படவேண்டுமே தவிர..
-Robin//
சொந்த மொழியை பற்றி இப்படி கூறும் பரிதாபநிலைமை உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்
தான் பார்கமுடியும்.

மதிபாலா July 30, 2008 9:32 AM  

//தமிழ் ஒரு படமாக வைக்கப்படவேண்டுமே தவிர..
-Robin//
சொந்த மொழியை பற்றி இப்படி கூறும் பரிதாபநிலைமை உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்
தான் பார்கமுடியும்.

----------

உண்மைதான் ...தாய்மொழியைக்கூட சட்டம் போட்டால்தான் படிக்க வேண்டும் என்கிற போக்கு எவ்வளவு ஆபத்தானது...அமெரிக்கன் டீரிம் நம்மை எவ்வளவு ஆட்கொண்டிருக்கிறது என்பதை நினைத்து பார்த்தால் "மெல்லத் தமிழ் இனி சாகும்" என்ற வார்த்தை மெய்யாகி விடுமோ என்ற அச்சமே மேலெழுகிறது!!

கர்ணன் July 30, 2008 6:06 PM  

மிகவும் அருமையான பதிவு!

பின்னூட்ட விவாதங்களைப்படித்ததில் உங்கள் சிந்தனை ஆற்றலும் தெளிவும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

பாராட்டுக்கள் மதிபாலா! தொடருங்கள்!

மதிபாலா July 30, 2008 10:00 PM  

பள்ளிகளில் தமிழில் பேசக் கூடாது என்றால் ஆசிரியர்களே எதிர்ப்புகுரல் எழுப்ப வேண்டும் :கனிமொழி

கல்வி வளர்ச்சியில் மெட்ரிக் பள்ளிகளையும் முந்திச் செல்லும் வகையில் அரசுப் பள்ளிகளும் முன்னேறி வருகிறது. சில மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசக் கூடாது என்று தடை போடுவதாக கூறப்படுகிறது. இது வேதனையாக விஷயம்.

தாய் மொழியில் கற்றுக் கொண்டால்தான் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ள முடியும் எனவே தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஏதாவது பள்ளிகளில் தமிழில் பேசக் கூடாது என்ற நிலை இருந்தால் அங்குள்ள ஆசிரியர்களே எதிர்ப்புகுரல் எழுப்ப வேண்டும்.

எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ளட்டும். அதற்காக யாரும் எதிர்ப்பு அல்ல ஆனால் தாய் மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என்று பேசினார்.

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7980


--------------

என்ன கொடும சார் இது..தமிழ்நாட்டுல , தன் தாய்மொழியை பேச தடை விதிப்பதென்பது எவ்வளவு தவறான செயல்...இதச்சொன்னா வெறும் சவடால் விடறேங்கிறாங்க!!!

மதிபாலா July 30, 2008 10:01 PM  

மிகவும் அருமையான பதிவு!

பின்னூட்ட விவாதங்களைப்படித்ததில் உங்கள் சிந்தனை ஆற்றலும் தெளிவும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

பாராட்டுக்கள் மதிபாலா! தொடருங்கள்!////

நன்றிகள் திரு.கர்ணன்...
உங்கள் ஊக்குவிப்பு என்னை வளப்படுத்தும்!!

Robin July 31, 2008 5:03 AM  

//சொந்த மொழியை பற்றி இப்படி கூறும் பரிதாபநிலைமை உலகத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்
தான் பார்கமுடியும்.-பெயரில்லாதவர் // இது பரிதாப நிலை அல்ல. இதுதான் யதார்த்தம். மேலும் இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிலும் இந்த நிலைதான். நடைமுறை உண்மையை உணர்ந்ததால்தான் தமிழ்வழிக் கல்வி வேண்டும் என்று சொல்கிறவர்கள் கூட தங்கள் சொந்தவாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை. சொல்லப் போனால் இதைப் பற்றிக் கேட்டால் கூட பதறுகிறார்கள். மதிபால சுட்டிக்காட்டிய கனிமொழி காண்வென்டில் ஆங்கில வழி கல்வி பயின்றவர். எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம்.

மதிபாலா July 31, 2008 7:10 PM  

சொல்லப் போனால் இதைப் பற்றிக் கேட்டால் கூட பதறுகிறார்கள். மதிபால சுட்டிக்காட்டிய கனிமொழி காண்வென்டில் ஆங்கில வழி கல்வி பயின்றவர். எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம்./////

கனிமொழியாகட்டும் இல்லை வேறு யாராகட்டும் - உங்களுக்கு உடன் பாடான கருத்தை சொன்னால் நீங்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை....ஆனால் மாறுபட்ட கருத்தை சொன்னால் உடனே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசுகிறீர்கள்!!!!!!

போகட்டும் விடுங்கள்....

யதார்த்தம் என்ன எழவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்...இப்போதிருக்கும் நிலைமை மாற வேண்டும்...........எல்லார்க்கும் தாய் மொழிக்கல்வி தான் வேண்டும் ..அது மூலமே நம் அறிவு வளத்தை பெருக்க இயலும் என்பதே என் அவா!!!

தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தை உணருகிறீர்களா ???

தாய் மொழி வழிக்கல்வி தேவையா இல்லையா என்பதுதான் என் கேள்வி!!!

இதற்கான பதிலென்ன நண்பரே?

Robin July 31, 2008 10:05 PM  

// உங்களுக்கு உடன் பாடான கருத்தை சொன்னால் நீங்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை....ஆனால் மாறுபட்ட கருத்தை சொன்னால் உடனே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசுகிறீர்கள்// ஆங்கில வழிக் கல்வி வேண்டும் என்பது எனக்கு உடன்பாடான கருத்து மட்டுமல்ல பெரும்பாலான தமிழர்களின் கருத்தும் அதுதான். ஏழைகளில்கூட வறுமைக்கோட்டை தாண்டியவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளிலேயே சேர்கிறார்கள். அதனால்தான் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் மாணவர் பற்றாக்குறையால் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் தற்போது அரசாங்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் அதைபோன்ற ஒரு நிலை வரவேண்டும். எதற்க்கெடுத்தாலும் சீனாவைப் பார் ரஷ்யாவைப் பார் என்று சொல்லாமல் நம்முடைய யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனம். ஆங்கிலவழியில் படித்தால் மூளை கெட்டுப் போகும் என்று நினைப்பதல்லாம் மூடநம்பிக்கை. ஆங்கிலவழியில் படித்த மாணவர்கள் பலரும் IIT போன்ற கல்விநிலையங்களில் சேர்ந்துவிடுகிறார்கள். சிந்திக்கும் திறன் இல்லாவிட்டால் எப்படி அவர்களால் IIT -இல் சேர முடியும். தமிழ்வழியில் படிப்பவர்கள்தான் புரிந்துப் படிக்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் உருப்போடுகிறார்கள் என்று எண்ணுவது இன்னொரு மூட நம்பிக்கை. சொல்லப்போனால் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதுதான் எளிதானது. கல்லூரியில் சேர்ந்தப்பின் திக்கித்திணறும் தமிழ்வழிக் கல்விப் பயின்ற மாணவர்கள் எத்தனையோ பேரை நான் கண்டிருக்கிறேன்.
தனிப்பட்ட வாழ்க்கை என்று நீங்கள் அடிக்கடி சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ஒருவர் மற்றொருவரை நோக்கி நீங்கள் எந்த மொழி வழியாக படித்தீர்கள் அல்லது உங்கள் குழந்தையை எந்த மொழி வழியாக படிக்க வைக்கிறீர்கள் என்றுக் கேட்பது எந்தவிதத்தில் ஒருவருடைய தனிப்பட்டவாழ்க்கையில் நுழைவதாகும் என்பது எனக்குப் புரியவில்லை. அநாகரீகமாக நான் ஒன்றும் கேட்டுவிடவில்லையே.
இன்னொரு விஷயம் எதோ நான் விஜயகாந்தின் ஆதரவாளன் என்பது போலவும், அதனால்தான் உங்களிடம் விவாதிப்பதுப் போலவும் நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு பேசுகிறீர்கள். நான் எந்த அரசியல்வாதியின் ஆதரவாளனும் கிடையாது.

Robin July 31, 2008 10:17 PM  

//யதார்த்தம் என்ன எழவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்...இப்போதிருக்கும் நிலைமை மாற வேண்டும்...........எல்லார்க்கும் தாய் மொழிக்கல்வி தான் வேண்டும் ..அது மூலமே நம் அறிவு வளத்தை பெருக்க இயலும் என்பதே என் அவா!!!// யதார்த்தம் எதுவோ அதைப் பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனம். இப்போதிருக்கும் நிலை மாற வேண்டியதில்லை. தமிழகம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நன்றாக முன்னேறி வருகிறது. உங்களைப் போன்றவர்கள் குழப்பாமல் இருந்தாலே போதும். அப்படித் தாய்மொழியில்தான் கல்வி கற்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அரசாங்கப் பள்ளியிலோ அல்லது தாங்கள் ஒரு கூட்டமாக சேர்ந்து ஒரு பள்ளியை ஆரம்பித்தோ படிக்க வைத்துக் கொள்ளட்டும். அடுத்தவர் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட வேண்டாம்.

மதிபாலா July 31, 2008 11:01 PM  

!!!// யதார்த்தம் எதுவோ அதைப் பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனம். இப்போதிருக்கும் நிலை மாற வேண்டியதில்லை./////

நீ புத்திசாலியாக இருந்து பிழைத்துக்கொள்ள வேண்டுமா இல்லை உன் சமூகத்தை , உன் மொழியை , உன் கலாச்சாரத்தை பற்றென பிடித்துக்கொண்டு வாழ்வதா என்றால் நான் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன்...உங்களைப்போன்ற சாதாரண சுயநலவாதியாய் வாழ விரும்பவில்லை.....அன்றைக்கு திருவள்ளுவர் அப்படி நினைத்திருந்தால் , மொழி அறிஞர்கள் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு நீங்களும் நானும் இப்படிப்பேசுவதற்கு நம் மொழியே இருந்திருக்காது..!!! சரி , யதார்த்தம் என்றால் சூத்திரன் செருப்பு போடக்கூடாது என்பது கூடத்தான் ஒருகாலத்தில் யதார்த்தமாக இருந்தது...சேரிகளில் அவனை ஒதுக்குப்புறமாக வாழ்வது கூடத்தான் யதார்த்தமாக இருந்தது , இருக்கிறது!!

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண்கள் பள்ளி செல்லாமல் வீட்டிலேயெ முடங்கி கிடந்தது கூட த்தான் ஒரு காலத்தில் யதார்த்தமாக இருந்தது!!!!!

வெள்ளைக்காரன் நம்மை ஆண்டபோதும் வாழ்க்கை யதார்த்தமாகவே இருந்தது...

அப்போதெல்லாம் அவ்வுரிமைகளுக்காக போராடியவர்கள் இப்போது நாம் இருப்பதைப்போல யதார்த்த நிலைமையை ஏற்றுக்கொண்டு சுய நலக்காரர்களாக இருந்திருந்தால் இன்றைக்கு நாம் எங்கிருந்திருப்போம் என்று யோசித்துப்பாருங்கள் ராபின்!!!

மதிபாலா July 31, 2008 11:09 PM  

தமிழ்வழியில் படிப்பவர்கள்தான் புரிந்துப் படிக்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் உருப்போடுகிறார்கள் என்று எண்ணுவது இன்னொரு மூட நம்பிக்கை./////

அய்யா ,சாமி , தமிழ் மொழி அல்ல...எந்த ஒருவனும் தன் தாய் மொழியில் படிப்பதை தவிர வேறு எந்த மொழியிலும் படித்தாலும் அது அவனுள் முழுமையாக சென்றடையாது...அதனால் தான் உங்களை போன்ற மெத்தப்படித்தவர்களும் , எங்கெங்கோ இருக்கும் அறிவு ஜீவிகளுடம் , ஆங்கிலம் அறிந்தவர்களும் இங்கே வந்து தங்கள் வலைப்பூக்களை தமிழில் வடித்து தம் உணர்வுகளுக்கு வடிகாலாக்கிக்கொண்டிருக்கிறார்கள்!!!

-----

ஆங்கிலவழியில் படித்த மாணவர்கள் பலரும் IIT போன்ற கல்விநிலையங்களில் சேர்ந்துவிடுகிறார்கள். சிந்திக்கும் திறன் இல்லாவிட்டால் எப்படி அவர்களால் IIT -இல் சேர முடியும////

ஆக ஆங்கில வழியில் படித்தால் தான் ஐ.ஐ.டியில் சேர முடியும்....தமிழகத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஆங்கிலத்தில் ஏன் நம் மேற்படிப்பு இருக்க வேண்டும் என்பதுதானே என் கேள்வி!!

-------------------

ஒருவர் மற்றொருவரை நோக்கி நீங்கள் எந்த மொழி வழியாக படித்தீர்கள் அல்லது உங்கள் குழந்தையை எந்த மொழி வழியாக படிக்க வைக்கிறீர்கள் என்றுக் கேட்பது எந்தவிதத்தில் ஒருவருடைய தனிப்பட்டவாழ்க்கையில் நுழைவதாகும் என்பது எனக்குப் புரியவில்லை. அநாகரீகமாக நான் ஒன்றும் கேட்டுவிடவில்லையே.
இன்னொரு விஷயம் எதோ நான் விஜயகாந்தின் ஆதரவாளன் என்பது போலவும், அதனால்தான் உங்களிடம் விவாதிப்பதுப் போலவும் நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு பேசுகிறீர்கள். நான் எந்த அரசியல்வாதியின் ஆதரவாளனும் கிடையாது.//////

அப்படியா சரி...உங்கள் பார்வையில் அது தவறில்லை என்று பட்டால் அதற்கு நானென்ன செய்ய....நீங்கள் எந்தக்கட்சியின் ஆதரவாளராகவும் நான் கற்பனை செய்து கொண்டு பேசவில்லை....எந்தக்கருத்தையும் சொல்ல எனக்குத்தகுதி இருக்கிறதா , கனிமொழிக்கு தகுதி இருக்கிறதா என்று பேசும் நீங்கள் , விஜயகாந்த் சொன்ன ஒரு கருத்துக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் , அவருக்கு அக்கருத்தை சொல்ல தகுதி இருக்கிறதா என்று பார்க்கவில்லையே என்ற சாதாரண முரண்பாட்டையே சுட்டிக்காட்டினேன்!!

மதிபாலா July 31, 2008 11:17 PM  

கல்லூரியில் சேர்ந்தப்பின் திக்கித்திணறும் தமிழ்வழிக் கல்விப் பயின்ற மாணவர்கள் எத்தனையோ பேரை நான் கண்டிருக்கிறேன்./////

அத்தகைய கொடுமைகளை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்...அதனாலேயே இது குறித்து சொல்ல எனக்கு போதுமான தகுதி இருக்கிறது....!

என்ன நீங்கள் உங்களுக்கு சவுகரியமான வகையில் சின்ன வயசிலிருந்தே ஆங்கில வழிக்கல்வியை தேர்ந்தெடுக்க துடிக்கிறீர்கள்...!!! என்ன ஒன்று.....அவரவருக்கு சவுகரியமான வழியை தேர்ந்தெடுப்பதில் காட்டும் வேகத்தை தன் தாய்மொழி வளர்ச்சிக்கு ஒரு சிறு பங்காவது அளித்தால் சந்தோஷமே......

சுயநலமே உருவாகிப்போன ஒரு சமுதாயத்தில் இதை விட எதை நாம் எதிர்ப்பார்த்து விட முடியும்???

அப்புறம் "ஆந்திரா" பற்றி சொன்னீர்கள்...சற்றேறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத் சென்று இறங்கியிருந்தால் தெரியும் " எங்கெங்கு காணினும் உருதும் , இந்தியும் மட்டுமே...தெலுங்கு பேசினால் உங்களிடம் யாரும் பேசவே மாட்டார்கள்....

இன்றைக்கு எங்கெங்கு காணினும் தெலுங்கே..!!!

அவர்கள் விழித்துக்கொண்டார்கள்.....

நாம் இருளில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்!!!

Robin July 31, 2008 11:51 PM  

// புத்திசாலியாக இருந்து பிழைத்துக்கொள்ள வேண்டுமா இல்லை உன் சமூகத்தை , உன் மொழியை , உன் கலாச்சாரத்தை பற்றென பிடித்துக்கொண்டு வாழ்வதா என்றால் நான் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன்...உங்களைப்போன்ற சாதாரண சுயநலவாதியாய் வாழ விரும்பவில்லை.....// உண்மையில் நான் சுயநலவாதிதான். ஆனால் நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுயநலவாதி அல்ல. என்னுடைய தமிழ் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற சுயநலவாதி. தொடர்ந்து இப்படிப்பட்ட சுயநலவாதியாகவே வாழ விரும்புகிறேன். வெளியில் தமிழ்ப் பற்றாளன் என்று வேஷம் போட்டு விட்டு உள்ளுக்குள் வேறு விதமாக சிந்திக்கும் கபடதரியாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.
ஆங்கிலவழிக் கல்வியயை ஆதரிப்பதால் நான் தமிழ் சமுதாயத்துக்கோ கலாச்சாரத்துக்கோ விரோதமானவன் என்று சித்தரிக்க நினைப்பது தவறானது. பொதுவாக அரசியல்வாதிகள் தான் இதுபோல் நடந்து கொள்வார்கள்.

Robin July 31, 2008 11:57 PM  

//என்ன நீங்கள் உங்களுக்கு சவுகரியமான வகையில் சின்ன வயசிலிருந்தே ஆங்கில வழிக்கல்வியை தேர்ந்தெடுக்க துடிக்கிறீர்கள்...!!! என்ன ஒன்று.....அவரவருக்கு சவுகரியமான வழியை தேர்ந்தெடுப்பதில் காட்டும் வேகத்தை தன் தாய்மொழி வளர்ச்சிக்கு ஒரு சிறு பங்காவது அளித்தால் சந்தோஷமே......// சிறு வயதிலிருந்தே ஆங்கிலவழிக் கல்வி பயில்வது சவுகரியம் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தாய்மொழியை தாய்மொழிவழி கல்வி பயின்று தான் வளர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. என் பங்குக்கு தமிழ்மொழியை வளர்க்க ஒரு கடின முயற்ச்சியை எடுத்துக் கொண்டு வருகிறேன். அதை இப்போது வெளியிட விருப்பம் இல்லை.

Robin August 1, 2008 12:04 AM  

//சுயநலமே உருவாகிப்போன ஒரு சமுதாயத்தில் இதை விட எதை நாம் எதிர்ப்பார்த்து விட முடியும்??? // சுயநலமே உருவாகிப்போன இந்தத் தமிழ் சமுதாயம் தான் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது. புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழ்நாடு எந்த அளவு முன்னேறிக்கொண்டு வருகிறது என்பதை அறிந்தக் கொள்ளலாம்.
//அப்புறம் "ஆந்திரா" பற்றி சொன்னீர்கள்...சற்றேறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத் சென்று இறங்கியிருந்தால் தெரியும் " எங்கெங்கு காணினும் உருதும் , இந்தியும் மட்டுமே...தெலுங்கு பேசினால் உங்களிடம் யாரும் பேசவே மாட்டார்கள்.... இன்றைக்கு எங்கெங்கு காணினும் தெலுங்கே..!!! அவர்கள் விழித்துக்கொண்டார்கள்.....// - தவறான தகவல். இன்றும் ஹிந்தி மட்டும் தெரிந்தாலே போதும், ஹைதெராபாத்தில் காலம் தள்ளி விட முடியும். நான் ஏற்கனவே சொல்லிய படி, தற்ப்போது அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுவிட்டது. நாம்தான் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை.

Robin August 1, 2008 12:09 AM  

//நாம் இருளில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்!!!// - ஒருவேளை அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக் காரணமாக இருக்கலாம் :) இந்தப் பிரச்சனை எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது :) மற்றப்படி சமுதாயத்தைப் பொறுத்தவரை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கே வேகமாக வந்துக் கொண்டு இருக்கிறது.

ராம் August 1, 2008 1:36 AM  

//Robin said...

//சிறு வயதிலிருந்தே ஆங்கிலவழிக் கல்வி பயில்வது சவுகரியம் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.//

தற்போது மேற்கல்வி ஆங்கிலவழியில் இருப்பதால் இவ்வாதம் சரியாகிறது. இது இன்றைய மகிழ்ச்சிதான். நாளை மேற்கல்வியும் தமிழ்வழியில் என்கிற நிலையில்?

//தாய்மொழியை தாய்மொழிவழி கல்வி பயின்று தான் வளர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.//

தமிழ்மொழியை வளர்ப்பது என்றால் உங்கள் பார்வையில் என்ன?
--------------------------------

ராம் August 1, 2008 1:47 AM  

இன்றைய யதார்த்தம் நாளை காணமல் போய்விடும். இன்றைய பிழைப்பிற்கு இன்றைய யதார்த்தம் அனைவருக்கும் முக்கியம் தான். பிழைப்புவாதிகளுக்கு அதுமட்டுமே! ஆனால் நாளைய சமூகத்தை மேன்மையான வாழ்க்கை நோக்கி செலுத்தும் சிந்தனைவாதிகளுக்கல்ல.

சிந்தனையாளர்கள் நாளைய வாழ்வை பற்றி சிந்தித்தாக வேண்டும் இன்றைய பிழைப்பைப் பார்த்துக்கொண்டே.

அதற்குதானே பதிவே ! இல்லாவிட்டால் வெறும் பிழைப்பதற்கான தகவல்களை கொடுத்தால் போதுமே!

உங்கள் இருவரின் விவாதம்

சிந்தனைவாதி (மதிபாலா) vs பிழைப்புவாதி (Robin) என்ற நிலைகளில் இருக்கிறது.

இது இணையும் புள்ளி கடினம், பார்க்கும் தூரம் வேறுபடுவதால்.

வாழ்த்துக்கள் !

மதிபாலா August 1, 2008 4:29 AM  

உண்மையில் நான் சுயநலவாதிதான். ஆனால் நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சுயநலவாதி அல்ல. என்னுடைய தமிழ் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற சுயநலவாதி. தொடர்ந்து இப்படிப்பட்ட சுயநலவாதியாகவே வாழ விரும்புகிறேன். வெளியில் தமிழ்ப் பற்றாளன் என்று வேஷம் போட்டு விட்டு உள்ளுக்குள் வேறு விதமாக சிந்திக்கும் கபடதரியாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை./////

தனக்கு மாறுபட்ட கருத்துக்களை சொல்பவனெல்லாம் கபடதாரி அல்லது போலியானவன் என்பதை நீங்கள் மட்டுமல்ல திரு.ராபின்....ஆதிகாலம் முதலே சமுதாயத்தால் அவ்வாறுதான் கருதப்பட்டு வந்துள்ளார்கள்...

சொல்லும் கருத்தின் ஆழத்தை வெகுவிரைவில் இந்த தேசம் புரிந்துகொள்ளத்தான் போகிறது!! என்ன அப்போது சரி செய்யவே இயலாத நிலைக்கு விளைவுகள் இருக்கும்....

ஏற்கெனவே தமிழன் என்கிற அடையாளத்திற்கு வேட்டு வைக்கப்பட்டாயிற்று..அவன் ஒரே சொத்தான மொழியையும் அந்நிய மொழிகள் விழுங்கி விடுமானால் வேறென்ன மிஞ்சப்போகிறது???? வெறும் பிட்சாக்களும் , கேஎப்சிக்களும்தான்.!!!

--------------------


ஆங்கிலவழிக் கல்வியயை ஆதரிப்பதால் நான் தமிழ் சமுதாயத்துக்கோ கலாச்சாரத்துக்கோ விரோதமானவன் என்று சித்தரிக்க நினைப்பது தவறானது. பொதுவாக அரசியல்வாதிகள் தான் இதுபோல் நடந்து கொள்வார்கள்./////

எவன் ஒருவன் தன் தாய்மொழி தவிர்த்த மற்ற மொழிகள் மூலம் கல்வி கற்க விரும்புகிறானோ அவன் தன் தாய்மொழியை புறக்கணிக்கிறான்...இதில் நான் என்ன சித்தரிப்பது??

மதிபாலா August 1, 2008 4:34 AM  

சிறு வயதிலிருந்தே ஆங்கிலவழிக் கல்வி பயில்வது சவுகரியம் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தாய்மொழியை தாய்மொழிவழி கல்வி பயின்று தான் வளர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. /////

ஆம்...நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன்........என் நாட்டில் என் மொழிக்கு ஏனிந்த நிலை என்று ஆதங்கமும் பட்டிருக்கிறேன்...அறிவு வளங்கொழிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க தாய்மொழி வழிக்கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைத்தான் இன்றளவும் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறேன்!!


-----------------

என் பங்குக்கு தமிழ்மொழியை வளர்க்க ஒரு கடின முயற்ச்சியை எடுத்துக் கொண்டு வருகிறேன். அதை இப்போது வெளியிட விருப்பம் இல்லை.//////

வாழ்த்துக்கள் நண்பர் ராபின்...கண்டிப்பாக அதற்கான முழு ஒத்துழைப்பும் உண்டு...

அறிவார்ந்த ஒரு மொழியான தமிழ் மிக உயரிய நிலைக்கு வரவும் , முதல் முதல் முடிவு வரை தமிழில் பாடங்களை கற்கவும் அனைவருடைய முயற்சிகளும் கண்டிப்பாகத்தேவை!

மதிபாலா August 1, 2008 4:39 AM  

//நாம் இருளில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம்!!!// - ஒருவேளை அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக் காரணமாக இருக்கலாம் :) இந்தப் பிரச்சனை எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது :) மற்றப்படி சமுதாயத்தைப் பொறுத்தவரை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கே வேகமாக வந்துக் கொண்டு இருக்கிறது.////

ஏன் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தீர்களானால் யதார்த்தத்தை மீறிய சிந்தனையாளர்களான பெரியார் , அண்ணா , காமராஜர் இன்னும் பல தலைவர்களின் முழு முயற்சியால்தான்...எல்லோரும் யதார்த்த நிலைமையை பிடித்து தொங்கிக்கொண்டிருந்திருந்தால் இன்றைக்கு நாம் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்பதை ஒத்துக்கொள்ளலாம்

நான் நாம் மூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னது மொழியளவிலேயே...பொருளாதார முன்னேற்றங்களில் நாம் எல்லோரையும் விட முந்திக்கொண்டிருக்கிறோம்........அதற்கான அடிப்படையும் நம் இந்தி என்ற அசுரன் ( நீங்கள் குறிப்பிட்ட ஹைதராபாத் போல ) நம் மொழியை , நம் அடையாளத்தை விழுங்கி விடாததும் ஒரு காரணம்!!

Robin August 1, 2008 4:40 AM  

//தற்போது மேற்கல்வி ஆங்கிலவழியில் இருப்பதால் இவ்வாதம் சரியாகிறது. இது இன்றைய மகிழ்ச்சிதான். நாளை மேற்கல்வியும் தமிழ்வழியில் என்கிற நிலையில்?//மேற்கல்வியும் தமிழில் மட்டும் என்று ஆகிவிட்டால் தமிழ்ர்கள் குண்டுச்சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும்.
//சிந்தனையாளர்கள் நாளைய வாழ்வை பற்றி சிந்தித்தாக வேண்டும் இன்றைய பிழைப்பைப் பார்த்துக்கொண்டே. // ஆங்கிலவழிக் கல்வியினால் நழைய வாழ்வு எப்படிக் கெட்டுப் போகும்?
//சிந்தனைவாதி (மதிபாலா) vs பிழைப்புவாதி (Robin) என்ற நிலைகளில் இருக்கிறது.// நான் பிழைப்புவாதிதான். நான் மட்டுமல்ல மற்றவர்களும் பிழைக்கவேண்டும் என்று நினைக்கும் பிழைப்புவாதி. மற்றவர்கள் பிழைப்பைக் கெடுக்கும் சிந்தனைவாதி அல்ல.

மதிபாலா August 1, 2008 4:49 AM  

உங்கள் இருவரின் விவாதம்

சிந்தனைவாதி (மதிபாலா) vs பிழைப்புவாதி (Robin) என்ற நிலைகளில் இருக்கிறது.

இது இணையும் புள்ளி கடினம், பார்க்கும் தூரம் வேறுபடுவதால்.
////

வருகைக்கு நன்றி திரு ராம் அவர்களே.........

இருவரும் இணைவது என்பது கடினமானாலும் இருவரின் நிலைகளை சுய பரிட்சார்த்தனை பண்ணி பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாக இவ்விவாதம் அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே!!!

நண்பர் ராபினும் அவருடைய நிலையிலிருந்து கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்!!!

------------

/////சிந்தனையாளர்கள் நாளைய வாழ்வை பற்றி சிந்தித்தாக வேண்டும் இன்றைய பிழைப்பைப் பார்த்துக்கொண்டே.

அதற்குதானே பதிவே ! இல்லாவிட்டால் வெறும் பிழைப்பதற்கான தகவல்களை கொடுத்தால் போதுமே!
////

கண்டிப்பாக நண்பரே..இந்தக்கருத்தில் நான் நூறு சதம் ஒத்துப்போகிறேன்...இல்லாவிட்டால் லேகியம் செய்யும் வழி , கோந்து செய்யும் வழி , பிஸ்கோத்து செய்யும் வழி , விற்பது எப்படி ,வாங்குவது எப்படி என்று பத்து ரூபாய் புத்தகத்தை அச்சடித்து விற்றுக்கொண்டிருக்கலாம்.....அது வெறும் பிழைக்கும் வழி மட்டுமே!!!

ஆனால் சமூகம் தழைக்கும் வழி என்ன என்று ஆராய்வதே நமது நோக்கம்....ஏனென்றால் அதைச்சிந்திப்பதற்குத்தான் இங்கே ஆட்கள் இல்லை...!!

ஏனென்றால் நமது இளைஞர்கள் இன்றைய அளவில் குசேலனின் வெற்றி தோல்வி பற்றி ஆராய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள்...அது முடிந்ததும் நாட்டு நலன் பற்றி சிந்திப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள்!!.வரிசையாக மர்ம யோகி , ரோபோ என்று இருக்கவே இருக்கிறது சிந்திப்பதற்கான களம்!!!

Robin August 1, 2008 4:50 AM  

//யதார்த்தத்தை மீறிய சிந்தனையாளர்களான பெரியார் , அண்ணா , காமராஜர் இன்னும் பல தலைவர்களின் முழு முயற்சியால்தான்// பெரியாரும் காமராஜரும் எனக்குப் பிடித்த தலைவர்கள். அவர்கள் நடைமுறைக்கு ஒத்துவராது என்ற விஷயங்களை அதிகமாகப் பேசவில்லை. பெரியாரைப் பொறுத்தவரை ஜாதி ஒழிக்கப்படும் என்று விரும்பினார். அது முழுமையாக நடக்கவில்லை என்றாலும் குறைந்தப்பட்சம் ஜாதிப் பெயரை தன் பெயருடன் சேர்ப்பது அசிங்கம் என்ற எண்ணம் மக்கள் மனதில் வரும் அளவிலாவது வளர்ந்திருக்கிறது. ஆனால் அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கை தோல்வியே கண்டது. ஏனென்றல் அது நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று பெரும்பாலனோர் உணர்ந்து கொண்டதால் தான். காமராஜர் அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும என்று பாடுபட்டவர். இன்று தமிழகம் 75 சதவீதத்திற்கு மேல் கல்வி பெற்ற மாநிலமாக திகழ்கிறது. சிந்தனையாளர்கள் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய மக்களுக்கு உண்மையிலேயே பயன்தரக் கூடிய விஷயங்களை சிந்தித்தாலே பயனுண்டு.

Robin August 1, 2008 4:55 AM  

//சிந்தனைவாதி (மதிபாலா) vs பிழைப்புவாதி (Robin) என்ற நிலைகளில் இருக்கிறது.// நான் என்னுடைய பிழைப்பை மட்டும் அல்ல மற்றவர்களுடைய பிழைப்பையும் பற்றி சிந்திப்பதால் தாங்கள் கூறியபடி பிழைப்புவாதியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

Robin August 1, 2008 4:59 AM  

//அதற்கான அடிப்படையும் நம் இந்தி என்ற அசுரன் ( நீங்கள் குறிப்பிட்ட ஹைதராபாத் போல ) நம் மொழியை , நம் அடையாளத்தை விழுங்கி விடாததும் ஒரு காரணம்!!//
ஹிந்தி மொழி தமிழ் மொழியை விழுங்கும் அளவிற்கு தமிழ் ஒரு பலவீனமான மொழி அல்ல. ஹிந்தி படிப்பதால் தெலுங்கர்களோ மலையாளிகளோ தங்கள் அடையாளத்தை இழந்து விடவில்லை. ஒரு மொழியை படிப்பதால் நன்மையே விளையும். ஆனால் பாடாவதியான கொள்கையால் இரண்டு தலை முறை தமிழ்ர்கள் ஹிந்தி படிக்க முடியாமல் போய்விட்டது.

Anonymous August 1, 2008 5:01 AM  

Robin என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி மிக மோசமான தமிழராக இருக்ககூடாது.

மதிபாலா August 1, 2008 5:04 AM  

பெரியாரைப் பொறுத்தவரை ஜாதி ஒழிக்கப்படும் என்று விரும்பினார். அது முழுமையாக நடக்கவில்லை என்றாலும் குறைந்தப்பட்சம் ஜாதிப் பெயரை தன் பெயருடன் சேர்ப்பது அசிங்கம் என்ற எண்ணம் மக்கள் மனதில் வரும் அளவிலாவது வளர்ந்திருக்கிறது. ஆனால் அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கை தோல்வியே கண்டது. ஏனென்றல் அது நடைமுறைக்கு சாத்தியப்படாது என்று பெரும்பாலனோர் உணர்ந்து கொண்டதால் தான////

நடைமுறைக்கு சாத்தியப்படாத கொள்கைகளை வைப்பதானால் மட்டுமே அக்கொள்கைகள் தவறென ஆகாது என்று புரிந்து கொண்டாலே போதும் நண்பர் ராபின்....

தனது பகுத்தறிவினை உபயோகித்து ( இதுவரை தமிழன் உபயோகமே படுத்தாத ...!!) எது சரி என்பதை மக்கள் எடுத்துக்கொள்வார்கள்....

அவரின் கடவுள் மறுப்புக்கொள்கை என்பது எவ்வளவு ஆழமானது....ஏன் அவர் கடவுள் மறுப்புக்கொள்கையை கொண்டிருந்தார் என்பதை ஆராய்வோமானால் இவ்விழை மொழியென்ற நிலையை தாண்டி கடவுளின் இருப்பையொட்டி செல்லும் என்பதால் தயங்குகிறேன்!!

இருப்பினும் - நடைமுறைக்கு சாத்தியப்படாதவை கட்வுள் மறுப்பல்ல...கடவுள் நம்பிக்கைதான் என்ற அளவில் என் கருத்தை சுருக்குகிறேன்!!!

தீ மிதிப்பது , அலகு குத்துவது , பாத யாத்திரை செல்வது , தேவையில்லாத சடங்குகள் , மூட நம்பிக்கைகள் இவைகள்தான் நடைமுறைக்கு ஒத்து வராத மூட தத்துவங்களே தவிர கடவுள் மறுப்பு என்பது மனதளவில் ஏற்படும் மாற்றமே.......அது நடைமுறைக்கு மிகவும் ஏற்றது...

எல்லோரும் கடவுள் மறுப்புக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் இங்கே மதத்தால் வரும் பிரச்சினைகள் இல்லாமலேயே போகும்!!!

மதிபாலா August 1, 2008 5:06 AM  

Robin என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி மிக மோசமான தமிழராக இருக்ககூடாது.////

நண்பரே...எதைச்சொல்வதாய் இருந்தாலும் தங்கள் உண்மை முகம் காட்டுதல் நலமே!!

Robin August 1, 2008 5:14 AM  

//எவன் ஒருவன் தன் தாய்மொழி தவிர்த்த மற்ற மொழிகள் மூலம் கல்வி கற்க விரும்புகிறானோ அவன் தன் தாய்மொழியை புறக்கணிக்கிறான்...இதில் நான் என்ன சித்தரிப்பது??// தவறான சிந்தனை. நான் தாய்மொழியைப் புறக்கணித்திருந்தால் எப்படி இவ்வளவு நேரம் தமிழில் விவாதம் செய்ய முடியும்.
//தமிழ்மொழியை வளர்ப்பது என்றால் உங்கள் பார்வையில் என்ன?// முதலில் உங்கள் குடும்பத்தினருடன் தமிழில் பேசுங்கள். தமிழை வளர்க்க இதுவே முதல்படி. என் குழந்தைகளுக்கு நான்கு மொழிகள் தெரியும். வேறு மாநிலத்தில் வசித்தாலும் தமிழ் நன்றாகப் பேசுவார்கள். காரணம் நாங்கள் வீட்டில் தமிழ் பேசுவதால். என் குழந்தைக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாக பேசும் பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சல்தான் வரும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருத் தமிழனுக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியவேண்டும், கல்வியை, தமிழ்பாடத்தை தவிர்த்து, ஆங்கிலத்தில் பயில வேண்டும். இதைத் தவிர வேறு சில மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

மதிபாலா August 1, 2008 5:15 AM  

ஹிந்தி மொழி தமிழ் மொழியை விழுங்கும் அளவிற்கு தமிழ் ஒரு பலவீனமான மொழி அல்ல. ஹிந்தி படிப்பதால் தெலுங்கர்களோ மலையாளிகளோ தங்கள் அடையாளத்தை இழந்து விடவில்லை. ஒரு மொழியை படிப்பதால் நன்மையே விளையும். ஆனால் பாடாவதியான கொள்கையால் இரண்டு தலை முறை தமிழ்ர்கள் ஹிந்தி படிக்க முடியாமல் போய்விட்டது.////////

தமிழ் மொழி பலவீனமானதல்ல.....முதல் கருத்து..

தமிழர்கள் முன்னேறுகிறார்கள்.....இது உங்களுடைய முந்தைய கருத்து!!!!

இப்போது இரண்டு தலைமுறை தமிழர்கள் ஹிந்தி படிக்கவில்லை என்கிறீர்கள்....

உங்கள் பார்வையில் அது தவறுதான்.......

இன்றைக்கும் ஹிந்தி மொழியை ஏற்றுக்கொண்ட அனைத்து மாநிலங்களை விடவும் ( குஜராத் , மகாராஷ்டிரா தவிர்த்து ) நாம் வெகுவாய் முன்னேறி இருக்கிறோமே அதை என்னவென்று சொல்வது??? ஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்து விட்டோம்? மாறாய் நாம் ஏனைய மாநிலங்களை விட சுய சார்பு பெற்றிருக்கிறோம்!!

ஏனென்றால் குஜராத்தும் , மகாராஷ்டிராவும் கார்ப்பரேட்களால்தான் முன்னணியில் இருக்கின்றன....

மகாராஷ்டிராவின் விதர்பா தான் இந்தியத்திருநாட்டின் மையப்பகுதி மட்டுமல்ல!!! வறுமையா பகுதியும் கூட ....சற்றேறக்குறைய நாக்பூரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹிஞ்சன்ஹாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15 சதம் பேரே வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்....மீதம் 85 சதம் பேர் பெய்யவே பெய்யாத மழையை நம்பி விவசாயம் செய்கிறார்கள்!!

Robin August 1, 2008 5:17 AM  

//Robin என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி மிக மோசமான தமிழராக இருக்ககூடாது.// காமராஜரையே புழுதி வாரி தூற்றிய மக்கள் (அனைவரும் அல்ல) வாழும் நாட்டில் நானெல்லாம் எம்மாத்திரம்.

மதிபாலா August 1, 2008 5:19 AM  

முதலில் உங்கள் குடும்பத்தினருடன் தமிழில் பேசுங்கள். தமிழை வளர்க்க இதுவே முதல்படி. என் குழந்தைகளுக்கு நான்கு மொழிகள் தெரியும். வேறு மாநிலத்தில் வசித்தாலும் தமிழ் நன்றாகப் பேசுவார்கள். காரணம் நாங்கள் வீட்டில் தமிழ் பேசுவதால். என் குழந்தைக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாக பேசும் பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சல்தான் வரும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருத் தமிழனுக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியவேண்டும், கல்வியை, தமிழ்பாடத்தை தவிர்த்து, ஆங்கிலத்தில் பயில வேண்டும். இதைத் தவிர வேறு சில மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது./////

இதெல்லாம் தமிழ் இன்னுஞ்சிலகாலம் பிழைப்பதற்கான வழி!!! வளர்ப்பதற்கான வழிகள் அல்ல நண்பர் ராபின்!! இன்றைய பெற்றோர்கள் தம் குழந்தைகள் அம்மா அப்பா என்று அழைப்பதை விட மம்மி , டாடியை த்தானெ வெகுவாக விரும்புகிறார்கள்....வீடுகளிலும் தமிழை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது..சொல்லப்போனால் மிதியாமல் இருந்தால் நலமே!!

Indian August 1, 2008 6:04 AM  

////சிந்தனைவாதி (மதிபாலா) vs பிழைப்புவாதி (Robin) என்ற நிலைகளில் இருக்கிறது.// நான் என்னுடைய பிழைப்பை மட்டும் அல்ல மற்றவர்களுடைய பிழைப்பையும் பற்றி சிந்திப்பதால் தாங்கள் கூறியபடி பிழைப்புவாதியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.//

Had the forefathers of homo sapiens decided to be what they were, they would not have evolved as human beings. We would have remained as close cousins of Chimpanzees, Orang Utans and Gorrillas.

Indian August 1, 2008 6:09 AM  

BTW, great post and fantastic exchange of opinions.

I support education in mother tongue.

மதிபாலா August 1, 2008 7:02 AM  

Had the forefathers of homo sapiens decided to be what they were, they would not have evolved as human beings. We would have remained as close cousins of Chimpanzees, Orang Utans and Gorrillas.///

I completely go with the statement!!!

---------

BTW, great post and fantastic exchange of opinions.

I support education in mother tongue. ////


Thanks for your visit and comments and I hope most of the people will go with education in mother tongue!!

ராம் August 1, 2008 7:45 AM  

//Robin said
மேற்கல்வியும் தமிழில் மட்டும் என்று ஆகிவிட்டால் தமிழ்ர்கள் குண்டுச்சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும்.//

புரியவில்லை நண்பரே! எப்படி?

//ஆங்கிலவழிக் கல்வியினால் நழைய வாழ்வு எப்படிக் கெட்டுப் போகும்?//

மன்னிக்கவும். தமிழ்வழி கல்வியினால் மட்டும் எப்படி கெடும்?

//நான் பிழைப்புவாதிதான். நான் மட்டுமல்ல மற்றவர்களும் பிழைக்கவேண்டும் என்று நினைக்கும் பிழைப்புவாதி. மற்றவர்கள் பிழைப்பைக் கெடுக்கும் சிந்தனைவாதி அல்ல.//

மகிழ்ச்சி. இன்றைய மக்களின் தேவை அது. சிந்தனைவாதிகள் அதில்லுள்ள குறைகளை தொலைநோக்கோடு ஆய்ந்து தமிழ்சமூகத்தின் 'பிழைப்பை' மேம்பட்ட 'வாழ்க்கை'யாக மாற்ற விழைபவர்கள்.

எப்படி பெரியார் வந்தபின் சுயமரியாதை சமூகநீதி ஆகியவற்றில் இரண்டு தலைமுறையாக மேம்பாடு ஏற்பட்டுவருகிறதோ இன்றைய இளைஞர்களும் அவரை போற்றி பின்பற்றுகிறார்களோ அதுதான் சிந்தனையின் ஆற்றல். அவர் வெறும் பிழைப்புவாதியாக மட்டும் இருந்திருந்தால் நாயின் வாழ்க்கைதான் இன்றும் நமக்கு.

ராம் August 1, 2008 8:10 AM  

///தமிழ்மொழியை வளர்ப்பது என்றால் உங்கள் பார்வையில் என்ன?// முதலில் உங்கள் குடும்பத்தினருடன் தமிழில் பேசுங்கள். தமிழை வளர்க்க இதுவே முதல்படி. என் குழந்தைகளுக்கு நான்கு மொழிகள் தெரியும். வேறு மாநிலத்தில் வசித்தாலும் தமிழ் நன்றாகப் பேசுவார்கள். காரணம் நாங்கள் வீட்டில் தமிழ் பேசுவதால். என் குழந்தைக்கு தமிழ் தெரியாது என்று பெருமையாக பேசும் பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சல்தான் வரும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருத் தமிழனுக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியவேண்டும், கல்வியை, தமிழ்பாடத்தை தவிர்த்து, ஆங்கிலத்தில் பயில வேண்டும். இதைத் தவிர வேறு சில மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.//

இதைத்தான் இன்று பலரும் அறிவறுத்துகிறார்களே! ஏன் முடியவில்லை? ஆங்கிலவழி கல்வி பெரிய அளவில் வந்தபின் தானே நிலமை இவ்வளவு மோசம்? பண்பலை, தொலைகாட்சிகளில் தமிழ் எங்கே? தமிழர்களை தமிழில் பேசுங்கள் பெயர் வையுங்கள்-- கடைகள், நிறுவனங்கள் பெயர்பலகையை தமிழில் வையுங்கள் --என கதறவேண்டிய நிலை ஏன்? விளைவு என்ன? எங்கே போயிற்று தமிழ் உணர்வு? இன்னும் அனைத்து பள்ளிகளும் ஆங்கிலவழிக்கு மாறுவதால் இது எப்படி மேம்படும்?

இது கதைக்குதவாது நண்பரே! தமிழை ஒரு விருந்தாளியாகவே வைத்துக்கொண்டிருக்க முடியாது. அதை நமக்கு சோறு போடும் மொழியாகவும் மாற்றியாக வேண்டும். அதற்கு மொழியை அனைத்து துறைகளிலும் வளர்க்கவேண்டும். அதற்கான சிந்தனையை தீவிரப்படுத்த வேண்டும். தமிழ்வழி மேற்கல்வி அதில் ஒன்று.

//என் பங்குக்கு தமிழ்மொழியை வளர்க்க ஒரு கடின முயற்ச்சியை எடுத்துக் கொண்டு வருகிறேன். அதை இப்போது வெளியிட விருப்பம் இல்லை.//

வாழ்த்துக்கள் நண்பரே! மேற்சொன்ன அனைத்தையும் மனதில் வையுங்கள்!

மதிபாலா August 1, 2008 8:45 AM  

நண்பர் க்ரிட்டிக் அவர்கள் ""வெட்டி ஞாயத்தில்" பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்....

நல்லது...

நாம் நமது கருத்துக்கான எதிர்வாதங்களை இங்கேயே வைத்திருக்கிறோம்...சற்றேறக்குறைய அவருடைய எல்லாக்கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறோம்!!!


//////

முதலில் ‘சமச்சீர் கல்வியை’ பற்றி பார்ப்போம். கண்டிப்பாக ஆங்கிலத்தால் தான் சமச்சீர் கல்வி தர முடியும் என்பது எதிர்க்க வேண்டிய எண்ணம் தான். இதற்கு தீர்வென்ன? விஜயகாந்தை வாரினால் போதுமா? உலக தமிழ்ர்கள் மக்கள் தொகையே 10 கோடியைத் தாண்டாத பொழுது இவர்கள் எப்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவார்கள்? நடைமுறைக்கு ஒவ்வாத உவமைகள். ஐடியலிஸ்ட்டிக் எண்ணங்கள் எல்லாம் போற்றத்தக்கது தான் ஆனால் எப்படி செயல் படுத்துவீர்கள் என்று கேட்டால் , அது அரசாங்கம் தான் எதாவது செய்யனும் என்று நழுவ வேண்டியது. உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் முறையில் மட்டும் கல்வி புகட்ட எண்ணுவீர்களா என்றால் அதற்கு பதில் குழந்தை பிறந்தவுடன் பார்க்கலாம் என்கிறார்!

////////

என்னுடைய விவாதங்களில் விஜயகாந்தை மட்டுமா காய்ச்சியிருக்கிறேன்????படித்தவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.......என் குழந்தைகளுக்கான படிப்பினை பற்றி எத்துணை முறைதான் பதில் சொல்வது??? நான் எங்கே நழுவினேன்??

நீங்கள் இந்தப்பதிவில் பதிந்த அத்துணை விசயங்களையும் நான் கவ்னித்தேன்...அதற்கான பதிலையும் தெரிவித்திருக்கிறேன்...ஏதேனும் விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள் ...கண்டிப்பாக என் விவாதங்களை வைக்கிறேன்...நன்றி........!!

ஆனால் உங்கள் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்!!

மதிபாலா August 1, 2008 8:51 AM  

உலக தமிழ்ர்கள் மக்கள் தொகையே 10 கோடியைத் தாண்டாத பொழுது இவர்கள் எப்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவார்கள////

குறிப்பாக இந்த எதற்கும் உதவாத ஒரு வாக்கியத்தை நான் எடுத்துக்கொள்கிறேன்!!!

தைவான் சற்றேறக்குறைய நம் மாநிலத்தை விட சிறிய நாடு.....ஜப்பான் சற்றே பெரிய நாடு தமிழகத்தை விட.....இன்னும் பற்பல யூரோப்பிய நாடுகள் ( பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , சுவிட்சர்லாந்து இன்னபல ) நம்மை விட மக்கள் தொகையில் குறைந்தவை...

இவர்களுக்கு எல்லாம் தாய் மொழி வழிக்கல்வி சாத்தியப்படும்போது நமக்கு சாத்தியப்படாதென்பது வெறும் புரட்டுவாதமே!!!!

தவிர "தமிழ் வழிக்கல்வி " என்று பாராமல் "தாய்மொழி வழிக்கல்வி" என்று திரு.கிரிட்டிக் அவர்கள் பார்ப்பாரானால் அவருடைய எண்ணமும் , எழுத்தும் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னைத்தூண்டுகிறது...

பதிலளிப்பார் என்று நம்புவோமாக!!

ராம் August 1, 2008 9:05 AM  

தென்கொரியாவை விட்டுவிட்டீர்களே! அங்கும் தாய்வழி கல்விதான்!

நாட்டின் வளர்ச்சிக்கு உள்நாட்டு உற்பத்தியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தான் அதிகரிக்கவேண்டும். இந்நாடுகளில் அதுதான் நிகழ்ந்திருக்கிறது!

ஆங்கிலமொழிக்கு இங்கு என்ன தொடர்பு?

மதிபாலா August 1, 2008 9:10 AM  

நியாயம்தான்....தென்கொரியாவும் அதில் அடக்கமே...மன்னிக்க....எங்கெங்கெல்லாம் தாய் மொழி வழிக்கல்வி இருக்கிறதோ அங்கெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது என்பது தெளிவான உண்மை!!

புருனோ Bruno August 1, 2008 12:44 PM  

இதை
http://payanangal.blogspot.com/2008/07/blog-post_31.html

சண் சிவா August 3, 2008 3:21 AM  

சுத்தமான தாய்ப் பால் குடித்த எவனும் தாய் வழி வந்த தாய்மொழியை இழிவுபடுத்தமாட்டான்...அது தாயையே இழிவுபடுத்துவதற்கு ஒப்பாகும்...பிற தாய்களை நம் தாய் போல் நினையுங்கள் தவறில்லை...அதற்காக நம் தாயை விட அவர்கள் மேலானவர்களாக முடியாது.....

Robin August 4, 2008 12:26 AM  

//BTW, great post and fantastic exchange of opinions.
I support education in mother tongue.//
//Thanks for your visit and comments and I hope most of the people will go with education in mother tongue!!//
இந்த பின்னூட்டங்களை மட்டும் படிப்பவர்களுக்கு இதை எழுதியவர்களின் தாய்மொழி தமிழா அல்லது ஆங்கிலமா என்ற சந்தேகமே வந்துவிடும். தமிழ் வழிக் கல்விக்காகக் குரல் கொடுக்கும் இவர்களால் தமிழில் உரையாடமுடியவில்லை. இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

Robin August 4, 2008 12:34 AM  

//எப்படி பெரியார் வந்தபின் சுயமரியாதை சமூகநீதி ஆகியவற்றில் இரண்டு தலைமுறையாக மேம்பாடு ஏற்பட்டுவருகிறதோ இன்றைய இளைஞர்களும் அவரை போற்றி பின்பற்றுகிறார்களோ அதுதான் சிந்தனையின் ஆற்றல். அவர் வெறும் பிழைப்புவாதியாக மட்டும் இருந்திருந்தால் நாயின் வாழ்க்கைதான் இன்றும் நமக்கு.//

நீங்கள் பெரியாரைக் குறிப்பிடுவதால் பெரியார் ஆங்கிலத்தைக் குறித்து என்ன சொன்னார் என்று படித்துவிட்டு அவரும் என்னைப்போல் பிழைப்புவதிதானா என்று சொல்லவும்.

இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
- http://periyaarr.blogspot.com

Robin August 4, 2008 12:39 AM  

// //Robin said
மேற்கல்வியும் தமிழில் மட்டும் என்று ஆகிவிட்டால் தமிழ்ர்கள் குண்டுச்சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும்.//
புரியவில்லை நண்பரே! எப்படி?//
நான் மேலே எழுதியக் கருத்துக்களை மீண்டும் படியுங்கள் ஒருவேளை புரியலாம்.

////ஆங்கிலவழிக் கல்வியினால் நழைய வாழ்வு எப்படிக் கெட்டுப் போகும்?//
மன்னிக்கவும். தமிழ்வழி கல்வியினால் மட்டும் எப்படி கெடும்?//
கெட்டுப்போகும் என்று நான் சொல்லவில்லை. மதிபாலா கூரியதுப்போல சவுகரியம் அவ்வளவுதான்.

Robin August 4, 2008 12:42 AM  

//தென்கொரியாவை விட்டுவிட்டீர்களே! அங்கும் தாய்வழி கல்விதான்!//

கீழ்க்கண்ட தொடுப்பைப் படிக்கவும்.

http://globalnation.inquirer.net/news/breakingnews/view/20080130-115775/South-Korea-seeks-to-strengthen-English-education

Robin August 4, 2008 12:46 AM  

//சுத்தமான தாய்ப் பால் குடித்த எவனும் தாய் வழி வந்த தாய்மொழியை இழிவுபடுத்தமாட்டான்...அது தாயையே இழிவுபடுத்துவதற்கு ஒப்பாகும்...பிற தாய்களை நம் தாய் போல் நினையுங்கள் தவறில்லை...அதற்காக நம் தாயை விட அவர்கள் மேலானவர்களாக முடியாது.....//

டி ராஜேந்தர் படத்தை அடிக்கடி பார்ப்பார் போலிருக்கிறது :)

இந்த மாதிரி விஷயங்களில் உணர்ச்சி வசப்படுவதால் எந்தப் பலனும் இல்லை. அறிவுப்பூர்வமாக சிந்திக்கவேண்டும்.

ராம் August 4, 2008 1:20 AM  

Robin,
நீங்கள் கொடுத்த உரலைப் பார்த்தேன்.

தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆங்கிலம் அறியாத இன்றைய, நேற்றைய தேதியிலேயே முன்னேறிய நாடுகள் தான். உலக அறிவுக்கான அனைத்து தகவல்களும், புத்தகங்களும் அவர்கள் மொழியில் சுலபமாகக் கிடைக்கிறது.

உலகுடன் உறவாட ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்கவே விழைகிறார்கள். எனவே நாட்டின் பொருளாதாரத்தோடு அதைத் தொடர்புபடுத்துவது சரியல்ல.

தமிழ்நாட்டிலும் ஆங்கிலத்தை ஒரு தொடர்பு மொழியாக படிப்பத்தை யாரும் எதிர்க்கவில்லை. அரசு பள்ளிகளிலும் ஒரு பாடமாக என்றுமே இருக்கிறது; அதை சிறப்பாக கற்பித்தாலே போதுமானது.

ராம் August 4, 2008 1:36 AM  

// //Robin said
மேற்கல்வியும் தமிழில் மட்டும் என்று ஆகிவிட்டால் தமிழ்ர்கள் குண்டுச்சட்டிக்குள் தான் குதிரை ஓட்ட வேண்டும்.//
புரியவில்லை நண்பரே! எப்படி?//
நான் மேலே எழுதியக் கருத்துக்களை மீண்டும் படியுங்கள் ஒருவேளை புரியலாம். //

அறிவைத்தேடி அறரைகோடி தமிழர்களும் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு போகிறார்களா? நூற்றுக்கு நான்குபேர்(இதுவே மிக அதிகம்?) போவதற்கு அனைவரும் ஆங்கிலவழியில்தான் படிக்கவேண்டுமா?

ஆங்கிலம் உலக தொடர்புக்கு ஒரு மொழியாக கற்றாலே போதுமே! இதில் 'ஆங்கிலவழி கல்வி'க்கு என்ன அவசியம்?

மேலும், உலக அறிவை தமிழில் கொணர்ந்தால் தமிழும் தமிழ்ச்சமூகமும் உய்யுமே! உண்மையில் நாம் அதைத்தானே செய்யவேண்டும்.

Robin August 4, 2008 1:45 AM  

ராம்,
நீங்கள் குறிப்பிட்ட ஜப்பான், தென் கொரியா போன்றவை எல்லாம் தனி நாடுகள். ஆனால் தமிழ்நாடு, இந்தியா என்ற நாட்டின் ஒரு பகுதி. இந்த வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.
//அறிவைத்தேடி அறரைகோடி தமிழர்களும் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு போகிறார்களா? நூற்றுக்கு நான்குபேர்(இதுவே மிக அதிகம்?) போவதற்கு அனைவரும் ஆங்கிலவழியில்தான் படிக்கவேண்டுமா?
ஆங்கிலம் உலக தொடர்புக்கு ஒரு மொழியாக கற்றாலே போதுமே! இதில் 'ஆங்கிலவழி கல்வி'க்கு என்ன அவசியம்?// இதற்கான பதிலை ஏற்கனவே கொடுத்து விட்டேன்.
//மேலும், உலக அறிவை தமிழில் கொணர்ந்தால் தமிழும் தமிழ்ச்சமூகமும் உய்யுமே! உண்மையில் நாம் அதைத்தானே செய்யவேண்டும்.// இதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் அதைச் செய்யவேண்டுமென்றால்கூட ஆங்கில அறிவு அவசியம். நீங்கள் சொல்வதுபோல் ஆங்கிலத்தை ஒரு தொடர்பு மொழியாக மட்டும் பயின்றவர்களால் இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது.

அதை எழுதியவன் August 4, 2008 2:02 AM  

////BTW, great post and fantastic exchange of opinions.
I support education in mother tongue.//
//Thanks for your visit and comments and I hope most of the people will go with education in mother tongue!!//
இந்த பின்னூட்டங்களை மட்டும் படிப்பவர்களுக்கு இதை எழுதியவர்களின் தாய்மொழி தமிழா அல்லது ஆங்கிலமா என்ற சந்தேகமே வந்துவிடும். தமிழ் வழிக் கல்விக்காகக் குரல் கொடுக்கும் இவர்களால் தமிழில் உரையாடமுடியவில்லை. இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.//

ஏனென்றால் அலுவலகக் கணினியில் தட்டச்ச இயலவில்லை.
அதுவே காரணம்.

Anonymous August 4, 2008 2:08 AM  

////எப்படி பெரியார் வந்தபின் சுயமரியாதை சமூகநீதி ஆகியவற்றில் இரண்டு தலைமுறையாக மேம்பாடு ஏற்பட்டுவருகிறதோ இன்றைய இளைஞர்களும் அவரை போற்றி பின்பற்றுகிறார்களோ அதுதான் சிந்தனையின் ஆற்றல். அவர் வெறும் பிழைப்புவாதியாக மட்டும் இருந்திருந்தால் நாயின் வாழ்க்கைதான் இன்றும் நமக்கு.//

நீங்கள் பெரியாரைக் குறிப்பிடுவதால் பெரியார் ஆங்கிலத்தைக் குறித்து என்ன சொன்னார் என்று படித்துவிட்டு அவரும் என்னைப்போல் பிழைப்புவதிதானா என்று சொல்லவும்.

இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
- http://periyaarr.blogspot.com
//

Periyaar also said, "Don't take everything I said at face value. Apply your rational mind; assess them; accept which ever thought you find it correct."

ராம் August 4, 2008 2:14 AM  

//நீங்கள் குறிப்பிட்ட ஜப்பான், தென் கொரியா போன்றவை எல்லாம் தனி நாடுகள். ஆனால் தமிழ்நாடு, இந்தியா என்ற நாட்டின் ஒரு பகுதி. இந்த வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.//
இந்தியாவில் பிறபகுதிகளிலும் வேலை செய்யும் தமிழர்களை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். அதுவும் வெளிநாட்டின் சூழ்நிலைதான். எனவே, எண்ணிக்கை சற்று கூடும். தேவையானவர்கள் ஆங்கில மொழிப்புலமை இருக்கும் பட்சத்தில் தங்களுக்கான துறையின் கலைச்சொற்களை மேற்கல்வியின்போது கூடுதலாகப் படித்தாலே போதுமானதாக இருக்கும்.

//இதற்கான பதிலை ஏற்கனவே கொடுத்து விட்டேன்.// அந்த பகுதியை கொஞ்சம் வெட்டி ஒட்டுங்கள். பெரியாரின் கூற்றா?

//ஆனால் அதைச் செய்யவேண்டுமென்றால்கூட ஆங்கில அறிவு அவசியம். நீங்கள் சொல்வதுபோல் ஆங்கிலத்தை ஒரு தொடர்பு மொழியாக மட்டும் பயின்றவர்களால் இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது.//

அதைச்செய்பவர்கள் நிச்சயம் ஆங்கிலத்தோடு கலைச்சொற்களும் அறிந்திருக்கவேண்டும். அவ்வளவுதான்.

மதிபாலா August 5, 2008 7:31 AM  

//BTW, great post and fantastic exchange of opinions.
I support education in mother tongue.//
//Thanks for your visit and comments and I hope most of the people will go with education in mother tongue!!//
இந்த பின்னூட்டங்களை மட்டும் படிப்பவர்களுக்கு இதை எழுதியவர்களின் தாய்மொழி தமிழா அல்லது ஆங்கிலமா என்ற சந்தேகமே வந்துவிடும். தமிழ் வழிக் கல்விக்காகக் குரல் கொடுக்கும் இவர்களால் தமிழில் உரையாடமுடியவில்லை. இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.//////

இதுபோன்ற வாதங்களைத்தான் பித்தலாட்ட கணக்கில் சேர்த்த வேண்டும் நண்பரே...தமிழ் போன்ட் இல்லாததது "இந்தியனின் " குற்றமும் அல்ல...நாகரீகம் கருதி அதற்கு ஆங்கிலத்தில் பதிலளித்தது என் தவறும் அல்ல...ஆனால் உடனே நீங்கள் அதை விமர்சிக்க ஆரம்பித்து விட்டீர்கள்!!!

மன்னிக்கவும் , உங்கள் விமர்சனத்தில் சற்றும் எனக்கு உடன்பாடில்லை!!

மதிபாலா August 5, 2008 7:36 AM  

நீங்கள் பெரியாரைக் குறிப்பிடுவதால் பெரியார் ஆங்கிலத்தைக் குறித்து என்ன சொன்னார் என்று படித்துவிட்டு அவரும் என்னைப்போல் பிழைப்புவதிதானா என்று சொல்லவும்./////

ண்பரே....நீங்கள் இந்த வாதத்தின் அடிப்படையையே தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்...இங்கே நாடும் , நாட்டு மக்களும் தெளிவு பெற தாய்மொழிக்கல்வி எவ்வளவு முக்கியம் என்றே நானும் , திரு.ராமும் பேசிக்கொண்டிருக்கிறோம்.....ஆங்கிலம் உலக் மொழிகளில் பரவலாக்கப்பட்ட மொழி, அதை மொழியளவில் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதில் எனக்கு சற்றும் மாற்றுக்கருத்தில்லை!!! அதை திரு.ராம் அவர்களும் ஒத்துக்கொள்வார் என்றே நினைக்கிறேன்!!!

மதிபாலா August 5, 2008 7:40 AM  

நீங்கள் குறிப்பிட்ட ஜப்பான், தென் கொரியா போன்றவை எல்லாம் தனி நாடுகள். ஆனால் தமிழ்நாடு, இந்தியா என்ற நாட்டின் ஒரு பகுதி. இந்த வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளுங்கள்./////

இருக்கட்டும் அதனாலென்ன...இந்தியாவின் ஒரு அங்கமாக தமிழகம் இருந்தாலும் தமிழர்களின் தாய்மொழி தமிழ்தானே நண்பரே???? அதையும் இதையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பதில் தவறே இல்லை......இன்னுஞ் சொல்லப்போனால் மிகச்சரியான ஒப்பீடே!!

மதிபாலா August 5, 2008 7:44 AM  

மேலும், உலக அறிவை தமிழில் கொணர்ந்தால் தமிழும் தமிழ்ச்சமூகமும் உய்யுமே! உண்மையில் நாம் அதைத்தானே செய்யவேண்டும்.
////

நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே....இங்கே நான் வசிக்கும் இந்தோனேசியாவில் ஆங்கிலம் என்பதற்கு இடமே இல்லை...கணினி முதல் உலகின் அனைத்து விஞ்ஞான முன்னேற்றங்களைப்பற்றிய புத்தகங்கள் அடுத்த நாளே அவரவர் மொழியில் சந்தையில் கிடைக்கின்றன..........மக்களும் தெளிவாக அக்கருத்துக்களை புரிந்து கொள்கிறார்கள்....!!!! நம் நாட்டில்தான் படித்தவனுக்கும் , படிக்காதவனுக்கும் மலைக்கும் மடுவளவிற்கும் உள்ள வித்தியாசம்.....காரணம் சந்தேகமின்றி தாய்மொழிக்கல்வி இல்லாத காரணம்தான்!!!

திங்கள் சத்யா August 5, 2008 8:39 AM  

இப்படி நீங்க இன்ச் பை இன்ச்சா உரிச்செடுப்பீங்கண்ணு எனக்கு முன்னமே தெரியாமப் போச்சே...!

Anonymous August 5, 2008 1:55 PM  

I'll go with Robin.In China, Russia, Germany etc. there is one language. So they can go anywhere in theur country and live. But in India it is not like that. I am reseacher ,so I have to go out of Tamil nadu for my career. If I did everything in Tamil, how can I survive?

மதிபாலா August 5, 2008 9:00 PM  

I'll go with Robin.In China, Russia, Germany etc. there is one language. So they can go anywhere in theur country and live. But in India it is not like that. I am reseacher ,so I have to go out of Tamil nadu for my career. If I did everything in Tamil, how can I survive?

///////

அய்யா அனானி ரிசர்ச்சாரே.....உங்க கேள்வி நியாயமானதுதான்!!!

உ.பிலயும் , பீகார்லயும் யாருமே இங்கிலீசு பேச மாட்டாங்களே ...அங்க போயி எப்படி ரிசர்ச்சுவீங்க....
எல்லாத்தையும் ஹிந்தில படிக்கணும்னு சொல்வீங்களா????

அப்பாலிக்கா சீனால போயி ரிசர்ச்ச மாண்டரீன்லதான் எல்லாத்தையும் படிக்கணுமா ???

ஜப்பான்ல போயி ரிசர்ச்ச கஞ்ச்சிலதான் எல்லாத்தையும் படிக்கணுமா???

இல்லியே!!! எந்தெந்த மொழி அவுங்க தொழிலுக்கு தேவையோ அதை மொழியளவில் படிப்பது தவறு இல்லை......

ஆனால் நம் தாய்மொழியில் நம் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை படிப்பதே நம் அறிவு சிறக்கவும் , சிறந்த வல்லுனர்களையும் உருவாக்க உதவும் என்பது என் கருத்து!!!!

மீண்டும் மீண்டும் நான் என் நிலையை தெளிவு படுத்திக்கொள்கிறேன்!!

தாய்மொழி வழிக்கல்வி என்பது அந்நிய மொழியை படிக்கவே படிக்காதே என்று சொல்வதல்ல!!! அந்நிய மொழிகளை முற்றிலும் புறக்கணிப்பதல்ல...மாற்று மொழி என்ற அளவில் படிப்பதுதான்!!

மதிபாலா August 5, 2008 9:08 PM  

திங்கள் சத்யா said...

இப்படி நீங்க இன்ச் பை இன்ச்சா உரிச்செடுப்பீங்கண்ணு எனக்கு முன்னமே தெரியாமப் போச்சே...!//////

ஹி.ஹி.ஹி.ஹி.....

நெறைய பிரச்சினைகள் இங்கே வெங்காயம் மாதிரிதான் ...உரிக்க உரிக்க ஒண்ணுமே இருக்காது!!

ராம் August 5, 2008 11:09 PM  

//ஆங்கிலம் உலக் மொழிகளில் பரவலாக்கப்பட்ட மொழி, அதை மொழியளவில் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதில் எனக்கு சற்றும் மாற்றுக்கருத்தில்லை!!! அதை திரு.ராம் அவர்களும் ஒத்துக்கொள்வார் என்றே நினைக்கிறேன்!!!//

கண்டிப்பாக நண்பரே. ஆங்கிலம் ஒரு மொழியாக இன்றைய சூழலில் சிறப்புடன் கற்றுத்தரபடவேண்டும். துறைசார்ந்த கலைச்சொற்களை மேற்கல்வியிலோ/ உயர்நிலையிலோ கற்றுத்தரலாம். உதாரணத்துக்கு

--------------------------------
Gauss's Law :

The total of the electric flux out of a closed surface is equal to the charge enclosed divided by the permittivity.
-------------------------------

மேற்கண்ட காஸ் விதியில் electric flux, charge, permittivity ஆகிய சொற்களை தவிர்த்து ஆங்கிலம் ஒரு மொழியாக அறிந்த அனைவருக்கும் எளிதில் புரிகிறதுதானே! இயற்பியல் பயில்வோர் மட்டும் மேற்கண்ட கலைச்சொற்களைக் கற்றால் போதுமானதல்லவா?.

இதற்காக, மொத்த பாடத்தையும் ஆங்கிலவழியில் பயிலவேண்டும் என்பது முட்டாள்தனமே !

அதுவும் தமிழ்வழியில் கற்பதால் ஏற்படும் பலன்கள் (நீங்கள் பட்டியலிட்டது போல்) நிறையது/ தேவையானது எனும்போது?

நன்றி !

Robin August 5, 2008 11:29 PM  

// தமிழ் போன்ட் இல்லாததது "இந்தியனின் " குற்றமும் அல்ல...நாகரீகம் கருதி அதற்கு ஆங்கிலத்தில் பதிலளித்தது என் தவறும் அல்ல...ஆனால் உடனே நீங்கள் அதை விமர்சிக்க ஆரம்பித்து விட்டீர்கள்!!! // ஆங்கிலத்தில் தமிழர் ஒருவர் எழுதினால் அதற்குப் பதில் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். அதுதான் நாகரீகம். அவருக்குத் தமிழில் பதில் எழுதினால் அநாகரீகம். புல்லரிக்கிறது.

Robin August 5, 2008 11:31 PM  

//உ.பிலயும் , பீகார்லயும் யாருமே இங்கிலீசு பேச மாட்டாங்களே ...அங்க போயி எப்படி ரிசர்ச்சுவீங்க....
எல்லாத்தையும் ஹிந்தில படிக்கணும்னு சொல்வீங்களா????// உபியிலும் பீகாரிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா? என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

Indian August 5, 2008 11:58 PM  

//// தமிழ் போன்ட் இல்லாததது "இந்தியனின் " குற்றமும் அல்ல...நாகரீகம் கருதி அதற்கு ஆங்கிலத்தில் பதிலளித்தது என் தவறும் அல்ல...ஆனால் உடனே நீங்கள் அதை விமர்சிக்க ஆரம்பித்து விட்டீர்கள்!!! // ஆங்கிலத்தில் தமிழர் ஒருவர் எழுதினால் அதற்குப் பதில் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். அதுதான் நாகரீகம். அவருக்குத் தமிழில் பதில் எழுதினால் அநாகரீகம். புல்லரிக்கிறது.//

நாலு ஆங்கிலேயர் நடுவில ஒருத்தர் தமிழில் பதில் சொன்னால் அது அநாகரிகம்.
நாலு தமிழர் நடுவில ஆங்கிலத்துக்கு பதில் ஆங்கிலத்தில் மட்டுமே சொல்லவேண்டும் என்று நீங்கள் போடும் பிட் உங்களுக்கே அதிகமாகத் தெரியவில்லையா?

ஆனாலும் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
அலுவலகத்திலும் தமிழில் தட்டச்சத் ஊக்குவித்ததற்காக! :-)

ராம் August 6, 2008 12:03 AM  

//I'll go with Robin.In China, Russia, Germany etc. there is one language. So they can go anywhere in theur country and live. But in India it is not like that. I am reseacher ,so I have to go out of Tamil nadu for my career. If I did everything in Tamil, how can I survive?//

ஆங்கில மொழியறிவும் துறைசார்ந்த கலைச்சொற்களின் அறிவும் நீங்கள் பெற்றிருக்கும்போது என்ன பிரச்சனை?

Indian August 6, 2008 12:04 AM  

//////உ.பிலயும் , பீகார்லயும் யாருமே இங்கிலீசு பேச மாட்டாங்களே ...அங்க போயி எப்படி ரிசர்ச்சுவீங்க....
எல்லாத்தையும் ஹிந்தில படிக்கணும்னு சொல்வீங்களா????// உபியிலும் பீகாரிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா? என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.//

இதையேதான் நாங்களும் சொல்றோம். தமிழில் பாடத்தைப் படி. ஆங்கிலத்தை மொழியாகக் கற்றுக்கொள் என்று?

தமிழனுக்கு ஒரு நீதி பீகாரிக்கு ஒரு நீதியா ?
புல்லரிக்குதுங்க.

Indian August 6, 2008 12:17 AM  

//ண்பரே....நீங்கள் இந்த வாதத்தின் அடிப்படையையே தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்...இங்கே நாடும் , நாட்டு மக்களும் தெளிவு பெற தாய்மொழிக்கல்வி எவ்வளவு முக்கியம் என்றே நானும் , திரு.ராமும் பேசிக்கொண்டிருக்கிறோம்.....ஆங்கிலம் உலக் மொழிகளில் பரவலாக்கப்பட்ட மொழி, அதை மொழியளவில் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதில் எனக்கு சற்றும் மாற்றுக்கருத்தில்லை!!! அதை திரு.ராம் அவர்களும் ஒத்துக்கொள்வார் என்றே நினைக்கிறேன்!!!//

இதில் எனக்கும் உடன்பாடு என்பதை என் ஆங்கில பின்னுட்டம் மூலமே நண்பர் ராபின் அறிந்திருக்கலாம் :)

Anonymous August 6, 2008 12:23 AM  

// ஆங்கிலத்தில் தமிழர் ஒருவர் எழுதினால் அதற்குப் பதில் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். அதுதான் நாகரீகம். அவருக்குத் தமிழில் பதில் எழுதினால் அநாகரீகம். புல்லரிக்கிறது.//

உண்மை. ஆனால் அனைத்து வலைப்பதிவுகளிலும் இதே கூத்துத்தான் நடக்குது :P

மதிபாலா August 6, 2008 2:28 AM  

// ஆங்கிலத்தில் தமிழர் ஒருவர் எழுதினால் அதற்குப் பதில் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். அதுதான் நாகரீகம். அவருக்குத் தமிழில் பதில் எழுதினால் அநாகரீகம். புல்லரிக்கிறது.//

உண்மை. ஆனால் அனைத்து வலைப்பதிவுகளிலும் இதே கூத்துத்தான் நடக்குது :P////

ஆம். என் வரையில் அது அநாகரீகம்தான்...!! உங்களுக்கு புல்லரித்தால் நான் என்ன செய்வேன்??? ( யப்பா , இப்பவே கண்ணக்கட்டுதுப்பா...முடியல...! ஹிஹி.ஹி.ஹி.)

மதிபாலா August 6, 2008 2:32 AM  

//உ.பிலயும் , பீகார்லயும் யாருமே இங்கிலீசு பேச மாட்டாங்களே ...அங்க போயி எப்படி ரிசர்ச்சுவீங்க....
எல்லாத்தையும் ஹிந்தில படிக்கணும்னு சொல்வீங்களா????// உபியிலும் பீகாரிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா? என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை./////

இதற்கு "இந்தியன்" அவர்கள் பதில் சொல்லிவிட்டார்!! அதையே யாமும் வழிமொழிகிறோம்!!

Robin August 6, 2008 3:35 AM  

//இதையேதான் நாங்களும் சொல்றோம். தமிழில் பாடத்தைப் படி. ஆங்கிலத்தை மொழியாகக் கற்றுக்கொள் என்று?

தமிழனுக்கு ஒரு நீதி பீகாரிக்கு ஒரு நீதியா ?
புல்லரிக்குதுங்க.// உபி, பிகாரில் உள்ள பேராசிரியர்கள் எல்லாம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டும் படித்தவர்கள் என்றா சொன்னேன். வட மாநிலங்களில் எல்லாம் ஆங்கில வழிக் கல்வி இல்லையா? இப்போது புல்லரிப்பு நின்றிருக்கும் என்று நினைக்கிறேன் :)

Indian August 6, 2008 5:20 AM  

////இதையேதான் நாங்களும் சொல்றோம். தமிழில் பாடத்தைப் படி. ஆங்கிலத்தை மொழியாகக் கற்றுக்கொள் என்று?

தமிழனுக்கு ஒரு நீதி பீகாரிக்கு ஒரு நீதியா ?
புல்லரிக்குதுங்க.// உபி, பிகாரில் உள்ள பேராசிரியர்கள் எல்லாம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டும் படித்தவர்கள் என்றா சொன்னேன். வட மாநிலங்களில் எல்லாம் ஆங்கில வழிக் கல்வி இல்லையா? இப்போது புல்லரிப்பு நின்றிருக்கும் என்று நினைக்கிறேன் :)//

அவர்களுக்கு ஆங்கிலம் மொழியாக மட்டும் தெரிஞ்சா (எனக்கு, அதாவது ஆங்கிலம் தெரிஞ்ச தமிழனுக்கு)போதாதா?

புல்லரிப்பு நின்னிறுச்சுங்க :-)

குரங்கு August 6, 2008 5:45 AM  

====
Robin said...
//சமச்சீர் கல்வி என்றால் அனைவரும் ஆங்கிலம் படிப்பதா?????

அனைவரும் ஆங்கிலம் படித்தால் தமிழ் நாட்டில் தமிழை யார் படிப்பது???// -
ஏன் ஏழைகள் மட்டும் தமிழ் வழியில் படிக்க வேண்டும்? விஜயகாந்த் சொல்வது தான் சரி. அனைவருக்கும் ஆங்கில மொழியில் கற்பிப்பதன் மூலம் சமசீர் கல்வியை கொண்டு வர முடியும். இன்று தமிழ் மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படவேண்டும் என்று முழங்குபவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஆங்கில மொழி வழியில் தானே படிக்கின்றனர். பின்னர் ஏன் இந்த பித்தலாட்டம்? இன்றுள்ள நவீன உலகில் ஆங்கில வழி படிப்பதுதான் சிறந்தது. இது தமிழ், தமிழ் என்று அரசியலுக்காக முழங்குபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். தமிழ் ஒரு படமாக வைக்கப்படவேண்டுமே தவிர, எல்லாப் பாடங்களையும் தமிழில் தான் அதுவும் ஏழைகள் மட்டும் படிக்க வேண்டும் என்று வற்ப்புறுத்துவது என்பது வெறும் மோசடி வேலை.
====

எனக்கு என்னவோ ராபின் கூறியது சரிதான் போலிருக்கிறது.

எந்த மொழியும் அழியாது, அதன் சமுதாயம் இருக்கும் வரை.

நீங்கள் தென்தமிழகம் போய் பாருங்கள், டிகிரி படிக்கும் யாருக்கும் ஆங்கிலத்தில் பேச தெரியாது. ஆங்கிலம் ஒரு மொழிதான், அதை படிப்பதனால் அறிவு கூடிடாது. அதே நேரத்தில் ஆங்கிலம் படிப்பதினால் நமக்கு ஒரு நல்லது என்றால் ஏன் தடுக்க வேண்டும்.

Indian August 6, 2008 7:06 AM  

//எனக்கு என்னவோ ராபின் கூறியது சரிதான் போலிருக்கிறது.

எந்த மொழியும் அழியாது, அதன் சமுதாயம் இருக்கும் வரை.

நீங்கள் தென்தமிழகம் போய் பாருங்கள், டிகிரி படிக்கும் யாருக்கும் ஆங்கிலத்தில் பேச தெரியாது. ஆங்கிலம் ஒரு மொழிதான், அதை படிப்பதனால் அறிவு கூடிடாது. அதே நேரத்தில் ஆங்கிலம் படிப்பதினால் நமக்கு ஒரு நல்லது என்றால் ஏன் தடுக்க வேண்டும்.//

ஆங்கிலம் ஒரு மொழிதான், அதை படிப்பதனால் அறிவு கூடிடாது. அதே நேரத்தில் ஆங்கிலம் படிப்பதினால் நமக்கு ஒரு நல்லது என்றால் ஏன் தடுக்க வேண்டும்

இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

எனக்கு என்னவோ ராபின் கூறியது சரிதான் போலிருக்கிறது.

மேலே திரு/திருமதி/செல்வி குரங்கு அவர்கள் சொல்வதும் நண்பர் ராபின் சொல்வதும் வேறு வேறு என்பது என்னுடைய புரிதல்.

//( யப்பா , இப்பவே கண்ணக்கட்டுதுப்பா...முடியல...! ஹிஹி.ஹி.ஹி.)//

மறுக்காச் சொல்லேய்....!!!

Indian August 6, 2008 7:32 AM  

//எந்த மொழியும் அழியாது, அதன் சமுதாயம் இருக்கும் வரை. //

தங்களுக்கு நம்பிக்கையைத் தரும் காரணி எதுவோ?
சற்று விளக்கமாகக் முடியுமா?

இதையும் பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Extinct_language

Anonymous August 6, 2008 7:56 AM  

"அய்யா அனானி ரிசர்ச்சாரே.....உங்க கேள்வி நியாயமானதுதான்!!!

உ.பிலயும் , பீகார்லயும் யாருமே இங்கிலீசு பேச மாட்டாங்களே ...அங்க போயி எப்படி ரிசர்ச்சுவீங்க....
எல்லாத்தையும் ஹிந்தில படிக்கணும்னு சொல்வீங்களா????

அப்பாலிக்கா சீனால போயி ரிசர்ச்ச மாண்டரீன்லதான் எல்லாத்தையும் படிக்கணுமா ???

ஜப்பான்ல போயி ரிசர்ச்ச கஞ்ச்சிலதான் எல்லாத்தையும் படிக்கணுமா???

இல்லியே!!! எந்தெந்த மொழி அவுங்க தொழிலுக்கு தேவையோ அதை மொழியளவில் படிப்பது தவறு இல்லை......

ஆனால் நம் தாய்மொழியில் நம் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை படிப்பதே நம் அறிவு சிறக்கவும் , சிறந்த வல்லுனர்களையும் உருவாக்க உதவும் என்பது என் கருத்து!!!!

மீண்டும் மீண்டும் நான் என் நிலையை தெளிவு படுத்திக்கொள்கிறேன்!!

தாய்மொழி வழிக்கல்வி என்பது அந்நிய மொழியை படிக்கவே படிக்காதே என்று சொல்வதல்ல!!! அந்நிய மொழிகளை முற்றிலும் புறக்கணிப்பதல்ல...மாற்று மொழி என்ற அளவில் படிப்பதுதான்!!"

In UP or anywhere they teach and explain in english only. Bacause that is the common language if you don't know the Hindi.If you study everything in Tamil means you can't even speak repidax english only.
"ஆங்கில மொழியறிவும் துறைசார்ந்த கலைச்சொற்களின் அறிவும் நீங்கள் பெற்றிருக்கும்போது என்ன பிரச்சனை?"

If study everthing in tamil means How do you know the same word in English and How can you able to explain your questions?
Sangamithra

Indian August 6, 2008 8:21 AM  

ஹை நூறு ஆச்சு.
முன்னால் பின்னுட்டம் போட்ட நண்பருக்கு.

ஒண்ணும் புரிய மாட்டேங்குது.
உங்கள் கருத்தைப் தனியாக நிறம் மாற்றியோ அல்லது // போன்று பிரித்துச் சொல்லலாமே?

மதிபாலா August 6, 2008 2:41 PM  

எனக்கு என்னவோ ராபின் கூறியது சரிதான் போலிருக்கிறது.

எந்த மொழியும் அழியாது, அதன் சமுதாயம் இருக்கும் வரை.

நீங்கள் தென்தமிழகம் போய் பாருங்கள், டிகிரி படிக்கும் யாருக்கும் ஆங்கிலத்தில் பேச தெரியாது. ஆங்கிலம் ஒரு மொழிதான், அதை படிப்பதனால் அறிவு கூடிடாது. அதே நேரத்தில் ஆங்கிலம் படிப்பதினால் நமக்கு ஒரு நல்லது என்றால் ஏன் தடுக்க வேண்டும்.////

எப்பே....அதத்தானுங்க நானுஞ் சொல்றேன் தலிவா....ஆங்கிலத்தை ஒரு மொழியாக ஒண்ணாங் கிளாசில இருந்து படிச்சாலே டிகிரி லெவலுக்கு போனவனுக்கு கூட ஆங்கிலம் தெரியாம கண்ணக்கட்டி காட்டுல வுட்ட மாதிரி திரியறானே...அதே ஆங்கிலத்தில அல்லாத்தையும் படிச்சா , மக்கள் மக்கடிக்கிற மக்குச்சாமியார்களா மாற மாட்டாங்களான்றதுதான் என் கேள்வியே...........கண்டுபிடிப்புக்களையும் , சாதனைகளையும் நிகழ்த்த தாய்மொழி வழிக்கல்வியே சிறந்ததுன்றேன்!!

அதே சமயம் ,இங்கிலீசையும் நம்ம பட்லர் இங்கிலீசு வாத்தியாருங்க இல்லாம நல்ல வாத்தியாருங்களா போட்டு " ரெயினே இல்லாத தென் தமிழகத்துல "ரெயின் , ரெயின் கோ அவே"ன்னு பாடாம "ரெயின் ரெயின் கம் எகெய்ன்"னு நம்ம ஊருக்கு ஏத்தாப்பல சொல்லிக்கொடுக்கச்சொல்லுறோம்....அப்புறம் நீங்க தமிழ்ல நல்லா படிச்சி புரிஞ்ச பாடத்தை வச்சி அதே மொழியா நீங்க படிச்ச இங்கிலீச வெச்சி அமெரிக்காவுக்கு பொழைக்க போலாம்கிறேன்!!!!

மதிபாலா August 6, 2008 2:47 PM  

In UP or anywhere they teach and explain in english only. Bacause that is the common language if you don't know the Hindi.If you study everything in Tamil means you can't even speak repidax english only.//////////


ஏனுங்க......உ.பில அல்லாரும் இங்க்லீஷ்தான் படிக்கறானுங்க யாரு சொன்னாங்க?நம்ம அளவில ஒரு பத்து சதம் கூட அங்க யாரும் ஆங்கிலம் படிக்கிறதில்ல!!அதனால அவுங்க இங்கிலிச விட நம்ம ரெபிடெக்ஸ் இங்கிலீசு எவ்வளவோ தேவல...( வெறும் நொய்டாவை கணக்கு வச்சி மொத்த உ.பியை பத்தின முடிவுக்கு வரக்கூடாதுங்கோவ்....!!!)

மதிபாலா August 6, 2008 2:53 PM  

If study everthing in tamil means How do you know the same word in English and How can you able to explain your questions?
Sangamithra///

சங்கமித்ரா அம்மணிக்கு வணக்கமுங்கோ....

புராஜெக்ட் முடிச்சி வந்திருப்பீங்க போல இருக்கு...அதான் எப்படி பேப்பர் சப்மிட் பண்ணறதுங்கற ரேஞ்ச்சிற்கு கேட்கறீங்க...!!!

ஆமா எல்லாத்தையும் இங்கிலீசுல படிச்சா அந்த வார்த்தைக்கு தமிழ்ல எப்படி அர்த்தம் கண்டு பிடிக்கிறது????

எவனோ மொழியில ஏதோ ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியலன்னு நீங்க இம்புட்டு வருத்தப்படும் போது , என் தாய்மொழியில் அதுக்கான அர்த்தம் தெரியக்கூடாதா ந்னு நான் வருத்தப்படறது தப்புங்களா????

இல்லை வழக்கம் போல நம்மளை போலியா பேசறான்னு பொலி போடப்போறீங்களா??

மதிபாலா August 6, 2008 3:03 PM  

எந்த மொழியும் அழியாது, அதன் சமுதாயம் இருக்கும் வரை.////

அப்படிப்போடுங்க.........பிரஞ்சு பேசுபவன் பிரஞ்சுக்காரன் , டச்சு பேசுபவன் டச்சுக்காரன் , ஆங்கிலம் பேசுபவன் இங்கிலீஷ்காரன் , ஐரிஷ் பேசுபவர்ன் அயர்லாந்துக்காரன் , இவைகளீன் வரிசையில் தெலுங்கு பேசுபவன் தெலுங்கன் , மலையாளம் பேசுபவன் மலையாளி , கன்னடம் பேசுபவன் கன்னடிகா ...ரொம்ப நீண்டிருச்சோ???

தமிழ் பேசுபவன் தமிழன்........!!!! ஆங்கிலம் பேசுபவன்......னும் தமிழன்னு சொல்லாமா இல்லை முன்னாளில் தமிழில் பேசியதால் இந்நாளில் ஆங்கிலம் பேசுபவனும் தமிழன் ந்னு சொல்லலாமா???

ஒரு ரெண்டு தலைமுறைக்கு??? ஒரு மூணு தலைமுறைக்கு??? அப்புறம் நாமளும் இங்கிலீஷ்காரன் ஆயிடுவோம்...

நம்ம அடையாளத்தை தொலைச்சிடுவொம்....எந்த ஒரு மொழியும் அழியாதவரைக்குமே அந்த சமுதாயம் நிலைத்து நிற்கும்!!!!

ராம் August 6, 2008 6:32 PM  

//If study everthing in tamil means How do you know the same word in English and How can you able to explain your questions?
Sangamithra//

அதான் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் சொல்லியாயிற்றே! படித்தீர்களா? மீண்டும்:-

ஆங்கிலம் ஒரு மொழியாக நன்கு எழுத-படிக்க-பேச முதல்வகுப்பிலிருந்தே திறமையான ஆசிரியர்களைக்கொண்டு சிறப்புடன் கற்றுத்தரவேண்டும். துறைசார்ந்த கலைச்சொற்களை மட்டும் அப்பாடங்களைப் படிக்கும்போது தமிழோடு ஆங்கிலத்திலும் கற்றுக்தரவேண்டும். உதாரணத்துக்கு

--------------------------------
Gauss's Law :

The total of the electric flux out of a closed surface is equal to the charge enclosed divided by the permittivity.
-------------------------------

மேற்கண்ட காஸ் விதி electric flux, charge, permittivity ஆகிய இயற்பியல்துறை சார்ந்த கலைச்சொற்களைத் தவிர்த்து

The total of the ----- out of a closed surface is equal to the ---- enclosed divided by the ----.

ஆங்கிலம் ஒரு மொழியாக அறிந்த ஒருவர் மேலுள்ள கோடிட்ட இடங்களுக்கான சொற்களைப் படித்தபின்பு, இவ்வாக்கியத்தைப் புரிந்துகொள்வதில் என்ன பிரச்சனை! இயற்பியல் பயில்வோர் electric flux, charge, permittivity போன்ற கலைச்சொற்களைத் தமிழோடு ஆங்கிலத்திலும் கற்றுக்கொள்வதால் மிகவும் சுலபமாயிற்றே!.

இதற்காக இயற்பியல் பாடத்தையே துவக்கத்திலிருந்து ஆங்கிலவழியில்தான் பயிலவேண்டும் என்பது அறிவுடையசெயலா? அதுவும் தமிழ்வழியில் கற்பதால் ஏற்படும் பலன்கள் நிறையது/ தேவையானது எனும்போது!

புரிகிறதா?

தினேஷ் August 6, 2008 8:05 PM  

புரிகிறதா?..//

இவ்வளவு வாதங்களுக்கு பிறகும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு புரிய வைக்க நீங்கள் முயற்சிப்பது வீண் ராம்!

செந்தழல் ரவி August 6, 2008 10:00 PM  

மதி

பின்னூட்டங்கள் வேறுதிசையில் சென்றாலும்...

உங்கள் பதிவில் விஜயகாந்தை தோலுரிப்பத்தற்கு பதில் அவர் மீதான காழ்ப்புணர்ச்சியே அதிகம் தெரிகிறது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்...

திமுக அதிமுகவுக்கு வாக்களித்து அலுத்துவிட்டேன். இந்த தேர்தலில் நான் விஜயகாந்துக்கு தான் வாக்களிப்பேன்.

செந்தழல் ரவி August 6, 2008 10:06 PM  

///தாய்மொழி வழிக்கல்வி என்பது அந்நிய மொழியை படிக்கவே படிக்காதே என்று சொல்வதல்ல!!! அந்நிய மொழிகளை முற்றிலும் புறக்கணிப்பதல்ல...மாற்று மொழி என்ற அளவில் படிப்பதுதான்!!"///

சரியான ஷாட்...

மதி...

எனக்கு கொரிய மொழி எழுத படிக்க தெரியும்...

பணி காரணமாக கத்துக்கிட்டேன்...

அதனால தமிழ் அழிஞ்சுடுச்சா என்ன ?

இப்போதெல்லாம் ஆங்கிலம் வழி கல்வி மெட்ரிக்குலேஷன்ல மட்டும் தான் இருக்கு.

கவெர்மண்ட் ஸ்கூல்ல படிச்ச நான் அவங்களோட போட்டிபோட்டு ஒரு வேலைக்கு வரதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ?

எந்த இண்டர்வியூ இன்னைக்கு தமிழ்ல நடக்குது தமிழ்நாட்டுல ?

என் சொந்த பந்தங்கள், ஏழைகள் சேரி வாழ் மக்கள் எல்லாம் ஆங்கிலம் அரசுப்பள்ளியில படிச்சு நல்லா வரதுக்கு ஏன் எரியுது உங்களுக்கு ?

ஹிந்தி எதிர்ப்புக்கும் ஹிந்தி திணிப்புக்கும் எப்படி வித்தியாசம் உண்டோ, அதே மாதிரி,

ஆங்கிலம் படிக்கறதுக்கும், ஆங்கில வழி கல்விக்கும் வித்தியாசம் உண்டு இல்லையா ?

அரசாங்கமே ஆங்கிலம் டியூசன் நடத்தனும் ஏழைகளுக்கு...

போட்டித்தேர்வுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கனும்...

மதிபாலா August 7, 2008 2:24 AM  

மதி

பின்னூட்டங்கள் வேறுதிசையில் சென்றாலும்...

உங்கள் பதிவில் விஜயகாந்தை தோலுரிப்பத்தற்கு பதில் அவர் மீதான காழ்ப்புணர்ச்சியே அதிகம் தெரிகிறது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்...

திமுக அதிமுகவுக்கு வாக்களித்து அலுத்துவிட்டேன். இந்த தேர்தலில் நான் விஜயகாந்துக்கு தான் வாக்களிப்பேன்./////

சுட்டிக்காட்டி மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.....விஜயகாந்த் போன்ற அரசியல் போலிகளை உரித்துக்காட்டுவதே என் இழையின் நோக்கம்....அதில் உங்களுக்கு சிஞ்சிற்றும் சந்தேகமே வேண்டாம்.......அதை தாய்மொழி பற்றிய அருமையான , சுவையான , கருத்தோட்டமுள்ள விவாதக்களமாக மாற்றிய பெருமை தோழர் ராபின் அவர்களுக்கு உண்டு!!!

தவிர , அதிமுக , திமுக வுக்கு வாக்களித்து போரடித்துப்போனால் ஏன் விஜயகாந்துக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் , எங்க தங்க தலிவர் கார்த்திக்கு , சத்துவத்தலைவர் சரத்து , டண்டணக்கா டி.ஆரு இவுக எல்லாம் இருக்காங்க அல்லவா??? இது பற்றியும் ஒரு இழை எழுதியிருக்கிறேன்..உங்கள் பார்வைக்கு அதை நான் மீள்பதிவு இங்கேயே செய்கிறேன்!!

""""""""""""""


சித்தாந்தங்களுக்கும், உயரிய கொள்கைகளுக்கும் , தகுதியான தலைவர்களுக்கும் பஞ்சமான இந்த தமிழ்நாட்டில் கொள்கை பற்றி தெரியாத அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை..............சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி அரசியல் நடத்தும் அரசியல் நடிகர்களுக்கும் பஞ்சமில்லை...........


அண்ணா தொடங்கி , கலைஞர் கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜெயல்லிதா வரை சற்றேறக்குறைய அரை நூற்றாண்டு காலம் நம்மை சினிமா துறையினர் ஆண்ட பிறகும் இன்றைக்கும் விஜயகாந்த் , சரத்குமார் பின்னால் அணி வகுத்து நிற்கும் தமிழனை முட்டாள் என்றழைப்பதில் தவறென்ன............???

இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் ( ஆந்திரா தவிர்த்து ...) ஒரு சினிமா நடிகன் நாடாள முடியும் என்று சொன்னால் வாயில் மட்டும் சிரிக்க மாட்டார்கள்.....


சினிமா துறையினர் அரசியலுக்கு வருவதில் தவறொன்றுமில்லைதான் ...எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்போமானால் யாரும் இங்கே அரசியலுக்கு வரவும் நாடாளவும் தடையில்லைதான்....
ஆகவே அரசியலுக்கு வரும் அவர்களை நான் குற்றம் சொல்லவும் மாட்டேன்......குற்றம் சொல்வதும் தவறு.....


ஆனால் சினிமாவில் அன்றாடம் அக்கிரமக்காரர்களை அழிக்கும் ஒருவன் அரசியலிலும் அவ்வாறே செய்வான் என்றெண்ணும் மக்கள்தான் முட்டாள்கள்!!! சினிமா வேறு , நிதர்சன்ம் வேறு என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள் இந்த மட ஜனங்கள்....???

பாடல்களால் மட்டுமே புகழடைந்த ஒரு முதல்வர் , ஆடல்களினாலேயே புகழ்பெற்ற ஒரு முதல்வர் , இப்போது அதிரடியினாலே யே முதல்வராகத்துடிக்கும் இன்னொருவர் !!(இவர்களின் வரிசையில் அண்ணாவையும் , கலைஞரையும் சேர்க்க முடியாதுதான்........ஆனாலும் அவர்களின் பின்புலம் சினிமாதான் என்பதை மறுக்கவியலாது)!!

ஏன் சிறந்த மக்கள் நலத்திட்டங்களையும் , கொள்கைகளையும் கொண்டுள்ள ஒருவர் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவனாக மாற முடியாதா??? அத்தகைய தலைவர்களுக்குதான் இங்கே பஞ்சமா என்ற கேள்விக்கான பதில் எவரிடத்துமில்லை!

மக்களே....

என்னுயிர் தமிழ் மக்களே...........

இனியாவது உங்கள் தலைவனை வெள்ளித்திரையில் தேடாமல் விவேகத்துடன் சிந்தித்து நல்ல மனிதர்களையும் , நல்ல சித்தாந்தங்களையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் !!!

நிற்க ......

ஏன் சினிமாவிலிருந்து வந்த தலைவர்கள் நாடாள்வதில் என்ன தவறு என்பதை ஆராய்வதை விட பொத்தாம் பொதுவில் நான் அதைச்செய்வேன் , இதைச்செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளிவிடுவோரை நம்பி மோசம் போவதே பிழைப்பாகிப்போனது.......

இப்படித்தான் , நேற்று ஒருவர் "சாதி - மதம்" அற்ற சமுதாயத்தை நான் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவேன் என்றார்......

அரசியலில் அவர் சாதி மதம் போக்க , என்ன இதுவரை செய்துள்ளார் அல்லது ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன செய்து சாதி - மதமற்ற சமுதாயம் ஆக்கப்போகிறார் என்ற கேள்வியை வைப்பது பொருத்தமே......அதற்கான பதில் கிடைக்குமா என்றால் கிடைக்காதென்பதே நிதர்சனம்...காரணம் அவர்களுக்கெல்லாம் மக்கள் தொண்டு செய்வதென்பது முக்கியமல்ல...அது முதல் நோக்கமும் அல்ல..எப்படியாவது இம்மாநிலத்தின் முதல் பதவியை அடைந்து பதவியில் திளைக்க வேண்டுமென்பதுதான்!!!!

நல்ல தலைவர்களை ஆதரிப்போம்..

தன்னலமில்லாத இளைஞர் படைக்கு நம் ஆதரவுக்கரங்களை நீட்டுவோம்...

ஒவ்வொரு முறையும் நம் வாக்குச்சீட்டில் ஓட்டுக்களை குத்தும்போது எந்தக்கட்சி என்று பாராமல் நல்ல மனிதரா இல்லையா என்பதை மட்டும் பார்த்து வாக்களிப்போம்....

இதுவே வருங்கால தமிழ் சந்ததியினருக்கு விட்டுச்செல்லப்போகும் நல்லதொரு ஆரம்பம்!!!!!!!!


""""""""""""""

மதிபாலா August 7, 2008 2:36 AM  

எனக்கு கொரிய மொழி எழுத படிக்க தெரியும்...

பணி காரணமாக கத்துக்கிட்டேன்...

அதனால தமிழ் அழிஞ்சுடுச்சா என்ன ?

////////


கரெக்ட்...........அதே மாதிரி ஆங்கிலமும் படியுங்க யார் வேணான்றா.....சொல்லப்போனா நீங்க எப்படி கொரிய மொழி படிச்சீங்களோ அதுபோல ஆங்கிலமும் படிச்சாதான் எமர்சென்சி வார்டிலிருக்கும் தமிழ் சாதாரண வார்டுக்கு வர வாய்ப்பாவது உண்டு!!!

/////////

இப்போதெல்லாம் ஆங்கிலம் வழி கல்வி மெட்ரிக்குலேஷன்ல மட்டும் தான் இருக்கு.

கவெர்மண்ட் ஸ்கூல்ல படிச்ச நான் அவங்களோட போட்டிபோட்டு ஒரு வேலைக்கு வரதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ?

///////////

இதுவும் கரெக்ட்டு..இதுபோன்ற கஷட்ங்களை தவிர்க்க தான் ஆங்கில வழிக்கல்வியை நிறுத்திட்டு ஒரே மாதிரி தமிழ்வழிக்கலவியை அறிமுகப்படுத்தணும்ங்கிறேன்!!

------------

எந்த இண்டர்வியூ இன்னைக்கு தமிழ்ல நடக்குது தமிழ்நாட்டுல ?

///////

இதுவும் கரெக்டான ஆதங்கம்தான்...தமிழ்நாட்டுல தமிழ் மொழியில இன்டர்வியூ ஏன் நடக்கலைங்கிற உங்க கேள்வி சரிதான்.........அதை தமிழ்வழிக்கல்வி எதிர்ப்பாளர்களிடம் ரீ - ரூட் செய்கிறேன்!!

--------------


என் சொந்த பந்தங்கள், ஏழைகள் சேரி வாழ் மக்கள் எல்லாம் ஆங்கிலம் அரசுப்பள்ளியில படிச்சு நல்லா வரதுக்கு ஏன் எரியுது உங்களுக்கு ? //////

ஆனா , தெளிவா பிரிச்சி பாக்கறீங்க சார்....உங்க சொந்த பந்தங்கள் அப்புறம் நிறுத்தி ஏழைகள் , சேரி வாழ் மக்கள் நு பிரிச்சி பகுத்தாராய்கிற அவர்களை வாக்கியத்தில் கூட ஒன்றாக வைக்க விரும்பாத நீங்கள் , அவர்கள் முன்னேற்றம் பற்றீ கதைப்பதும் நன்றாகத்தான் இருக்குது!!

----------------------------


ஹிந்தி எதிர்ப்புக்கும் ஹிந்தி திணிப்புக்கும் எப்படி வித்தியாசம் உண்டோ, அதே மாதிரி,

ஆங்கிலம் படிக்கறதுக்கும், ஆங்கில வழி கல்விக்கும் வித்தியாசம் உண்டு இல்லையா ?

அரசாங்கமே ஆங்கிலம் டியூசன் நடத்தனும் ஏழைகளுக்கு...

போட்டித்தேர்வுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கனும்...

////////////

கரெக்ட்டு சார் ...அதத்தான் நானும் சொல்றேன்............ஆங்கிலம் படிக்க எப்போதுமே நான் எதிரியில்லை என்பதை தெளிவு படுத்தியே தேய்ந்து விட்டேன்!!

ஒரு கொசுரு -----

செந்தழல் - அழகான தமிழ்ப்பெயர் !!!

Anonymous August 7, 2008 1:41 PM  

we can argue everything. But in practical it's not going to work. My husband studied in tamil only. I know how he is struggling now. So don't just say ,that learning is equal to studying O.K

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP