சிங்கள எஜமானர்களும் , தமிழ் சேவகர்களும்!

Friday, September 26, 2008

புலிகள் வீழ்வார்கள்...கிளினொச்சி எமதே.........கிழக்கில் நடாத்திக்காட்டிய தேர்தல் போன்றே வடக்கிலும் தேர்தல் நடாத்தி பரந்துபட்ட சிங்களமும் , தமிழனும் ஒன்றாக சம உரிமையுடன் வாழலாம் என்று இங்கே நமது இந்திய அரசுடனும் பொய்களை கட்டவிழ்த்து விட்டு , நியூயார்க் சென்று அங்கேயும் தமிழில் பேசி தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க முயலும் பார்ப்பன சிங்களர்களின் குள்ள நரித்தனம் இவ்வளவு விரைவாக வெளிப்பட்டுவிடும் என்று அவர்களே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்!!!

இலங்கை சிங்களர்க்கு மட்டுமே சொந்தம்...
தமிழர்கள் அங்கே வாழலாம்

என்ற இலங்கை படைத்தளபதியின் கூற்று அதை மெய்பிக்கும்விதமே அமைந்திருக்கிறது!!


இந்த நாடு சிங்களவருக்கே சொந்தம்; சிறுபான்மையினர் எம்முடன் வாழலாம் - இராணுவத் தளபதி
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 07:04.14 AM GMT +05:30 ] [ தினக்குரல் ]

இந்த நாடு சிங்களவருக்கே சொந்தம். சிறுபான்மையினர் எம்முடன் வாழ முடியும். இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்கள் நாட்டை சிறுபான்மையினரான தமிழர்கள் துண்டாட ஒருபோதும் இடமளிக்க மாட்டார்களென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கனடாவில் "நாஷனல் போஸ்ட்' பத்திரிகையாளர் ஸ்ருவார்ட் பெல்லிற்கு சமீபத்தில் அளித்த பேட்டியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-யுத்தம் ஒருவருடத்திற்குள் முடிவடைந்து விடுமென தான் கருதுவதாகவும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் தேசிய தலைமைத்துவம் உள்ளதாகவும் எமக்கு வழங்கப்பட்ட இலக்கு பயங்கரவாதத்தை அழிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாயகத்தை விரும்பும் தமிழர்கள் யுத்தத்தை முன்னெடுத்து அதற்கான இடமாக இலங்கையைத் தெரிவு செய்திருப்பதாக கருதும் ஜெனரல் பொன்சேகா, இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள மக்கள் நாட்டை சிறுபான்மையினரான தமிழர்கள் துண்டாட ஒரு போதும் இடமளிக்க மாட்டார்களெனக் கூறியுள்ளார்.

மூன்று தசாப்தகாலமாக இராணுவத்தில் சேவையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பொன்சேகா இந்த நாடு சிங்களவருக்கு சொந்தமானதென உறுதியாக நம்புகிறேன். ஆனால் இங்கு சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. எமது மக்கள் போன்றே நடத்துகின்றோம். நாம் நாட்டின் பெரும்பான்மையினர் 75% மாகவுள்ளோம். அதனை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாட்டைப் பாதுகாக்கும் உரிமை எமக்கு உண்டு. நாங்கள் வலிமையான தேசம். அவர்கள் எம்முடன் வாழ முடியும். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தேவையற்ற விடயங்களுக்கு அவர்கள் முயற்சிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

படையினரின் நடத்தை தொடர்பாகச் சர்வதேச மனித உரிமை குழுக்களின் விசனத்தை அவர் நிராகரித்துள்ளார்.

யுத்தத்தில் பொதுமக்கள் மரணங்கள் தவிர்க்கப்பட முடியாதவை என்று கூறும் அவர் இலங்கை மோதலில் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே போரில் சம்பந்தப்படாதவர்கள் இறந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

புலிகளிடம் 4 ஆயிரம் பேரே இருப்பதாகக் கூறியுள்ள இராணுவத் தளபதி இலங்கைப் படையில் 2 1/2 இலட்சம் பேரும் நிரம்ப ஆயுதங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காட்டுக்குள் ஒவ்வொரு அங்குல இடத்திலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி கண்ணி வெடி அகற்றும் பணிக்குக் குறைந்தது 20 வருடங்களாவது செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b3bX9ES34d2IWnf3b02D7GQe4d34OpDce0ddZLuIce0dg2hr2cc0vj0q3e

---------------------------

இதற்கு மேலும் ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசுகளால் நீதி கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால் அதை என்னவென்று சொல்வது?

Read more...

தமிழீழம் - கொதித்தெழும் தமிழகம்...!!!

Tuesday, September 23, 2008

ஈழத்தில் தமிழர்கள் படும் அல்லல் பற்றிய மிதமிஞ்சிய கவலை தமிழுணர்வும் , தமிழரின் நலன் பால் அக்கறை கொண்டுள்ளோருக்கும் உண்டு என்பதை நாம் அறிவோம்.....

எல்லா நண்பர்களுமே தங்களது ஆதங்கத்தையும் அதே சமயம் நமது இந்திய தேசியத்தின் இறையாண்மைக்குட்பட்டும் நமது எதிர்ப்புக்களை தெரிவிக்க தயங்குவதும் , அத்தகைய ஒரு நிலையே தமிழகத்தில் ஈழ ஆதரவுக்குரல் சற்று மட்டுப்பட்டே ஒலிப்பதையும் அறிவோம்!!!இத்தகைய நிலையின் பால் மிகுந்த சலிப்பும் எமக்கு உண்டு!!!!

புலிகளை பற்றிய பேச்சின் போதும் சரி ......ஈழத்தமிழர் பற்றிய பேச்சின் போதும் சரி , தமிழர்க்கு எதிரான சக்திகள் எப்போதும் ராஜிவ் கொலையை பற்றியே சுழன்று கொண்டிருப்பது கண்கூடு!!!!!!!!

இங்கே தமிழகத்து காங்கிரஸார் யாரோ சிலரிடம் பெயர் வாங்குவதறகாக நமது நலனையும் குழி தோண்டிப்புதைக்கவே சித்தமாயுள்ளார்கள்!!!! புரட்சித்தலைவி அவர்களோ , தம்மை சார்ந்தவர்களுக்காக போராடுவது என்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள் என்பதையும் விட அவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதென்பதே முட்டாள்தனமென்பதையும் நாம் அறிவோம்!!!!

எஞ்சிய கலைஞரோ , சூழ்நிலைக்கைதியாய் கட்டுண்டு கிடக்கிறார்.!!!! இத்தகையதொரு சூழலில் பெரும்பான்மைத்தமிழர்களின் எண்ணத்தை யாருமே பிரதிபலிக்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் அவ்வப்போது நாம் வெளிப்படுத்தி வந்துள்ளோம்!!!!

இத்தகைய நமது ஆதங்களுக்கெல்லாம் விடை காணும் போக்காய் இந்த வாரம் விளைகிறது............

தொடர்ச்சியான ஈழ ஆதரவுப்போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்த வண்ணம் இருக்கின்றன!!!

அவைகளில் சில உங்கள் பார்வைக்கு!!!

இந்திய மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி, பா.ம.க. கண்டனப் போராட்டங்கள் [திங்கட்கிழமை, 22 செப்ரெம்பர் 2008, 08:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும், ஈழத் தமிழர்களின் அடிப்படை மனித உரிமை, அரசியல் உரிமைகளை பாதுகாக்க உதவ வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளன.

காந்தி நினைவு நாளான எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைமையில் (சிபிஐ) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.

http://www.puthinam.com/full.php?2b44ORc4b3b17HP24d22VvC2a03IaEPe4d41MpIce0dg6NsFce0dk2gn2cc0TdYI3e

ஈழத்தமிழர் வாழ்வுரிமையை காக்க சென்னையில் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் [ செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 09:55.00 AM GMT +05:30 ]


தமிழ்நாடு சென்னையில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10.00மணி தொடக்கம் மாலை 5:00 மணி வரை நடந்த இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பல கலைஞர்கள் எழுச்சியோடு கலந்து சிறப்பித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் பா.செயப்பிரகாம் தலைமையேற்று நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான பணிகளை ஒருங்கிணைத்து வரும் பழ.நெடுமாறன் உட்பட கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு.மேத்தா, நடிகர் சத்தியராஜ், இயக்குநர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். http://www.tamilwin.com/view.php?2aIWnfe0d1j0g0ecQG7X3b4X9Es4d3g2h3cc2DpO2d436QV3b02ZLu3e

ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிடர் கழகம் சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை 9/23/2008 2:20:39 PM -
ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை சென்டிரல் புகையிரத நிலையத்தின் முன் புகையிரத மறியல் போராட்டம் செய்ய முயன்ற அக்கட்சியின் தலைவர் திரு. கீ.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன், இயக்குநர் சீமான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாத அரசைக் கண்டித்தும், சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் இன்று சென்னை சென்டிரல் புகையிரத நிலையம் முன் புகையிரத மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் திரு. கீ. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழின உணர்வாளர்களான இயக்குநர் சீமான், பாவலர் அறிவுமதி, டொக்டர் எஸ். ஏ. சையது சத்தார், எஸ்றா சற்குணம், அன்பு தென்னரசன், வா மு. சேதுராமன், பேராசிரியர். தெய்வநாயகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=6927

ஈழத் தமிழர்களையும் தமிழக கடற்றொழிலாளர்களையும் காத்திட வலியுறுத்தி திருச்சியில் உண்ணாநிலை போராட்டம்[புதன்கிழமை, 24 செப்ரெம்பர் 2008, 07:42 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழ்நாடு திருச்சியில் ஈழத் தமிழர்களையும் தமிழக கடற்றொழிலாளர்களையும் காத்திட வலியுறுத்தி அனைத்து சட்டக் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளின் ஆதரவுடன் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர். திருச்சி தொடருந்து நிலையம் அருகில் கடந்த வியாழக்கிழமை (18.09.08) முற்பகல் 10:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை இந்த போராட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

http://www.puthinam.com/full.php?2b1VoAe0d4cYA0ecKA4A3b4U6DV4d3f1e3cc2AmI2d434OO2a030Mt3e

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு கோரி பா.ம.க எதிர்வரும் 30ம் திகதி ஆர்ப்பாட்டம் [ செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 11:49.44 AM GMT +05:30 ]

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க இந்திய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக தமிழக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் எதிர்வரும் 30ம் திகதி இந்த ஆர்ப்பாட்ம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஸ்தாபகர் டொக்டர் எஸ் ராமதாஸ் தலைமை தாங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் எவ்வித கரிசனையும் இன்றி செயலாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டங்கள் அங்கங்கே வெடித்துக்கிளம்பிய வண்ணம் உள்ளன... நாமும் நமது உணர்வுகளை அவரவர்க்கு தகுந்த முறையில் எழுப்புதல் நிச்சயம் போராட்டக்குரல்களுக்கு வலு சேர்க்கும்!!!!

இனியாவது தமிழக அரசும் , இந்திய நடுவண் அரசும் தமிழர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ளுமா????

புரிந்து கொள்ள வேண்டுமென்பதே நம் அவா..............

ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டிக்க முயற்சியாவது செய்யுமா இந்திய அரசு?????

செய்ய வேண்டுமென்பதே நம் அவா...!!!

Read more...

தமிழர்களுக்கெதிரான போரில் இந்தியர்கள்...!!!!

Wednesday, September 10, 2008

செவ்வாய் அதிகாலை புலிகள் வான்வழித்தாக்குதல் நடத்தியதும் , அங்கே இருந்த ரேடார்களை அழித்ததும் , அங்கே ரேடார்களை இயக்கிய இந்தியப்பொறியாளர்கள் காயமடைந்ததும் அனைவரும் அறிந்த செய்தி!!!

முதலில் ராணுவத்தலைமையகம் மீதே தங்கள் வலிந்த தாக்குதலை மேற்கொண்டு வெற்றி ஈட்டிய புலிகளுக்கு வாழ்த்துக்கள்!!!! இந்த மகிழ்ச்சியான செய்தியின் ஊடே சொல்லப்பட்டிருக்கிற ஒரு விடயமானது நாம் எல்லோரும் கவனிக்கத்தக்க்து.....

அது என்னவென்றால் புலிகளின் விமானங்களை வேவு பார்க்கும் இந்திய ராடார்களை இயக்கிக்கொண்டிருந்தது இந்தியர்கள்...அப்படியானால் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியர்களும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு உண்மைச்செய்தியானது நமது உள்ளங்களையெல்லாம் வந்தடைகிறது!!!!


இலங்கைப்பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு வேண்டும் என்று அலறீக்கொண்டே ராணுவ உதவி மட்டுமின்றி ஆளுதவியும் செய்கிறது இந்தியா....அதாவது தமிழக மீனவர்களை வாரம் தோறும் முறைவைத்துச்சுட்டுக்கொள்ளூம் சிங்களத்தை கண்டிக்கவும் செய்யாமல் இன்னும் தமிழின த்தோழர்களை அழித்துக்கட்டவும் ஆளுதவி செய்கிறது இந்தியா என்ற பாரிய உண்மை இன்று வெளி வந்திருக்கிறது...


நாம் என்னடாவென்றால் இந்தியா தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறோம்!!!!

இலங்கைப்படை சுட்டுத்தள்ளூம் தொப்புள் கொடி உறவுகளைப்பற்றிய கவலை கூட வேண்டாமய்யா.!!!!!! அன்றாடம் கட்ல் நோக்கிச்செல்லும் இந்திய மீனவர்களை பற்றீய கவலை கூட ஏன் இல்லாமல் போயிற்று நம் இந்தியாவிற்கு????

அவர்களெல்லாம் இழிபிறவிகள் என்ற எண்ணத்தால் வந்ததா???


இல்லை தமிழனின் உயிர் தவிட்டிற்கு சமம் என்றெண்ணி விட்டதா இந்திய அரசு???


இன்னமும் தேசியத்தின் சூட்டில் குளிர் காயும் அற்ப இன்பம்தான் பெரியதாகப்பட்டுவிட்டதா கலைஞருக்கு.????? இல்லை இதற்கும் ஒரு கடிதம்தானா?

இந்த விடயம் எனக்கொன்றும் சாதாரணமானதாகப்படவில்லை...சகல வகையிலும் தமிழர்களால் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல் அல்லவா???

ஐ.நா வா இந்திய பொறியாளர்களை அனுப்பியது???? இல்லையே??? அப்படியென்றால் இந்திய அரசுதான் அங்கே அனுப்பியது.....ஒரு சாராரை ஒழிக்க உதவி செய்துவிட்டு சமாதானம் என்று யாரை ஏமாற்ற கூப்பாடு போடுகிறோம்???

இல்லை தமிழர்களை ஏமாற்ற இந்திய அரசு இப்படி திரை மறைவு நாடகம் நடத்துகிறதா????


தமிழர்களே நமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உரிய முறையில் தெரிவிக்க வேண்டும்!!!!!!!!!!

பிற்சேர்க்கை...

நண்பர்கள் அப்படியா என்று ஆச்சர்யம் தொனிக்க பின்னூட்டங்களில் கேள்வியெழுப்பியதால் இந்த பிற்சேர்க்கை!!!



இந்தியாவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய புலிகள்: நெடுமாறன்
சென்னை: இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது.

சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கூடாது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பலமுறை கூறிவிட்டார்.

ஆனால் நடைமுறையில் இராணுவ ரீதியான தீர்வு காண முயலும் சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்திய அரசு செய்து வருவது தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது.

இந்த தகாதப் போக்கினை உடனடியாக கைவிடுமாறு இந்திய அரசை வற்புறுத்துகிறேன் என்று நெடுமாறன் தெரிவித்துள்ளார்.


http://thatstamil.oneindia.in/news/2008/09/10/tn-lttes-aerial-attack-exposes-indias-double-stand-neduamaan.html


புலிகள் தாக்குதலில் 2 இந்தியர்கள் காயம்-அதிகாரிகள் இலங்கை விரைவ
கொழும்பு: வன்னியில் உள்ள இலங்கை ராணுவ தலைமையகத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் ரேடார் மையம் சேதமடைந்துள்ளதோடு, இரண்டு இந்திய அதிகாரிகளும் காயமடைந்துள்ளதால், நிலைமையை ஆராய இந்தியாவிலிருந்து அதிகாரிகள் குழு இலங்கை விரைவதாக இந்திய தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்தியா வழங்கிய இந்திரா வகை ரேடார்கள் பொருத்தப்பட்டிருந்த மையம் பெரும் சேதமடைந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த தாகூர் மற்றும் ரூப் ஆகிய இருஇந்திய பொறியாளர்கள் படுகாயமடைந்தனர்.

இருவரும் இலங்கை பொறியாளர்களுக்கு ரேடார்களை இயக்குவது தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் கொழும்பில்உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரேடார் மைய சேதம் மற்றும் இந்தியப் பொறியாளர்களின் நிலை குறித்து ஆராய இந்தியாவிலிருந்து உயர் மட்டக்குழு கொழும்பு விரைவதாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி படைத்தளத்திற்கும் இக்குழு செல்லவுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து இந்தியத் தரப்பிலோ அல்லது இலங்கை அரசுத் தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

வட கிழக்கு இலங்கையில், 265 இந்திய ராணுவப் பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப அதிகாரிகள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.


http://thatstamil.oneindia.in/news/2008/09/10/lanka-indian-officials-to-rush-srilanka-to-assess-the-damage.html



Read more...

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP