Showing newest 13 of 22 posts from 10/1/08 - 11/1/08. Show older posts
Showing newest 13 of 22 posts from 10/1/08 - 11/1/08. Show older posts

கிழியத்தொடங்கும் "இந்தி"ய தேசியம்!!!!

Thursday, October 30, 2008



இந்தியா
, பல்வேறு இன , மொழிகளைக்கொண்ட பாரதம் என்று தம் மக்களால்அன்போடு அழைக்கப்படும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒருநாடு.....உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு...இன்று வரைக்கும் இங்கே இந்திய அரசாங்கத்தின்
கொள்கைகளொட்டிய பேச்சிற்கு (!) கருத்து / பேச்சுச்சுதந்திரம் எப்போதுமே இருந்து வருகிறது.....


உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடும் , மிகப்பழமையான ஜனநாயக நாடும் புரிந்து கொள்ளும் அணு ஒப்பந்தம் பற்றி உலகத்தின் தலைவரான ஜார்ஜ் புஷ்ஷே சிலாகித்திருக்கிறார் வரலாற்று நிகழ்வென்று......

ஆனால் சமீப காலமாக இந்தியாவில் நிகழும் சமூக மாற்றங்களும் , ஒவ்வொரு மாநிலமும் நடந்து கொள்ளும் விதம் அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை.......தமிழகம் பற்றிய டெல்லியின் தொடர்ந்த புறக்கணிப்பும் , மாநிலசுயாட்சி , மத்திய கூட்டாட்சி என்ற முழக்கத்தினையொட்டிய டெல்லியின் பாராமுகமும் , மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகளை தீர்க்காமல் அதிலிருந்து தப்பிக்க நினைக்கிற டெல்லியின் அணுகுமுறையும் இன்ன பல காரணங்களுமாய்ச் சேர்ந்து "இந்தி" தேசியத்துக்கே வேட்டுவைக்குமோ என்ற அளவிற்கு நம்மைச் சிந்திக்க வைத்துவிட்டன...

சில காலங்களுக்கு முன் ஒக்கேனக்கல் பிரச்சினையின் திரையுலக ஆர்ப்பாட்டத்தின் போது , கவிப்பேர்ரசு வைரமுத்து இவ்வாறுகுறிப்பிட்டார் " ஆங்கிலேயர்கள் ஒட்டவைத்துப்போன இந்தி" தேசியத்துணியை கிழியாமல் பாதுகாப்பது மத்திய அரசின்கையில்தான் உள்ளது " என்று.. "


அது
மட்டுமல்ல , இன்னும் பல சமூகவியல் நிபுணர்களும் , அரசியல் வல்லுநர்களும் , இந்த "இந்தி"தேசியம் பல்வேறு மொழி , இன , கலாச்சாரங்கள் நிறைந்த அதே சமயம் தனித்தனியான பல்வேறு எல்லைகளைக் கொண்ட ஆங்கிலேயர் வருகைக்குப்பின் அவர்களால் ஒன்று சேர்த்தப்பட்ட ஒரு தேசம் என்றே கருதுகிறார்கள்.....

இங்கே தமிழன் பேசும் மொழி வேறு , வட்நாட்டினன் பேசும் மொழி வேறு , மொழிகள் மட்டுமே வெவ்வெறு எல்லைகளைக்கொண்ட கோர்க்கப்பட்ட தேசமாக இந்தியா இருந்ததற்கான ஆதாரங்களாக கொள்ளலாம் என்று சொல்லிவிட முடியாது....

கலாச்சாரத்திலும் எவ்விதத்திலும் நாம் ஒன்று பட்டவர்கள் அல்லர்...நமது திருமண முறை வேறு , வடமாநிலத்தவர் திருமண முறை வேறு....நமது முனியாண்டி , அய்யனார் அங்கே இல்லை.........அங்கே கும்பிடப்படும் ஹனுமானை இங்கே யாரும் கும்பிடுவதில்லை.....

இங்கே வசிக்கும் பார்ப்பனர்கள் என்ற ஒரு பிரிவினரைத்தவிர நமது சாதிப்பிரிவுகளுக்கும் , பிற மாநிலத்தவர் சாதிப்பிரிவுகளுக்கும் சம்பந்தமேதுமில்லை...

அக்காலத்திலும் கூட தமிழகம் என்பது தனி ராஜ்ஜியமாக , சேர ,சோழ , பாண்டிய , பிற்காலத்திய பல்லவ அரசுகளாலும் , நாயக்க மன்னர்களாலுமே ஆளப்பட்டது....!!!! வட மாநில மெளரிய அரசுகளும் , கலிங்க அரசுகளும் இங்கே அவ்வப்போது படையெடுத்து வந்ததற்கான ஆதாரங்கள் மட்டுமே உண்டு...!!!

நமது கட்டடக்கலைக்கும் , வடநாட்டினர் கட்டடக்கலைக்கும் ஒரு ஒற்றுமையுமே இல்லை.....

இவற்றை எல்லாம நாம் இங்கே சொல்வதற்கான காரணம் ,
பிற்காலத்தில் ஒன்றிணைத்துத் தைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான் என்ற உண்மையை பல பேருக்கு உரக்கச்சொல்வதற்காகத்தான்!!!

பிரித்தாளும் கொள்கையையே தங்கள் முழுமூச்சாக கொண்டவர்கள் கும்பினியர்கள் , அவர்களா ஒன்றிணைத்தார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது!!!!!!


இங்கே தமிழனுக்கு ஒரு தேசமுண்டு , கன்னடனுக்கு ஒரு தேசமுண்டு , மராட்டியனுக்கு ஒரு தேசமுண்டு , எல்லையுண்டு , மொழியுண்டு!!!!!!!!!!

ஆனால் பார்ப்பனர்களுக்கு ஒரு தேசமுண்டா , ஒரு எல்லையுண்டா ? கேட்டால் , இல்லையென்றே பதில் வரக்கூடும்!!!!!!! அத்தகைய பார்ப்பனர்களே , ஆங்கிலேயர்களுக்கு உதவி தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்ட ஒரு தேசமே பாரதம்..........கோர்த்துக்கொண்ட ஒரு எல்லையே இந்தியா.... ...அதனால்தான் எப்போதுமே அவர்கள் "இந்தி"தேசத்தையே முன்மொழிகிறார்கள்...தவிர்த்து அதுபற்றிய நதிமூலமும் , ரிஷிமூலமும் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை என்பதால் இந்த அளவில் அதை நிறுத்திக்கொண்டு , இன்றைய சூழல்களைப் பார்ப்போம்.!!

நிற்க ,

இவ்வேளையில்
நாம் இன்றைய சூழலில் "இந்தி"தேசியத்தை எதிர்ப்பவர்கள் அல்லர் , நாடும் நாமும் விரைந்து முன்னேற ஒன்றுபட்ட அமைப்பே தேவை , அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா என்னும் வலுவான பேரரசுடன் இணைந்திருப்பதே பலமென கருதுகிறேன்!!! ஆக , இது பிரிவினை பற்றிய பேச்சல்ல என்பதை தெளிவுற விளக்குதல் என் கடமை!!!!

நாம் இங்கே சொல்ல முயல்வது ஏன் நாமோ அல்லது மற்ற மாநிலத்தவர்களோ ஒரு ஒன்றுபட்ட தேசிய உணர்வுடன் , ஒற்றுமையாக கலந்திருப்பதில் எப்போதுமே சங்கடம் ஏற்படுகிறது என்பதைப்பற்றித்தான்!!!!!!

அதற்குரிய பெரும் காரணம் , நமக்குள் முரண்பாடுகளும் , வேறுபாடுகளும் இருக்குமளவிற்கு ஒற்றுமைக்கான காரணிகள் இல்லை என்பதே ஆகும்!!!

சிற்சில குறுநில மன்னர்களாலும், பிராந்திய அரசுகளாலும் , பாளையக்காரர்கள் போன்றவர்களாலும் ஆளப்பட்ட இன்றைய இந்தியாவின் பல்வேறு பகுதிகள் நாளடைவில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஒன்றுப்பட்ட பாரதமாக ( இந்தியா , பாகிஸ்தான் , பங்களதேஷ் இன்ன பல இன்றைய நாடுகள் ) ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குட்பட்டன...........

ஆங்கிலேயர்களை அனுசரித்தவர்கள் நிலப்பிரபுக்களாகவும் , ஜமீன் தார்களாகவும் ஆயினர் , அனுசரிக்காதவர்கள் கொல்லப்பட்டனர்...

ஒட்டுமொத்த இந்திய தீபகற்பத்தையும் ஆங்கில அரசு ஆதிக்கஞ்செலுத்திய போது , கும்பினியர்களுக்கு எதிரான விடுதலைப்போராட்டமானது அனைத்து தீபகற்ப மக்களையும் ஒன்று சேர்த்தது....

அவ்வாறு ஒன்றிணைந்து போராடியபின்னர் , இரண்டாம் உலகப்போருக்குப்பின்னால் , உலகின் ஆசியக் காலனிகளிலிருந்தும் யூரோப்பிய நாடுகள் புறப்படத் தயாரான வேளையில்அவசர அவசரமாக நாடுகளைப்பிரித்தும் , பல மக்களின் உணர்வுகளைபுண்படுத்தியும் எப்படியாவது இங்கிருந்து உடனே புறப்பட வேண்டும் என்றஅக்கறையில் அவசர கதியில் இந்தியா , பாகிஸ்தான் என்று பிரித்து சுதந்திரம் கொடுக்கப்பட்டது!!!.

இந்தியாவில் காஷ்மீர் குழப்பம் , பாகிஸ்தானுக்கு கிழக்கு பாகிஸ்தான் குழப்பம் , இலங்கைக்கு ஈழம் குழப்பம் . மலேசியாவுக்கு சிங்கப்பூர் குழப்பம் , இந்தோனேசியாவுக்கு பப்புவா நியூ கினியா குழப்பம் - இப்படி சுதந்திரத்திற்கு பின்னதான குழப்பமிருந்த நாடுகள் பட்டியல் இன்னும் நீள்கிறது....

அதில் இந்தோனேசியாவும் , மலேசியாவும் தமது முன்னேற்றங்களுக்கான சரியான வழியை கண்டறிந்து சிங்கப்பூரையும் , நியூ கினியாவையும் , திமுர்லெஸ்டேவையும் தனித்தனி நாடுகளாக பிரித்துக்கொடுத்து பீடு நடைபோட்டுக்கொண்டிருக்கின்றன...ஆனால் , இலங்கை ? எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.....

இந்தியா எனும் மாபெரும் தேசத்தைக் கட்டியமைத்ததிலும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு!!!!! ஆனால் இன்றைக்கும் அத்தேசத்தை கட்டிக்காக்கும்பணியில் அது வெற்றிகரமாக ஈடுபடுகிறதா அல்லது தேசியக்கட்சி என்றுதன்னை விளித்துக்கொள்ளும் "பாஜக"வாவது அப்பணியில் ஈடுபடுகிறதா என்றால் இல்லையென்பதே உண்மை நிலை..

அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்ட பற்பல தேசங்கள் , மக்களும் ஒருகலாச்சாரத்தை , ஒரு மொழியை , ஒரு வழிபாட்டு முறையைபெற்றிருந்தார்களெனில் இன்றைக்கு ஒவ்வொரு மாநிலமும் தத்தமதுசுயநலனையே முன்னிருத்திக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள் என்றேதோன்றுகிறது...

ஒட்டுமொத்த இந்திய நலன் என்ற வகையில் , நடுவண் அரசுகள் மேற்கொள்ளும்எந்தவொரு முயற்சியுமே உறுதியாக இல்லை.....

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்தை எந்த தேசிய அரசியல்கட்சிகளுமே கண்டிக்க மறுக்கின்ற ஒரு சூழலில் தமிழகம் இதற்கு என்னதான்தீர்வு ? பாகிஸ்தானுடன் நமக்கு பிரச்சினை இல்லையே என்று கேட்பதில்தவறென்ன இருக்க முடியும்??????

தமிழகத்திலிருக்கும் ஒக்கேனக்கலில் நமது மாநிலம் செழிப்புற் திட்டம் தீட்டும்போது அடுத்த மாநிலம் அதைத்தடுக்குமானால் , நமது ஒற்றுமை உணர்வைக் கட்டிக்காப்பது நடுவண் அரசின் பணி அல்லவா??? அதை நடுவண் அரசுமுறையாகச்செய்யதா ?? இல்லையே , மாறாக அமைதியை கெஞ்சியல்லவா கலைஞரிடமிருந்து தற்காலிகமாக பெற்றது , அதுவும் தனது தேர்தல்வெற்றிக்காக???

பெரியார் அணைக்கட்டின் நீர்மட்டம் உயர்த்த எத்தனை தடங்கல்கள்....???? என்னதான் உருப்படியாக செய்தது இந்த நடுவண் அரசு?? அல்லது நடுவண்அரசின் தமிழக பிரதிநிதிகள் அது பாசகவாக இருக்கட்டும் , காங்கிரஸாக இருக்கட்டும்.....ஒட்டுமொத்த இந்தியாவாக பாருங்கள் என்று ஏன் குரல்கொடுக்கவில்லை ???

பக்கத்து மாநிலத்தில் அவர்களுக்கு ஆதரவாகவும் , இங்கே நமக்காதரவாகவும் பேசுவதென்பது சற்றேறக்குறைய இரு பகையாளி நாடுகளின் பேச்சுப்போல இல்லையா?? ஆமென்றால் பிறகெதற்கு தேசியக்கட்சிகள் , எல்லாக்கட்சிகளையும் அந்தந்த மாநிலத்திற்கான கட்சிகளாய் அறிவித்துவிடலாமே???

இப்படி தொடர்ச்சியான பிரச்சினைகளையும் , ஆறப்போட்டு அதன்சூட்டைத்தணிக்கவே முயற்சித்து வந்த இந்திய நடுவண் அரசு , தமிழர்கள்போலவே எல்லோரும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள் என்றே நினைத்ததுபோலும்!!! தமிழர்களை ஏமாற்றுவது போலவே எல்லோரையும்ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தது போலும்!!!

அதனால் தான் ராஜ் தாக்கரேவின் நவ் நிர்மாண் சேனா பற்றியும் ஒருஅலட்சியப்போக்குடனே நடுவண் அரசு இருந்தது!!!

சற்றேறக்குறைய , 90களில் கருநாடக வாழ் தமிழர்கள் அடித்துத்துரத்தப்பட்டனரே அப்போதாவது "இந்தி" தேசியம் கிழியத்தொடங்குகிறது என்ற உண்மையை டெல்லியில் ஆள்பவர்கள் உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம்தான்...ஆனால் தாக்கப்பட்டவர்கள் தமிழர்களென்பதால் நமதுகுரல் டெல்லிக்கு எட்டாததில் வியப்பொன்றுமில்லை!!!!!

நமது குரல் டெல்லிக்கு எப்போதுமே எட்டுவதில்லை என்பதனை இவ்விடயம் மட்டுமல்ல , சமீபத்திய தமிழின ஆதரவுப்போராட்டங்கள் பெட்டிச்செய்தியாக இந்திய ஊடகங்களின் அற்ப கவனத்தையே பெற்றன என்பதும் , அமிதாப்பச்சனின் உடல்நிலை குறித்த கவலை கூட ஈழத்தமிழினத்தின் வலிகளை பற்றியகவலையை விட அதிக கவனம் பெற்றிருந்தமை விரிவாக விளக்குகிறது!!!!

குறிப்பாக , விந்தையிலும் விந்தையாக என்றுமே பெரும்பான்மை தமிழர்களின் உணர்வினை பிரதிபலிக்காமல் தனி ஆவர்த்தனஞ் செய்யும் சுப்பிரமணிய சுவாமியையும் , சோவையும் தான் அடிக்கடி பேட்டி கண்டு ஒலி/ஒளி நமது உணர்வுகளுக்கும் , டெல்லிக்கும் சம்பந்தமேதுமில்லை என்பதையும் உணர்த்தியது!!!!!!


அதே நிலைதான் அஸ்ஸாமிலும் . பீகாரிகளை அஸ்ஸாமிய பூமிபுத்ராகொள்கையுடைய இயக்கங்கள் அணிஅணியாக கொன்று குவித்த போதும் விழித்துக்கொள்வதாயில்லை இந்திய நடுவண் அரசு...

நிற்க ,

அத்தகையதொரு வலுவிழந்த உணர்வாகத்தான் வெறும் வெற்றுக்கூச்சலாகத்தான் ராஜ் தாக்கரேவையும் கருதியது நடுவண் அரசு...ஆனால் அவரோ தன் கோரிக்கை வெகு வலுவானது , எங்கள் உணர்வுகளைப் புறக்கணிக்கக் கூடாது என்று வன்முறை மூலம் நிகழ்த்திக்காட்டிவிட்டார்..

வன்முறை எதற்குமே தீர்வல்ல என்பதையும் , தாக்குதல்கள் என்பது தவறான அணுகுமுறை என்பதையும் எப்போதுமே நாம் ஒத்துக்கொள்வோம்!!! ஆனால் , அந்த வன்முறையை காரணம் காட்டி ராஜ் தாக்கரேயின் நியாயமானகோரிக்கைகளையும் , நியாயமான வாதங்களையும் முற்றிலும் புறந்தள்ளி விடமுடியாது!!!!

அவரது மிகத்தெளிவான கொள்கையென்ன வென்றால் '' மராட்டியத்தில் மராட்டியர்களுக்கு முன்னுரிமை கொடு" இதுதானே ? இதிலென்ன தவறிருக்கமுடியும்???


என்னடா இவன் , சில பத்திகளுக்கு முன் தான் கருநாடக தமிழர்கள் துரத்தப்பட்டதை கண்டித்துப்பேசினான் , இப்போது ப்ளேட்டை திருப்பிப்போடுகிறான் என்கிறீர்களா??? குழப்பமே வேண்டாம்!!!

கருநாடகத்தில் தமிழர்கள் கன்னடர்களின் வாழ்வுரிமையைபறிக்கவில்லை...........தத்தமது பூமியில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்...நிலச்சுவான்தார்களாக
இருந்தார்கள்.......முன்பு தாங்களிருந்த பகுதி பிற்காலத்தில் கர்னாடக் மாநிலமாக "இந்தி" தேசியத்தால் கட்டப்பட்டது......இரண்டுமே வேறுவேறானவை!!!

ஆனால் , மும்பையில் குவியும் பீகாரிகளாலும் , உத்தரப்பிரதேசத்துக்காரர்களாலும் தமது மாநில மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கோரிக்கைக்காக அவர் போராடுகிறார்.......அவர் முன்னெடுத்த வழி வேண்டுமானால் தவறாக இருக்கலாம்...அதே சமயம் அவரின் கோரிக்கை ஒரளவிற்கு நியாயமானதாகவே எனக்குப்படுகிறது!!!! அதில் பாதிக்கப்படுபவர்கள் பீகாரிகளானாலும் சரி , தமிழர்களானாலும் சரி...!!!

"இந்தி" தேசியத்தை கட்டிக்காப்பாற்றுவதற்காக மராட்டியம் கொடுத்த விலை அது....மற்ற மாநிலத்தவனுக்காக நான் ஏன் விலை கொடுக்க வேண்டும் என்று ஒருவர் கேட்பதுதான் இன்றைக்கு மன்மோகன் சிங்கைக் கூட மனம் வெதும்பிபேச வைத்திருக்கிறது!!!!! தேசியபாதுகாப்புச்சட்டத்தில் அவரை உள்ளே தள்ளுமாறு மத்திய அமைச்சரவையும் கேட்டுக்கொண்டிருக்கிறது...

அதாவது , அத்தகைய உணர்வுள்ளவர்களின் உணர்வுகளை மதிக்காமலேயே தற்காலிகமாக அவரைச் சிறையிலடைத்து மீண்டும் பிரச்சினையை தள்ளிப்போடவே முயன்றிருக்கிறது நடுவண் அரசு...எப்போதும் போலவே..

இன்றைக்கும் இந்திய அளவில் தொழில் வளத்தில் / விவசாயத்தில் முன்னேறிய மாநிலங்களென்றால் பஞ்சாப் , குஜராத் , மராட்டியம் , தமிழ்நாடு இவை நான்குமட்டுமே.........வேண்டுமானால் தற்போது கொஞ்சமாக முன்னேறி வரும் ஆந்திராவையும் , அரியானாவையும் இந்தப்பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்!!!!

இந்த மாநிலங்களிலிருந்து வரும் வருமானத்தையெல்லாம் தூக்கி ஒரே நிதியில் போட்டுத்தான் "இந்தி" தேசியத்தைக்காப்பாற்றி வருகிறது நடுவண் அரசு!!!!!!!! அதாவது , நீ அரிசி கொண்டு வா , நான் உமிகொண்டு வர்றேன் , ரெண்டு பேரும் ஊதி ஊதி அரிசி சாப்பிடுவோம் என்று சொல்வார்களே அதுமாதிரிதான்....!!!

இந்தியாவின் பெருத்த ஜனத்தொகையை தன்னிடத்தே கொண்டுள்ள உபியும் , பீகாரும் , இன்னபல மாநிலங்களும் இந்தியாவின் ஒட்டுமொத்த வளத்தை தின்றுகொழிக்கின்றன என்ற குற்றச்சாட்ட்டும் நீண்ட நாட்களாகவே எழுப்பப்படுகிறது...!! வடமாநிலங்களைநிர்வாக வசதிக்காக சலசலப்பின்றி பிரித்துத் தந்த நடுவண் அரசு , ஆந்திராவில் மக்களால் தெலுங்கானா மக்களால் விரும்பப்படும் தனித்தெலுங்கானாவை உருவாக்க மறுப்பதும் விசித்திரமே...தெற்கத்தியர்களின் கோரிக்கை டெல்லியை எட்டுவதில்லை என்பதற்கான அடுத்த உதாரணம் அது....

காஷ்மீரிலும் , ஒரிஸாவிலும் , அஸ்ஸாமிலும் உள்நாட்டுக்கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்பும் இந்திய நடுவண் அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கமட்டும் ராணுவத்தை அனுப்ப ஏன் மறுக்கிறதென்று கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது என்பதே நமது "இந்தி" தேசியம் சொல்லிக்கொடுத்திருக்கும் பாடம் என்பது நான் சொல்லவந்த தலைப்பிற்குச் சற்றும் சம்பந்தமில்லை என்றாலும் சொல்லும் கருத்தில் நாம் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உண்மையுமிருப்பதால் சொல்ல வேண்டிய கட்டாயமுமிருக்கிறது..!!

நமக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைந்து இனியும் எந்த சச்சரவுமில்லாமல் அண்டை மாநிலங்களுடன் சுமூகமாக இணைந்திருப்பது இனியும் பகல் கனவுபோலவே தோன்றுகிறது!!!

ஏன் வாய்ப்பில்லை என்று வியப்புடன் வினவுகிறீர்களா?? வெகு சாதாரணகாரணம்தான்...நாம் இயற்கையில் ஒன்றுக்கொன்று தொடர்பு பட்டவர்கள்இல்லையெனினும் சுதந்திரத்துக்கு முன் , நமக்கெல்லாம் சுதந்திரம் என்றபொதுவான முழக்கமிருந்தது..........இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஒன்று சேர்க்கும் எந்தக்காரணியுமில்லை..

அப்படி இருந்தவற்றை நமது ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் மண்ணோடு மண்ணாக்கிவிட்டார்கள் என்பதே உண்மை!!

தேசிய
உணர்வு போய் , தன் இன , மொழி , சாதி , தன் மாவட்டம் , தன் தாலுக்கா , தன் ஊர் , தன் தெரு , தன் வீடு என்ற குழு உணர்வு வந்ததற்கு காரணம் இந்திய அரசியலமைப்பே..........அதிகாரமும் , நிதியும் , முன்னேற்றமும் சமமாக பங்களிக்கப்படவில்லை என்பதே அதிமுக்கியக்காரணம்.......

இனியாவது நடுவண் அரசு , எந்தவொரு மாநிலங்களுக்கிடையேயான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை ஆறப்போட்டு பிரச்சினைகளை மறக்கடிக்கமுயலாமல் , தீர்த்து வைக்க முயலுமானால் கிழியத்துவங்கிவிட்ட இந்தியதேசியம் பிழைக்க வழியிருக்கிறது!!!!!

உடனடியாக அதிகாரப்பரவலையும் , தன் இன / மொழி உணர்வுகளையும் புறக்கணிக்காமல் நமது அரசியல் கட்டமைப்பையும் , மாநிலக்கட்சிகள் தாங்கிப்பிடிக்காத மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தடங்கலில்லாத பதவிக்காலத்தைக்கொண்ட ஆனால் செயல்பாடுகளை விமர்சிக்கும் / தவறானமுடிவுகளை ரத்து செய்யும் நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட அதிபர் முறைதேர்தலை கொண்டு வரா விட்டால் "இந்தி" தேசியம் முற்றிலும் கிழிந்துதொங்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது!!!!!!!!!

ஏன் தடங்கலில்லாத பதவிக்காலத்தைக்கொண்ட அதிபர் முறை??

காரணம் , இன்றைக்கு நடுவண் அரசை ஆதிக்கஞ்செய்துகொண்டிருக்கும் மாநிலக்கட்சிகளாலும் , கூட்டணி அரசுகளாலும் எந்தவொரு முடிவையுமே தீர்க்கமாக எடுப்பதென்பது இயலுவதில்லை...கூட்டணிக்குழப்பங்களை சமாளிக்கவே இந்தியப்பிரதமருக்கு நேரம் போதவில்லை..

இன்னொன்று , அதிபர் முறை தேர்தலென்பது மக்கள் தங்களை ஆளப்போகும் நபர் யாரென்று தெரிந்து , அவர்தம் கொள்கைகளை அறிந்து அவர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பாய் இருக்கும்...

இல்லாவிட்டால் தங்களுக்கான எம்பிக்கள் ஆதரவினைப் பெற்று தகுதியில்லாதவர்களும் , ஸ்டேம்ப் பேடு ஆட்களும் பிரதமராவதைத் தவிர்க்க இயலவே இயலாது......

ஒரு அணு சக்தி ஒப்பந்தம் , நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வொப்பந்தம் நிறைவேற எத்தனை சர்ச்சைகள் ??? ஆனால் இன்றுவரை மக்களுக்கோ , அரசியல் கட்சிகளுக்கோ அதன் ஷரத்துக்கள் முழுமையாக தெரியவில்லை...காரணம் , கூட்டணிக்குழப்பங்களும் , அரசிற்கு தன் நிலையை தெளிவுற விளக்கவாய்ப்பளிக்க படாமையுமாகும்...எதைச் சொன்னாலும் அதை அரசியலாக்க துடிக்கும் எதிர்க்கட்சிகளே அதற்கான பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.....

ஒட்டுமொத்த நாட்டிற்கு பலன் தரக்கூடிய சேது சமுத்திரத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் நமது குழப்பகரமான அரசியல் வழிமுறைகளே காரணம் ஆகும்........



இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவே நாம் முன்னேற சிறந்த வழி , பிரிவதற்கான சந்தர்ப்பமும் , தேவையும் இப்போதில்லை என்பதையுமே நாம் சுட்டிக்காட்டவிழைகிறோம்.......

ஆகவே , "இந்தி" தேசியத்தில் நமக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்பதைவிட இன்றைக்கு அது ஒன்றுபட்டு பரவலான முன்னெற்றம் காண வேண்டியதேவை இருக்கிறது என்பதை மட்டும் நாம் வலியுறுத்துகிறோம்!!!

இந்திய தேசியம் - கிழியத் தொடங்கி விட்டது..அது மேலும் சீரழியாமல் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இந்திய அரசுகளுக்கு உண்டு...இல்லாவிட்டால் அதற்குரியவிலைகளை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதோடு நாம் முடித்துக்கொள்கிறோம்!

உங்கள் விமர்சனங்களும் , கருத்துக்களும் நமது கருத்துக்களை சீர்செய்யவெகுவாய் உதவுமென்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுகின்றன...

Read more...

இப்போதென்ன செய்யப்போகிறார் கலைஞர்?

இலங்கை அரசின் சிறப்புத்தூதராக திரு.பசில் ராஜபக்சே இந்தியா வந்து நமது வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்களிடம் பேசியது பழைய செய்தி..!!!

அதுசம்பந்தமாக , திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்னை வந்து கலைஞரைச்சந்தித்து அப்பாவி பொதுமக்களையும் , இந்திய மீனவர்களையும் தாக்க மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி அளித்திருக்கிறது என்ற வாதத்தை வைத்து கலைஞரை திருப்திப்படுத்தினார்...

கலைஞரும் அந்த உறுதிமொழி திருப்தி அளிப்பதாகச்சொன்னார்......

ஆனால் இந்த உறுதிமொழிக்கு வயது ஒரு வாரம் ஆவதற்கு முன்னாலேயே காலாவதி ஆனதை எண்ணி வியப்பொன்றுமில்லை.......கீழ்க்கண்ட செய்திகள் அதனை உறுதிப்படுத்துகின்றன....தான் கொடுத்த உறுதிமொழியை ஒரு வாரம் கூட காப்பாற்றாத சிங்கள அரசை எப்படி பூரணமாக நம்புகிறது தமிழக அரசும் , இந்திய அரசும் என்பது விந்தையிலும் விந்தை!!!

இப்போதென்ன செய்யப்போகிறார் திரு.கலைஞர்?

இப்போதென்ன செய்யப்போகிறார் திரு.பிரணாப் முகர்ஜி?

இப்போதென்ன செய்யப்போகிறார் திரு.மன்மோகன் சிங்??



[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 06:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்:

மாணவன் படுகொலை

[வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 12:28 பி.ப ஈழம்]

[வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில்

உள்ள வள்ளிபுனத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய

குண்டுத்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை

செய்யப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை

காலை 9:30 நிமிடத்துக்கு நுழைந்த சிறிலங்கா வான்படையின்

இரண்டு மிக்-27 ரக வானூர்திகள் வள்ளிபுனம் மக்கள்

குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் மாணவன் ஒருவர் உடல் சிதறிய நிலையில்

கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் வள்ளிபுனம்

கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வராசா

சதீஸ்கரன் (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



Read more...

நானும் ரெளடிதான் - வடிவேலு ஸ்டைலில் ஜெயலலிதா!!

Wednesday, October 29, 2008

இப்பதிவிற்கு நமது கருத்துக்களோ , பிற்சேர்க்கையோ தேவையே இல்லை........

ஜெயல்லிதா அம்மாவின் பின்கண்ட இந்த செய்திகளே போதுமானவை என்றே நினைக்கிறேன்!!!!

முதல் செய்தி - என்னைக் கைது செய்ய கருணாநிதி ஆலோசனை.!!!!


இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள்
இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களை சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச்
சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டேன். எனது
அறிக்கைக்கு பிறகு வைகோ, கண்ணப்பன் , இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது
செய்யப்பட்டார்கள்.

இப்போது "என்னை கைது செய்ய முயற்சி நடக்கிறது'' என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
ஆனால் திருமாவளவன், வன்னியரசு, ராம நாராயணன், பாரதிராஜா உட்பட இன்னும் சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களையும் கைது செய்யவேண்டும் என்று
நான் வலியுறுத்தினேன். தி.மு.க. ஆட்சியையும் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.


இதன் காரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதி உயர் போலீஸ்
அதிகாரிகளை அழைத்து என்னை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் காவல் துறை அதிகாரிகள் இப்போது என்ன காரணத்தை காட்டி ஜெயலலிதாவை கைது செய்வது என்று தீவிரமாக
யோசித்து கொண்டிருப்பதாக கேள்விப்படுகிறேன்.
நானும் 10 ஆண்டு காலம் இந்த மாநிலத்தின் முதல்-அமைச்சராக ஆட்சி புரிந்து, 10 ஆண்டு காலம் காவல் துறைக்கு
பொறுப்பேற்று, பல்வேறு காவல் துறை அதிகாரிகளுடன் பணியாற்றியிருக்கிறேன்.

ஆகவே, எனக்கும் உண்மை தகவல்களை தெரிவிக்க நம்பகமான ஆட்கள் இருக்கிறார்கள். தற்போது இந்தத் தகவல் எனக்கு வந்துள்ளது. இது அடுக்குமா? இது எந்த வகையில் நியாயம்? இதற்கு தமிழக மக்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அரசின் ரகசியங்களை தனக்கு விசுவாசமான ஆட்களை வைத்து வேவு பார்ப்பது
குற்றமா இல்லையா என்று தெரியவில்லை..நிற்க , அடுத்தது , கொலை மிரட்டல் பற்றிய வழக்கு!!! ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜெயலலிதாவிற்கான கொலை மிரட்டல் என்பது நமக்கு உடன்பாடான விடயமில்லை , அதை வன்மையாக கண்டிக்கவும் செய்கிறோம்!!!!...

அதே சமயம் அம்மடலில் குறிப்பிட்டுள்ள பல விடயங்கள் ஜெயலலிதாவிற்கான நேரடிக்கேள்விகள் தான் , அவரால் பதிலே சொல்லவியலாத கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை!!!!!!! உங்கள் பார்வைக்காக அக்கடிதம்....



கனடாவில் உள்ள உலகத் தமிழ் இன பாதுகாப்பு கழகத்தின் தாய்லாந்து கிளையின் ஆசிய திட்ட
அலுவலர் வெ.தமிழ்மைந்தன் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதம் மலேசியாவில்
இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வீட்டுக்கு நேற்று காலையில் இந்தக் கடிதம்
வந்து சேர்ந்தது.

அந்த கடிதத்தில்,இலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டாமென செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இறுதி
எச்சரிக்கை. செல்வி, நீ உன் வேலையை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு இருக்கவும்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் பற்றி தமிழ்நாட்டில் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். உன் நன்மைக்காக வேண்டி எச்சரிக்கிறோம்.அம்மணி நீ தேவையில்லாமல் விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அல்லது மூக்கு நுழைத்தால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும் என்பதை உனக்கு இறுதியாக உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம்
எச்சரிக்கிறது.

உனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறோம். இனி வரும் காலத்தில் உன் செயல்பாட்டில் எந்த ஒரு மாற்றமில்லை என்றால் பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் வரும்.தமிழ் இனத்தோடும், தமிழர் உணர்வோடும் நீ மோதாதே! நெருப்போடு விளையாடதே!. எரிந்து சாம்பலாகிப் போவாய் என்பதை இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம். இது வெறும் மிரட்டல் அல்ல.எங்களின் ஆற்றல் மிக்க மன உறுதியின் வெளிப்பாடு, எங்கள் ஆதங்கம் உனக்கு புரிந்தால் சரி.

புலிகளின் தாகம் தனி தாயகம். இதுதான் எம்மக்களின் வேட்கை. இதை தடைபோட எவர் நினைத்தாலும் அவர்களை அழிக்க
நாங்கள் தயங்கமாட்டோம்.தமிழ்நாட்டில் இருக்கும் ஏமாந்த அதிமுக கட்சிக்காரர்களுக்கு தலைவியாக நீ இருந்து கொண்டும், சில ஏமாளித் தமிழர்களுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும், உலக அரசியல் நடப்புத் தெரியாத தமிழ் உணர்வு இல்லாதவர்களுக்கும் நீ
தலைவியாக இருந்து கொண்டும் அரசியல் நடத்தி பிழைத்துக்கொள்.

நீயொரு கன்னடப் பெண்மணி.வெறும் பகட்டுக்கும், பணத்திற்கும், பதவிக்கும் வேண்டி உன்னிடம் ஒரு அடிமையைப் போல் இன உணர்வு அற்று சில தமிழர்கள் உனக்கு விசுவாசமாக இருக்கலாம்.
அதற்காக வேண்டி மொத்த தமிழ்நாடே உனக்கு அடிமையென்று எண்ணிவிடாதே. இறுமாப்புக் கொள்ளாதே! கர்வம் கொள்ளாதே.

எங்களைப் பொறுத்தவரை நீயொரு நடிகை. அரசியல் பொது
வாழ்விலும், உன் நடிப்பும் உலகுக்கு தெரிகிறது. உலக அரசியல் வரலாற்றில் வீராவேசம் பேசியவர்கள் வாழ்ந்தல்லை. மீண்டும் எச்சரிக்கிறோம், இலங்கையில் தன் இனம்
காக்கவும், தன் சொந்த மண்ணின் உரிமைக்காக போராடும் தமிழ் ஈழ போராட்டவாதிகளின் உண்மை
உணர்வை எழுச்சியை, உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாதே!.

விடுதலைப் புலிகளின் தனி ஈழம் கொள்கையை உன்னைப் போன்று ஆயிரமாயிரம் முதல்மைச்சர்கள் வந்தாலும்
தடுத்து நிறுத்த இயலாது. கட்டுப்படுத்த முடியாது.விடுதலைப் புலிகளை நேசிக்கும்
அல்லது ஆதரிக்கும் அல்லது தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் உலகில்
வாழும் 75 நாடுகளில், 6 கோடிக்கு மேல் தமிழர்கள், அதாவது தமிழ்நாட்டையும் சேர்த்து
இருக்கிறார்கள்.

அதற்காக வேண்டி நிதி உதவி செய்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா? இதுவே உனக்கு இறுதி எச்சரிக்கை. உன்னை இறுதி யாத்திரைக்கு அனுப்ப எங்களுக்கு அதிக
நேரமில்லை. அதிக காலம் தேவையில்லை. நீயொரு பெண் என்பதற்காக வேண்டி இவ்வளவு காலம்
பொறுமையாகக் கடைப்பிடித்தோம்.

இதற்குமேல் நடப்பதை யார் அறிவார்? விடுதலைப் புலிகளை
உலகில் யார் அழிக்க நினைத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் சரி, அத்தகையவர்களை நாங்கள் அழிக்கத் தயங்க மாட்டோம் என்பது உண்மை.

எங்கள் போராட்டத்திற்கு முன்னால் நீயொரு தூசி.

தமிழன் என்றொரு தனி இனம்.

அவன் குணமும் தனி


என்பதை உணர்ந்து உன் தவற்றை இனிமேல் திருத்திக்கொள்.இவ்வாறு அந்த கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது.

இந்தக்கடிதம் முதலில் ஈ மெயிலில் வந்ததாக சொல்லப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது , பிறகு கடிதமாக வந்தடைந்தது என்று மாற்றப்பட்டது...முதலில் தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்டது என்று சொல்லப்பட்டது , பிறகு மலேசியாவிலிருந்து என்று மாற்றப்பட்டது!!!!! அவைகளெல்லாம் இக்கடிதத்தின் நம்பகத்தனமை பற்றியும் , உண்மையான மிரட்டல்தானா என்பது பற்றியும் கேள்வியெழுப்பத்தூண்டினாலும் , நிறைய தமிழுணர்வாளர்கள் சொல்ல நினைத்து ,நாகரீகம் கருதி சொல்லாமல் தவித்த பல விடய்ங்களை இக்கடிதம் வெளிப்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது!!!

ஆகவே , கலைஞருக்கு பிரச்சினை தர வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா அவர்களே இக்கடிதத்தை ஒட்டுமொத்த தமிழினத்திற்கு கொண்டு சேர்த்தத்தற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்!!! ( ஆப்பு , நமக்கு யாரும் வைக்கிறதில்லை.....நம்மளே ஆப்பு இருக்குற இடத்துக்கு போயி உக்காந்துகிறதுன்னு இதைத்தான் சொல்வாங்களோ??)

இதையெல்லாம் பாத்து , சென்னா ரெட்டி என்னைக்கற்பழிக்க முயற்சித்தார் , துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்தார் என்பது போன்ற உண்மைச்சமபவங்கள் உங்கள் மனதின் ஒரு ஒரத்தில் ஞாபகத்திற்கு வந்தால் நான் பொறுப்பில்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்!!!!!!

Read more...

திசைதிருப்பவே இலங்கை பிரச்னை: விஜயகாந்த்

கொஞ்ச காலம் காணவில்லை அறிவிப்புக்கொடுக்கும் அளவிற்கு இலங்கைப்பிரச்சினையில் சைலண்ட் ஆகியிருந்த திரு.விஜயகாந்த்து அவர்கள் திடீரென இலங்கைப்பிரச்சினையில் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்...

இதன்மூலம் , ஜெயல்லிதாவும் சரி , விஜயகாந்த்தும் சரி நூலளவு கூட வித்தியாசப்பட்டவர்கள் இல்லை என்பது பரிபூரணமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது...அது , தமது கொள்கைகளையோ , மக்கள் நலனையோ பற்றிய கவலை இல்லாமல் , கலைஞரை விமர்சிப்பதையே தமது கொள்கைகளாக கொண்டுள்ளவர்கள் என்று....

முதலில் ஜெயல்லிதா ,கம்யூனிஸ்ட்களின் உண்ணாவிரதத்தை ஆதரித்தார்..பாராட்டினோம் !!!!! தேமுதிகவினர் உண்ணாவிரதத்தில் பங்கெடுத்தார்கள் !!! பாராட்டினோம்!!!!!!

அதே சூழலில் ஈகோ பார்க்காமல் , கலைஞர் இவ்விடயத்தை கையிலெடுத்ததும் இவர்களிருவரும் ஜகா வாங்கி விட்டார்கள்........ஜெயல்லிதா "யூ" டேர்ன் எடுத்தார்......விஜய்காந்த் சைலண்ட் ஆகிவிட்டார்!!!!!!!!!!!!!!!!

இப்போ , கலைஞர் கொஞ்சம் அமைதியானவுடன் விஜயகாந்த் வாய்ஸ் கொடுக்கிறார்.........கடந்த இரண்டு வாரங்களாக மப்பும் , மந்தாரமுமாக ஊர் இருந்ததால் அமைதியாகிவிட்டாரா என்பதை நாம் கேட்கத்தான் வேண்டும்..!!!!!!

கலைஞரின் அரசியல் எதிர்கள்தான் தமிழர்களின் எதிரிகள் என்பதை தெளிவுற விளக்கும் வண்ணம் இன்று வந்துள்ள விஜயகாந்த்தின் அறிக்கை பின் வருமாறு!!!

சென்னை : "இலங்கை அரசின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டியது தமிழ் மக்களின் கடமை' என விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:"தமிழர்கள் இரண்டு லட்சம் பேர் போர் முனையில் சிக்கித் தவிக்கின்றனர்' என இலங்கை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய அரசு தங்களை போர் நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் பேசியபோதும் போர் நிறுத்தத்தைக் கோரவில்லை."இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வர்' என அனைத்துக் கட்சி கூட்டத்தில் அறிவித்தனர். இரண்டு வாரங்களும் ஓடிவிட்டன. போர் நிறுத்தமும் செய்யப்படவில்லை. எம்.பி.,க்களும் பதவி விலகவில்லை. இலங்கைத் தமிழர்கள் மீது பொழியும் குண்டுகள் மட்டும் இன்னும் நின்றபாடில்லை. இலங்கை அரசின் சார்பில் வந்த சிறப்புத் தூதர், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார். பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தார். இதில் கருணாநிதிக்கும் திருப்தி, பிரணாப் முகர்ஜிக்கும் திருப்தி, இலங்கை அரசுக்கும் திருப்தி.


ஆனால், வீட்டை இழந்து வாழ்விழந்து உயிருக்குப் போராடும் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு திருப்தியா? இலங்கைத் தமிழர் பிரச்னையை முதல்வர் கருணாநிதி காற்றுப் போன பலூனாக ஆக்கிவிட்டார்.தமிழகத்தில் மின் நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இலங்கைப் பிரச்னை கருணாநிதிக்குப் பயன்பட்டது. எல்லா மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கொடுப்பது தான் ஜனநாயகம்.புத்த மத குருமார்களின் மேற்பார்வையில் சிங்கள வெறியர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு ஜனநாயக முலாம் பூசுவதை எப்படி ஏற்க முடியும்? இலங்கை அரசின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டியதே தமிழ் மக்களின் கடமை. இலங்கைத் தமிழர்களுக்கு தே.மு.தி.க., தன்னால் இயன்றதை மாவட்டந்தோறும் திரட்டி அந்தந்த கலெக்டர்களிடம் ஒப்படைக்கும்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.


தேமுதிகவின் கடமையாக இதுவரை இலங்கை அரசின் முகமூடிகளை கிழித்தெறிந்தது எத்துணை முறை என்பதையும் பற்றி கொஞ்சமாவது சொல்லியிருந்தால் நாமும் ரசித்திருக்கலாம்....

Read more...

FLASH NEWS - கலைஞரைச் சந்திக்க பிரணாப் முகர்ஜி சென்னை விரைகிறார்!!

Saturday, October 25, 2008

ஈழத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்க , இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் , பிரதம ஆலோசகருமான பசில் ராஜபக்சே டெல்லியில் முகாமிட்டுள்ளது தெரிந்ததே...

இது தொடர்பில் , கலைஞரைச் சந்திக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி இன்று சென்னைக்கு வருவதாக ஒரு தொலைக்காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது...

மத்திய அரசுக்கு திமுக விதித்துள்ள கெடு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைகின்ற ஒரு சூழலில் அமைச்சரின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது...!!

ஈழத்தின் தற்போதைய சூழல் குறித்தும் , கெடு குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!!

Read more...

இனப்பிரச்சினை நீடிக்கக்காரணம் சிங்களர்களே - அமெரிக்கா குற்றச்சாட்டு!!!

இன்று சென்னையில் , இந்தியாவுக்கான அமெரிக்கத்தூதர் திரு.ராபர்ட் ப்ளாக்வில் ஒரு நிகழ்வில் பேசுகையில் பல ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கும் இனப்பிரச்சினை தீராததற்கு முழுமுதற் காரணம் சிங்கள பேரினவாதக்கட்சிகளே என்று குற்றம் சாட்டினார் என்று ராஜ் நியூஸ் தொலைக்காட்சி தெரிவிக்கிறது....!!! அரசியல் தீர்வினை எட்ட முடியாமல் இழுத்தடிப்பது சிங்களர்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

புலிகளை முற்றிலும் ஒழித்தபிறகே பேச்சுவார்த்தை என்ற வாதத்தையும் அமெரிக்கா நிராகரித்துள்ளது...வடக்கை முழுமையாக கைப்பற்றினாலும் , புலிகளை முற்றிலும் ஒழிப்பதென்பது பகல் கனவே என்று தெரிவித்துள்ளார் அவர்....

இலங்கையில் அளவற்ற மனித உரிமை மீறல்களால் , இலங்கைக்கான அத்துணை உதவிகளையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது என்றும் கூறியிருக்கிறார்...


இராணுவ ரீதியாக இப்பிரச்சினையில் தலையிடாது , அதே சமயம் இந்தியாவுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கத்தூதர் தெரிவித்ததாகவும் ராஜ் நியூஸ் தொலைக்காட்சி தெரிவிக்கிறது!!!!

Read more...

நவீன "இந்தி"ய தேசிய வியாதிகளுக்கு என் கேள்விகள்!

Friday, October 24, 2008

புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம்..அதை ஆதரிப்பது தேச விரோதம் , இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சி , என்று தொடர்ச்சியான கூப்பாடுகளை எழுப்பி அந்தச்சூட்டில் குளிர்காய நினைக்கும் இந்தியாவின் தேசியவியாதிகளுக்கும் , கதர்ச்சட்டைச் சிங்கங்களுக்கும் எமது கேள்விகள்....

ஒரு கேள்விக்காவது உங்களால் பதில் சொல்ல முடிந்தால் நாம் வெகுவாக மகிழ்ச்சியடைவோம்!

ராஜிவை கொன்றவர்கள் புலிகள் என்கிறீர்கள்...சரிதான் , இருந்துவிட்டுப்போகட்டும் , அதற்காக புலிகளை ஒழிக்க வேண்டும் என்கிறீர்கள்....புலிகள் தமிழர்கள்தானே??? சீக்கியர்கள் தானே இந்திராவைக்கொன்றார்கள்??? ஒட்டுமொத்த சீக்கியர்களை கொன்றொழித்தா விட்டீர்கள்?? இல்லையே , ஒரு சீக்கியரை பிரதமராக்கி அழகு பார்க்கும்போது தமிழினத்தின் மீது மட்டும் ஏன் ஒரே வஞ்சனை???


அதே ராஜிவ் காந்தியை , சிறிலங்காவிற்கு , தலைநகரான கொழும்புவிற்கு பயணித்த போது ஒரு சிங்களன் துப்பாக்கியால் பின்மண்டையை அடித்தானே அப்போது எங்கே போயிற்று உங்கள் தேசப்பற்று??? சிங்களன் இந்தியாவை அவமதித்துவிட்டான் என்று ஒரு தூசு தட்டும் போராட்டத்தையாவது நிகழ்த்தியிருந்தால் சொல்லுங்கள் !! முடியுமா ?? முடியாதல்லவா???


சிங்களத்தின் இறையாண்மைக்குட்பட்ட தீர்வு என்று கூச்சலிடும் பார்ப்பன பயங்கரவாதிகளே , கிழக்கு பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானின் ஒரு அங்கமான பிரதேசத்தை உங்கள் ஆயுதத்தை பிரயோகித்து சற்றேறக்குறைய பிடுங்கித்தந்தீர்களே , அப்போது பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்படவில்லை என்ற எண்ணமே உதிக்கவில்லையா உங்களுக்கு ? அன்றைக்கும் கதர்ச்சட்டை தானே ஆட்சியில் இருந்தது???

இன்றைக்கு ஈழப்பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம் என்று ஒதுங்க நினைக்கும் இந்தியப்பேரரசே , அன்றைக்கு ஏன் அமைதிப்படையை அனுப்பினாய் ???

இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட தீர்வுக்கு அமைதி வழியே சிறந்தது என்று புண்ணுக்கு புனுகு பூசும் கலையில் தேர்ந்த ஆலோசகர்களைக் கொண்டு புளுகு மூட்டையை அள்ளி வீசும் அரசே , சிங்களனுக்கு மட்டுமேன் ஆயுதம் கொடுக்கிறாய் ?? ஒருவன் கையில் கத்தியைக்கொடுத்துவிட்டு , மற்றொருவனை நிராயுதபாணியாக நிறுத்தி , இருவரையும் மேஜையில் உட்கார்ந்து "நல்லாப்பேசுங்கப்பா" என்று சொல்வதுதான் நடுநிலைமையா ??

சரி , கடல் தாண்டி சாகும் தமிழன் பற்றித்தான் கவலையில்லை , கடலில் மீன் பிடிக்கச்செல்லும் எம் தமிழக ( இந்திய ) மீனவன் பற்றிய கவலை கூட ஏன் இல்லை??? கச்சத்தீவில் வலையுலர்த்த அனுமதிக்குமாம் சிங்களம் , இன்றைக்கு பிரணாப்ஜி பாராளுமன்றத்தில் சொல்கிறார்....யார் வீட்டுச்சொத்தய்யா கச்சதீவு??? யாரைக்கேட்டுக்கொடுத்தீர்கள் சிங்களத்துக்கு ? இன்றைக்கு ஏன் இந்தியா , வலையுலர்த்தும் அனுமதிக்காக பிச்சையெடுக்கிறது???? இதே கொஞ்சம் காத்து வாங்க , காஷ்மீரில் ஒரு ஏக்கர் வேண்டுமென்று கேட்டால் கொடுத்துவிடுவீர்களா??? ஏன் இந்த பாரபட்சம்???

சரி , ஒன்று பட்ட இந்தியாவுக்குள் தனித்தமிழகம் என்ற பேச்செடுப்பது தவறு...ஆதங்கங்கள் ஆயிரமிருந்தாலும் ஒத்துக்கொள்கிறோம்!!!! ஆனால் , ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கான செயல்பாடுகள் இருக்கின்றன என்று உங்களால் உறுதியாகச்சொல்ல முடியுமா???

கர்நாடகா தண்ணீர் தரமாட்டேன் என்றது...சரியென்று நாம் சர்வ வல்லாண்மை பொருந்திய உச்சநீதிமன்றத்துக்கு போனோம் , அங்கேயும் உத்தரவு வந்தது ..ஆனால் காகிதத்துக்குண்டான மதிப்பைக்கூட கர்நாடகா காட்டவில்லையே?? கர்நாடகம் மட்டுமல்ல , பெரியார் நீர்த்தேக்கத்திலும் தமிழகம் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுகிறதே.....அதற்கென்ன செய்தது உங்கள் தேசியம்??

இராணுவத்தை அனுப்பி மதகுகளை திறந்து , தமிழக விவசாயியின் வயிற்றில் பாலை வார்த்திருந்தால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு "ஓ" போட்டிருக்கலாம்...ஒன்றுமே செய்ய முடியவில்லையே இந்திய அரசால் , இந்திய சட்டத்தால்......வெறும் குப்பன்களின் , சுப்பன்களின் வரப்புத்தகராறைத் தீர்க்க மட்டுமே சட்டமென்றால் , அந்தச்சட்டம்தான் எதற்கு ???

காவிரித்தகராறில் கருநாடக வாழ் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனரே , அன்றைக்கு உங்கள் இந்திய இறையாண்மை தமிழர்களை காப்பாற்றி இருந்தால் , அல்லது முயற்சியாவது செய்திருந்தால் இன்னும் வலுவாக "ஓ" போட்டிருப்போம்..!!!! ஆனால் என்ன செய்தது இந்திய நடுவண் அரசு???

இன்றைக்கும் தமிழகம் வந்தாரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது...மாற்றுமொழியாளர்களாயிருந்தாலும் தம் சொந்தங்களாகவே கருதி வாழ்ந்துகொண்டிருக்கிறது....அவ்வளவு ஏன் தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் இயக்கங்களின் தலைவர்களில் பெரும்பான்மையானோர் தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்கள்!!!!!! கடந்த அரை நூற்றாண்டின் பெரும்பகுதியை தமிழைத்தாய்மொழியாக கொண்டிராதவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!!

அதிமுகவின் தலைவியோ ஒரு பார்ப்பனர் , கன்னடர் .... இன்றைய தமிழ் மாநில காங்கிரசின் தலைவரோ ஒரு தெலுங்கர் , தேமுதிக என்னும் வளரும் இயக்கத்தின் தலைவரோ ஒரு தெலுங்கர் , மதிமுக என்னும் இயக்கத்தின் தலைவரோ ஒரு தெலுங்கர் கூட , இன்றைக்கு ரசிகர்கள் கட்சி ஆரம்பித்தால்தான் ஆச்சி என்று முழங்கும் ரஜினி கூட ஒரு கன்னடர்/மராட்டியர்தான் , நேற்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி...

இப்படி , தம்மை ஆளும் ஆட்சியாளர்களிடம் கூட வேற்றுமையே பார்த்தறியாத தமிழினம் இப்படியே வாழாவிருந்துவிடும் என்ற நம்பிக்கையில்தானே எங்கள் உணர்வுகளை புறந்தள்ள பார்க்கிறீர்கள் இந்திய தேசிய வியாதிகளே???

இதே கேரளாவிலோ , ஆந்திராவிலோ , கர்நாடகத்திலோ , மராட்டியத்திலோ ஒரு தமிழன் எம்.எல் ஏ ஆகக்கூட முடிவது சந்தேகம்தான்!!! எங்களிடம் வந்து தேசியம் பேச என்ன தெனாவெட்டு இருக்க வேண்டும் உங்களுக்கு ??? உங்களிடம் தேசியம் கற்றுக்கொள்ளும் நிலையிலா நாங்கள் இருக்கிறோம்????

உச்சநீதிமன்றம் என்கிறீர்கள்...அது தலைநகரில் இருக்கிறது என்கிறீர்கள்...சந்தோசம்தான் , இங்கிருந்து சற்றேறக்குறைய ஒரு மூன்று நாள் பயணித்தால் சென்று சேரக்கூடிய ஊர் அது!!!!! பக்கத்து ஊருக்கு பஸ்ஸுக்கு கூட போக காசில்லாதவர்களை விட்டுவிடலாம்!!!!

ஆனால் பணமிருந்தும் டெல்லி போனால் , அங்கே எங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு தேசத்திற்கு வந்தது போலல்லவா உணர்கிறோம், இதில் மதராஸி என்ற கேலி வேறு!!!!!! எங்கள் மொழியில் பேசுவதில்லை அங்கே , எங்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள் அங்கே என்று கூடத் தெரிவதில்லை...எங்களை விட வெகு தொலைவில் டெல்லியை விட்டு யாரும் இருக்கவில்லை...அதனால் எங்களுக்குதான் அந்த வேதனை தெரியும்!!!!! இருந்தும் நாம் இந்திய தேசியத்துக்கு கட்டுப்பட்டுத்தான் காலம் ஓட்டிக்கொண்டிருக்கிறோம்...!!!

இத்தனை அளப்பரிய தியாகங்களை செய்து இந்தியாவின் இறையாண்மையைக்காப்பாற்றும் எங்களுக்கு நீங்கள் புலியை பற்றி பேசினால் இறையாண்மை போய்விடும் என்று பாடம் எடுப்பது , எட்டாங்கிளாஸ் வாத்தியார் ஏரோப்ப்ளேன் ஓட்டுவது போலில்லையா???

சரி இறையாண்மையை விடுங்கள், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு , இந்திய நடுவண் அரசே தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பேசிய கதை தெரியுமா ? தெரியவில்லை இன்றால் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!!!!! ( நன்றி - புதினம்.காம்)

இந்திய கூட்டரசின் உள்துறை அமைச்சகத்தின் 2006-07 ஆம் ஆண்டு அறிக்கையின்படி,

- போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி

- அசாமில் செயற்பட்டு வரும் ஐக்கிய மக்கள் ஜனநாயக ஒற்றுமை

- அசாமில் இயங்கி வரும் டி.எச்.டி எனப்படும் டிமா ஹலான் டோஹாஹ்

- மேகாலயாவில் இயங்கி வரும் அசிக் தேசிய தன்னார்வ சபை

ஆகிய அமைப்புடன் இத்தகைய "நடவடிக்கைகள் இடை நிறுத்தம்" என்கிற ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்து பேச்சு நடத்துகிறது!!!இந்த அமைப்புக்கள் அனைத்துமே தற்போதும் இந்திய அரசாங்கத்தால் "தடை செய்யப்பட்டவைதான்"!


நெதர்லாந்தின் அம்ஸ்டெர்டமில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் நாள் முதல் 11 ஆம் நாள் வரையிலும்தாய்லாந்தின் பாங்கொங்கில் 2002 ஆம் ஆண்டு செப்ரம்பர் 21 முதல் 23 வரையிலும் தடை செய்யப்பட்ட நாகா அமைப்புக்களுடன் இந்திய அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி கே.பத்மநாபய்யா பேச்சுக்களை நடத்தினார்.


இவ்வளவு அமைப்புக்களுடன் பேச்சு நடத்தும்போதெல்லாம் பாதிக்கப்படாத இந்திய இறையாண்மை , ஒரே ஒரு ராஜிவ் காந்தி என்னும் தனிமனிதனுக்காக , அதுவும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியங்களின் ஒரே மெளன சாட்சியாக , அமைதிப்படையின் அப்போதைய தலைவராக இருந்த ஹர்கிரத் சிங் அவர்களாலேயே , "ராஜிவ் காந்தி" பிரபாகரனை கொல்ல ஆணையிட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிற ஒரு சூழலில் , அந்த நியாயமற்ற காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை ஆதரித்துப்பேசுவது தவறென்று சொல்வது நியாயமா???

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி பேசினாலே குற்றம் என்று சொல்லும் கதர்கன்றாவிகளே , தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி பேசுவதையும் , ஆதரிப்பதையும் ஐக்கிய நாடுகள் சபையே அங்கீகரித்திருக்கிறதே அது பற்றி தெரியுமா , தெரியாதா???

பொடாவில் வைகோ அவர்கள் சிறையில் அடைபட்ட போது , உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி பேசுவதோ , தார்மீக ஆதரவு தருவதோ தவறில்லை என்று சொன்னதே தெரியுமா ???

இதையெல்லா வற்றையும் விட , குறிப்பாக தமிழக காங்கிரஸாரிடம் ஒரு கேள்வியை வைக்கிறேன்.....

அதுதான் இந்திய இறையாண்மையையும் , இலங்கையின் இறையாண்மையையும் காப்பாற்ற ஒரு வெளியுறவுத்துறையும் , மற்ற இந்திய அரசுத்துறைகளும் இருக்கின்றனவே...அவை முறையாக தமது பணிகளைச் செய்கின்றன என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூட பாராட்டி இருக்கிறார்!!!!

ஆனால் இந்தியப்பேரரசிடம் , தமிழர்களின் உணர்வுகளை சொல்லக்கூட நிலையில் இருக்கும் நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்???

அப்படி ஒன்றும் செய்து கிழித்திட வில்லையென்றால் எங்கள் கோவணத்தைக் காத்திடக்கூட வக்கில்லாதவர்கள் நீங்கள் !!!!!!!!! உங்களுக்கு எதற்கு 2011ல் ஆட்சி ???

கோவணம் போனால் போகட்டும் !!! எங்கள் உறவுகளின் தசைகளையும் , இரத்தக்குழாய்களையும் போர்த்தியிருக்கும் தோலையும் சுரண்டித் திங்கும் கழுகுகளுக்கு காவலிருக்கவா உங்களுக்கு எங்கள் ஓட்டும் , எம்.பிக்களின் ஆதரவும் வேண்டும்??

பதில் சொல்லுங்கள் ...!!!!

Read more...

காணவில்லை - கண்டுபிடித்தால் பரிசு!!

Thursday, October 23, 2008

மொத்தத் தமிழகமுமே ஈழப்பிரச்சினையில் பத்தி எரிந்துகொண்டிருக்கிற ஒரு சூழலில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மேலுள்ள பற்றுதலால் தன் மகனுக்கே பிரபாகரன் என்று பெயர் வைத்த ஒருவர் , ஈழப்பிரச்சினையை தீர்த்த பிறகே தன் பிறந்தநாளைக்கொண்டாடுவேன் என்று முதலில் அறிவித்து , பின்னர் தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தானே அறிவித்துக்கொண்ட தானைத்தலைவர் இப்போது திடீரென தமிழக அரசியலிலிருந்து காணாமல் போய்விட்டார்!!!!!!!!

திடீரென கோவையில் தோன்றிய அவர் , நிரூபர்கள் தங்களின் ஈழ நிலை என்ன என்று கேட்டதற்கு "உங்களின் ( நிருபர்களின்) நிலைதான் என் நிலையும் என்று சொன்னாராம்...எங்கள் நிலை இருக்கட்டும் சார் , உங்கள் நிலை என்ன என்று திருப்பிக்கேட்டதற்கு யோசித்துச்சொல்கிறேன் என்று சொல்லி மறைந்துவிட்டாராம்.....அவரை கண்டுபிடித்து தந்தால் பரிசுகள் நிச்சயம் என்று அரசு அறிவித்திருக்கிறது!!!!

பயோடேட்டா


பெயர் -

ஊருக்கே தெரியும்!!

வயது -

அடிக்கடி குறையும் - எல்லா சினிமா நடிகர்களையும் போல!!

உயரம் -

செருப்பு போட்டப்பவா , போடாதப்பவா ??

நிறம் - ( மஞ்சள் அல்ல)

தமிழனின் நிறம் -
ஆனா கொஞ்சம் மினுமினுப்பு - உபயம் - டாஸ்மாக்

குணம் -

தமிழனுக்கு சம்பந்தமில்லாதது..


நீண்டநாள் தொழில் -

தீவிரவாதிகளை லெப்ட் லெக்கால் உதைப்பது / பம்பரம் தொப்புளில் விடுவது

சமீபத்திய தொழில் -

மக்களின் காதில் பூவை சுற்றுவது / நகைச்சுவைச் சேவை


இரவுப்பழக்கம் -

போட்டுட்டு உளர்றது...

பகலுப் பழக்கம் -

போடாம உளறுவது....


சமீபத்திய சாதனை -

தீவுத்திடலும் , மெரீனா பீச்சும் டாஸ்மாக்கில் மிதந்தது...

நீண்ட நாள் சாதனை -

தீவிரவாதி சேஸிங்....


நீண்டநாள் சண்டை -

வில்லன் நடிகர்களுடன் !!

சமீபத்திய சண்டை -

நகைச்சுவை நடிகருடன்!!!!


நீண்டநாள் படிப்பு -

புள்ளியியல்

சமீபத்திய படிப்பு -

மக்களை ஏமாற்றும் கலை!!!


நீண்ட நாளைய புலம்பல்

வருமானவரிச்சோதனை , கலியாண மண்டபம் காணாமல் போனது..!!!

சமீபத்திய புலம்பல்

மாநாட்டுக்கு பஸ் தரமாட்டேங்கறாங்க , கருணாநிதி மிரட்டலால் கடைக்காரன் பல்பசை தரமாட்டேங்கறான்!!!



தமீழீழம் பற்றிய நிலை -

பகலில்

அமெரிக்காவிடமிருந்து தமிழீழம் பெற்றுத்தராம ஓய மாட்டேனாக்கும்!!!


இரவில்

தமிழீழம் பற்றிய எதிர்க்கட்சி ,ஆளுங்கட்சி , வைகோ , ராஜபக்சே , மன்மோகன்சிங் , கலைஞர் இவுக எடுக்காத ரகசியமான நிலை என் !!!!...ஆனா அது எந்தநிலைன்னு சொன்னா கலிஞர் திருடிருவாரு.......அதனால 2011 எலக்சனுக்கு அப்பறம்தான் சொல்வேன்...!!!


தமிழக மக்களை பற்றிய அவரின் கருத்து.....


பகலில் -

தமிலும் , தமிளனும் என் உயிர்மூச்சு!!!

இரவில் -

முட்டாப்பசங்க , போற போக்க மாத்தா பிரதமராவே ஆக்கிடுவாங்க போல !!!



அவரைப்பற்றிய கருத்தறிய மக்களைக் கேட்டபோது......

உணர்வுள்ள மக்களின் கருத்து -

அய்யோ பாவம் தமிழ்நாடு...

தமில் மாக்களின் கருத்து -

அவரே வயலட் கலர் எம்.ஜி.ஆர் ,
அவரே இந்நாளைய புரட்டுத்தழைவர் ,
2011ன் எட்டாவது முதள்வர் !!!

இப்படி பற்பல சிறப்புக்களை கொண்டவரும் , தமிழகத்தின் மூத்த ராஜதந்திரியுமான அவரை கண்டுபிடித்து ஐந்தே மாதங்களில் மின்வெட்டு என்னும் பிரச்சினையை வெட்டி வீச வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்!!

Read more...

வைகோ கைது-கண்ணப்பனும் கைதாகிறார்!!

பிரிவினைவாத பேச்சு:
 thatsTamil Bookmarks

Vaiko
சென்னை: நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டிய வகையில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைது செய்யப்பட்டார். அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனை கைது செய்வதற்காக போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்துள்ளது.

ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் மதிமுக சார்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையி்ல்,

புலிகள் மீதான தடையை உடனே நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால் வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன்.

தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால் அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவார்கள். தமிழ் ஈழம் மலரும். அதுவே எங்கள் தாகம் என்றார்.

கண்ணப்பனின் பிரிவினைவாத பேச்சு:

அந்தக் கூட்டத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்.

வைகோ, கண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந் நிலையில் இன்று மாலை க்யூ பிராஞ்ச் போலீசார் திடீரென வைகோவின் சென்னை அண்ணா நகர் இல்லத்துக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிபதி முன்பு வைகோவை போலீஸார் ஆஜர்படுத்தினர். வைகோவை நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து வைகோ புழல் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கண்ணப்பனும் கைதாகிறார்:

மேலும் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பனையும் கைது செய்வதற்காக போலீஸ் படை பொள்ளாச்சி விரைந்துள்ளது.

முன்னதாக வைகோவின் கைதை அறிந்து ஏராளமான தொண்டர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை தூதரகம் மீது கல்வீச்சு:

இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின மீது கல்வீ்ச்சுத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/10/23/tn-vaiko-arrested-for-pro-ltte-speeches.html

Read more...

புலிகளை ஆதரிப்போர் தேச விரோதிகள்-ஜெயலலிதா!!!

Wednesday, October 22, 2008

சென்னை: விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது செய்தி...முழுச்செய்திக்கு இங்கே செல்லவும்!!!

http://thatstamil.oneindia.in/news/2008/10/23/tn-ltte-supporters-are-anti-nationals-says-jayalalitha.html

தவிர இந்தப்பதிவு அதைப்பற்றியதல்ல , தட்ஸ் தமிழின் குசும்பைப்பற்றியது..!!!இந்தச்செய்தியை பிரசுரித்த அந்த இணையதளம் அதே செய்தியில் கீழே உள்ள படத்தையும் படு நகைச்சுவை உணர்வுடன் பிரசுரித்திருக்கிறது!!!




ஹிஹிஹிஹிஹிஹி!! பாராட்டுக்கள்!!

ஆனா ,

ஒரு சந்தேகம்.................................................

தேசத்துரோகிகளை ஆதரிப்பவர்கள் / கூட்டு சேர்ந்திருப்பவர்கள் தேசத்துரோகிகளா இல்லையா?? அம்மா தன்னையும் தேசத்துரோகி லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறாரா??

இல்லை நாம எல்லோரும் அன்னப்பறவை போல தேசத்துரோகிகளுடன் சேர்ந்து இருக்கும் நல்லவர்களையும் (????!!!!!!!!!!) பிரித்து அறிந்துகொள்ள வேண்டுமா?????

ஆமாம் , அப்படி பிர்ச்சிதான் அறிஞ்சிக்கணும்னா , யார் தமிழ்த்துரோகி , யார் தேசத்துரோகி? ஒரே கூட்டணில தேசத்துரோகியும் கீறார் , தமிழ்த்துரோகியும் கீறார்!!! அப்படீன்னா , அது துரோகிகளின் கூட்டணிதானே??? ஒட்டுமொத்தமா ஒதுக்கிட்டா தப்பென்ன?

உள்நோக்கமெல்லாம் ஒண்ணுமில்லை..

சும்மா தோணுச்சி , கேட்டேன்!!!

அம்புட்டுதேன்!



Read more...

விஜயகாந்த்: 'ஏ'மாற்று சக்தி!

வழக்கமாக நான் காப்பி ,பேஸ்ட்டுவதில்லையெனினும் , இந்த அற்புத கட்டுரையை எல்லோரது கவனத்துக்கும் கொண்டு வரும் முகமாகவே இந்த காப்பி பேஸ்ட்...!!!!!! இனி "மாயா" உயிர்மை இணையதளத்தில் எழுதிய "விஜயகாந்த் ஒரு "ஏ"மாற்று சக்தி கட்டுரை உங்கள் பார்வைக்கு!!


விஜயகாந்த்: 'ஏ'மாற்று சக்தி!

அரசியல் கோஷங்களை வைத்து சினிமா வசூலைப் பல முறை அள்ளிய ரஜினி இன்று
, என்னை அரசியலுக்கு வரும்படி யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது என்று எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் சொல்கிறார் (இப்போதாவது ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொன்னாரே என்பதில் மகிழ்ச்சிதான்). ரஜினி தான் உருவாக்கிவிட்டு, பிறகு கோழைத்தனமாகப் பின்வாங்கியதால் உருவான வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்ட, அவர் தோற்ற இடத்தில் ஜெயித்த விஜயகாந்த் வெற்றிப் புன்னகையுடன் ஒரு மாபெரும் அரசியல்வாதியைப் போல் வளைய வருகிறார்.


தமிழகமெங்கும் பயணம் சென்று இரு பெரும் திராவிடக் கட்சிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட விஜயகாந்த் இப்போது தி.மு.கவின் கோட்டையாக அறியப்பட்ட சென்னையிலேயே பிரமாண்டமான இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்து குடைச்சல் கொடுக்கிறார். அவருக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க ஓட்டு சதவீதம் கிடைத்ததில் பிரமித்துப் போன தேசிய அளவிலான கருத்துக் கணிப்பு வல்லுனர்கள்கூட அவரை இரு பெரும் திராவிடக் கட்சிகளின் மாற்று சக்தி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் திராவிடக் கட்சிகளுக்கான மாற்று சக்தி என்று சொல்வதற்கான எந்த அம்சமும் அவரிடம் தெரியவில்லை.

சென்னை இளைஞர் மாநாட்டிற்காக அவருக்கு 300 அடி உயர பிரமாண்டமான கட் அவுட் வைக்கிறார்கள். திராவிட அரசியல் கட்சிகள் போலவே மக்களை மயக்கும் திட்டங்களை, தன்னை மட்டுமே எம்.எல்.ஏவாகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவராக இருக்கும்போதே அவர் அறிவிக்கிறார்.


தலித்துகளின் ஆதரவு கணிசமாக இருப்பதாகக் கணிக்கப்படும் விஜயகாந்தின் அடிமட்ட மக்கள் குறித்த பார்வை குறித்து பல அம்பலங்கள் காலப் போக்கில் வரவிருக்கின்றன. கொத்தடிமைத் தொழிலில் இருக்கும் ஒரு தலித் அவரிடம் வந்து புகார் தெரிவித்தால், அவரின் உண்மையான கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஏனெனில் அவரது கட்சிக்காரருக்கு சொந்தமான ஒரு கல் குவாரியிலேயே கொத்தடிமைகள் இருப்பதாகப் புகார் சொல்லப்படுகிறது.

கட்சியை நடத்துவதற்காக எக்கச்சக்கம் செலவு செய்வதாக விஜயகாந்தே ஒப்புக்கொள்கிறார். ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் அதை எவ்வாறு திரும்ப எடுப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை. மிக ஆர்வமாக அவருக்குப் பண உதவிகள் செய்யும் தொழிலதிபர்கள், பத்திரிகை விளம்பரங்கள், பேனர்களுக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும் கட்சி நிர்வாகிகள் என்ன நம்பிக்கையில் அதைச் செய்கிறார்கள் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.


திராவிடக் கட்சிகளின் ஊழல் பெருச்சாளிகளைத் தன் பக்கத்தில் வைத்திருக்கும் அவர், திராவிடக் கட்சிகளின் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறார். அதனால் பிரமாண்டங்களை, அதீதச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் ஒரு முறைகூடச் சொல்லாததிலும் ஆச்சரியமில்லை. இதுபோன்ற அரசியல் கட்சிகளின் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள், மாநாடுகளைத் தவிர்த்துவிட்டாலே தமிழகத்தின் கணிசமான மின் பற்றாக்குறை குறைந்துவிடும், ஒவ்வொரு கூட்டத்திற்கும் வரும் வழியில் விபத்துகளில் சாகும் பல தொண்டர்களின் உயிரும் காப்பாற்றப்படும். உண்மையில் இரு பெரும் திராவிடக் கட்சிகளைவிட அதிக செலவு செய்யும் கட்சி என விஜயகாந்தின் தே.மு.தி.கவைச் சொல்லலாம்.

விஜயகாந்தின் வரவு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதை மறுக்க முடியாது. திராவிடக் கட்சிகளின் எழுச்சி உருவானது முதல் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரே அரசியலின் அத்தனை லாபங்களையும் பங்கு போட்டு வருகிறார்கள். ஜமீந்தார்கள், பண்ணையார்களிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கொடுத்த திராவிட அரசியலில், பிற்பாடு அரசியல் அதிகாரம் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டது.


தி.மு.கவில் தலைவர் முதல் மாவட்டச் செயலாளர் வரை தங்கள் வாரிசுகளைத் தங்கள் பொறுப்பிற்குக் கொண்டு வரும் 'ஜனநாயகபூர்வமான' குடும்ப அரசியலைக் காண முடிகிறது. .தி.மு.கவில் என்றும் நிரந்தரமான ஜெயலலிதா-சசிகலா அண்ட் கோவின் குடும்ப அரசியலுக்கு நடுவில் பல புது முகங்கள் சுழற்சி முறையில் சம்பாதித்துவிட்டுக் காணாமல் போவார்கள். விஜயகாந்தின் வரவுடன் முற்றிலும் புதிய முகங்கள் அதிகாரத்தை ருசி பார்க்கக் காத்திருக்கின்றன. ஒரு வகையில் இது அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து, இன்னும் பரவலான ஜனத்தொகைக்கு எடுத்துச் செல்லும் முயற்சி. ஆனால் விஜயகாந்த் ஒரு விஷயத்தில் உஷாராக இருக்கிறார். அரசியலுக்கு வரும் போதே மனைவி, மச்சான் என்று குடும்பத்தினருடன் வருகிறார். நாளை பின்ன கட்சிக்காரங்க கேள்வி கேக்கக்கூடாது பாருங்க.

திராவிட அரசியல் வியாதியை மற்றக் கட்சிகளுக்கும் பரப்பும் பண்ருட்டி ராமச்சந்திரனின் வாயைக் கட்டி, ஆளில்லா கிரகத்தில் விட்டு வர வேண்டும். முன்பு பா..கவுக்கு, இப்போது தே.மு.தி.கவுக்கு திராவிட அரசியலின் வெற்று கோஷங்கள், ஊழல் அடித்தளங்கள் குறித்தெல்லாம் மந்திராலோசனை தருகிறார் அவர். பண்ருட்டியாரை சந்திராயன் சாட்டிலைட் மூலம் நிலாவுக்கு அனுப்பிவிடலாமா? வேண்டாம் வேண்டாம், நிலா ரொம்ப பக்கமாக இருக்கிறது; அவர் அடுத்த அமெரிக்க சாட்டிலைட்டைப் பிடித்து பூமிக்கு வந்துவிடக்கூடும்.

எந்த வகையிலும் மாற்று சக்தி என்று கூற முடியாத விஜயகாந்தை நோக்கி இடதுசாரிகளும் காவடி எடுப்பது தமிழக அரசியலின் அவல நிலையை உணர்த்துகிறது. இன்று, விஜயகாந்தைப் பெரிய ஆளாக்கிவிடாதீர்கள் என்று முதுபெரும் அரசியல் தலைவரான கலைஞர் கருணாதியைக் கையெடுத்துக் கும்பிடும் நிலைமை வந்துவிட்டது. தனது முதல் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின், எவ்வாறு ஒட்டுமொத்த மக்களின் அவநம்பிக்கையையும் அதிருப்தியையும் சம்பாதித்தாரோ, அதே பாதையில்தான் கருணாநிதியும் செல்கிறார். மின் வெட்டு, பண வீக்கம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு புறம். அழகிரி விவகாரம், அமைச்சர்கள்-மாவட்டச் செயலாளர்கள் மீதான ஊழல்-மணல் குவாரி முறைகேடுகள் போன்ற தவிர்க்கக்கூடிய விவகாரம் இன்னொரு புறம்.


ஏமாற்று, மோசடி, அதிகாரத் திமிர், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்காக அறியப்பட்ட ஒரு வர்த்தக நிறுவனமும் அதன் உரிமையாளர்களும் இன்று ஜனநாகத்தின் காவலர்கள் போல் கூக்குரல் எழுப்பும் சூழல் வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தயாரித்த காதலில் விழுந்தேன் படத்திலுள்ள நாக்கமுக்க என்ற குத்துப் பாடலின் நடுவில் வரும் ஒரு வரியை அடுத்த முறை கூர்ந்து கவனியுங்கள். "மதுரை எரியுது அணைங்கடா, அணைங்கடா..." இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டில் அதிக வரி வசூலித்த முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய, "ஜாக் அண்ட் ஜில் வென்ட் அப் த ஹில்" என்ற சிறுவருக்கான ரைம்ஸ் இன்று வரை அந்தக் கால கொடுமைகளின் வரலாற்று சாட்சியாக இருக்கிறது (அது 18ஆம் நூற்றாண்டில் புரட்சிக்குப் பிறகு கொல்லப்பட்ட பிரான்ஸ் மன்னன் 16ஆம் லூயி பற்றியது என்ற கருத்தும் நிலவுகிறது). அதே போல, எந்த முறைகேடும் இல்லை என்று பூசி மெழுகப் பார்த்தாலும் மக்களுக்குப் பல்வேறு வடிவங்களில் தகவல்கள் சென்று சேரத்தான் செய்யும்.

கலைஞர் ஒரு கலா ரசிகர், ராஜதந்திரி என்பது போன்ற சாதனைகளுடன் இது போன்ற கரும் புள்ளிகளும் சரித்திரத்தில் இடம் பெறாமல் போகாது. அது மட்டுமின்றி இது போன்ற சம்பவங்கள்தான் ஜனநாயக விரோதியான ஜெயலலிதாவுக்கும், ஒரு சிறந்த மாற்று என்று கூற முடியாத விஜயகாந்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

அரசியலில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி பறி போய் ஜெயலலிதா ஆட்சி வருவது அல்லது விஜயகாந்த் கால ஓட்டத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வலுவான சக்தியாக வருவது தவிர்க்க முடியாதது என்று இருப்பதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் ஜனநாயக அம்சங்களை இழந்துவிட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியைப் போல் ஊழல் புதையலிலும் முறைகேடுகளிலும் திளைப்பது மூலம் மற்றொரு கட்சியை மிருகத்தனமான பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்காதீர்கள் என்பதே ஜனநாயகவாதியாக அறியப்படும் முதல்வர் கருணாநிதியிடம் நாம் வைக்கக்கூடிய எதிர்பார்ப்பாகும்.

விஜயகாந்த் ஒரு வெற்றிடத்திலிருந்து தோன்றுவதில்லை, ஜெயலலிதா வேற்று கிரகத்திலிருந்து தனது உத்வேகத்தைப் பெறுவதில்லை;

எல்லாம் வாக்காளர்களாகிய உங்களிடமிருந்தே உருவாகிறது.

=====================================================================


எழுதியவர் - மாயா
நன்றிகள் -" உயிர்மை" இணையதளம்!!!

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=359



Read more...

தமிழீழம் - தின"---"ன் திசைதிருப்பும் வேலை.!!


நேற்றுவரைக்கும் தமிழீழம் பற்றிய நிகழ்வுகளை , தமிழகத்தின் ஒரு மூலையில் நடக்கும் வீதி நாடகத்திற்கான முக்கியத்துவத்துடன் பிரசுரித்த தின"---" திடிரென கரிசனம் பொங்க ஈழம் பற்றிய செய்திகளுடன் வெளியிட்டு இருக்கிறது!!!!!

இன்றைய பத்திரிக்கையில் இரண்டு செய்திகள் ஈழம் பற்றியும் , தமிழர்களின் பிரச்சினை பற்றியும் வந்திருக்கின்றன...அவற்றை ஆராயந்தெல்லாம் பார்க்க வேண்டியதில்லை..மேலோட்டமாக பார்த்தாலே தின"---" எப்படி தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது என்று புரியும்..


தொடர்ச்சியாக நாம் பார்ப்பன ஆதரவு ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றன என்று சொன்ன போதெல்லாம் இங்கு நாம் சாதி வண்ணம் பூசுகிறோம் என்று கொதித்தெழுந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கலாம்..!!!

முதல் செய்தி

வைகோ வும் , கண்ணப்பனும் தனித்த
மிழ்நாடு என்ற பிரிவினை கோஷத்தை எழுப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறது......குறைந்தது செய்தியை செய்தி என்ற அளவில் வழங்காமல் தனது கருத்துக்களை உட்நிறுத்தி பிரிவினை முலாமினை பூச நினைக்கிறது அப்பத்திரிக்கை!!!


--------------------------------------------------------------------------------------------------

தனித்தமிழ்நாடு : பிரிவினைவாதம், தேசவிரோதம் துவக்கியது ம.தி.மு.க., ஆயுதம் ஏந்தவும் தயார் என வைகோ ஆவேச பேச்சு

"தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் மலரும்,'' என ம.தி.மு.க., அவைத் தலைவர் கண்ணப்பன் பேசினார். இதன் மூலம், நாட்டில் பிரிவினைவாதம் மற்றும் தேசவிரோத சிந்தனையை ம.தி.மு.க., மீண்டும் துவக்கியுள்ளது."ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் ம.தி.மு.க., சார்பில் கருத்தரங்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள், இரண்டு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டன.

-------------------------------------------------------------------------------------------------

மேலே இருப்பதுதான் தின"---" செய்தி!!!!


ஈழத்தமிழர் விடயத்தில் தமிழர்களின் எந்தவொரு உணர்வுயையும் பிரதிபலிக்காத தின".---" , இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து , தனித்தமிழ்நாடு என்று தலைப்பிட்டு முக்கியப்படுத்தும்போதே அதன் உண்மை நோக்கம் வெளிப்படுகிறது!!


அடுத்த செய்தியில் அந்நாளிதழில் தமிழர் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு முறைதான் குரல் கொடுத்தார்கள் என்று அங்கலாய்த்துக்கொள்கிறது!!

-------------------------------------------------------------------------------------------------

தமிழக எம்.பி.,க்கள் ஒரே ஒருமுறை குரல் : பார்லி.,யில் இலங்கை பிரச்னை

மீண்டும் அவை கூடியபோது பல பிரச்னைகள் கிளப்பப்பட்டன. பல மாநில எம்.பி.,க்களும் பல் வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுத்ததால் பல தடவை சபை ஒத்திவைக்கப் பட்டது. ஆனாலும், தமிழக எம்.பி.,க்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை ஒரே ஒருமுறை எழுப்பியதோடு சரி, அதன்பின் அவையில் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


----------------------------------------------------------------------------------------------

இப்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே முறை குரல் கொடுத்து பின் அமைதியாகி விட்டார்கள் என்று தனது கரிசனத்தைக்காட்டும் தின"---" தனது செய்திகளில் ஈழத்தமிழருக்காக எத்துணை முறை குரல் கொடுத்தது என்று பட்டியலிட்டு இருந்தால் இன்னும் நலம்!!!


அவ்வாறு செய்யாமல் , இது போன்ற செய்திகளை வெளியிடுவது என்ன நியாயம் ????


இதே கொஞ்ச காலத்துக்குமுன் ஈழத்தமிழர்கள் உலகம் முழுமையும் கஞ்சா கடத்துகிறார்கள் என்று சேற்றை வாரி இறைத்ததும் இதே பத்திரிகைதான்!!

தொடர்ச்சியாக தனது ஈழத்தின் பாலான நிலையினை வெளிப்படுத்தாமலே ( அதாவது உத்தியோகப்பூர்வமாக , மற்றபடி தமிழனுக்கு எதிரான தன் நிலையை வெளிப்படுத்தித்தான் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இல்லை) தமது சொந்த விருப்புக்களுக்கேற்ப செய்திகளை திரித்துத் தரும் தின"---" எதிர்த்தும் நாம் நமது கண்டனக்குரல்களை பதிவு செய்வது அவசியம்!!


அரசியல் கோமாளிகள் "சுசு" மற்றும் சோசோ க்களை விட தின"---" , "----"ந்துவும் வலுவான வாசகர் வட்டத்தை கொண்டுள்ளமையால் நமது மக்கள் இந்நாளிதழ்கள் பற்றிய உண்மையை உணர்ந்துகொள்வது வெகு அவசியம் என்பதை விட அவசரமானது!! அப்போதுதான் தங்களை அடையும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றிய தெளிவு பிறக்கும்!!

அதே நேரம் , நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் , நமது நலனுக்கான பத்திரிகைகளை மட்டுமே ஊக்குவித்துப்போற்றுவதும் மிக முக்கிய கடமை!!!


Read more...

விஜயகாந்தின் அப்பழுக்கற்ற தேச பக்தி!!

Monday, October 20, 2008

இதோ விஜயகாந்த் தம் இளைஞரணி மாநாட்டில் பேசிய ஒரு பத்தி உங்களுக்காக


எம்.ஜி.ஆருக்குப் பிறகு மின்சார உற்பத்தியை பெருக்க யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. 2000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டேன் என்று கருணாநிதி கூறுகிறார். அது எப்போது நமக்கு கிடைக்கும்? தேமுதிக ஆட்சிக்கு வந்தால் 5 மாதத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவேன். அதற்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன. அதை இப்போது கூறினால் காப்பியடித்து விடுவார்கள்.


-------------------------------------------------------------


அன்புள்ள விஜய்காந்த் அவர்களே....

மக்கள் அனுதினமும் மின்வெட்டால் அவதிப்படுகிறார்கள்....அந்த மின்வெட்டை 2012 ல் தான் தீர்க்க முடியும் என்று தமிழக அரசு வெகு வெளிப்படையாக அறிவித்துவிட்டது....

அதே சமயம் ஐந்தே மாதங்களில் இப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்கிறீர்களே.....???

அதற்கான ரகசியம் என்ன , சூட்சுமம் என்ன??

2011ல் நீங்கள் ஆட்சிக்கு வந்துதான் அதை தெரிவிக்க வேண்டுமா?? ஒரு வேளை வரவில்லையென்றால்???? தமிழக மக்கள் இப்படியே அவதிப்பட வேண்டுமா ???

என்னை ஆட்சிக்கு வரவிடா விட்டால் மின்வெட்டை தீர்க்க உதவமாட்டேன் என்று மக்களை மிரட்டுகிறீர்களா???

மக்களின் சேவை உண்மையிலேயே உங்கள் குறிக்கோள் இல்லையா??

மக்களின் சேவைதான் குறிக்கோள் என்றால் ஐந்தே மாதங்களில் மின்வெட்டைத்தீர்க்கும் அபூர்வ யோசனையை இப்போதே தந்தால் என்ன???


இல்லை நீங்களும் இன்னொரு ராமர் பிள்ளையா ?

சும்மா கூட்டம் சேர்க்கவும் , ஓட்டு சேர்க்கவுமே இதுபோன்ற புரட்டுக்களை அள்ளி விடுகிறீர்களா??

இன்றைக்கு நீங்கள் கொடுக்கும் யோசனைப்படி ஐந்து மாதங்களில் மின்வெட்டு தீர்ந்தால் தமிழக மக்கள் உங்களுக்கு கோயிலே கட்டுவார்கள்!!!

Read more...

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP