வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்.........
Sunday, March 8, 2009
உண்மையச் சொல்லணும்னா எனக்கு அந்தளவுக்கு ஆராய அறிவோ , தமிழ்ப்புலமையோ கெடையாது. இருந்தாலும் முயற்சி பண்ணறேன். அழுகுன முட்டை , பிஞ்ச செருப்பு எதுவும் வேண்டாம்....சரியா நண்பர்களே?
வழக்கொழிந்த சொற்களைப் பற்றி நிறையப் பேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமான ( புதுசா படம் எடுக்க வந்த திரை இயக்குநர்கள் சொல்லும் அதே வித்தியாசமான தான்.)......... முயற்சியான வழக்கில் இருந்தும் நாம் நிறைய உபயோகிக்காத சொற்களைப் பற்றி எழுதலாம்னு நெனக்கிறேன்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஆனாலும் சரி , உள்நாட்டில் வாழும் தமிழர்கள் ஆனாலும் சரி.........ஒரு ஹாய் ,, ஹலோவில் தங்கள் அறிமுகப்படுத்தி முடித்துக்கொள்கிறார்கள். இப்போதெல்லாம் "வணக்க்க்க்ம் " ( நிர்மலா பெரியசாமி ஸ்டைலில் ) தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமே இருக்கிறது....மீறிப்போனால் ஒன்றிரண்டு மேடைகளில் , சில தமிழுணர்வாளர்களிடையே.....அவ்வளவுதானே?
பெரியவர்களை "வணக்கம் அய்யா " என்று அழைத்துப்பாருங்களேன்..........எவ்வளவு பவ்யமாகவும் , வணக்கத்திற்குரியதாகவும் இருக்கிறது.....சம்பிரதாய குட் மார்னிங்களையும் , ஈவ்னிங்களையும் மொழி தெரியாத மூன்றாம் நபர்களிடம் மட்டுமே வைத்துக் கொண்டு தமிழர்கள் வணக்கம் சொல்லும் வழக்கத்திற்கு மாறினால் என்ன?
நிறைய வட இந்தியர்கள் இன்றும் "நமஸ்கார்" ஜி என்றுதான் சொல்கிறார்கள்........!
ஒரு உரையாடல்
ரொம்ப்போ லேட் ஆயிடுச்சா வளர்மதி?
ஆமாங்கோ , படம் போட்டுடுவாங்க...இவ்ளோ லேட்டா வந்தா எப்படி?
இல்லே , நான் உடனே கெளம்பணும்னு தான் நெனச்சென். இன்னிக்கு பாத்து மேனேஜர் கெழம் கொஞ்சம் லேட்டானாலும் வேலையை முடிச்சிடுங்கன்னு சொல்லிடுச்சி.....!!!!
இந்த உரையாடலில் மூன்று தாம் "லேட் என்கிற தமிழ் வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.....! அலறாதீங்க.....தமிழாகிப்போன "லேட்" என்கிற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது...
சிந்தியுங்களேன்.........................
இந்த "லேட்" என்கிற தமிழாகிப்போன வார்த்தையைக் காட்டிலும் "தாமதம்" என்கிற சுத்தத் தமிழ் வார்த்தையைப் போட்டால் அவ்வளவு கசக்கிறதா என்ன? பிறகேன் ஆங்கிலம்.....??? அப்படி ஆங்கிலத்தையே உபயோகப்படுத்திக்கொண்டிருந்தால் "தாமதம்" என்கிற தமிழ் வார்த்தை வழக்கொழிந்து போகாதா? ( அப்பாடா , தலைப்பு வந்தாச்சு பதிவுல...!)
காலம் ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது அனேக நீள வாக்கியங்கள் சுருங்கிப்போயின..."யெஸ்" என்ற மூன்றெழுத்து ஆங்கிலவார்த்தை யா என்ற ஈரெழுத்து வார்த்தையாகச் சுருங்கிப் போயிற்று.
ஆனால் , நாமோ சின்ன வார்த்தையான "நன்றி" யை விட்டுவிட்டு அம்மாம் பெரிதான "தேங்க் யூவை" சுமந்து கொண்டிருந்தோம்......
தேங்க்ஸ்டா டியர் , தேங்க்யூடா கண்ணா வை நன்றிடா கண்ணு என்று தமிழ்ப்படுத்திப் பாருங்களேன் , சுவை இன்னும் கூடும் , சொல்லப்போனால் தேங்க் யூவை விட அதிக நன்றியுணர்வைக் காட்டும்.
நான் அனுபவிக்கிறேன். நீங்களும் அனுபவியுங்களேன்.....நன்றிக்கு மாறுங்கள்.....
இப்படி நாம் உபயோகிக்கும் எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கும் பதில் தமிழ் வார்த்தைகளையே உபயோகியுங்கள்....
இன்னும் கொஞ்ச நாள் கழித்து வழக்கொழிந்த தமிழ்ச்சொற்களைப் பற்றி பேசவேண்டிய தேவையே இருக்காது.........!
தொடர் பதிவுகளுக்கு என்னை அழைத்த நல் நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்....!
பிற்சேர்க்கை....
நம்ம பங்குக்கு நான் நம்ம பதிவுலக பத்திரிக்கைச் சிங்கம் , பேட்டிகளின் பெருஞ்சுடர் "மோகன் கந்தசாமி " அண்ணாச்சி அப்புறம் ........எங்க அய்யா , எங்க வழிகாட்டி "ராதாகிருஷ்ணன் அய்யா" இவுங்களை இந்தத் தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்.........!
'‘.
14 பின்னூட்டங்கள்:
தொடர் பதிவுகளுக்கு என்னை அழைத்த நல் நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்....!//
அந்த நல் நெஞ்சம் நான் தானா? ஹையா....
ரொம்ப நல்ல பதிவு, அம்மா அப்பாவும் இப்படியாகப் பட்டது தான்.
நன்றி...
பல தமிழ் சொல்களை எழுதுகின்றொம் ஆனால் பேசதான் வெட்கப்படுகின்றோம்.... கனனி என்று சொல்லிப்பாருங்கள், ஏன் இந்த நிலை?
உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்
அந்த நல் நெஞ்சம் நான் தானா? ஹையா....//
அதிலென்ன சந்தேகம் ...நீங்களேதான்.
***
ரொம்ப நல்ல பதிவு, அம்மா அப்பாவும் இப்படியாகப் பட்டது தான்.
நன்றி...//
உண்மைதான் , மம்மி - டாடி என்ற தமிழாகிப்போன வார்த்தைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள்.
பல தமிழ் சொல்களை எழுதுகின்றொம் ஆனால் பேசதான் வெட்கப்படுகின்றோம்.... கனனி என்று சொல்லிப்பாருங்கள், ஏன் இந்த நிலை?//
உண்மையே. நாம் எழுத்தில் தமிழை உபயோகிக்கும் அளவிற்கு பேச்சில் உபயோகிப்பதில்லை. வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள் திரு.ஞானசேகரன்.
உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்//
தமிழ்ப்பணியா? உள்குத்து ஏதும் இல்லையே?
கருத்துக்கு நன்றி திரு.சுரேஷ்குமார்.
தமிழ்ப்பணியா? உள்குத்து ஏதும் இல்லையே? ////////////
என்ன மதி பலா அண்ணே இப்படி கேட்டுடீங்க ?
நல்ல தொடர் நண்பரே!
வாயில நுழைய முடியாத வார்த்தையெல்லாம் நம் மக்களுக்கு இலகுவா வரும். ஆனா நம்ம தாய் மொழியில பேசத்தான் ரொம்ப கடினப்படறாங்க. சொல்லப்போனா கூச்சப்படறாங்கன்னு சொல்லனும். அப்பா அம்மான்னு கூப்பிடறவங்க ஏதோ நாகரீகம் தெரியாதவங்க மாதிரியும் மம்மி டாடின்னு கூப்பிட்டா அவங்க ரொம்ப நாகரீகமானவங்க மாதிரியும் ஒரு மாயை நம்ம மக்கள பிடிச்சி ஆட்டுது. என்னத்த சொல்ல!
வழக்கொழிந்த சொற்களை பற்றி எழுத சொன்னா, நீங்க வழக்கொழியப் போகிற சொற்களைப் பற்றி எழுதிருக்கீங்க?
நன்றிகள் திரு.தமிழ்நாடன்.....உண்மைதான்....!
-------
நண்பர் ஜோ,
இன்னா தல சவுக்கியமா? நானும் எம்புட்டு நேரந்தேன் நல்லவனாவே நடிக்கிறது.?
வச்சிகிட்டா வஞ்சகம் பண்றாங்க தல????சட்டிலே இர்ந்த்தானே அக்ப்பைலே வரும்? சரிதானே?
நெம்ப நன்றி, உங்க பின்னூட்டத்திற்கு ..
உங்கள்து பனுவல்கள் மிகவும் கவர்ச்சியாக எழுதப்பட்டுள்ளன்.
தமிழ்ப்ளாக்ஸ்.
உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள்.
பனுவல் என்ற புதிய தமிழ் வார்த்தையைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது உங்கள் பின்னூட்டம். !
வணக்கம் பாலா..! கொஞ்சம் தாமதமாகப் பதிந்தாலும், மிக மகிழ்ச்சியுடன் சொல்கிறேன் உங்களுக்கு நன்றி,,!!! என்ற வார்த்தைகளை..!!
வணக்கம் பாலா..! கொஞ்சம் தாமதமாகப் பதிந்தாலும், மிக மகிழ்ச்சியுடன் சொல்கிறேன் உங்களுக்கு நன்றி,,!!! என்ற வார்த்தைகளை..!!
/
இன்னா மச்சி, கலக்குறே போ. மூணு வார்த்தேயும் போட்டு விகடம் பண்றே. ஆனா நாம்மாள்ங்க அல்லாம் நல்லா எழ்தறாங்க்கோ ஆனா பேசயலிதான் ஒரே கலீஜா பூடுது. இன்னாங்கறே நீ? ரெலயன்ஸு இப்பவும் ப்ரெஷ்ஷா கீதா?
Post a Comment