ஃபிராண்ட்களுக்கு அடிமைத் தேசமான இந்தியா..!

Wednesday, March 11, 2009

பவன் டோ , காளி மார்க் , வின் சென் ட் , டொரினோ , சிட்ரா இவைகளெல்லாம் என்னவென்று தெரியுமா? கொஞ்சம் கடினம்தானே சட்டென்று சொல்வதற்கு...

ஆனால் கொக்ககோலா , பெப்ஸி , செவன் அப் ????? தெரியாதவன் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் கூட இருக்க மாட்டான்.





ஸ்டைலாக பெப்ஸியை வாயில் வைத்து ஒரு சிப் குடித்து "ஃதம்" மை ஒரு பப் இழுத்து.......அப்பப்பா என்ன சுகம் !!!!!!!!!!!!! விஷத்தை விழுங்குவதைத்தான் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம்..........!


லக்ஸ் , சர்ப் எக்ஸெல் , பேர் அந்த் லவ்லி , பெப்ஸோடெந்த் , லைப்பாய் , லிப்டன் , புரூக் பாண்ட் , கிஸ்ஸான் , ப்ரு , க்ரீன் லேபில் , க்ளினிக் ப்ளஸ் , வால்ஸ் இவைகளின்றி ஒரு இந்தியன் , தமிழன் வாழ்வது இயலுமா?



இவைகளெல்லாம் என்ன ?

நாம் வாழ்வில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்......யுனிலீவர் (UNILEVER) என்ற யூரோப்பிய பெரு முதலாளிகளின் விற்பனைப் பொருட்கள்....இந்தியாவின் அபரிமிதமான சந்தையைக் குறி வைத்து பாய்ந்த அவர்கள் இன்று இந்தியாவின் அனைத்து மக்களையும் தங்களது ப்ராண்டிங்கிற்கு அடிமைப்படுத்தி விட்டார்கள்.........

சிறு கிராமங்கள் முதல் இன்று யுனிலீவர் பொருட்கள் இல்லாமல் இல்லை....

""""ஐ ஆல்வேஸ் யூஸ் ஸர்ப் எக்ஸெல் யூ நோ? லோக்கல் அரசன் சோப் எல்லாம் வேஸ்ட்டு """" என்ற இந்த உதாரண வாசகத்தை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

உலகளாவிய முறையில் அதிக டென் டிஸ்கள் உபயோகிக்கும் டூத் பேஸ்ட் என்ற பகட்டு விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? கோல்கேட் , பாமோலிவ் , டைட் , க்ளியர் , ஹெட் அன் ட் சோல்டர்ஸ் , ஏரியல் இப்படி நாம் உபயோகிக்கும் அனேக பொருட்கள் பராக்டர் அண்ட் கேம்பில் , கோல்கேட் போன்ற அந்நிய முதலாளிகளுக்குச் சொந்தமானவை.



ஏன் இந்த நிலை ? இந்திய தொழில்நுட்பங்கள் அந்நிய தொழில்நுட்பத்திற்கு ஈடானவை இல்லையா? விண் நிற்கும் செயற்கைகோள்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கூட அறிந்து வைத்திருக்கும் நம்மால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களைக் கூட தயாரிக்க முடியவில்லையா ?

இங்கேயே தொழிலகங்களைப் வைத்து சில ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து மொத்த லாபத்தையும் தத்தமது நாடுகளுக்கு அள்ளிச்செல்வதால் சில ஆயிரம் வேலை வாய்ப்புக்களைத் தவிர வேறென்ன பெரிய பலனை நாம் அடைகிறோம்???

நாம் உபயோகிக்கும் பொருட்களை நாமே தயாரிப்பதால் எத்தனை சிறு தொழில்கள் பெருக வாய்ப்புண்டு. வேலை வாய்ப்புக்களும் குறைய வாய்ப்பில்லைதானே?

இன்றைக்கு ஹூண்டாய் கம்பெனி இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை பெருமையாகக் கருதும் நாம் அவர்களது நோக்கம் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பதுதான் என்ற மாபெரும் உண்மையை மறந்தது ஏன்?
இந்தியாவில் முதலீடு செய்வதொன்றும் இந்தியாவிற்கு அவர்கள் செய்யும் சேவையல்ல , தனது பொருட்களின் விலையை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம் குறைத்துக்கொள்வதுதான் அவர்கள் நோக்கம் என்ற உண்மை நமக்குப் புரியவில்லையா? அவர்கள் தரும் வேலைவாய்ப்புக்கள் என்பது வெகு சொற்ப பங்களிப்பே.....!

உலகம் ஒரு சிறு உருண்டையாக சுருங்கி விட்ட இக்கால கட்டத்தில் நம்மால் யாரையும் இந்தச் சந்தையில் விற்காதே என்று சொல்ல முடியாதுதான். ஆனால் , நாம் வாங்கும் பொருட்களை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் தானே?

தன்னிறைவு பெற்ற இந்தியாவில்தான் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்ற மாபெரும் உண்மையை உணர்ந்து இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்...!

29 பின்னூட்டங்கள்:

Anonymous March 11, 2009 9:51 PM  

லவ் ஓ, பொவான்டோ, ஃப்ரூட்னிக் போன்ற காளீஸ்வரி நிறுவனத் தயாரிப்புகள் எந்த விதத்திலும் அந்நிய நிறுவனத் தயாரிப்புகளான கோக், ஃபாண்டா, மாசா போன்றவற்றைவிட தரத்தில் குறைந்தவை அல்ல.

விளம்பரமும் விற்பவர்க்கான தரகு/லாப விகிதத்தில் இருக்கும் வேறுபாடே விற்பவர்களை அந்நிய பொருட்களை விற்குமாறு செய்கிறது.

சரியான விளம்பரமும் தரகு/லாப விகிதமும் இருந்தால் நம்மூர் நிறுவனங்களும் இந்த உலகமயமாக்கலில் தனித்துப் போட்டியிட முடியும்.

இந்திய ரயில்வே ஒப்பந்தத்தை மொத்தமாய் அள்ளிய 'மா' மாம்பழச்சாறு நிறுவனம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

velichathil March 11, 2009 10:24 PM  

ஓல்ட் மாங்கு, கிங் ஃபிஷரு, ஃபை தவுசண்டு, சிமரனாஃபு இதையெல்லாம் விட்டூட்டியளே...

முகு March 11, 2009 10:31 PM  

மதிபாலா,

இப்போது மட்டுமல்ல....முன்பே அந்நிய நாட்டு
ஜட்டி,பனியன், நாத்த சென்டு....போன்றவற்றை
பயன்படுத்தி ஒரு அற்ப சுகம் கண்டவன்.

நம்முடைய தாழ்வு மனப்பான்மை தான் காரணம்.
நம் உள்ளூர் தயாரிப்புகள் எந்தவிதத்திலும் தரத்தில்
குறைந்ததல்ல.என்ன செய்ய.....மோகம்....?

மதிபாலா March 11, 2009 10:33 PM  

அனானியாக வந்து அற்புதமான கருத்தைச் சொன்ன நண்பருக்கு நன்றிகள்......

ோக்ககோலாவிற்கு இருக்கும் பண பலம் காளீஸ்வரிக்கு இல்லை...

ஆனால் ஒரு இந்தியத் தயாரிப்பும் , வெளித்தயாரிப்பும் போட்டியிடும் போது இந்தியத்தயாரிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கலாமே என்பதைத்தான் நான் சொல்ல விளைகிறேன்.

மதிபாலா March 11, 2009 10:35 PM  

ஓல்ட் மாங்கு, கிங் ஃபிஷரு, ஃபை தவுசண்டு, சிமரனாஃபு இதையெல்லாம் விட்டூட்டியளே...//

விட்டுடலே அண்ணே. ஹிஹிஹிஹி...மனசுல என்னிக்குமே ஒரு இடமுண்டு , பதிவில இல்லாட்டியும்...!

ஆமாம் அது என்ன சிமரனாஃபூ??????

மதிபாலா March 11, 2009 10:40 PM  

நண்பர் முகு,

தாழ்வு மனப்பான்மை என்ற அருமையான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.....ஆமாம் , நமது தாழ்வு மனப்பான்மைதான் எல்லாவற்றிற்கும் காரணம்....


அந்நியப் பொருட்கள் வலுவான விற்பனை உத்திகளின் பால் நமக்கு போதை மருந்தாக உள் செலுத்தப்படுகிறது. அந்தப் ப்ராண்ட் என்னும் போதைக்கு அடிமையான நாம் அந்நிய மோகம் பிடித்து அலைகிறோம்...

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள்...எண்ணத்துப்பூச்சி என்ற பெயர் அபாரமோ அபாரம்...யாருக்கும் வராத சிந்தனை. வாழ்த்துக்கள்..

T.V.Radhakrishnan March 11, 2009 10:54 PM  

மதி...ஹிமாலயா..ஒரு டூத் பேஸ்ட் வருகிறது...மிகவும் நன்றாக இருக்கிறது..கிடைத்தால்..முயற்சி செய்யுங்கள்

மதிபாலா March 11, 2009 10:58 PM  

நன்றி நண்பரே , இங்கே இந்தியப் பற்பசை எதுவும் கிடைப்பதில்லை......இருந்தாலும் பல் தேய்த்து முடித்த பிறகு எகிறுகளை மசாஜ் செய்வதற்கு எப்போதும் நான் உபயோகிப்பது கோபால் பற்பொடிதான்....உண்மையிலேயே என் பல் பிரச்சினைகள் தீர்ந்ததும் கோபால் பற்பொடி உபயோகித்த பிறகுதான்.....

ஆலோசனைக்கு நன்றிகள்...!

Anonymous March 11, 2009 11:30 PM  

ஸ்டைலாக பெப்ஸியை வாயில் வைத்து ஒரு சிப் குடித்து "ஃதம்" மை ஒரு பப் இழுத்து.......அப்பப்பா என்ன சுகம் !!!!!!!!!!!!! விஷத்தை விழுங்குவதைத்தான் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம்..........!

***

இதப்படிச்சவுடனே ஒரு தம் போட்டுட்டு வந்துதான் பின்னூட்டம் போடறேன்.அவ்வளவு போதை எழுத்துல.

ஆ! இதழ்கள் March 11, 2009 11:54 PM  

என்னால முடிஞ்சது ஊருக்குப் போனா அப்பப்ப ஒரு பவண்டோ ஊத்திக்குவேன். குட்சுருகீங்களா?

Newspaanai March 12, 2009 1:09 AM  

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

மதிபாலா March 12, 2009 1:25 AM  

நான் பவண்டோ குடிச்சிருக்கேன் தல...ஆனா எனக்கு ரொம்ப புடிச்சது டொரினோ தான்....

அப்புறம் நம்ம அண்ணாச்சி கடையில விக்கிற டிஞ்சர்னு சொல்வாய்ங்க........மஞ்சள் கலருல... சும்மா ஜிவ்வுன்னு ஏறும்..

அப்புறம் கோலி சோடா ,

ஜ்யோவ்ராம் சுந்தர் March 12, 2009 1:52 AM  

நல்லா எழுதியிருக்கீங்க.

/ஆமாம் அது என்ன சிமரனாஃபூ??????/

Smirnoff என்ற வோட்கா :)

மதிபாலா March 12, 2009 1:58 AM  

வருகைக்கு நன்றிகள் திரு.ஜியோவ்ராம்ஜி சேட் சாப்...!

அட நம்ம சிமரனஃபூ வோட்காவா?

அதென்னடா நமக்குத் தெரியாத சரக்குன்னு கொஞ்சம் கொழம்பிட்டேன்...

ஆமாம் ஒரு சந்தேகம்..

உங்கள மாதிரி பெருந்தலைகள் எல்லாம் நம்ம ப்ளாக்கை படிக்கிறாங்களா??????

பாத்துங்கங்கப்பா ....
நானும் பதிவர் ,
நானும் பதிவர்....
நானும் பதிவர்தான்....!!!
( நானும் ரெளடி ஸ்டைலில் படிக்கவும்)

கலையரசன் March 12, 2009 5:56 AM  

நல்ல பதிவு. இது போன்ற பதிவுகளை படிப்பவர்கள் குறைவு என்பதால் இனி வருங்காலத்திலும் சமூகம் இப்படியே மாறாமல் இருக்கப் போகிறது. இருப்பினும் விழிப்புணர்வு பெற்றவர்கள் இப்போது அளவில் குறைவாக இருந்தாலும் விரைவில் எண்ணிக்கை பெருகும் என நம்புவோம்.

கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் கோகோ கோலா குடிக்கக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுரை கூறுமளவிற்கு அதில் விஷம் இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றில் இதே கவலைகள் இருக்கின்றன. அமெரிக்க போன்ற நாடுகளிடம் பணம் இருப்பதால் பலசாலிகளாக இருக்கிறார்கள்.

தமிழர் நேசன் March 12, 2009 9:25 AM  

அருமையான பதிவு நண்பரே!

இத்துடன், இன்னும் நான் பதிக்க விரும்பும் சில செய்திகள்...

பெப்சி / கோக் போன்றோர், நமது நிலங்களின் நீரை உரிஞ்சி போத்தல்களில்
அடைத்து நம்மிடமே அநியாய விலைக்கு விற்கின்றனர். ஒரு சாதாரண தண்ணீர் போத்தலுக்கு எத்தனை பெரிய விளம்பரங்கள். அதுவும், விலைக்கட்டுப்பாடு எதுவும் இன்றி இடத்திற்கு தக்க (குறிப்பாக திரையரங்குகளில் தாகத்திற்கு தண்ணீர் விலை கேட்டல் தலை சுற்றி விடுகிறது!) விலையை உயர்த்திக் கொள்கின்றனர். இதை தடுக்க வேண்டிய அரசு இயந்திரம் எங்கு ஓரமாக நின்று கொண்டிருக்கும் என்று தெரியவில்லை. குறந்த பட்சம் தண்ணீராவது அனைவரும் வாங்கி குடிக்கும் விலையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?!

அதே போல், இவற்றை எல்லாம் நாமும் கண்டுகொள்வதாக இல்லை. இன்னும் நிறைய்ய சொல்லலாம்.. ம்ம்... நடக்கட்டும்..

deesuresh March 12, 2009 10:23 AM  

தம்ஸ் அப், லிம்கா, மாஸா , கோல்ட் ஸ்பாட், ஸிட்ரா போன்றவை நம் நாட்டு குளிர்பானங்களே..!! இவற்றுக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. நமது இந்திய பார்லே நிறுவனத்தின் பானங்கள்.கோககோலா நிறுவனம் இந்தியாவில் நுழைந்த பொழுது, பார்லே நிறுவனங்களை வாங்கியே தனது சந்தையையும், உற்பத்தித் தொழிற்சாலையையும் விரிவாக்கின. வந்ததும் கோககோலா ஒழித்துக் கட்டியது, கோல்ட் ஸ்பாட்டையும், ஸிட்ராவையும் தான். அவர்களுடைய ஃபேன்டா, ஸ்பிரைட்டை சந்தைப் படுத்த அவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் அவர்களால் தம்ஸ் அப், லிம்கா பானங்களை அது போல் ஒழிக்க இயலவில்லை. எனவே அவற்றை தங்கள் நிறுவனத்தோடு இணைத்துக் கொண்டார்கள்.

இதே போல் தான் லீவர்ஸின் ரெக்ஸோனா சோப்புக்கு கடுமையான போட்டியைக் கொடுத்துக் கொண்டிருந்தது ஹமாம். ரின் சோப்புக்கு 501, லைஃபாய் சோப்புக்கு ஓகே பாத் என்று டாடா ஆயில் நிறுவனம் கொடுத்த போட்டி கொஞ்ச நஞ்சமல்ல. லீவர் நிறுவனம் டாடா ஆயில் மில் நிறுவனத்தை வாங்கியதும், கொஞ்சம் கொஞ்சமாக 501ன் கதையை முடித்தது.ஓகே சோப்பின் நிலை காணாமல் போனது. ஹமாமை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாததால், அவர்களுடன் இணைத்துக் கொண்டனர்.
லீவரின் ஃபாண்ட்ஸ் பவுடரும் இந்திய நிறுவனமே.

மதிபாலா March 12, 2009 7:01 PM  

தமிழர் நேசன் அவர்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.....! ஆனால் அரசு இயந்திரத்தின் அத்துணை பாகங்களும் அந்நிய பெருமுதலாளிகளின் ரொட்டித்துண்டுக்கு காத்திருக்கும் போது அவர்களிடம் எதையாவது எதிர்ப்பார்ப்பவன் முட்டாள்தானே?

உடன்பிறப்பு March 12, 2009 7:24 PM  

தல! பின்னுறீங்க போங்க!!

மதிபாலா March 13, 2009 12:44 AM  

ல்ல பதிவு. இது போன்ற பதிவுகளை படிப்பவர்கள் குறைவு என்பதால் இனி வருங்காலத்திலும் சமூகம் இப்படியே மாறாமல் இருக்கப் போகிறது. இருப்பினும் விழிப்புணர்வு பெற்றவர்கள் இப்போது அளவில் குறைவாக இருந்தாலும் விரைவில் எண்ணிக்கை பெருகும் என நம்புவோம்./

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கலையரசன்..

ஆம் கண்டிப்பாக நம்புவோம்!

மதிபாலா March 13, 2009 12:47 AM  

தம்ஸ் அப், லிம்கா, மாஸா , கோல்ட் ஸ்பாட், ஸிட்ரா போன்றவை நம் நாட்டு குளிர்பானங்களே..!! இவற்றுக்கு மிகப் பெரிய சந்தை உண்டு//

ஆமாம் சுரேஷ் அண்ணே....! போட்டியிட்டு கொல்ல முடிந்த ப்ராண்ட்களை கொன்றும் , முடியாதவற்றை தம்முடன் இணைத்தும் ஒரு போட்டியில்லாத உலகத்தை படைத்துக்கொண்டன இந்தப் பெரு நிறுவனங்கள்...ஆரோக்கியமற்ற ஒரு சந்தைச் சூழலை உருவாக்கி வைத்திருக்கின்றன.

நமது மக்கள் அடையும் விழிப்புணர்வுதான் இந்த மாயலோகத்தை உடைத்து எரிய ஒரே வழி...

மதிபாலா March 13, 2009 12:48 AM  

தல! பின்னுறீங்க போங்க!!//

ரொம்ப நன்றி தல....எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்....!!!!

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி March 13, 2009 1:12 AM  

//பவன் டோ , காளி மார்க் , வின் சென் ட் , டொரினோ , சிட்ரா இவைகளெல்லாம் என்னவென்று தெரியுமா? கொஞ்சம் கடினம்தானே சட்டென்று சொல்வதற்கு...

ஆனால் கொக்ககோலா , பெப்ஸி , செவன் அப் ????? தெரியாதவன் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் கூட இருக்க மாட்டான்.//

முன்னவை லோக்கல் விஷம்.. பின்னவை ஃபாரின் விஷம்.. வேறு ஒரு வித்தியாசமும் இல்லை..

மற்ற யுலீவர் பொருட்களை பொறுத்தவரையில் தரம் இருப்பதாலேயே விற்பனை ஆவதாகத் தோன்றுகிறது. சோப்பு , துணிகளுக்கான பவுடர்களைப் பொறுத்தவரை யுனிலீவர் தயாரிப்புகள் நன்றாக இருக்கு மதி. அதே தரத்தில் இந்தியத் தயாரிப்புகள் கிடைத்தால் வாங்கத் தயார் தான். நமக்கு வேலை ஆகனும். அது உள்ளூரா இருந்தா என்ன ? அசலூரா இருந்தா என்ன?

இந்திய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை தரலாம் என்பது நியாயமானதே. ஆனால் அதில் தரம் இருக்க வேண்டும் என நுகர்வோர் எண்ணுவதும் நியாயம் தானே. இங்கே தரம் இருந்தால் ஏன் அயல்நாட்டு மோகம் இருக்கப் போகிறது?

எல்லாம் சரி தான் அண்ணாத்த.. தாங்கள் இந்தியாவிலா வேலை பார்க்கிறீர்கள்? :))
உங்கள் உழைப்பு இந்தியாவிற்கு மட்டுமா பயன்படுகிறது? :)

மதிபாலா March 13, 2009 2:01 AM  

கருத்துக்கு நன்றிகள் சஞ்சய் அண்ணே....

ஆனால் நெறைய இந்தியப்பொருட்கள் தரமா இருந்தாலுமே அந்நியப் பொருட்களோட போட்டி போட முடியறதில்லையே? உதாரணத்துக்கு நம்ம டீ.சுரேஷ் சொன்ன மாதிரி லிம்கா , தம்ஸ் அப் போன்றவைகளை கோக்ககோலா வாங்கி விற்குதே தரமில்லாததாலா????

நம்ம வேலையைப் பத்தி கேக்குறீங்க..நல்லதுதான்....நான் இந்தியப்பொருளை இந்தோனேசியாவுல விற்குற ஒரு கம்பெனியில் வேலை பாக்குறேன்...ஆனால் அதுக்கும் இப்ப நாம சொல்ற மேட்டருக்கும் என்ன சம்பந்தம் தல?

ttpian March 13, 2009 5:54 AM  

WE ARE PROUD THAT WE HAVE A HERBAL TOOTHPASTE UNDER THE BRAND cans(COMPREHENSIVE ADVANCED NATURAL SYSTEM):WE HAVE BEEN MARKETING THE PRODUCT AND IT HAS BEEN WELL ACCEPTED:ONLY THING OUR SALES IS VERY LESS; SO WHAT WE HAVE A COMFORTABLE EARNING!
WE ARE ALL tAMIL PEOPLE:WE WILL FIGHT AND REMAIN IN THIS WORLD!

ttpian March 13, 2009 5:54 AM  

WE ARE PROUD THAT WE HAVE A HERBAL TOOTHPASTE UNDER THE BRAND cans(COMPREHENSIVE ADVANCED NATURAL SYSTEM):WE HAVE BEEN MARKETING THE PRODUCT AND IT HAS BEEN WELL ACCEPTED:ONLY THING OUR SALES IS VERY LESS; SO WHAT WE HAVE A COMFORTABLE EARNING!
WE ARE ALL tAMIL PEOPLE:WE WILL FIGHT AND REMAIN IN THIS WORLD!

மணிகண்டன் March 13, 2009 1:21 PM  

தீவிர வலது சாரி கொள்கைகளும், தீவிர இடது சாரி கொள்கைகளும் ஒண்ணா சேரும் எடம் இது தாங்க.

ஆனா, உண்மையிலயே நீங்க சொல்லி இருக்கறது யோசிக்க வேண்டியது. ப்ரீ மார்க்கெட், ப்ரீ மார்க்கெட்ன்னு தான் ஓடி கிட்டு இருக்கு கொள்கைகள். ஆனாலும் இன்னும் ஒரு 10, 15 வருஷத்துல இந்திய கம்பெனிகள் டாமினேட் பண்ணும்ன்னு தான் நினைக்கறேன். பாக்கலாம்.

மதிபாலா March 13, 2009 8:03 PM  

நண்பர் டிடிபியான். தரமான பொருட்களுக்கு கூடுதல் பலமாக போதுமான விளம்பரங்களும் இருந்தால் சர்வ நிச்சயமாக உங்கள் பொருள் வெற்றியடையும்....!!!!

மார்க்கெட்டிங்கிற்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..நன்றி..

***

இந்தியப்பொருட்கள் ஆதிக்கம் செலுத்தப்போகிறதா இல்லையா என்பது இந்திய நுகர்வோர்களின் கையிதான் இருக்கிறது நண்பர் மணிகண்டன்...!

TRUE PATRIOT March 14, 2009 1:50 AM  

Friends,


This is something touches my heart, we must follow it,
---------------------------------------

U CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING FEW SIMPLE STEPS.


I got this article from one of my friend, but it's true, I can see this from day to day life,

Small example,
Before 9 months 1 Euro € = IND Rs 57
Now, 1 Euro € = IND Rs 65

Do you think Canadian Economy is booming? No, but Indian Economy is Going Down.

Our Economy is in u'r hands

INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.


More than 30000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages... . etc which are grown, produced and consumed here .

A cold drink that costs only 70 / 80 paisa to produce is sold for NINE rupees, and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on INDIAN economy.

"COCA COLA "and" SPRITE" belong to the same multinational company, "COCA COLA"?

Coke advertisements says ' JO CHAHO HOJAYE, COCACOLA ENJOY'

(Whatever the hell, let it happen, you drink coke) What can you do?


You can consider some of the better alternatives to aerated drinks.
You can drink LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JALJEERA, ENERJEE, MASALA MILK........ . ..

Everyone deserves a healthy drink, including you!
Over and above all this, economic sanctions have been imposed on us. We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use INDIAN products only for next two years. With the rise in petrol prices, if we do not do this, the rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.


What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.


Each individual should become a leader for this awareness.

This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.

LIST OF PRODUCTS

BATHING SOAP: USE - CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

INSTEAD OF - LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE: USE - NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK

INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.





TOOTH BRUSH: USE - PRUDENT, AJANTA , PROMISE

INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM: USE - GODREJ, EMANI

INSTEAD OF - PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE: USE - SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

INSTEAD OF - SEVEN-O -CLOCK, 365, GILLETTE


TALCUM POWDER: USE - SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS


INSTEAD OF - PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER: USE - INDIANA, AMUL, AMULYA

INSTEAD OF - ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO: USE - LAKME, NIRMA, VELVET INSTEAD OF - HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

MOBILE CONNECTIONS USE - BSNL, AIRTEL INSTEAD OF - HUTCH

Every INDIAN product you buy makes a big difference. It saves INDIA . Let us take a firm decision today.


BUY INDIAN TO BE INDIAN we are not against of foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL.

WE ARE TRYING TO SAVE OUR NATION.. EVERY DAY IS A STRUGGLE FOR A REAL FREEDOM.

WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY. THE CURRENT TREND IS VERY THREATENING.


MULTINATIONALS CALL IT GLOBALISATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME IT IS RECOLONISATION OF INDIA ...

THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.


WHO WOULD LIKE TO LET A" GOOSE THAT LAYS GOLDEN EGGS" SLIP AWAY.

PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE .


RUSSIA , S.KOREA , MEXICO .........THE LIST IS VERY LONG!!
LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY.


LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.


FINALLY: IT'S OBVIOUS THAT U CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE,


SO GIVE UP AT LEAST ONE ITEM TO FOR THE SAKE OF OUR COUNTRY.

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP