என் அடையாளத்தை அசிங்கப்படுத்தும் இந்தியா..!!
Wednesday, May 27, 2009
வடநாட்டில் நான் மதராஸி.
வெளிநாட்டில் நான் இந்தியன். இந்தியா தாண்டி வெளியே எங்குமே எனது அடையாளம் இந்தியன் என்பதே. அதாவது மற்றவர்கள் உங்களைக் காணும் போது விளிக்கும் அடையாளம் இந்தியன் என்பது.
ஆனால் , வெறும் 50 - 60 ஆண்டுகளாகத் தான் நான் இந்தியன் ...
அதற்கு முன்பு..??
பல நூற்றாண்டுகளாக என் அடையாளம் , எனது தாத்தாவின் , பாட்டனின் , முப்பாட்டனின் , கொப்பாட்டனின் அடையாளம் தமிழன்.
ஆக பரம்பரை அடையாளம் தமிழன்....!!!
இந்தியா என் தாய்நாடு.
இந்திய அரசு எனது அரசாங்கம்.
ஆனால் என் தாய்நாடு நான் சார்ந்த இனத்தை , நான் பேசும் மொழி பேசும் கூட்டத்தை , என் பரம்பரையை அவமானப் படுத்துகிற போது என் அடையாளம் அசிங்கப்படுத்தப் படுவது போலவே உணர்கிறேன்.
எங்கோ இருக்கும் சீனாவோ , ஈரானோ , க்யூபாவோ இலங்கையை மனித உரிமை மீறல்களுக்கான ஐ.நாவின் விவாதத்தில் ஆதரிக்கும் போது எழாத வலி எனக்கு இந்தியா , எனது தாய்நாடு , எனது வெளியுலக அடையாளத்தை தந்த இந்தியா ஆதரிக்கும்போது எழுகிறது.
இந்தச் செய்தியைப் படியுங்கள்......
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அவசியமில்லை : இந்தியா
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதலை தற்போது இலங்கை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், அங்கு அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தையும் ஒற்றுமை உணர்வும் ஏற்படடும் வகையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சர்வதேச சமூகத்தின் செயலாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இப்படியாக ஒரு சிறப்பு அமர்வை திணிப்பதன் மூலம், சில உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செய்யக் கூடியப் பணிகளை அரசியலாக்கி விட்டார்கள் என்றும் இந்தியத் தூதர் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கான தற்போதைய தேவை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த உரிமை கூட தமிழினத்திற்கு மறுக்கப்படுவது என்ன நியாயம் ? இந்தியாவின் மக்கள் தொகையில் 7 முதல் 8 சதம் இருக்கும் ஒரு பகுதியினரின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதது அந்த இனத்தானின் தவறா இல்லை அரசாங்கத்தின் தவறா?
சீக்கியர்களின் தலைப்பாகைக்கும் , சீக்கியர்க்களுக்கு விதிக்கப்பட்ட வரியினைப் பற்றியும் சீக்கியர்கள் இரண்டு பேர் செத்ததுக்கு அங்க்லாய்க்கிற எமது பிரதம அமைச்சர் , இங்கே தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்த போதும் அதைப் பற்றி வாயே திறக்கவில்லையே , இது என்ன ஒரு தலைப்பட்சம். ?
யூத இனம் அணியணியாகப் படுகொலை செய்யப்பட்ட போதும் செத்துப் போய்விட்டிருந்த ஹிட்லர் மேல் நடத்தியிருந்த விசாரணைகள் போன்றதொரு விசாரணை மட்டுமே தேவையென கேட்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்ற உயரிய அரசியல் காப்புடன் ஒரு அரசாங்கத்தை நடத்தக் கூடிய எனது அரசாங்கம் , எனது தாய்நாட்டு அரசாங்கம் இன்று எனது எதிரியுடன் , எனது இனத்தைக் கொன்றழித்த ஒரு இனத்துடன் உறவு கொண்டாடுகிறது.
அப்படியானால் ????
என்னை அசிங்கப்படுத்துகிறது எனது இந்தியா ...!
எனது அடையாளத்தை அசிங்கப்படுத்துகிறது எனது இந்தியா...!
எனது உணர்வுகளை மதிக்கவில்லை எனது இந்தியா ....!
எனது இனத்தானின் நியாயத்தை மதிக்க வில்லை இந்த இந்தியா....!
இப்போது இந்தியாவிடம் அவமானப் பட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்ய இயலும் ? நாம் என்ன செய்ய வேண்டும் ?
'‘.
39 பின்னூட்டங்கள்:
//இப்போது நான் செய்ய வேண்டும் ?
இப்போது நான் என்ன செய்ய முடியும்?
இப்போது இந்தியாவிடம் அவமானப் பட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்ய இயலும் ?//
இந்த "எனது இந்தியா" எண்ணத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். "அது எனதல்ல" என்னும் எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
பிறகு, //வெறும் 50 - 60 ஆண்டுகளாகத் தான் நான் இந்தியன்..// இதனை சந்தர்ப்பம் கிடைக்கும் ஒவ்வொரு இடத்திலும் உரக்கச் சொல்ல வேண்டும். குறிப்பாக எங்கெல்லாம் ஒரே அடையாளத்தில் நம்மை பொதுப்படுத்த முனைகின்றார்களொ.. அங்கெல்லாம்...
இதான் சார் நம் தமிழனுக்குள்ள முக்கிய குறை. அதாவது நத்தை தன ஓட்டுக்குள் சுருங்கிகொள்வது போன்ற குணம்.
இதனால் தான் தமிழனுக்கு எங்கு சென்றாலும் பிரச்சனை. அதுவும் நாமே உருவாக்கிக்கொள்வது.
அடுத்து உங்களை போன்ற சிலர் ஆம் சிலர்தான் தமிழகத்தையும் இலங்கை போன்று யுத்த பூமியாக்காமல் ஓய மாட்டீர்கள் போலிருக்கிறதே. பக்கத்து வீட்டில் பிரச்சனை என்றால் அனுதாபடலாம், ஓரளவு உதவலாம், அதற்காக நம் வீட்டையும் கொளுத்திக்கொல்வேன் என்பது சரியா.
//இப்போது நான் செய்ய வேண்டும் ?
'தமிழ் இனத்தின்' குரலை மத்தியில் உள்ளவர்களுக்கு "கேட்க்கும்" வகையில் சொல்ல தெரிந்த ஒரு தலைவனை கண்டுபிடி.
வாய கோணையா வச்சிக்கிட்டு அடிக்குரல்ல பேசுரவந்தான் தமிழன் நாம நினைகிரவரைக்கும், ஒன்னும் ஆக போறதில்ல.
நன்றி நண்பர் பதி..
கருத்துக்கும் , வருகைக்கும்...!
****
அடுத்து உங்களை போன்ற சிலர் ஆம் சிலர்தான் தமிழகத்தையும் இலங்கை போன்று யுத்த பூமியாக்காமல் ஓய மாட்டீர்கள் போலிருக்கிறதே//
நமக்கு பிடிக்காத அல்லது நாம் விரும்பாத வற்றை நமது நாடு செய்யும் போது கூட சும்மா இருந்து சுகம் காணலாம் என்கிறீர்களா நண்பர் ராஜாராமன்?
சரி , ஏன் மொழிவாரி மாகாணங்கள் இந்தியாவில் பிரிக்கப்பட்டன.?
ஏன் உலகப் போர் இரண்டு நடைபெற்றது ?
ஏன் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்று கோரினோம்?
ஏன் இலங்கை ஒன்றுபட்ட நாடாகத்தான் இருக்க வேண்டும் என்று சிறிலங்கா விரும்புகிறது?
ஏன் இசுரேல் என்ற நாடு ஒன்று உருவானது ?
ஏன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்?
ஏன் இண்டிராப் பின் போராட்டம் உருப்பெற்றது?
ஏன் திராவிட இயக்கங்கள் உருவாகின?
?????
*************
'தமிழ் இனத்தின்' குரலை மத்தியில் உள்ளவர்களுக்கு "கேட்க்கும்" வகையில் சொல்ல தெரிந்த ஒரு தலைவனை கண்டுபிடி. ./
தலைவர்கள் நிறைய இருக்கிறார்கள்..........தொண்டர்களும் கூடவே....!!!!
ஆனால் ஏன் நம் உணர்வு டெல்லிக்கு எட்டவில்லை?
கருத்துக்களை பதிந்த நண்பர் ராஜாராமன் அவர்களுக்கும் , அஹோரி அவர்களுக்கும் நன்றிகள் பல.
காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்குப் பல காரணிகள் இருக்கிறது.ஆனால் மீண்டும் மீண்டும் தவறான வெளியுறவுக் கொள்கையையே இந்தியா முன்வைக்கிறது:(
ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் முதல் முறையாக நேற்று இடம்பெற்ற இலங்கை குறித்த விசேட அமர்வை இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வலுவான ஆதரவுடன் இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.
மேலும் இலங்கை தொடர்பான ஐரோப் பிய ஒன்றியத்தின் பிரேரணையை எதிர் கொள்ளும் விதத்தில் இலங்கை அரசு தனது பிரேரணையொன்றையும் அங்கு முன்வைத்துள்ளது.இதேவேளை, ஜெனிவாவில் இடம்பெற்ற ஆரம்பக் கட்டக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவு தரும் விதத் தில் மேற்படி இந்த அமர்வு கைவிடப்பட வேண்டுமென கோரியுள்ளன.
இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா ஆரம்ப கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
http://ravananthesam.blogspot.com/2009/05/blog-post_27.html
காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்குப் பல காரணிகள் இருக்கிறது.ஆனால் மீண்டும் மீண்டும் தவறான வெளியுறவுக் கொள்கையையே இந்தியா முன்வைக்கிறது:(
//
காங்கிரசின் தேர்தல் வெற்றியையும் , ஈழப்பிரச்சினையையும் ஒன்று சேர்த்து குழப்பிய அரைகுறை தமிழக அரசியல்வாதிகளினால் வந்த சொதப்பல் அது.......!
இன்று தமிழகத்தின் 27 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இன்றியே கூட காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும்.
இந்திய காங்கிரஸூக்கு எப்பொழுதும் வெளியுறவு கொள்கை என்பதே கிடையாது. காசு கொடுத்து சாதிப்பது கூட நடக்கும். இத்தாலி காங்கிரஸ் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும்.
\\இன்று தமிழகத்தின் 27 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இன்றியே கூட காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும்.//
மதிபாலா சார், தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது என்று படித்ததாக ஞாபகம்.
//..தலைவர்கள் நிறைய இருக்கிறார்கள்..........தொண்டர்களும் கூடவே....!!!!//
தம்பி வணக்கம்! யதார்த்தத்துக்கு வருவமா? இத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணம் தலைவர்கள் நிறைய இருக்குறதுதான காரணம்?
இனத்துக்கு தீ குளிச்சது சரி! அவங்களுக்கு வீர வணக்கம்!!
தலைவனுக்கும், நடிகனுக்கும், அதுக்கும், இதுக்கும்ன்னு எதுக்கும் தீ குளிக்கிறதால, இனத்துக்கு தீ குளிச்சவனோட தியாகத்தோட உன்னதம் நீர்த்துப்போனதுதான நெசம்??
ரெண்டு அல்லது மூனு தலைவருக போதும்யா நமக்கு!
இந்திய காங்கிரஸூக்கு எப்பொழுதும் வெளியுறவு கொள்கை என்பதே கிடையாது. காசு கொடுத்து சாதிப்பது கூட நடக்கும். இத்தாலி காங்கிரஸ் இருக்கும் வரை இப்படிதான் இருக்கும்.//
இத்தாலி காங்கிரசுக்கு முன்னாடி இருந்த ராஜிவ் காந்தி காங்கிரஸ் மட்டும் என்ன செஞ்சது நண்பரே .
நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்..!
****
மதிபாலா சார், தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது என்று படித்ததாக ஞாபகம்./
ராஜாராமன் சார் , நன்றி - நான் சொன்னது இப்போது தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களை மட்டுமே.
பதவிக்காக சோரம் போன தலைவர்களும் சுயநல வாத மக்களும் இருக்கும் வரை நாம் நம்முடைய அடையாளங்களை தொலைத்து தான் இருக்க முடியும் .
நன்றி பழமைபேசி அண்ணே.
என்ன தம்பியா ஏத்துகிட்டதுக்கு மொத நன்றி.
உங்கள மாதிரி பெரியவுக எல்லாம் பின்னூட்டம் போடறதுக்கு இன்னோரு நன்றி.!
ஒரளவுக்கு உங்க கருத்தோட ஒத்துப் போறேன். தலைவர்கள் நெறைய இருக்கப்போயிதான் அக்கப்போரா போச்சு.
ஒவ்வொருத்தன் ஒவ்வொரு திசைக்கு இழுத்து , தானும் கொழம்பி மக்களையும் கொழப்பறான்.
அப்புறம் யதார்த்தம் என்கிற பதார்த்தம் எந்தக் கடையில கிடைக்கும் அண்ணே?
பதவிக்காக சோரம் போன தலைவர்களும் சுயநல வாத மக்களும் இருக்கும் வரை நாம் நம்முடைய அடையாளங்களை தொலைத்து தான் இருக்க முடியும் ./
நன்றி சுரேஷ் குமார் அண்ணே. தவறு யார் மீது என்று ஆராயப் போனால் அந்த ஆராய்ச்சியின் முடிவு பெரியார் சொன்னது போல வெங்காயம் தான். உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது.
இளைஞர் சக்தி திரள வேண்டும்.
//இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அவசியமில்லை : இந்தியா//
இதை பத்தி படிச்ச உடனே வயிறு எரியுதுங்க...
நானும் இப்பதான் இதை பத்தி பதிவு போட்டு வாரேன்..
தமிழர்களின் காட்டு கூப்பாடு ஏன் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை..
இந்த அளவுக்கு தமிழனை ஏன் உதாசீன படுத்த வேண்டும்....
"என் அடையாளத்தை அசிங்கப்படுத்தும் இந்தியா..!!"//
தவறு, நம்மை நாம் அசிங்கப்படுத்திக் கொண்டதால் இந்தியா நம்மை உதாசினப்படுத்துகிறது.
பதிவு முழுவதும் அப்படியே வழிமொழிகிறேன்
//பதி May 27, 2009 2:12 AM
//இப்போது நான் செய்ய வேண்டும் ?
இப்போது நான் என்ன செய்ய முடியும்?
இப்போது இந்தியாவிடம் அவமானப் பட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்ய இயலும் ?//
இந்த "எனது இந்தியா" எண்ணத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். "அது எனதல்ல" என்னும் எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
பிறகு, //வெறும் 50 - 60 ஆண்டுகளாகத் தான் நான் இந்தியன்..// இதனை சந்தர்ப்பம் கிடைக்கும் ஒவ்வொரு இடத்திலும் உரக்கச் சொல்ல வேண்டும். குறிப்பாக எங்கெல்லாம் ஒரே அடையாளத்தில் நம்மை பொதுப்படுத்த முனைகின்றார்களொ.. அங்கெல்லாம்...
//
எனது கருத்தும் இதுதான்
இந்தியன்கிறது வெள்ளைகாரனால் கிடைத்த பிட்சை.
தமிழன்கிறது பிறப்புரிமை...
நான் பிட்சைக்காரனல்ல.
காட்டிகொடுத்து பதவி.ம் ம்:
மாமா வேலை..ம்ம்....
செறுப்பை கழட்டி அடிச்சானுங்க சரி இப்ப சாணியையும் கறச்சி இல்லை அடிக்கறானுங்க...
என்ன செய்ய
அவமானத்தை துடைக்க ஒரே வழி , இலங்கைக்கு துப்பாக்கியுடன் கள்ளதோணியில் செல்வதுதான் ,
முயலுங்கள் , தலைமை ஏற்க வேறு ஆள் இல்லையாம்
// இங்கே தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்த போதும் அதைப் பற்றி வாயே திறக்கவில்லையே , இது என்ன ஒரு தலைப்பட்சம். ?//
என்னங்க நீங்க?
யார் இந்த முத்துகுமரன்? கேட்டது தமிழக காங்கிரஸின் பழைய தலைவர் தமிழன் இளங்கோவன்.
அப்படி இருக்க சிங்குக்கு என்னா வலி தெரியும்? அவன் என்னா கேட்கனும்! பஞ்சாப் மாறி பற்றி எறிந்ததா தமிழகம்? இல்லீயே அங்கு எந்த சிங்கும் தீக்குளிக்கவில்லை கொளுத்துறானுங்க அடின்னா அப்படி அடிக்கனும் சும்மா நாம சாவதில் அர்த்தம் இல்லீங்க!
நல்ல பிரதமர் நல்ல நாடு! அதுல நாம ஒரு அங்கம்! வெட்கமாக இருக்கிறது.
அய்யா ,
உங்கள் பதிவு சூப்பர் .
நீங்கள் சொல்வது போல 50-60 அல்லது 100 ஆண்டுகள் முன்பு நம்முடைய அடையாளம் தமிழன் அல்ல , வேளாளர் , பள்ளி ,தேவர், நாடார், வன்னியன் போல சாதிகள்தான். ஆக தமிழன் என்ற அடையாளமும் 100 - 150 ஆண்டுகளாகத்தான்.
சுமார் 50 ஆண்டுகள் தமிழ், தமிழன் , தமிழ் வீரம் என்று பேசி ஆனால் ஈழ பிரச்சினைக்கு துரும்பையும் கிள்ளி போடாத திராவிட அரசியல்வாதிகளை தொடர்ந்து மக்களவைக்கு அனுப்பும் தமிழர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
இன்னொன்றும் சொல்ல வேண்டும், இந்திய என்ற நாடும் , அதன் தலைவரும் அந்த நாட்டின் ஆதரவும் , அந்த நாட்டில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தின் ஆதரவும் தேவையா இல்லையா என்ற கேள்வியை கேட்டு இருக்காமல் பிரபாகரன் ராஜீவ் கொலையை அனுமதித்து இருக்க மாட்டார், எனவே நம்முடைய ஆதரவு தேவை இல்லை என்று சொல்பவருடன் நாம் என்னதான் ஒத்துபோக முயற்சித்தாலும் அது எங்களுக்கு தேவை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்களே சொல்லும்போது இந்தியா எந்த நிலை எடுத்தால் என்ன?
இப்போதைக்கு நாம் இந்தியா மூலமாக நிவாரண பொருட்கள் அனுப்பவதில்தான் மும்முரம் காட்ட வேண்டுமே தவிர மற்ற எந்த அரசியல் உதவியையும் அல்ல , காரணம் மிகவும் எளிமையானது அதை ஈழ மக்கள் விரும்பவில்லை.
மதிபாலா,
நாம் இந்தியனாக மாற்றப்பட்டது,ஒரு
ஆரோக்கியமான அரசாங்கத்திற்காக.
எந்த இனத்திற்கும், அதனதன் தனித்துவம் பேனப்பட
வேண்டிய ஒன்று.
இந்தியனுக்கு என்று கலாச்சாரம்,பண்பாடு உண்டா?கண்டிப்பாய்
இல்லை.நம் சட்டத்தில் அனைத்து இனங்களுக்கான ஒரு
பாதுகாப்பும்,உரிமையையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
ஆகையால் நாம் "தமிழன்" என்ற பெருமிதத்துடன் வாழலாம்.
ஆனால் நம்முடைய "கேடு கெட்ட ஊடகங்கள்" அனைத்து
இனத்தின் தனித்தன்மையை உடைத்து "இந்தியனாக்க" பார்க்கின்றன.
குறிப்பாக "NDTV,IBN,TOI,The Hindu,Deccan,IE,SUN TV & CRICKET"
அதனால் நம் குழந்தைகளை தமிழனாக வளர்த்தாலே போதும்.
"இந்தியன்" என்று வெளிநாட்டுக்கு வேலைக்கு போக மட்டும்
கூறிக்கொள்ளலாம்.
//இப்போது நான் செய்ய வேண்டும் ?
இப்போது நான் என்ன செய்ய முடியும்?
இப்போது இந்தியாவிடம் அவமானப் பட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்ய இயலும் ?//
பணத்திற்காகவும்,பிரியாணிக்காகவும் விற்ற தன்மானத்தையும் அறிவையும் திரும்ப பெற்றால் ஒழிய வேறு வாய்ப்பில்லை
//இப்போது நான் செய்ய வேண்டும் ?
இப்போது நான் என்ன செய்ய முடியும்?
இப்போது இந்தியாவிடம் அவமானப் பட்ட தமிழர்களாகிய நாம் என்ன செய்ய இயலும் ?//
நாமும் தனி நாடு கேட்டு போரட வேண்டியதுதான். வேறு வழியே இல்லை.
ரஷ்யாவைப் போல் கூடிய சீக்கிரம் இந்தியாவும் பிளவு பட்டால் மிகவும் நன்றாக் இருக்கும்.
தமிழ் மக்களாகிய நாம் கொடுக்கும் வரிப் பணம் மட்டும் இந்திய அரசுக்கு வேண்டும், ஆனால் நம்முடைய நியாயமான கோரிக்கைகள் கூட மத்திய அரசு கேட்காது.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பர்களே.
இதை பத்தி படிச்ச உடனே வயிறு எரியுதுங்க.../
ஆம் நண்பர் கண்ணா , என் வயிறும் தான்.!
***
தவறு, நம்மை நாம் அசிங்கப்படுத்திக் கொண்டதால் இந்தியா நம்மை உதாசினப்படுத்துகிறது./
நன்றி நண்பர் ஆ இதழ்கள். சரியாகப் புரியவில்லை. இந்தியாவின் ஒரு பகுதியான நமக்கு இந்தியாவின் உதாசீனம் அசிங்கமில்லையா?
****
பதிவு முழுவதும் அப்படியே வழிமொழிகிறேன்//
நன்றி அய்யா டி.வி.ஆர்.
****
தமிழன்கிறது பிறப்புரிமை...
நான் பிட்சைக்காரனல்ல./
நன்றி நண்பர் பித்தன். சிந்திக்கதூண்டும் வாக்கியக் கோர்வை
***
காட்டிகொடுத்து பதவி.ம் ம்:
மாமா வேலை..ம்ம்....//
நன்றி நண்பர் டிடிபியான்.
****
செறுப்பை கழட்டி அடிச்சானுங்க சரி இப்ப சாணியையும் கறச்சி இல்லை அடிக்கறானுங்க...
என்ன செய்ய/
அப்பவும் தாங்குறோமே ? அதானே வேதனை? இதோ இந்த நிகழ்வு கூட யாரை எட்டியிருக்கும் ? வெகு சொற்ப மக்களுக்கே.
****
அவமானத்தை துடைக்க ஒரே வழி , இலங்கைக்கு துப்பாக்கியுடன் கள்ளதோணியில் செல்வதுதான் ,
முயலுங்கள் , தலைமை ஏற்க வேறு ஆள் இல்லையாம்//
நன்றி மதி இண்டாய் , கூட வர்றீங்களா இல்லை எப்படி?
***
நல்ல பிரதமர் நல்ல நாடு! அதுல நாம ஒரு அங்கம்! வெட்கமாக இருக்கிறது.//
நன்றி நண்பர் குசும்பன். ஆம் வெட்கமாகத் தான் இருக்கிறது எனக்கும்..
****
தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்!//
நன்றி நண்பர் சிறுத்தை. ஆழமாக சிந்தனையைக் கிளப்புகிறது உங்கள் பின்னூட்டம்.
எனக்கும் ஆரிய - திராவிடச் சண்டையின் அடுத்த வடிவமே இந்தப் போராட்டம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
****
நீங்கள் சொல்வது போல 50-60 அல்லது 100 ஆண்டுகள் முன்பு நம்முடைய அடையாளம் தமிழன் அல்ல , வேளாளர் , பள்ளி ,தேவர், நாடார், வன்னியன் போல சாதிகள்தான். ஆக தமிழன் என்ற அடையாளமும் 100 - 150 ஆண்டுகளாகத்தான்.//
நன்றி நண்பர் கோகுல். அவை நமது உட்பிரிவுகள். தமிழகத்திற்குள் நமது அடையாளங்கள். தமிழன் என்ற அடையாளம் போற்றுதலுக்கு உரியது. ஆனால் சாதி என்ற அடையாளம் சிறுமையானது. நாம் நமக்கு பெருமை தரும் அடையாளம் பற்றி பேசுகிறோம். மாற்றாக நீங்கள் நாம் வெட்கப்படவேண்டிய அடையாளம் பற்றி பேசுகிறீர்கள்.
இது வேறு , அது வேறு.
மலேசியத் தமிழர்கள் , ஈழத்தமிழர்கள் , தமிழகத் தமிழர்கள் என்றுதான் அடையாளம் காண்கிறோமே தவிர சாதியையொட்டி அல்ல.
****
இப்போதைக்கு நாம் இந்தியா மூலமாக நிவாரண பொருட்கள் அனுப்பவதில்தான் மும்முரம் காட்ட வேண்டுமே தவிர மற்ற எந்த அரசியல் உதவியையும் அல்ல , காரணம் மிகவும் எளிமையானது அதை ஈழ மக்கள் விரும்பவில்லை./
அப்படியா ? உங்கள் கருத்தாக வேண்டுமானால் அதுவாக இருக்கலாம். ஆனால் ஈழ மக்களின் கருத்து அதுவல்ல என்றே நான் நினைக்கிறேன்.
இந்தியாவின் இந்த நிலை கண்டு அனைவரும் வேதனையுடன் மனம் புழுங்குவதாகவே கேள்வி.!
****
அதனால் நம் குழந்தைகளை தமிழனாக வளர்த்தாலே போதும்.
"இந்தியன்" என்று வெளிநாட்டுக்கு வேலைக்கு போக மட்டும்
கூறிக்கொள்ளலாம்..//
நன்றி நண்பர் எண்ணத்துப்பூச்சி , நீங்கள் சொல்வதை வழிமொழிகிறேன். ஆனால் மேற்கண்ட இந்தியாவின் நிலைகளைப் பற்றி நாம் கவனம் செலுத்துவதே தவறா ? கவனம் செலுத்தவே வேண்டாமா?
****
பணத்திற்காகவும்,பிரியாணிக்காகவும் விற்ற தன்மானத்தையும் அறிவையும் திரும்ப பெற்றால் ஒழிய வேறு வாய்ப்பில்லை//
காலம் காலமாக தமிழன் தன்மானம் , சுயமரியாதை புத்தகத்தில் மட்டுமே பேசிக் கொண்டு சும்மா இருந்து விட்டான். இப்போது அதன் அர்த்தம் கூட மறந்துவிட்டது. நன்றிகள் வருகைக்கும் , கருத்துக்கும் நண்பர் நெருப்பு.
****
நாமும் தனி நாடு கேட்டு போரட வேண்டியதுதான். வேறு வழியே இல்லை.
ரஷ்யாவைப் போல் கூடிய சீக்கிரம் இந்தியாவும் பிளவு பட்டால் மிகவும் நன்றாக் இருக்கும்.//
நன்றி நண்பர் சரவணன். அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதாலும் , உணர்ச்சி மிகுதிப்பட்டு தற்போதைக்கு சாத்தியமில்லாதவற்றையும் , தேவையற்றதையும் பேசுவதால் லாபம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ இதற்காகத்தான் ஈழப்போராட்டத்தை ஒடுக்கினோம் என்று காரணம் சொல்ல இந்திய தேசியவாதிகளுக்கு நல்ல காரணம் கிடைத்துவிடும்.
யோசியுங்கள் , உண்மை புரியும்.
****
தமிழ் மக்களாகிய நாம் கொடுக்கும் வரிப் பணம் மட்டும் இந்திய அரசுக்கு வேண்டும், ஆனால் நம்முடைய நியாயமான கோரிக்கைகள் கூட மத்திய அரசு கேட்காது.//
இது நியாயமான ஆதங்கம். நமது நியாயமான கோரிக்கைகள் டெல்லியை எட்ட என்ன வழி என்று நாம் யோசிக்க வேண்டும்.
" நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் "
எல்லாம் இந்த தமிழ் பேசும் ஆரியர்களால் வந்த வினை. இவர்களால் தான் தமிழர்களூக்கிடையே ஒற்றுமை இல்லாமல் போகின்றது. பத்திரிக்கை உலகை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியலை. முதலில் இவர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
திராவிட கட்சிகளால் தமிழ் நாட்டில் ஆரியர்கள் பாதிக்கபட்டதாக நினைக்கின்றனர். அப்படி பட்டவர்களால் எப்படி தமிழனுக்கு தனி நாடு அடைவதை ஜிரனிக்க முடியும.
உங்கள் முழுக்கருத்தையும் நான் அப்படியே என்கருத்தாக வழி மொழிகின்றேன்.
//இப்போது நான் செய்ய வேண்டும் ?//
நாம் பொருளாதாரத்தில் வலிமைபெற வேண்டும். நம்மைச் சார்ந்தவர்களையும் தமிழர்களையும் பொருளாதாரத்தில் கைதூக்கிவிட வேண்டும்.
கல்வியில் நம் நிலையை உயர்த்த வேண்டும்.
முடிவெடுக்கும் சக்தியாக நாம் மாறவேண்டும்.
made in THAMIZH NADU என்பது வரவேண்டும்.
தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறவேண்டும்.
ஒரு 25 ஆண்டுகள் இதை நோக்கி நம்முடைய ஒவ்வொரு நகர்வும் ஒரு தவமாக ஒரு கடுந்தவமாகவே இருக்க வேண்டும்.
இணைந்து செயல்பட வேண்டும்.
தவறாக நினைக்க வேண்டாம். முஸ்லிம் சகோதரர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் வறுமையில் இருக்கும் வேறு முஸ்லிம் நண்பர்களுக்குச் செலவு செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
அதுபோல ஒருவருக்கொருவர் பொருளாதாரத்தில் உயர உயர்த்த உதவ வேண்டும்.
நான் என்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கின்றேன்.
இணைந்து இணைந்து இணைந்து செயல்படவேண்டும்.
இளங்குமரன் அவர்கள் சொல்வதை நானும் பின்பற்றி என்னால் முடிந்த அளவு செயல்படுவேன்.
//
நன்றி மதிபாலா உங்களுடைய பதிலுக்கு.
உணர்ச்சி வசப்பட்டு என் வார்த்தைகளை எழுதிவிட்டேன்.
துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்
அய்யா, கடந்த பத்து வருடங்களாக தமிழக அரசியல்வாதிகள் டெல்லியில் பெரும் செல்வாக்கோடு இருப்பதை நீங்கள் உணர முடியும். கடந்த 2004 - 2009 மத்திய அரசில் தமிழகத்தின் சார்பாக அமைச்சராக இருந்தவர் எண்ணிக்கை 12. அதிலும் உச்சகட்டமாக மிக முக்கிய துறைகளான அதாவது கட்டமைப்பை சார்ந்த துறைகளான Telecom,Road Transport மற்றும் மிகமுக்கிய துறைகளான நிதி மற்றும் உள்துறை ஆகியவை தமிழர்களிடம் இருந்த இப்போதும் சில துறைகள் இருக்கின்றன.
வேறு எந்த ஹிந்தி பேசாத மாநிலத்திற்கும் இவ்வளவு முக்கியத்துவம் இல்லை (அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ வாக்களித்த absolute mejority கிடைக்க செய்த 39 தொகுதிகளும் தேர்தல் எம்.பி.எண்ணிக்கை விளையாட்டுகளும் காரணம் என்றாலும் கூட ).
இப்போது கூட ஒரிசா , சட்டிஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களின் ஒப்பிடுகையில் தமிழகம் மத்திய அரசில் எவ்வளவோ அதிகமாக பெற்று இருக்கிறது, பெறப்போகின்றது.
இப்படி இருக்கையில் கிடைத்த அதிகாரத்தை ஈழத்திற்கு ஆதரவாக பயன் படுத்தி கொள்வது நம் அரசியல் தலைவர்கள் கையில்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால் தமிழ் தமிழ் என்று சொல்லும் நம் தலைவர்கள்தான் அதனை செயல் படுத்தவில்லை. இதற்கு இந்தியா என்ற அமைப்பை குறை கூறுவது மிகப்பெரிய துரோகம் .
மேலும் இவ்வளவு பதவி நிதி உதவி வாங்கிய தமிழனே இந்தியாவில் இருந்து வெளியே போக வேண்டும் என்றால், எதுவுமே வாங்காமால் இது நாள் வரை இருக்கும் நாகலாந்த், ஒரிசா போன்ற மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்க தேவை இல்லை என்று இந்தியா கூறுகிறது என்றால் யாரோ வட நாட்டு IAS officer இந்த முடிவை எடுத்தார் என்று நினைக்க வேண்டாம், அந்த முடிவில் தமிழ அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் இருக்கிறது. அதிகாரத்தில் மட்டும் அவர்கள் இருக்கலாம் ஆனால் இந்த முடிவில் அவர்களுக்கு சம்பந்தமில்லையா? குறிப்பாக இந்த பதிவிலும் பின்னூட்டத்திலும் கலைஞர் , ராசா, ராமாதாஸ், ப.சிதம்பரம் போன்ற பெயர்கள் ஏன் இல்லவே இல்லை?மத்திய அரசின் அதிகாரத்தில் 12 தமிழர்கள் காபினெட் அமைச்சர்களாக இருப்பார்களாம் ஆனால் இந்த முக்கிய முடிவை "இந்தியா அரசாங்கம் எடுத்து தமிழர்களை கேவலப்படுத்தியதாம்" . என்ன நியாயம் அய்யா இது?
இந்த இந்தியாவில் விட்டு வெளியே போனாலும் மத்திய அரசில் அங்கம் வகித்த அதே அரசியல் தலைவர்கள்தான் நம்மை ஆள போகிறார்கள் , அப்போது அவர்கள் அப்படியே மாறி இலங்கை மேல் போர் தொடுப்பார்களா?
சோனியா காந்தியாவது எதிரி என்ற அடையாளத்தில் சேர்த்து விடலாம், ஆனால் " சூழ்நிலைக்கைதி என்று வர்ணிக்கப்பட்ட கலைஞரை" என்ற அடையாளத்தில் சேர்ப்பது?
மேலும் எவ்வளவு ஈழப்பிரச்சினை உள்ளபோதும் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை 27 எம்.பி பதவி அடைய வைத்த தமிழக வாக்களர்களை என்ன செய்வீர்கள்? நீங்கள் இருக்க போகும் " சொந்த தனி நாட்டில்" இருந்து இவர்களை வெளியேற்றி விடுவீர்களா? பிறகு இந்த பதிவில் பின்னூட்டம் போட்டவர்கள் மட்டும் அந்த நாட்டில் இருக்கலாமா? வேண்டுமானால் தமிழ்மணத்தில் இருந்து மேலும் ஐம்பது பேரை அழைத்துக்கொள்ளலாம்.
மேலும் தமிழ் பத்திரிக்கை உலகை வைத்துக்கொண்டு ஆரியர்கள் ஆட்டம் போடுவதாக சொல்வதும் உண்மைதான், ஆனால் ஏன் தமிழன் தமிழ் பத்திரிக்கை உலகை தன் கையில் வைத்துக்கொள்ளவில்லை என தெரியவில்லை. ஏனெனில் இது இதை பற்றி பல பேர் சொல்லி விட்டார்கள் "தமிழ் பத்திரிக்கை உலகம் தமிழர் கையில் இல்லை என்பதை" ஏன் இல்லை? தமிழர்க்கு பத்திரிக்கை நடத்தும் திறமை இல்லையா? பத்திரிக்கை நடத்த பணம் இல்லையா? உண்மையை சாதுர்யமாக எழுத கற்பனை வளம் இல்லையா? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்?
இந்த பின்னோட்டங்களில் இளங்குமரன் அவர்கள் சொல்வதே நடைமுறைபடுத்தக்கூடியது ஆனால் சில கேள்விகள்,
//கல்வியில் நம் நிலையை உயர்த்த வேண்டும்.//
நிச்சயமாக தமிழகம் அகில இந்தியா அளவில் கல்வியில் முன்னேறிய நிலையில்தான் இருக்கிறது.
//முடிவெடுக்கும் சக்தியாக நாம் மாறவேண்டும். தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறவேண்டும்.//
கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் தமிழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது , இதை ஆரிய வட இந்தியா மீடியாக்களே ஒப்போக்கொண்டு இருக்கின்றன.
2009 ஆண்டு மக்களவை தேர்தலில்தான் நாம் தீர்மானிக்கும் சக்தியாக இல்லை.
கொஞ்சம் விளக்கினால் நல்லது.
@@@மேலும் தமிழ் பத்திரிக்கை உலகை வைத்துக்கொண்டு ஆரியர்கள் ஆட்டம் போடுவதாக சொல்வதும் உண்மைதான், ஆனால் ஏன் தமிழன் தமிழ் பத்திரிக்கை உலகை தன் கையில் வைத்துக்கொள்ளவில்லை என தெரியவில்லை. ஏனெனில் இது இதை பற்றி பல பேர் சொல்லி விட்டார்கள் "தமிழ் பத்திரிக்கை உலகம் தமிழர் கையில் இல்லை என்பதை" ஏன் இல்லை? தமிழர்க்கு பத்திரிக்கை நடத்தும் திறமை இல்லையா? பத்திரிக்கை நடத்த பணம் இல்லையா? உண்மையை சாதுர்யமாக எழுத கற்பனை வளம் இல்லையா? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்? @@@
///அன்புக்குரிய கோகுல் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் மேலே எழுதியிருப்பதே என் உளக்கிடக்கை. கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் பார்த்துப் பழகிவரும் இளைஞர்களிடம் (இவர்கள் மிகத் திறமையானவர்கள். மிகத் திறமையாக முதலாளிக்கு உழைத்துப் பொருள் சேர்த்துத் தருபவர்கள்) நான் சொல்லும் வார்த்தை (பேச்சுக்காக அல்ல உண்மையாக) என்னால் ஐந்து முதல் பத்து லட்சம் முதலீடு தந்து உதவ முடியும் சொந்தமாகத் தொழில் தொடங்கு எனக்கு அதில் ஏதாவது ஒரு பங்கு கொடு. மீதியை நீ எடுத்துக் கொள் என்று. இதுவரை யாரையும் காணவில்லை.
இளைஞர்கள் முன்வரவேண்டும். சொந்தக் காலில் நின்று நாம் பத்துபேருக்கு வேலை தரவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். நான் ஒரு காலத்தில் இரண்டாயிரம் ரூபாய் முதலீடு கிடைக்காமல் துன்பப்பட்டவன் என்பதும் உண்மை.///
இந்த பின்னோட்டங்களில் இளங்குமரன் அவர்கள் சொல்வதே நடைமுறைபடுத்தக்கூடியது ஆனால் சில கேள்விகள்,
@@@1 //கல்வியில் நம் நிலையை உயர்த்த வேண்டும்.//
நிச்சயமாக தமிழகம் அகில இந்தியா அளவில் கல்வியில் முன்னேறிய நிலையில்தான் இருக்கிறது. @@@
நான் சொல்லும் கல்வி என்பது அரசாங்கம் கணக்குக்காக காருப்பயி என்று ஒரு வார்த்தை எழுதத் தெரிந்தால் அதை எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்று புள்ளிவிவரம் தரும் அந்தக் கல்வியைச் சொல்லவில்லை.
அதே நேரம் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையில் கேரளாதானே முதலிடத்தில் உள்ளது. ஏழை எளியவர்களும் கற்றுத் தேர வேண்டும்.///
@@@ 2 //முடிவெடுக்கும் சக்தியாக நாம் மாறவேண்டும். தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறவேண்டும்.//
கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் தமிழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது , இதை ஆரிய வட இந்தியா மீடியாக்களே ஒப்போக்கொண்டு இருக்கின்றன.
2009 ஆண்டு மக்களவை தேர்தலில்தான் நாம் தீர்மானிக்கும் சக்தியாக இல்லை. @@@
ஆம் இவையெல்லாம் உண்மை உணர்வோடு கூடிய உங்களைப் போன்ற என்னைப் போன்ற இளைஞர்களிடம் வரவேண்டும். இளைஞர்கள் வரவேண்டும்.
ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக மக்களின் ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்தக் கேவலமாக தீர்மானிக்கும் சக்தி அல்ல. இவன் ஒருவனைத் தொட்டால் ஒருகோடிபேர் எழுந்து வந்து அடிப்பான் என்று அச்சத்தை ஏற்படுத்தும் ஆதிக்க சக்தியாக இளைஞன் வரவேண்டும். நாம் தீர்மானிக்க வேண்டும். இங்கு நாம் நம்முடைய என்பது இளைஞர்களையே குறிக்கும். மனிதாபிமான எண்ணம் கொண்ட முற்போக்குச் சிந்தனை கொண்ட நல்ல இளைஞர்கள் உயர எழுந்து நிற்க வேண்டும்.
உணர்வாளர்கள் ஒன்றுபட வேண்டும்.
இணைந்து செயலாற்ற வேண்டும்.
களப்பலியாக மாறத் தயாராக இருக்க வேண்டும்.
இங்கு களப்பலி என்பது உயிரைவிடுவது அல்ல. நம்முடைய இந்த முயற்சியில் நம்முடைய மகிழ்ச்சியை, நம்முடைய வசதி வாய்ப்புகளை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு....இதைச் செய்தால் நம் இனம் வென்றெடுக்கப்படும்.
நான் செய்யத் தொடங்கிவிட்டேன் என்னால் முடிந்ததை. நீங்கள்......
இணைந்து செயல்படத் தயாரா?
மேலும் விளக்கம் வேண்டின்
ssdavid63@yahoo.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு தொடர்பு கொள்ளலாம்.
அன்பு நண்பர் சரவணனுக்கு நன்றி. ஒத்த எண்ணம் உள்ளவர்களோடு இணைந்து செயலாற்றுங்கள். அப்பொழுதுதான் நாம் வெல்ல முடியும்.
கொஞ்சம் விளக்கினால் நல்லது.//
நல்ல நீண்ட நெடிய பின்னூட்டம். கண்டிப்பாக அலசுவோம். மனநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
***
உணர்வாளர்கள் ஒன்றுபட வேண்டும்.
இணைந்து செயலாற்ற வேண்டும்.
களப்பலியாக மாறத் தயாராக இருக்க வேண்டும்.
இங்கு களப்பலி என்பது உயிரைவிடுவது அல்ல. நம்முடைய இந்த முயற்சியில் நம்முடைய மகிழ்ச்சியை, நம்முடைய வசதி வாய்ப்புகளை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு....இதைச் செய்தால் நம் இனம் வென்றெடுக்கப்படும்.
நான் செய்யத் தொடங்கிவிட்டேன் என்னால் முடிந்ததை. நீங்கள்......
இணைந்து செயல்படத் தயாரா?
மேலும் விளக்கம் வேண்டின்
ssdavid63@yahoo.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு தொடர்பு கொள்ளலாம்.//
அன்பு அய்யாவிற்கு ,
உங்கள் சேவை பாராட்டத்தக்கது. அதற்கு எத்தகைய ஒத்துழைப்பையும் நாம் வழங்கிடத் தயாராகவே இருக்கிறோம்.
உங்கள் பெருமுயற்சியில் சிறு அணிலாக எப்போதுமே துணையிருப்போம்.
வருகைக்கும் , நிதர்சனம் தொனிக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//எல்லாம் இந்த தமிழ் பேசும் ஆரியர்களால் வந்த வினை. இவர்களால் தான் தமிழர்களூக்கிடையே ஒற்றுமை இல்லாமல் போகின்றது. பத்திரிக்கை உலகை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியலை. முதலில் இவர்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.//
எப்படிங்கண்ணா ? ஈழத்தில இன்னைக்கு எதிர்குரல் குடுத்த எந்த தமிழனுமே இல்லாம பண்ணீங்களே , அது போல முடிவு கட்ட போறீங்களா ?
Post a Comment