துணை முதல்வரானார் மு.க.ஸ்டாலின்!

Friday, May 29, 2009

சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். தற்போதைய மத்திய அமைச்ச‌ரவையில் பங்கேற்பது தொடர்பாக தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் இடையே நிலவிய இழுபறி நி‌லையை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரும்பங்கு ஆற்றிய ஸ்டாலினுக்கு இந்த துணை முதல்வர் பதவி ஒரு பரிசாக அமையும்.


தி.மு.க.,வின் இளைஞர் அணிப்பிரிவுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டாலின் சமீபத்தில்தான் தி.மு.க.,வின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.முதல்வர் கருணாநிதி கவர்னர் பர்னாலாவிற்கு ஸ்டாலினை துணை முதல்வராக்க பரிந்துரை செய்தார். இதை ஏற்று கவர்னர் ஸ்டாலினை துணை முதல்வராக நியமனம் செய்துள்ளார்.


தற்போது உள்ளாட்சி துறையை கவனித்து வரும் ஸ்டாலினுக்கு வேறு சிலத் துறைகளும் தரப்பட்டுள்ள. தொழில்கள், பாஸ்போர்ட், டி.ஆர்.ஓ., போன்ற முக்கிய இலாகாக்களும் தரப்பட உள்ளது. அன்பழகன் தொடர்ந்து அவை முன்னவராகவே நீடிப்பார்.


இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அ‌றிக்கையில் தனது உடல் நிலை சரியில்லாததால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும், தன்னிடம் உள்ள சில இலாகாக்களையும் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

நன்றி - தினமலர்

இந்தச் சூழலில் , அடிஷனல் இணைப்பாக மு.க.ஸ்டாலின் முன்பொருமுறை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி இலவச இணைப்பாக.

உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அவரது பெயரில்

உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக உலகம் முழுவதும்

உள்ள தமிழர்களோடு அவர்களது கேள்விகளுக்கு

பதிலளித்து வருகிறார்.

வாசகர்களின் கேள்விகளும் அதற்கு அமைச்சர்

ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:


கருணாநிதியின் மகன் என்பது உங்கள்

வளர்ச்சிக்குப் பலமா, பலவீனமா?


தொண்டர்கள் வரிசையில் இருக்கும் எனக்கு

தலைவரின் மகன் என்பதை விட,

தலைவரின் தொண்டன் என்பதே எனக்கு பலம்.


ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை

ஜெயலலிதா உள்ளிட்டஎதிர்க்கட்சியினருடன்

சேர்ந்து கம்யூனிஸ்டுகளும் எதிர்க்கின்றனரே?


ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என தி.மு.க.,

தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போது அதை

பாராட்டி பேசிய தலைவர்கள், ஒரு கிலோஅரிசி ஒரு

ரூபாய்க்கு வழங்குகின்ற போது அதை எதிர்க்கின்றனர்

அதற்கு காரணம் தற்போது அவர்கள் எடுத்துள்ள

திடீர் அரசியல் நிலைப்பாடு தான்.


மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில்

நீங்கள் ஜெயலலிதாவுடன்

இணைந்து செயல்படுவீர்களா?


இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து

காப்பாற்றுவதற்காகதமிழக கட்சிகள் அனைத்தும் கருணாநிதி

தலைமையில் ஒன்றிணைந்து நிற்கும் சூழலிலும் கூட,

ஜெயலலிதாவின் தமிழின விரோத உணர்வு தானே

அறிக்கை வாயிலாக வெளிப்படுகிறது. தமிழர் நலனுக்காக

அவர் எப்படிதி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவார்

என்று எதிர்பார்க்க முடியும்?


உள்ளாட்சியிலேயே எத்தனை காலம் நீடிப்பீர்கள்?

எப்போது புரமோஷன்?


உள்ளாட்சியில் தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம்

இந்த நல்லாட்சியில்நானும் ஓர் அங்கம் என்பது தான்

நாள்தோறும் எனக்குக் கிடைக்கும் புரமோஷன்.


திடீர் திடீரென அரசியல் கட்சி ஆரம்பித்தவர்

களெல்லாம் தங்கள் சொந்தவிஷயங்களுக்குக்

கூட கருணாநிதி மீது குற்றம் சாட்டுகின்றனரே?


தமிழக அரசியல் வரலாற்றின் பேராறு கருணாநிதி. அதை

அசிங்கப்படுத்தலாம் என நினைத்து தங்கள் அசிங்கத்தை

வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்

நீங்கள் குறிப்பிடும் அவர்கள்.


"அம்மா'விலிருந்து "கேப்டன்' வரை எல்லாரும்

உங்களைக்குறி வைத்து தான் மேடையில்

தாக்குகின்றனர். நாளை நீங்கள்முதல்வரானால்

வழக்கமான அரசியல் தலைவர்கள் போலச்

செயல்படுவீர்களா? ஒரு நிர்வாகத்தின் தலைமைச்

செயல்அதிகாரி போல புதிய அணுகுமுறையுடன்

செயல்படுவீர்களா?


யாருடைய தாக்குதல் பற்றியும் கவலைப்படாமல்

என் கடமையைநான் செய்து வருகிறேன்.

தமிழக அரசியலில் முக்கியத்துவம்

பெறுவதைவிட மக்கள் பணிகளில் முதன்மை

பெறுவது தான் என் நோக்கம்.


சாதாரண சமாச்சாரங்களுக்குக் கூட மேடையில்

துண்டைஇழுத்துவிட்டுக் கொண்டு சவால்

விடுவதும், மாற்றுக்கட்சியினரை வறுத்தெடுப்பதுமாக

இருக்கும் தமிழகஅரசியலில் நீங்கள் மட்டும்

யாரையும் தனிப்பட்ட முறையில்

தாக்கிப்பேசுவதோ, சவால் விடுவதோ இல்லையே?


எங்களிடம் சாதனைப் பட்டியல் இருக்கிறது.

மேடையில்அதைச் சொல்கிறேன். அது இல்லாதவர்கள்

வெற்று சவால்களைநம்பித்தான் பேச

வேண்டியிருக்கிறது. நான் ஐ.ஐ.டி.,யில் ஆய்வு

மாணவன்.


மற்ற மாநிலப் பள்ளிகளில் உள்ளது போல,

தமிழகப்பள்ளிகளில் ஏன் இந்தியை ஒரு

பாடமாக வைக்கத் தயங்குகிறீர்கள். ?


இந்தியாவின் முதன்மை மொழியை தமிழ்நாட்டுக்

காரர்கள்படிக்கவில்லையே என்று எனது நண்பர்களான

வட மாநிலமாணவர்கள் கேட்கின்றனர்.
எந்த ஒரு மொழியும் இன்னொரு மொழி மீது
ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பது தான் தி.மு.க.,
நிலைப்பாடு. மொழி ஆதிக்கத்திற்கு இடமில்லை
என்பதால் தான் அண்ணா இந்திக்கு இடமில்லை
எனச் சொல்லி, தமிழ் - ஆங்கிலம் எனும் இரு
மொழிக் கொள்கையை சட்டமாக்கினார்.
இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம் என்பது
தான் எங்கள் நிலை. எந்த மொழி மீதும் எங்களுக்கு
வெறுப்பில்லை.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும்

இந்தியாவின் ஆட்சிமொழியாக வேண்டும்

என்பதை வலியுறுத்தி வருகிறோம். இந்தியோ,

பிரெஞ்சோ, ஜப்பானிய மொழியோ படிக்க

விரும்புபவர்கள் அதற்குரியபயிற்சி மையங்களில்

சேர்ந்து படிப்பதற்கு தமிழகத்தில் எந்தத்

தடையுமில்லை. மற்ற மாநிலங்களிலெல்லாம்

இந்தி கற்றுத்தரப்படுகிறது

என்று சொல்வதில் முழு உண்மையில்லை.

பெரிய நகரங்களில் மட்டும்

தான் அந்த நிலைமை, மற்ற இடங்களில்

அவரவர் மொழியில் தான்

படிக்கின்றனர். ஆங்கிலம்கூட போதுமான

அளவில் கற்றுத் தரப்படுவதில்லை.


கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வரும்...

வரும்...என்று இழுத்துக்கொண்டே இருக்கிறதே?


அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

2009 ஜன., மாதத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும்

திட்டம் நிறைவேறிவிடும்.


நீங்கள் எதிர்பார்த்து நிறைவேறாமல் இருப்பது

என்று எதை நினைக்கிறீர்கள்?


பொது வாழ்வில் எதையோ எதிர்பார்ப்பதைவிட,

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்

மனநிலைதான் முக்கியம். மேயர், சட்டசபை

உறுப்பினர், அமைச்சர்பதவி என்பதெல்லாம்

மக்களுக்குத் தொண்டாற்றக்கூடியஒரு வாய்ப்பு.

அத்தகைய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி

மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற

பொறுப்புணர்வுதான் அவசியமே தவிர,

எதிர்பார்ப்புகள் அல்ல.


இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

17 பின்னூட்டங்கள்:

மதிபாலா May 29, 2009 1:24 AM  

நீண்ட காலமாக எதிர்ப்பார்த்த வரவேற்கப்படவேண்டிய முடிவு.

துணை முதல்வாராகவும் ஒளிவீசுவார் ஸ்டாலின் எமது நம்பிக்கை.

ஒளிவீச வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பு.

மதிபாலா May 29, 2009 1:24 AM  
This post has been removed by the author.
லக்கிலுக் May 29, 2009 1:31 AM  

:-)

மெத்த மகிழ்ச்சி உடன்பிறப்பு!

மதிபாலா May 29, 2009 1:33 AM  

:-)

மெத்த மகிழ்ச்சி உடன்பிறப்பு!/

நன்றி நண்பர் லக்கி லுக்.

எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

koothanalluran May 29, 2009 2:06 AM  

கலைஞர் எப்போதே எடுத்திருக்க வேண்டிய முடிவு. காலங்கடந்த முடிவு என்றாலும் நல்ல முடிவு

குரு May 29, 2009 2:07 AM  

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வரும்...வரும்...என்று இழுத்துக்கொண்டே இருக்கிறதே?


அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. 2009 ஜன., மாதத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேறிவிடும்.


What Happened?????

அஹோரி May 29, 2009 2:54 AM  

ஆண்டவா ... இந்த சூனியக்கார குடும்பத்து கிட்ட இருந்து மக்களை காப்பாற்று ...

அம்பேத்கரும் , பெரியாரும் குடும்ப அடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடி இருந்தால் தமிழனுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்.

மதிபாலா May 29, 2009 3:20 AM  

கலைஞர் எப்போதே எடுத்திருக்க வேண்டிய முடிவு. காலங்கடந்த முடிவு என்றாலும் நல்ல முடிவு.

/./

நன்றி நண்பர் கொளத்தூரான்

வான்முகிலன் May 29, 2009 3:21 AM  

நீங்க யார எப்ப என்னவேணாலும் ஆக்குங்க முதல்வரே... இளிச்சவாயனுங்க நாங்க இருக்கோம்.
நாங்க இருக்கிற வர உங்களுக்கு என்ன கவல? உங்க குடும்பத்துக்குத்தான் என்ன கவல.

மதிபாலா May 29, 2009 3:21 AM  

What Happened?????//

வருகைக்கு நன்றி திரு.குரு.

அரசியல்ல....( நீங்களே நெரப்பிக்குங்க.)

மதிபாலா May 29, 2009 3:21 AM  

ஆண்டவா ... இந்த சூனியக்கார குடும்பத்து கிட்ட இருந்து மக்களை காப்பாற்று ...

அம்பேத்கரும் , பெரியாரும் குடும்ப அடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடி இருந்தால் தமிழனுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்.//

ஹிஹிஹிஹிஹிஹி. நல்ல நகைச்சுவை நண்பர் அஹோரி,நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்.

மதிபாலா May 29, 2009 3:22 AM  

நீங்க யார எப்ப என்னவேணாலும் ஆக்குங்க முதல்வரே... இளிச்சவாயனுங்க நாங்க இருக்கோம்.
நாங்க இருக்கிற வர உங்களுக்கு என்ன கவல? உங்க குடும்பத்துக்குத்தான் என்ன கவல.//

ஹிஹிஹிஹிஹி. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நண்பர் வான்முகிலன்

TAMILKUDUMBAM May 29, 2009 5:15 AM  

அடுத்து.... கலைஞர் வீட்டு பால் காரர் உள் துரை அமைச்சர்.

கலைஞர் தம்பி மகன் நிதி இலாக்கா..

கலைஞர் பெரியப்பா வீட்டு பேரன் வருமான வரி....

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும். வால்-க! சன-நாய்-கம்!

Naresh Kumar May 29, 2009 8:08 AM  

முடிவை முன்னாடியே எடுத்திருந்தா தாத்தாவுக்கு கொஞ்சம் ஓய்வு நாச்சும் அதிகம் கிடைச்சிருக்கும்!!!

ஒரு பையன் மத்திய மந்திரி, இன்னொரு பையன் துணை முதல்வர், பேரனும் மத்திய மந்திரி.....கலக்கற சந்துரு.......

மதிபாலா May 29, 2009 7:31 PM  

அடுத்து.... கலைஞர் வீட்டு பால் காரர் உள் துரை அமைச்சர்.

கலைஞர் தம்பி மகன் நிதி இலாக்கா..

கலைஞர் பெரியப்பா வீட்டு பேரன் வருமான வரி....

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும். வால்-க! சன-நாய்-கம்!//

வாங்க தமிழ்குடும்பம். கொஞ்சம் பெரிய குடும்பம்தான்.

***

முடிவை முன்னாடியே எடுத்திருந்தா தாத்தாவுக்கு கொஞ்சம் ஓய்வு நாச்சும் அதிகம் கிடைச்சிருக்கும்!!!

ஒரு பையன் மத்திய மந்திரி, இன்னொரு பையன் துணை முதல்வர், பேரனும் மத்திய மந்திரி.....கலக்கற சந்துரு........//

உண்மையிலேயே கொஞ்சம் அதிகம் தான். ஆனால் ஸ்டாலின் , அழகிரி போன்றவர்கள் திணீக்கப்பட்டவர்கள் அல்லர். ஆனால் கனிமொழி , தயாநிதி மாறன் போன்றவர்கள் திணிக்கப்பட்டவர்கள்.

திணீப்பிற்கு எதிரான நாம் அதே கண்ணோட்டத்துடன் ஸ்டாலினை பார்க்கவியலாது.

பார்க்கவும் கூடாது.

ஆ! இதழ்கள் May 29, 2009 9:53 PM  

இனி சிறிது காலம் குற்ற உணர்ச்சியில்லாமல் கட்சியை ஆதரிக்க ஒரு நல்ல காரணம்.

:))

அத்திரி May 29, 2009 10:19 PM  

இரன்டு வருடங்களுக்கு முன்பே இந்த பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.....லேட்தான்........இருந்தாலும் லேட்டெஸ்ட்..........

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP