தியானென்மென் படுகொலை – கொலையிசமான கம்யூனிசம்.

Wednesday, June 3, 2009

கம்யூனிசம் மக்களுக்கானது , தொழிலாளர்களுக்கானது , மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்றெல்லாம் போதித்து போதித்து வளர்ந்த சீன மக்கள் மேற்குலகத்தின் அபார வளர்ச்சியில் மயங்கிப் போயிருந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதி.


 

எந்தத் தொழிலாளர்களின் குரலாக ஒலிக்கும் என்ற நம்பிக்கையில் கம்யூனிசத்தை ஆட்சியாளர்கள் வளர்த்தெடுத்தார்களோ அதே கம்யூனிசக் கட்சி சர்வாதிகாரக்கட்சியாக மாறி இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தியது. எந்தச் சர்வாதிகாரத்தையும் , முதலாளித்துவத்தையும் எதிர்த்துப் போராடி உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த கம்யூனிசக் கட்சி தானே ஒரு பெருமுதலாளியாகக் காட்சி தந்தது. இன்றும் கூட என்பது கிளைக்கதை.


 

சர்வாதிகாரத்தையும் , ஒரு கட்சியின் அதிகார வரம்பிற்குள் உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்த நாடு அடிமையாய்க் கிடக்கும் நிலைகண்டு வெதும்பிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஜனநாயகத்திற்கான போராட்டத்தினை தங்களது கையில் எடுத்திருந்தார்கள்.


 


 

ஜூன் 4 , 1989.


 


 

அந்த நாள் எப்போதும் போலவே விடிந்தது. எப்போதும் போலவே உலகம் சுழன்று கொண்டிருந்தது. உலகின் பாதி மக்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த நாளின் சூரியன் மறையும் போது கடந்த நூற்றாண்டின் கறுப்பு நாளாக வரலாறு பதிவு செய்துவிட்டுப் போனது.


 

ஆம் , அப்படித்தான் சொல்லியாக வேண்டும். வேறு எப்படித்தான் சொல்வது?


 


 

எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்ற ஆர்ப்பாட்டத்தில் சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரத்தின் தியானென்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான பெய்டா எனப்படும் பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்கள் குழுமியிருந்தார்கள். ஜனநாயகமே எங்களுக்கு வேண்டும் , கம்யூனிசம் என்கிற பெயரில் நடக்கும் சர்வாதிகாரம் எங்களுக்கு வேண்டாம் என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.


 

உரிமைகளைப் பெற்றுத் தரவந்த கம்யூனிசக் கட்சி என்ன செய்தது தெரியுமா?


 

இராணுவத்தை அனுப்பி அணியணியாக இளைஞர்களைக் கொன்று குவித்தது. கம்யூனிசம் என்ற பெயரில் நீர்த்துப் போன தத்துவங்களைக் கொண்டு சர்வாதிகார ஆட்சி புரிந்த சீனக்கம்யூனிசக் கட்சியின் சர்வாதிகாரத்தையும் அதன் தலைவர் டெங் ஜியோபோங்க் கையும் எதிர்த்து புரிந்த ஆர்ப்பாட்டக்காரரகளை டாங்கிப் படையினை வரவழைத்த்து நிராயுதபாணியாக நின்ற மாணவர்களைக் கொன்று தள்ளியது.


 

இன்றைய நாள் வரை , இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எத்துணை பேர் என்ற கணக்குக்கூட தெரியவில்லை. அதற்குப் பின் அங்கங்கே ஜனநாயகத்திற்கான முணுமுணுப்பு அங்கங்கே இருந்தாலும் பெரிதாக குரல் ஒன்றும் எழவில்லை. காரணம் எழுப்புவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்பில்லை.


 

கம்யூனிசம் என்ற உயரிய தத்துவத்தையும் அச்சம்பவத்தினால் கொச்சைப்படுத்தியது. அந்தச் செயல் மூலம் கம்யூனிசம் கொலையிசமாக தனது கோரப்பற்களை விரித்துக்காட்டியது.


 

அந்த பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்களும் கூட தமிழர்களைப் போலவே உலகால் கைவிடப்பட்டவர்கள். அன்று தியானென்மென் படுகொலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பிணக்கணக்கையும் யாரும் பார்த்திருக்கவில்லை. இன்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணக்கணக்கும் இந்த உலகிற்கு தேவைப்பட்டிருக்கவில்லை.


 

உலகின் எந்தவொரு மூலையிலும் எழும் உரிமைக்கான குரலை வளர்த்தெடுக்க வேண்டிய கம்யூனிசம் இன்று கூட என்ன செய்து கொண்டிருக்கிறது? சீனா , க்யூபா, ரஷ்யா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளை எதிர்த்து சிங்கள அரசின் கொடுங்கோலாச்சிக்கு துணை போகின்றன. எந்தத் தத்துவத்தில் அடிப்படையில்?. ஒருவேளை , தத்தமது சுயநலன்களுக்காக என்றால் என்ன எழவுக்கு நாங்கள் கம்யூனிச நாடுகள் என்று வேடம் போட்டுக்கொண்டிருக்கின்றன?


 

நான் வலதுசாரி , இடதுசாரி என்று கொள்கைகளைப் பேசுபவன் அல்ல. பேசுமளவிற்கு கம்யூனிசத்தைப் படித்தவனும் அல்ல. என்னளவில் என் கண் முன் தெரிந்த அனைத்து கம்யூனிச நாடுகளும் சரியான உதாரணங்களாக இல்லை.


 

வடகொரியா , சீனா , க்யூபா என்று இப்படியாக நீளும் பட்டியல்களில் எல்லாம் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம் என்றே கருதுவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கின்றன.


 

உலகளாவிய முறையில் பொருளாரதார தாராளமயமும் , முதலாளித்துவமும் வீழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் அதற்கு மாற்றாக ஏதோவொரு இசம் தேவை . அது முற்றிலுமான முதலாளித்துவமாகவும் இருக்க முடியாது , சர்வாதிகார கம்யூனிசமாகவும் இருக்க முடியாது.


 

நாளை ஜூன் 4 ,


 

தியாயனெமென் சதுக்கப் படுகொலை நடந்த நாள்.
அந்நாளில் சனநாயகத்துக்கு குரல் கொடுத்து மடிந்து போன பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் நமது அஞ்சலியை தெரிவித்துக்கொள்வோம்.


 

10 பின்னூட்டங்கள்:

Suresh Kumar June 3, 2009 7:48 AM  

பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்

nellai ram June 3, 2009 9:39 AM  

timely recollect the memory!

மதிபாலா June 3, 2009 6:34 PM  

பெய்ஜிங் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்/

உங்கள் வருகைக்கு நன்றி நண்பர் சுரேஷ்குமார்

மதிபாலா June 3, 2009 6:35 PM  

timely recollect the memory!/

நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நண்பர் நெல்லை ராம்.

மதிபாலா June 3, 2009 6:39 PM  

தியானென்மென்னின் 20 வருட நினைவு விழாவை முன்னிட்டு சீன இளைஞர்கள் அதிகமாக டுவிட்டரில் கருத்து தெரிவித்தார்களாம்.

அதனால் கடந்த திங்கட் கிழமையிலிருந்து "டுவிட்டரை" twitter ஃபேன் பண்ணிவிட்டார்கள்..

China shuts down Twitter and Bing in lead up to Tiananmen anniversary

http://uk.techcrunch.com/2009/06/02/china-shuts-down-twitter-and-bing-in-lead-up-to-tiananmen-anniversary/

குடுகுடுப்பை June 3, 2009 7:52 PM  

க்மைஸ்ட்டு இன்னோரு மதம்.

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி June 4, 2009 12:03 PM  
This post has been removed by the author.
BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி June 4, 2009 12:05 PM  

ருஷியா முதல் கேரளா வரை கம்யூநிஸ்துகள் போதித்த செயல்முறை பொதுவுடைமைப் பாடம், மாற்றுக் கருதத்ுக்களை தாங்கி வருபவர்களை, அரசியல் எதிரிகளாய் பாவித்து அரசியல் படுகொலைகள் செய்வது..

நினைவு ஊட்டலுக்கு நன்றி நண்பர் மதி பாலா அவர்களே, என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்..

மதிபாலா June 4, 2009 11:38 PM  

க்மைஸ்ட்டு இன்னோரு மதம்.//

உண்மைதான் நண்பர் குடுகுடுப்பை. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

மதிபாலா June 4, 2009 11:40 PM  

ருஷியா முதல் கேரளா வரை கம்யூநிஸ்துகள் போதித்த செயல்முறை பொதுவுடைமைப் பாடம், மாற்றுக் கருதத்ுக்களை தாங்கி வருபவர்களை, அரசியல் எதிரிகளாய் பாவித்து அரசியல் படுகொலைகள் செய்வது..//

ஆமாம் நண்பர் அறிவுமணி....

மாற்றுக்கருத்துக்களைக் கூட அனுமதியாத கம்யூனிசம் என்பது அழியாப் பெயர் பெற்றது. உண்டா இல்லையா என்பதை தோழர்கள் தான் சொல்லவேண்டும்.

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP