ஒரு சந்தேகம்: நெருப்புநரியில் பின்னூட்டம் இடுவது பற்றி.!
Friday, June 5, 2009
நண்பர்களுக்கு,
பலருக்கு காலை வணக்கம் , இன்னும் பலருக்கு இரவு வணக்கம்.
தற்போது பதிவர்களில் பலதரப்பினருக்கும் நெருப்பு நரி ( FIREFOX) ஓரளவிற்கு எல்லோருக்கும் பழகிய இணைய உலாவிதான்.
add ons , tab browsing என்று பலவித சிறப்பம்சங்களினால் நானும் இந்த நெருப்பு நரியே கதி என்று கிடக்கிறேன். ஆனால் இந்த உலாவியில் சில வலைப்பூக்களுக்கு பின்னூட்டம் இடும் போது வரும் பிரச்சினையைப் பற்றிய சந்தேகமே இந்தப் பதிவு.
சமீப காலமாக இடுகையின் கீழேயே பின்னூட்டப் பெட்டி இருப்பது ப்ளாக்கர் பதிவர்களிடையே பிரபலமாகி வருகிறது. வேர்ட்ப்ரஸ் போன்ற தளங்களில் இது மிக எளிதாக இருந்தாலும் , ப்ளாக்கரில் கொஞ்சம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையாகவே இருக்கிறது. ஆங்கிலத்தில் சொல்லப் போனால் "Embedded Comment Box Below Post". இன்னும் உதாரணம் சொல்லப் போனால் எனது அன்பு நண்பர் பதியின் ஒரு வலை இடுகை .....
http://pathipakkam.blogspot.com/2009/06/blog-post_05.html
இந்தக் குறிப்பிட்ட பின்னூட்டப் பெட்டியில் நெருப்பு நரியின் ஊடாக பின்னூட்டம் இடும் போது , அந்தப் பின்னூட்டம் ரிலிஸாவதும் இல்லை , பின்னூட்டம் இட்டதற்கான அத்தாட்சியும் இல்லை.
நிறைய முறை முயற்சித்தேன். அதே சமயம் ஐ.ஈ யில் இந்தப் பிரச்சினை இல்லை ( Internet Explorer ).
இந்தப் பிரச்சினை எனக்கு ஒரு மாத காலமாகவே இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இந்தப் பிரச்சினை இருக்கிறதா ? இருந்தால் அதைச் சரி செய்ய வழியேதும் உண்டா ?
இன்னொன்று , பின்னூட்டங்களை தனிப் பக்கத்த்தில் இடும்போதோ (FULL PAGE), இல்லை தனி சன்னலில் ( POP UP WINDOW) இடும்போதோ பின்னூட்டங்களை மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தது. அதனால் தொடர்ச்சியான பின்னூட்ட விவாதங்களை நிகழ்த்தும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் இந்த EMBEDDED BELOW COMMENTS ல் அந்த வாய்ப்பு இருக்கிறதா? இருந்தால் எப்படி உபயோகித்துக்கொள்வது?????
தெரிந்தால் கொஞ்சம் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் நண்பர்களே.
உங்கள் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.....
'‘.
4 பின்னூட்டங்கள்:
என்ன இது ஒருத்தர் கூட இல்லியா என் சந்தேகத்தை தீர்த்து வைக்க?
அம்புட்டு காலியாவா இருக்கு சனிக்கெழமை நம்ம கடை?
//என்ன இது ஒருத்தர் கூட இல்லியா என் சந்தேகத்தை தீர்த்து வைக்க?
//
தோ வந்துட்டேன்
எனக்கு நெருப்புநரியில் அப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் வருவதில்லை. எதனால் உங்களுக்கு வருகிறது எனத் தெரியவில்லை.
மேலும் EMBEDDED BELOW COMMENTS ல் மின்னஞ்சல் Subscription செய்வதற்கென ஒரு லிங் கொடுக்கிருப்பார்கள். கவனிக்க Check box அல்ல. அதனை கிளிக்கினால் போதுமானது. நீங்கள் comment type செய்யும் பகுதிக்கு வலது புற கீழ் மூலையில் இது இருக்கும்.
//அம்புட்டு காலியாவா இருக்கு சனிக்கெழமை நம்ம கடை?//
சனி, ஞாயிறு எல்லாக் கடையுமே அப்படித்தான்.
தோ வந்துட்டேன்
/
நெம்ப நன்றி சுபாங்கன் அய்யா.
எனக்கு நெருப்புநரியில் அப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் வருவதில்லை. எதனால் உங்களுக்கு வருகிறது எனத் தெரியவில்லை.
//
ம்ம். யாராச்சும் சூனியம் வெச்சிருப்பாங்களா? எதுக்கும் ஒருதடவை ரீ இன்ஸ்டால் பண்ணிப் பாக்குறேன்.
***
மேலும் EMBEDDED BELOW COMMENTS ல் மின்னஞ்சல் Subscription செய்வதற்கென ஒரு லிங் கொடுக்கிருப்பார்கள். //
அப்படியா , சரியாகத் தெரியவில்லை.
லிங்க் - நீங்க ஆட்டோம் போஸ்ட் லிங்க்கையா சொல்கிறீர்கள்???
***
சனி, ஞாயிறு எல்லாக் கடையுமே அப்படித்தான்.
//
அதுவும் சரிதேன். எல்லோரும் வீட்ல ரொம்ப பிஸியா இருப்பாங்க சனியும் , ஞாயிறும்..
திங்கள் முதல் வெள்ளி வரை ஆபிஸ்ல பிஸியா இருப்பாங்க இல்லியா...
நல்லது அவ்ளோ பிஸியிலேயும் எனக்கு வந்து பின்னூட்டம் போட்டு பெருமைப் படுத்தினதுக்கு நண்பர் சுதாங்கன்.
Dear beloved friend Mathibala, i do not aware about your problem.. But from the last 4 or 5 weeks i could not open your blogsopt or website in internet explorer... I had the similar problem in other few web sites also while opening..
But few days back by accidentally found that in firefox i can easily access yours (blogspot & webpage)..
Still i have the same problem in I.E.(when i am accessing in I.E. the msg comes as 'operation aborted').. Any one can make me clear??..
Post a Comment