எமன் வாரறதுக்குள்ள பாத்துட்டு சாகணுமுடா - எங்க அம்மத்தா!
Sunday, July 12, 2009
சிறு வயதில் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பொழுது போக்கு இந்தக் குன்னுடையாக் கவுண்டன் கதை.
தென்னந்தோப்பு அப்பச்சி என்கிற ஒருவர் ( அப்படித்தான் நினைக்கிறேன் சரியாக நினைவில்லை ) . அவருக்கு இரண்டு கண்ணும் தெரியாது.
எங்க ஊருக்கு ஒரு முறை கதை சொல்ல வந்திருந்தார். அப்பவெல்லாம் குன்னுடையாக் கவுண்டங் கதை மாசக்கணக்கில் நடக்கும்…..லாந்தர் லைட்டு வெளிச்சத்தில கத கேக்கப் போயி உக்காந்தமுன்னா நைட்டு மணி 12 ஆகும் வூட்டுக்குப் போக…
உடுக்கைய ஆட்டிகிட்டு அப்பச்சி கத சொல்ல ஆரம்பிச்சா மொத்த சனமும்
பேச்சு மூச்சில்லாம காத்திருக்கும்…அமைதியான பெரியண்ணன் , ஆவேசம் பொங்கும் சின்னண்ணன் , அன்புக்குரிய அருக்காணீ நல்ல தங்கா தங்கச்சி , வேட்டுவரு , காளி , சாம்புகன் , பொன்னி வளநாடு , செல்லாத்தா இன்னமும் நினைவுகளில் ஒன்றிரண்டு பெயர்களே தங்கி இருக்கின்றன. இருந்தாலும் அந்தக் கதையைப் பற்றி நினைத்தாலே , ஏதோ ஒரு பெருமிதம் இன்னமுமே கூட ஒளிந்து கொண்டே இருக்கிறது…..!!!!
இன்றும் கூட , கொங்குச் சீமையில் அண்ணமார் சாமிகளுக்கு கோயில் இல்லாத தலித்களின் ஊர்களைப் பார்க்கவியலாது. அவர்கள் அளவில் படியளக்கும் சாமிகள் அண்ணமார்கள்.
புகுந்த வீட்டில் பொழைக்க வியலாமல் அண்ணமாரின் தங்கச்சி தனக்குப் பிறந்த குழந்தைகளை கிணற்றில் போட்ட கதையும் நல்லதங்காள் கதை என்றே வழங்கப்படுகிறது.
இன்றைக்கும் ஊருக்குப் போனால் எங்க அம்மாத்தாவிடம் உட்கார்ந்து அந்த நல்லதங்கா கதையையும் , அண்ணமார் கதையையும் அச்சரம் பிசகமால் கேக்கும் போது மனசு கொஞ்சம் இலேசாவது போன்ற உணர்விருக்கும். அந்த மொழி நடை மெத்தப்படித்தவர்களால் உருவாக்கப் படாமல் இருந்தாலும் கலைஞரின் பொன்னர் சங்கர் போல் அடுக்குமொழிகளால் கட்டப்படாமல் இருந்தாலும் , அந்த கிராமத்து மொழி நடைதான் என்னை மிகவும் கவர்ந்தது….!!!!
அதுவும் , அவர்கள் தமது பக்கத்து வீட்டில் நிகழ்ந்தது போல் விவரிப்பதைக் கேட்கும் போது ஏதோ நம் முப்பாட்டன் காலத்திய வரலாறு போலவே தோன்றும்.!
எனக்கு நினைவிருக்கும் ஒரு சில வரிகளை மட்டும் சொல்கிறேன்…!
****
பொன்னிவள நாட்டை யவன் பொறுக்க ஆளலையிலே
பொல்லாத பங்காளிகள் மெத்தச் சதி செய்தாங்கோ….
**
குன்னுடையாக் கவுண்டனின் மனைவி தாமரை பிள்ளை வரம் வேண்டி தவம் செய்வதாக வரும் ஒரு நிகழ்வில்..
**
குதிச்சி வெளையாட புள்ளையொண்ணு வேணுமின்னு..
தாவி வெளையாட தங்கமொண்ணு வேணுமின்னு..
அள்ளி அணைச்சுக்க அரசனொண்ணு வேணுமின்னு...
வாரித் தழுவிக்க வாரிசொண்ணி வேணுமின்னு
ஊசி முனையில ஒம்போது வருஷம்….
பாசி முனையில பன்னெண்டு வருஷமின்னு
தவமா தவமிருந்தா தாமர பத்தினியவ….
**
இன்னும் கொஞ்சம் கொஞ்சம் பிட்டு பிட்டாக நினைவிருக்கிறது….!! இப்போதும் கூட எங்க ஊருப் ப
க்கமிருந்து வீரப்பூர் விழாவுக்கும் , நாகமலைக்கும் வருடாவருடம் டெம்போ கட்டி ( வண்டி கட்டி ஓல்டு பேஷன் ஆச்சே..!!!) படுகளம் போகும் அனேகர் உண்டு……..!!!!!!!!!செல்லாத்தா கோயிலும் இன்றுவரை காங்கயம் கீரனூரில் இன்று வரை அண்ணமார் வழிப்பட்ட கோயிலாக இருக்கிறது……மதுரைப் பக்கம் கூட பொன்னர் சங்கரின் குல தெய்வ வழிபாடு தொடருவதாக தினமலர் சொல்கிறது.
அண்ணமார் கதை தமிழகத்தின் வரலாறு. கொங்குச்சீமையில் புழங்கிக்கொண்டிருந்த இந்தக் கதையை தமிழகம் முழுக்கவும் கொண்டு சேர்த்ததில் கலைஞரின் பொன்னர்- சங்கருக்கு மிகப்பெரிய பங்குண்டு….!!!!
அத்தகைய தமிழகத்தின் வரலாறு ஒன்று இன்று திரைப்படம் ஆக்கப்படுகிறது……குன்னுடையாக் கவுணடங் கதை இன்று வண்ணத்திரையில் வரப் போகிறது…….எங்க அம்மத்தாவிடம் பேசும் போது இதைச் சொன்னேன்…பூரித்துப் போனார்….
“என்னய எமன் கூப்புடறதுக்கு முன்னாடி அத பாத்துப் போட்டுச் செத்து போகணுமடா” என்று சொன்ன போது என் கண்ணில் நீர் வராத குறைதான்…….
அண்ணன் , தம்பி என்று அனைவரும் போன பிறகு , செல்லப் பேரன் பேத்திகள் கெழவி எந்நேரமும் பெனாத்துது என்று சொல்லி ஓடிப் போன பிறகு , தூர தேசத்தில் நாங்கள் தொலைபேசியில் மட்டுமே உறவைப் பேணும் போது , இது போன்ற கதைகளும் , வாழ்வியலும் தானே துணை…….??
தென்னந்தோப்பு அப்பச்சியின் குன்னுடையாக் கவுண்டன் கதையை இன்று சோடியம் வேப்பர் லைட்டிலாவது மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆதங்கமாக இருக்கிறது….!
அத்தகைய கதையை படமாக்க முன் வந்த அனைத்து நல் நெஞ்சங்களுக்கும் நமது வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் , நன்றிகளையும் நாம் சொல்லிக்கொள்கிறோம்....!
அண்ணமார் சாமி பற்றிய விக்கி பீடியா இணைப்பு!
அண்ணமார் சாமி கதை பற்றிய பதிவர் லதானந்தின் பதிவு..!
பொன்னர் சங்கர் கதை திரைப்படம் ஆகப் போவது பற்றிய செய்தி..!
தமிழகத்தில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு வீர வரலாற்றை நிறைவாக படமாக்க வேண்டும் என்பதும் நமது ஆதங்கம்…! செய்வார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கிருக்கிறது….!
'‘.
15 பின்னூட்டங்கள்:
அருமையான பதிவு நண்பரே. வாழ்த்துகள். என் பாட்டி சொன்ன தோட்டத்து கதைகளெல்லாம் நினைவுக்கு வருது.
அருமையான பதிவு நண்பரே. வாழ்த்துகள். என் பாட்டி சொன்ன தோட்டத்து கதைகளெல்லாம் நினைவுக்கு வருது.
//
நன்றி நண்பர் பாலமுருகன்.
வருகைக்கும் , கருத்துக்கும்..
நினைவிற்கு வர வேண்டும்....
தோட்டத்துக் கதைகளா??? அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
இதுபற்றிய இன்னுமொரு பதிவு..
உங்கள் பார்வைக்கு!
http://dravidatamils.blogspot.com/2006/10/1_30.html
\\அந்தக் கதையைப் பற்றி நினைத்தாலே , ஏதோ ஒரு பெருமிதம் இன்னமுமே கூட ஒளிந்து கொண்டே இருக்கிறது…..!!!!\\
மனதில் உள்ள உணர்வை அருமையாய் வார்த்தை ஆக்கி உள்ளீர்கள்
எனக்கும் இதே உணர்வுதான்
intha valipaadukal ellam aruki varuvathu mika kavalai. yaalpanathil annanmaar kovila theedi poona poothu angu annanmar silai illamal perumal silai irunthatu. ithu pattriya aakam viluthu endu oru mag vanthirunthathu.
மனதில் உள்ள உணர்வை அருமையாய் வார்த்தை ஆக்கி உள்ளீர்கள்
எனக்கும் இதே உணர்வுதான்//
நன்றி நண்பரே...
வருகைக்கும் , கருத்துக்கும்!!!!
intha valipaadukal ellam aruki varuvathu mika kavalai. yaalpanathil annanmaar kovila theedi poona poothu angu annanmar silai illamal perumal silai irunthatu. ithu pattriya aakam viluthu endu oru mag vanthirunthathu.//
யாழ்ப்பாணத்திலும் அண்ணன்மார் சுவாமி வழிபாடு இருந்திருக்கிறதா ? உண்மையில் இதுவரை நான் அறியாத செய்தி.......!
உண்மையில் பகுத்தறிவுச் சிந்தனையாளானாகிய நான் வழிபாடுகளையொட்டி சிந்திக்க வில்லை. ஆனால் இதுபோன்ற சிறுதெய்வ வழிபாடுகள் தான் தமிழனின் கலாச்சாரமும் , பாரம்பரியுமும். ஆனால் இந்து மதம் என்ற பெரிய பாம்பு காலப்போக்கில் தமிழனின் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் விழுங்கிவிட்டது!
நன்றி நண்பர் வெண்காட்டான்....!
கலைஞரின் அழகான அடுக்கு வசனங்களில் உருவான பொன்னர் சங்கர் கதி தியாகராசன், பிரசாந்த் கைகளில் மாட்டி கிழியாமல் நல்ல படமாய் வெளிவந்தால் மகிழ்ச்சி தான். ல, ழ,ள உச்சரிப்பு வித்தியாசம் தெரியாதவர்கள் கலைஞரின் வசனங்களைப் பேசினால், அய்யோ நினைத்துப் பார்க்கவே கொடுமையாய் இருக்கிறது
//கலைஞரின் அழகான அடுக்கு வசனங்களில் உருவான பொன்னர் சங்கர் கதி தியாகராசன், பிரசாந்த் கைகளில் மாட்டி கிழியாமல் நல்ல படமாய் வெளிவந்தால் மகிழ்ச்சி தான். ல, ழ,ள உச்சரிப்பு வித்தியாசம் தெரியாதவர்கள் கலைஞரின் வசனங்களைப் பேசினால், அய்யோ நினைத்துப் பார்க்கவே கொடுமையாய் இருக்கிறது//
அதே கவலை தான் எனக்கும்... படம் வரட்டும் பார்ப்போம்...
பதிவிற்கு நன்றி பாலா... பல நினைவுகளை மீட்டெடுத்தது இந்தப் பதிவு...
கலைஞரின் அழகான அடுக்கு வசனங்களில் உருவான பொன்னர் சங்கர் கதி தியாகராசன், பிரசாந்த் கைகளில் மாட்டி கிழியாமல் நல்ல படமாய் வெளிவந்தால் மகிழ்ச்சி தான். ல, ழ,ள உச்சரிப்பு வித்தியாசம் தெரியாதவர்கள் கலைஞரின் வசனங்களைப் பேசினால், அய்யோ நினைத்துப் பார்க்கவே கொடுமையாய் இருக்கிறது//
நியாயமான கவலை நண்பர் சுரேஷ்....
பார்ப்போம்......கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்...
இருப்பினும் ப்ரசாந்த் மேல் நம்பிக்கை இருக்கிறது...ஆனால் தியாகராஜன்? பார்ப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் சுரேஷ்.
பதிவிற்கு நன்றி பாலா... பல நினைவுகளை மீட்டெடுத்தது இந்தப் பதிவு...//
வாங்க நண்பர் பதி....
.எனது நினைவுகளை மீட்டெடுத்ததால் தான் இந்தப் பதிவு...!
நன்றி வருகைக்கும் , கருத்துக்கும் உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும்!
SUPER SUPER
எனக்கு தெரிந்து பொன்னர் ச்ங்கர் சொதப்பி போவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறதாக தோன்றுகிறது.
SUPER SUPER//
நன்றி நண்பர் பாலு...வருகைக்கும் , கருத்துக்கும்.
எனக்கு தெரிந்து பொன்னர் ச்ங்கர் சொதப்பி போவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறதாக தோன்றுகிறது.//
நன்றி நண்பர் சங்கர்...வருகைக்கும் , கருத்துக்கும்....
பார்க்கலாம்....ஆனால் சொதப்பினால் வருத்தப்படக் கூடியவர்களில் நானும் ஒருவன் :(((
Post a Comment