இந்தோனேசியா - 1997 - மாணவர் புரட்சி - பகுதி 3 (Indonesia)
Monday, August 24, 2009
இந்தோனேசியா - ஒரு கடவுளின் குழந்தை என்ற இடுகைத் தொடருக்கும் , இந்தப் பகுதிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லையே என்ற தோற்றததை இப்பகுதி தந்தாலும் , ஒட்டுமொத்த அளவில் இந்தோனேசியாவைப் பற்றிய தகவல்களாகவே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்..ஆகவே பொறுத்தருள்க...!

இந்தோனேஷியர்கள் மிகவும் சாதுவானவர்கள் என்றே பார்த்தோம்..ஆனாலும் அவர்களையும் பொங்கியெழுந்து தெருவில் இறங்க வைத்த காலகட்டமும் வந்தது. அதற்கான முற்று முழுதான சூழலையும் உருவாக்கி வைத்த பெருமை ஆதிக்கம் செலுத்திய சீனப் பெருமுதலாளிகளுக்கும் , டெக்ஸ்மேகோ சீனிவாசன் என்ற தமிழருக்கும் , சுகார்த்தோ என்ற வயதான கிழட்டுச் சிங்கத்திற்குமே உண்டு.
பொதுவாகவே கனிம வளம் மிகுந்த இந்தோனேசியாவோ சுகார்த்தோவின் அரசாங்கக் குளறுபடிகளால் ஐரோப்பிய / அமெரிக்க கார்ப்பரேட் கனவான்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு விட்டிருந்தது.
அதாவது நிலக்கரி , தங்கம் போன்ற கனிம வளங்களை தோண்டி அதை அன்னிய நாட்டுக்கு கொண்டு செல்லும் வேலையை கார்ப்பரேட் நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும். அதற்கான சேவை வரியாக சில சதவீதம் தொகையை அந்நாட்டு அரசாங்கத்திற்கு அந்நிறுவனங்கள் வழங்கும். இப்பேர்ப்பட்ட தியாகத்தை சுகார்த்தோ ஒன்றும் சும்மா செய்து கொடுக்கவில்லை. அதற்கு பல கோடிகள் லஞ்சமாக வாங்கப்பட்டு அதன் மூலமே இத்தகைய ஒப்பந்தங்கள் நிறைவேறின.
அது 1997ல் ஜூன் – ஒரு டாலருக்கு நிகரான ரூப்யாவின் மதிப்பு 1000 ஆக இருந்தது. அன்றைய சூழலில் இந்தோனேசியா மிக வலுவான பொருளாதார மைய்யமாக இருந்தது. தென் கிழக்காசியாவின் மிகக்குறைந்த பணவீக்கத்தைக் கொண்டிருந்ததுடன் – இறக்குமதியை விட ஏற்றுமதியை அதிகமாகக் கொண்டிருந்த சொற்ப நாடுகளுள் இந்தோனேசியாவும் ஒன்றாக இருந்தது.
அனேக இந்தோனேசியப் பெருநிறுவனங்கள் டாலர்களில் கடன்களை வாங்கிக்குவித்தன. ருப்யாக்களைச் செலவிட்டு டாலர்களை வாங்கியதால் ருப்யாக்களின் தேவை அதிகரித்தது. ரூப்யாவின் தேவை அதிகரித்ததால் அதன் மதிப்பும் அதிகரித்தது. எல்லாம் சரியாகவே போய்க்கொண்டிருந்தது.
( மன்னிக்கவும் , ஆங்கிலத்தில் எனக்கு வெகு பழக்கமானவற்றை தமிழ்ப்படுத்தும் போது சரியாகச் செய்கிறேனா என்ற தயக்கம் / சந்தேகம் எனக்கு உண்டு. தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்.)
ஆனால் இப்படி இருந்த இந்தோனேசியப் பொருளாதாரத்திற்கு எங்கிருந்து பிரச்சினை வந்தது? முதலில் புறக்காரணிகளைப் பார்ப்போம்.
1997 – ஏசியன் பைனான்சியல் கிரிஸிஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் அந்தக் நெருக்கடியில் முதலில் சிக்கிய நாடு தாய்லாந்து. கன்னாபின்னாவென நிதிப்பற்றாக்குறையில் சிக்கியிருந்த தாய்லாந்து அரசு fixed currency எனப்படும் நிலையான கரன்சி மதிப்பிலிருந்து floating currency rate எனப்படும் சந்தை நிலவரத்திற்கேற்ப மாறுபடும் நாணயமாக தாய் பாத்தை (Thai Bhat) மாற்றியது.
அதில் ஆரம்பித்த சுனாமி தாய்லாந்தையே திவாலாக்கிவிட்டது.
தாய்லாந்து திவாலானதைப் பார்த்து அதிர்ந்து போன , ஏற்கெனவே நிர்வாகக் குளறுபடிகளால் அந்நியச்செலாவணிக்கு ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த இந்தோனேசியா சந்தை நிலவரத்திற்கேற்ப மாறுபடும் நாணயமாக (floating currency) இருந்த இந்தோனெசியா ருப்யாவின் டிரேடிங் பேண்ட் 8% சதத்திலிருந்து அதிகபட்சம் 12% சதமாக மாற்றியது….அதுதான் ஆரம்பம்……..இந்தோனேசிய நாணயம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஒரு டாலருக்கு நிகரான ரூப்யாவின் மதிப்பு 1000 லிருந்து 16000 ஆக உயர்ந்தது…
பொருட்களின் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது…………வீழ்ச்சிக்குமுன் 100 டாலர் வைத்திருந்தவன் 16 மடங்கு அதிக பணக்காரனாகிவிட்டான்……..இதில் சம்பாரித்தவர்கள்
வழக்கம் போல முதலாளிகள்……..வைத்திருந்த பணத்தை இழந்தவர்கள் நடுத்தர கீழ்மட்ட மக்கள்..பொருளாதார நெருக்கடியால் பல உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தத் திணறின. அல்லது அவை வாங்கப்பட்ட கடன்களில் சொற்ப சதவீதத்தை இந்தோனேசியாவில் முதலீடாக்கி விட்டு மிச்சத்தை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று விட்டு மஞ்சள் நோட்டிஸ் கொடுக்க ஆரம்பித்தன.
நிறுவனங்கள் மஞ்சள் நோட்டிஸ் கொடுக்க ஆரம்பித்ததால் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த பணத்தை எடுக்க வந்த முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப் பணமில்லை வங்கிகளிடம். ரூப்யா நோட்டுக்களை அச்சடித்துத் தள்ளியது அரசாங்கம்…இறக்குமதி கணிசமாக இருக்கும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் வெறும் பேப்பர் தாள்களை அச்சிட்டுத் தள்ளினால் என்ன நடக்கும்?
எத்தனை நாளைக்குத் தாங்கும் பேப்பர் தாள்கள்…..டாலர்கள் வேண்டுமே பொருட்களை இறக்குமதி செய்ய?
இப்படி நிலைமை இருக்க , இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டார் சுகார்த்தோ. அப்போதும் மக்களைப் பற்றி நினைக்காமல் தனக்குப் படியளக்கும் பெருமுதலாளிகளைக் காப்பாற்றும் வண்ணம் நிறுவனங்களின் கடன்களை அரசு ஏற்கும் என்று வாயளவில் அறிவித்தார்…
அதுகாறும் அமைதியாயிருந்த இந்தோனேசிய பல்கலைக் கழக மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்தார்கள்…
மக்கள் உணவின்றியும் ,தாம் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்தையும் இழந்ததற்கு ஒன்றுமே செய்யாத சுகார்த்தோ முதலாளிக்களுக்கு இவ்வளவு பரிந்து பேசுகிறாரே என்ற கோவத்தில் சுகார்த்தோவை எதிர்த்துக்கிளம்பிய மாணவர் படை , தொழில்களில் ஆதிக்கம் செலுத்தும் சீனர்களை நோக்கிப் பாயந்தது…..சீனர்களின் உடமைகள் சூறையாடப் பட்டன…வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன……..ஜகார்த்தாவில் நிகழ்ந்த கலவரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் , வன்முறையிலும் உயிரிழந்தார்கள்…
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
பேங்க் இந்தோனெசியாவின் கவர்னரை மாற்றினார் சுகார்த்தோ….ஆனாலும் ஆவேசமான மக்களுக்கு அது போதவில்லை. அதுமட்டுமின்றி பொருளாதார நெருக்கடியும் கட்டுக்கடங்காமல் போக இறுதியாக சுகார்த்தோ பதவியிறங்கும் வரையிலும் மாணவர் புரட்சி ஓயவில்லை.அதற்குப்பின் பாராளுமன்றத்தால் அதிபராக ஹபிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்…………படிப்படியாக ஜனநாயகத்தினையொட்டி பயணித்து இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சுஷிலோ பம்பாங்க் யுடயோனோ இருக்கிறார்……..பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்ட இந்தோனேசியா இப்போது வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது..
இனி , அடுத்த பதிவில் “பாலி” என்னும் சொர்ணத் தீவினைப் பற்றிப் பார்ப்போம்…
ஒரு கொசுரு செய்தி -
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இந்தோனேசியாவின் மேடான் நகரில் வசிக்கிறார்கள் என்று சொல்லியிருந்தேன்..அவர்களில் கணிசமானவர்கள் நான் வசிக்கும் பாண்டூங் நகரிலும் இருக்கிறார்கள்......அவர்கள் இங்கே விநாயகர் மற்றும் முருகன் கோயிலையையும் கட்டியிருக்கிறார்கள்....... தமிழே பேசவியலாத அந்த தமிழ் மக்கள் விநாயகர் சதுர்த்திக்கு அவர்கள் திருநீறு கட்டிக்கொடுத்த தாளைப் பாருங்களேன்....!!!
உங்கள் கருத்தினை பின்னூட்டத்தில் சொல்லலாம்! சொல்லாமலும் போகலாம்...! ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி..

'‘.
15 பின்னூட்டங்கள்:
மைக் டெஸ்டிங்.
என்ன பிரச்சினையினே தெரியல...
தமிழ்மணத்துல இணைக்க முடியறதில்லே......
எப்ப பாத்தாலும் புது இடுகைகள் இல்லேன்னே வருது...
tomorrow going to Jakarta
any news for me?
வெயிட்டிங் ஃபார் பாலி :)
அருமை..தோழரே!
இது வரை Batam மட்டும் தான் வந்திருக்கிறேன் .
tomorrow going to Jakarta
any news for me?//
வாங்க..........வாங்க.....
முடிஞ்சா சந்திப்போம்.........
நீலப்பறவை ( blue bird )டாக்ஸியை உபயோகிங்க......ஏதேனும் உதவி வேணும்னா தயங்காம சொல்லுங்க.....
வெயிட்டிங் ஃபார் பாலி :)//
நன்றி நண்பர் அப்துல்லா....
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்!
அருமை..தோழரே!
இது வரை Batam மட்டும் தான் வந்திருக்கிறேன் ..//
நன்றி நண்பர் ஃஜோ...
பாட்டம் வந்துட்டுப் போன ஆளா நீங்க....??? ஹூ...!!! சரிசரி....
பாண்டூங்கும் வாங்க...!
//பாட்டம் வந்துட்டுப் போன ஆளா நீங்க....??? ஹூ...!!! சரிசரி....//
அட பாவி மனுஷா ! :)
hello mathi,
yasavi from town called MEREK in Indonesia. may go to Jakarta.
Any place to see?
How r u?
after two days return to Sg.
அட பாவி மனுஷா ! :)
:)))))
hello mathi,
yasavi from town called MEREK in Indonesia. may go to Jakarta.
Any place to see?
How r u?
after two days return to Sg.//
Oh you are already in Indonesia? Merak is about the edge of Java Island right?
thats nice. there are many places to see nearby...
you could try carita beach - taking banana boat at carita beach is most wonderful experience.
or else try anyer beach - sweet breeze will take your life away. i sit hours together.
or you can try Puncak......beautiful views kind of our kodaikanal. you can take a glider ride from a top edge of the hill to bottom - such a beautiful views when you see the tea estates from sky...you will never forget. this is around 120 kms from the place you live now i.e Merak.
In puncak , there is a place called Taman Safari , where you can travel with your car and can see the lions , tigers and so much offffffffffffffffffff animals so closely.upcourse some monkeys too..... you have lots and lots of entertainment places to see nearby that. a must see attraction is "COW BOY SHOW" kind of english cow boy film but staged everyday ( time it was 11am , now not sure ) its free ! just you will be surprised.
after all this attractions if you enjoy then you will say "what is there in santosa island...???"
hehhehe , any help just mail me or else g 'me your handphone number and i will call and guide youuuu!!!!!!!
Hi Mathi,
Thank you for the detailed mail.
tomorrow going to leave MERAK and go to Jakarta and may stay one day.
I have one day free day at Jakarta.
Will try to contact you.
give ur mail Id
just mail me at balu_707@yahoo.co.in in english. i will be on my blackberry and could read your messages immediately.
இந்தோனேசியாவ பத்தி நல்லா எழுதுறிங்க.... தொடர்ந்து எழுதுங்க...
**
நா பந்துங் வந்தப்ப இந்த கோவில் பத்தி தெரியாம போச்சி... -:( அப்படியே நீங்க அங்க இருக்குறதும்...
யோககர்தாவ பத்தி ஒரு பதிவு எழுதுங்க அந்த இந்து கோவிலை பற்றியும்.
நா பந்துங் வந்தப்ப இந்த கோவில் பத்தி தெரியாம போச்சி... -:( அப்படியே நீங்க அங்க இருக்குறதும்...//
அப்படியா? அடுத்த முறை சந்திப்போம்!
**
யோககர்தாவ பத்தி ஒரு பதிவு எழுதுங்க அந்த இந்து கோவிலை பற்றியும்.//
ஏற்கெனவே எழுதியிருக்கிறேன் முன்பொரு முறை ...கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற தலைப்பில்.....
அதற்கான இணைப்பு......
http://www.mathibala.com/2008/08/blog-post_09.html
இருந்தாலும் , இன்னொருமுறை அதை மீள்பதிவாக போடுகிறேன்..உங்களுக்காகவும் , மற்றவர்களுக்காகவும்...!
Post a Comment