புலிகள் பாசிஸ்டுகள் என்றால் கம்யூனிஸ்டுகள்??
Thursday, August 27, 2009
என் அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்...எனக்கு 10 வயதாக இருக்கையில் என்று நினைக்கிறேன்...அடிக்கடி போராட்டம் , சாலை மறியல் என்று தொழிற்சங்கத் தோழர்களுடன் அப்பா தொடர்பு வைத்துக்கொண்டிருந்த போது என் அப்பா ஒரு ஹீரோவாகத் தெரிந்தார். அதேபோல சக செங்கொடி தோழர்களும்...ஆனாலும் ,அப்போதெல்லாம் இவர்கள் கம்யூனிஸ்டுகள் , அவர்கள் என்று பிரித்துப்பார்க்குமளவிற்கு எனக்கு அறிவோ , அனுபவமோ இருந்திருக்கவில்லை..ஆனாலும் , சுயநலமிகளுக்கிடையிலே போராட்டக்குணமிருக்கும் அவர்கள் என் மனதில் ஹீரோக்களுக்காக தெரிந்தார்கள்............!
காலப்போக்கில் எனது தந்தை வேலைபார்க்கும் தொழிற்சாலை நலிவைச்சந்தித்தது. அது தீபாவளி சமயம்... அரசாங்கத்தால் உறுதி செய்யப்பட்ட போனஸ் அளவான 8.33 சதத்தை விட அதிகமாக கொடுக்கவியலாது என்று ஆலை நிர்வாகம் அறிவித்துவிட்டிருந்தது....இரண்டு தொழிற்சங்கங்கள் இருந்தன அந்த ஆலையில் ...ஒன்று ஏ.ஐ.டி.யூ.சி இது இந்திய கம்யூனிஸ்டு தொழிற்சங்கம்....பிரிதொன்று கே.என்.எல்.ஓ , கோவைக்காரர்களுக்கு வெகு பரிச்சயமான தொழிற்சங்க வாதி செங்காளியப்பன் தலைமையில் இயங்கிய தொழிற்சங்கம் இது..
கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தது...அப்போது கோவையில் செயற்பட்ட பல ஜவுளி ஆலைகள் மூடப்படத் துவங்கியிருந்ததால் கே.என்.எல்.ஓ வேலை நிறுத்ததிற்கு தயங்கியது....எனக்குமுன் பிறந்த மூன்று பெண் குழந்தைளை கரை சேர்க்க வேண்டிய சூழலில் இருந்தார் அப்பா....அதனால் ஏ.ஐ.டி.யூ.சியில் இருந்தாலும் கே.என்.எல்.ஓவின் நிலையையே ஆதரிக்க முடிவெடுத்தார் அவர்..............
இன்னும் நிறையப் பேர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கவில்லையென்றாலும் , தோழர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆட்கள் ஆலைக்கு பூட்டுப்போட ,முற்செடிகளை கொண்டு குவிக்க பாதி தொழிலாளர்கள் விரும்பாமலே வேலை நிறுத்தம் ஆரம்பித்திருந்தது.....அன்று மூடப்பட்ட அந்த தொழிற்சாலை 2001ல்(?) மெஷின்களை விற்பதற்காக மட்டும் திறக்கப்பட்டது...! 7
- 8 வருடங்கள் கழித்து ஆளுக்கொரு லட்ச ரூவாய் கொடுத்ததுடன் அந்த ஆலைக்கும் , எமக்குமான தொடர்பு முற்றுப் பெற்றது.அப்போது கொஞ்சம் உலகம் புரிபட ஆரம்பித்திருந்தது எனக்கு......என் அப்பா எனது சகோதரிகளை கரைசேர்க்க கையில் வேலை இல்லாமல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது........உயர்கல்வியில் இருந்த எனது படிப்பும் அதனால் பாதிக்கப்பட்டது.! ஆகவே இயல்பிலேயே கம்யூனிஸ எதிர்ப்பு அல்லது விரும்பாமை அல்லது ஏன் எல்லாமே சுமுகமாக போய்க்கொண்டிருக்கையில் இவர்கள் மட்டும் கலகம் செய்கிறார்கள் அல்லது சமரசமின்றி இயல்பு வாழ்க்கையைக் கெடுக்கிறார்கள் என்ற கேள்வி இருந்தது என்னுள் எப்போதும்!!! அதற்கேற்றாற் போல , கோவையின் அனைத்து பஞ்சாலைகளும் ஒவ்வொன்றாக ஸ்டைரைக்கினால் மூடப்பட்டன...........இன்னமும் தோழர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்தது...!
ஆனாலும் , கம்யூனிஸ்டுகளை ஹீரோவாகக் கருதிய சிறுவயது நினைவுகளும் இன்னமும் அகலவில்லை என்பதும் ஒருவிதத்தில் உண்மையே...ஆனாலும் ,மார்க்சியம் , இன்ன பல இசங்கள் தொடர்பான புத்தகங்களை படிக்கத் துவங்கியவுடனே போரடிக்க ஆரம்பித்ததால் எந்த இசங்களையும் நான் படித்தவனில்லை என்ற அளவிலேயே கம்யூனிசம் பற்றிய புரிதல் இருந்தது.!
அத்தகைய நேரடித்தொடர்புகளுக்குப் பின் நான் கம்யூனிஸ்டுகளை கவனிக்க ஆரம்பித்தது வெளிநாட்டிற்கு வந்த பின்னர் , ஓர்க்குட்டிலும் , வலைப்பதிவுகளிலும் எழுத ஆரம்பித்த போதுதான். அதில் என்னைக் கடந்தவர்களில் முதலில் ஸ்டாலின் குரு , ஒரு தீவிர கம்யூனிஸ்ட் , பிறகு தோழர் பாப்பு - ஒரு தீவிர மார்க்சிஸ்ட் , அதன்பிற்கு தோழர் போர்ப்பறை அசுரன் - எனது ஒரு இடுகையைப் பற்றிய விவாதத்தில் தோழர் அசுரனும் ,நானும் நீண்ட விவாதத்தில் ஈடுப்பட்டிருந்தோம்........அதன்பிறகு தோழர் இரயாகரன்........பிறகு தோழர் வினவு....இது வலைப்பதிவு மூலம் வந்த தொடர்புகள்....
தம்மைச்சுற்றிய சூழல்களையொட்டியே ஒரு இயக்கத்தைப் பற்றியோ , இசத்தைப் பற்றியோ புரிந்து கொள்வதென்பது இயல்பான விடயமே.....! நான் சமூகத்தைப் பற்றி சிந்திக்கத் துவங்கியபோது , என்னளவில் மிக முக்கியப் பிரச்சினையாக நான் கருதியது ஈழப் பிரச்சினையையே.....சரி ஈழப் பிரச்சினையில் இன்று கம்யூனிஸ்டுகள் என்ன நிலையில் இருக்கிறார்கள்.?????
1. இந்திய கம்யூனிஸ்டுகள் - ஈழத்தை ஆழமாக நேசிக்கிறவர்கள்.........தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றே சொல்கிறவர்கள்.....ஆனாலும் ஈழத்தின் / தமிழனின் வர்க்க எதிரியான ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்துக்கொள்வோம் என்று சொல்பவர்கள்........அதனால் இவர்களை விட்டுவிடுவோம் பாவம்!
2. மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகள் - தமிழர்களீன் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பவர்கள்...ஆனாலும் சுயநிர்ணய உரிமைக்கும் , தனிநாட்டுக்கும் வேறுபாடு இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறவர்கள்....தனிநாடு தேவையில்லை , தனிமாநிலம் போதும்...காரணம் சாத்தியமில்லை என்கிறார்கள்.........சாத்தியமில்லை என்பதாலேயே தனி நாட்டைத் தள்ளி வைக்க வேண்டும் என்று சொல்வதைப் போல மார்க்சியப் புரட்சி சாத்தியமில்லை என்பதாலேயே தள்ளி வைத்துவிட்டார்களோ என்று தெரியவில்லை....
3. மக்கள் கலை இலக்கியக் கழகம் - புலிகளின் பாசிசத்தை எதிர்ப்பவர்கள்...அதே சமயம் பேரினவாதத்தை எதிர்ப்பவர்கள்.....அது தமிழ்ப் பேரினவாதமென்றாலும் சரி , சிங்களப் பேரினவாதமென்றாலும் சரி......தோழர் மருதையன் ஒருபேட்டியில் புலி ஆதரவுக் கட்சிகள் தமிழகத் தமிழர்களின் எழுச்சியை விரும்பவில்லை என்று சொல்லி இருக்கிறார்............புலிகள் இந்திய அமைதிப்படையை எதிர்த்த போது அதை ஆதரித்த ஒரே இயக்கம் ம.க.இ.க தான் என்று சொல்கிறார்...இப்படி கொஞ்சம் நாம் குழம்பிப் போகிற நிலை இவர்களது.....அல்லது எனக்குச் சரியாகப் புரியாத..!
4. தோழர் இரயாகரன் பற்றிய புரிதலோ , அவரது கருத்துக்களின் , கொள்கைகளின் வீச்சோ என்னைப் பெரிதும் சலனப்படுத்தியதில்லை. புலிகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர் அவர்.அதனால் எம்மை விட பலநூறு மடங்கு ஈழத்தைப் பற்றி அறிந்திருப்பார்.ஆனால் , இன்று சிங்களப் பேரினவாதம் தமிழர்களை அடக்குமுறைக்கு ஆட்படுத்திய போதும் கூட இல்லாத புலிப் பாசிசத்தையே அதற்கும் காரணம் சொல்கிறார்.......ரதி அவர்களின் "வினவு" கட்டுரைக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்கிறார்...புலிப்பாசிஸ்டுகளை விரும்பும் ஒருவர் கம்யூனிசத் தளத்தில் கருத்துச் சொல்லக் கூட கூடாது என்ற அளவில்.....கருத்துச் சுதந்திரத்தை , உரிமையை மறுக்கும் செயல்தானே என்ற அளவில் பார்த்தால் அது கம்யூனிசப் பாசிசமாக ஆகாதோ என்ற கேள்வி ஒரு மூலையில் இருக்கத்தான் செய்கிறது....! :(
5. தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி - தோழர் தா பே மணியரசனின் தலைமையில் இயங்கும் இவ்வியக்கம் பொதுவுடமை வழியில் தமிழ்த்தேசியத்தைப் பார்க்கிறது..தமிழ்த் தேசியம் பேசும் எல்லோரையுமே பாசிஸ்டுகளாகப் பார்க்கும் மற்ற கம்யூனிஸ்டுகளில் பார்வையில் இவர்கள் வித்தியாசமானவர்கள்.....கொஞ்சம் நியாயமான வாதத்தையும் வைக்கிறார்கள்.!
நிற்க.....
எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறது. இருக்கும் தோழர்களில் இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையில் பயணம் செய்கின்றன..முரண்பாடுகளையும் , தத்தமதுக்குண்டான வேற்றுமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்களுமில்லை இவர்கள்,,,சமீபத்திய இடைத்தேர்தலில் பொதுவாழ்வில் தூயமையான இவர்களுக்கு மக்கள் அளித்திருக்கும் அங்கீகாரமே மக்களின் நம்பிக்கையை கம்யூனிச்டுகள் பெறவில்லை என்பதற்கு கட்டியம்!
தோழர் வினவு ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார்.....இழப்புகளை சந்திப்பவர்கள் புலிகள் , அவர்கள் தான் போராடுகிறார்கள் எண்ற அளவில் பெரும்பான்மைப் புலம்பெயர் தமிழர்கள் புலிகளையே ஆதரிக்கிறார்கள் என்று...எவ்வளவு உண்மையான வாக்கியமது?
சிங்களப்பேரினவாதத்தை உறுதியுடன் எதிர்த்துப் போரிட்டவர்கள் புலிகளைத் தவிர வேறு யார் ?
மாறாக் கொள்கையுடன் அடைந்தால் தமிழீழம் , இல்லையேல் வீரமரணம் என்று போராடி மரணித்தவர்கள் யார் ?
நீச்சல் குளம் கட்டி சொகுசாக வாழ்பவர் என்று சொன்ன வீணர்களுக்கு நந்திக்கடலில் பதில் சொன்னது புலித் தலைமைதானே?
தனது இருமகன்களையும் போரில் பலி கொடுத்தவர் யார்? புலித்தலைமைதானே?
கருணா , ஆனந்தசங்கரி , ப்ளோட் , டக்ளஸ் , பிள்ளையான் என்று அணி வகுத்த துரோகக் கூட்டத்திற்கு மத்தியில் சமரசமின்றி தமிழர்களின் போராட்டத்தை நடத்தியது யார் ?
இப்படி புலிகள் இன்னமும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதற்கான ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன....
ஆனால் மாற்றுக்கொள்கையை முன்னெடுப்பதாகச் சொல்லிக்கொண்டு புலிப்பாசிசம் பேசுபவர்கள் எல்லோரும் மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கிறார்கள்....ஏற்கெனவே தோல்வி மனப்பான்மையில் உழன்று கொண்டிருக்கும் ஒரு கையறு நிலைச் சமூகத்தை மீண்டும் மீண்டும் தமது வார்த்தைக்கோர்வைகளால் மேலும் கொன்று புதைக்கிறார்கள்....! அவர்களின் நம்பிக்கையைச் சீரழிக்கிறார்கள்.... மீளக் கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு போராட்டக்களத்தை இவர்கள் இன்னமும் மக்களைக் குழப்புகிறார்கள்..!
ஆகவே , புலிகளுக்குப் பின்னரான இந்தக் காலத்திலாவது , புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்த காலத்திலாவது , புலிகள் இல்லாத அல்லது அவ்வாறு கருதப்படுகின்ற ஒரு காலத்திலாவது புலிப்பாசிசத்தை கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு , இன்னமும் வெற்றியடையுமா இல்லையா என்று தெரியாத சித்தாந்தத்தை ஒதுக்கிவைத்து விட்டு தமிழர்களாய் இணைந்து முகாம்களில் வாடும் மக்களின் முள்வேலிகளை அறுத்தெரிய முனைவோம்.....
சரி , தமிழர்களாய் இணைந்து என்கிற சொற்பதம் இனவாதமென்றால் மனிதர்களய் இணைந்து என்ற சொற்பதத்தையாவது மாற்றிப் போட்டுக்கொள்வோம்!
என்ன சொல்கிறீர்கள் தோழர்களே?????
'‘.
26 பின்னூட்டங்கள்:
very good post ...
alla re true
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பர் அனானி...
saththiyamaana varigaL.nandRi
saththiyamaana varigaL.nandRi//
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள் திரு.மகேந்திரன்..
அருமை
மிக அருமையாக தொடுக்கப்பட்ட மாலை. அற்புதம்.
இன்றும் அவர்களுக்கு ( தமிழர்களுக்கு ) கைகொடுப்பார் யாருமில்லை.
அருமை.//
நன்றி அனானி நண்பரே.
***
மிக அருமையாக தொடுக்கப்பட்ட மாலை. அற்புதம்.//
நன்றி நண்பர் நைனா..
***
இன்றும் அவர்களுக்கு ( தமிழர்களுக்கு ) கைகொடுப்பார் யாருமில்லை.//
:(((((((((((((((((((((((((((((((
அட , கை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை...புண்ணைக் குத்திக்கிளறிவிடுவதில் என்ன நியாயமிருக்கிறது?
அட விடுங்க தல, பெல்ட் கம்யூனிஸ்ட் அப்படிதான் பேசுவானுகோ. நம்ம கம்யூனிஸ்ட் ஆளுங்க கொஞ்சம் சேதிக்கலாம். ஆனா இந்த பி.ஜே.பி கம்யூனிஸ்ட் (மானங்கெட்ட மார்க்சிஸ்ட்) வெலங்காதவனுக. அவனுகளுக்கு சீட் அதிகமா கொடுத்தா இலங்கை பாராளுமன்றத்துக்கு கூட உண்டியல் குலுக்குவானுங்க. கோவையை நாசம் பண்ணிட்டு இருக்கானுங்க. (நான் கட்சி சார்பில்லாமல் எல்லா நாய்களையும் திட்டுவேன்.)
மன்னிக்கவும் அனானி நண்பரே...
அது போன்ற தரக்குறைவான வார்த்தைகள் இத்தளத்தில் அனுமதிக்கப்படாது. ஆரோக்கியமான கருத்துக்களுக்கே இங்கே இடமுண்டு...
அனானி ஆப்சனை இந்தப் பதிவிற்கு மட்டும் நீக்கியிருக்கிறேன்...
நன்றி....
நண்பர் மதிபாலா அவர்களுக்கு ,
எனக்கு குழப்பமா இருக்கு !! நான் எந்த கருத்தை முதல்ல சொல்றதுன்னு!!
புலிப் பாசிசத்தையும் (?) , பொதுவுடமையையும் ஒப்பிடுவதற்கு என்ன காரணம் விளங்கவில்லை ...
இரண்டு நிகழ் கால நிலைகளை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்..
Anyway, i comment one by one..
dear mathi,
true and in very normal person view.
don't know much abt political parties.
but wht u said is bitter truth
புலிப் பாசிசத்தையும் (?) , பொதுவுடமையையும் ஒப்பிடுவதற்கு என்ன காரணம் விளங்கவில்லை ...
///
இது பொதுவான ஒப்பீடுதான்...இருந்தாலும் சில விவாதங்களையொட்டி எழுந்த ஒரு பதிவு இது.....
மன்னிக்கவும்...அதற்கான இணைப்பினை கொடுத்திருக்க வேண்டும்!!!!
தவறுதான்...! இதோ உங்களுக்காக...
http://www.vinavu.com/2009/08/27/raya2/
dear mathi,
true and in very normal person view.
don't know much abt political parties.
but wht u said is bitter truth//
நன்றி நண்பர் யாசவி....உங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்திருந்தேன்....!
more should be written on this topic
இந்தப் பதிவிற்கு ஒரு +1 !!!
ஆனால், நீங்கள் இன்னமும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகின்றது.
more should be written on this topic//
sir, it's my honor to have you in my blog. thank you for your comment. will try to elaborate more in coming days.
இந்தப் பதிவிற்கு ஒரு +1 !!!
ஆனால், நீங்கள் இன்னமும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றுகின்றது.//
வாங்க நண்பர் பதி.....சவுக்கியமா?
விரிவாக , அய்யா.ருத்ரன் அவர்களும் அதையே தான் சொல்லியிருக்கிறார்கள்...இன்னமும் விரிவாக அடுத்தமுறை கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.........!
சொல்ல வந்த கருத்தை நன்றாக சொல்லியுள்ளீர்கள். நல்ல விரிவான அலசல்
ஆனால் புலிப் பாசிசத்தையும் (?) , பொதுவுடமையையும் ஒப்பிடுவதற்கு என்ன காரணம் என விளங்கவில்லை.. (பதிலுக்கு நன்றி நண்பரே , இன்னும் நான் படிக்க வில்லை )..
எனினும் முதல் பதிலாய் பொதுவுடைமைக் காரர்களின் போக்கை தெரியப்படுத்த விரும்புகிறோம்!!
பொதுவுடைமை முதலாளிகள ??
இந்தியாவில் கம்யூனிசம் இரண்டு வகைப்படும்.
I. உண்மை பொதுவுடமையாளர்கள்
II. போலி பொதுவுடமை வியாதிகள்
I. உண்மை பொதுவுடமையாளர்கள் :
இது இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம் !!
1.வேற்று கட்சியில்(யாய்) இருப்பவர்கள் கம்யூனிச சித்தாந்தங்கள் நெஞ்சில் நிறுத்தியவர்கள் ,
போலி கம்யூனிச வியாதிகளை ஆரம்பம் முதலே தெளிவாக புரிந்து கொண்டவர்கள்
2. மாற்றுக் கட்சிக்கு உந்தப்பட்டவர்கள்:
கொள்கைகளை காட்டி பேரம் பேசும் வியாதிகளிடமிருந்தும், போலிக் கொள்கைச் சித்ரவதைகளிடமிருந்தும் நிரந்தரமாக தப்பித்தவர்கள்..
3.குழப்பவாதிகள் :
இவர்கள் அதே பொதுவுடமைக் கட்சிலேலேயே இருந்தாலும் ,
கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் கலை அறியாதவர்கள்,
காலத்திகேற்ற மாற்றங்களை இடவல மாற்றமாய் புகுத்தி தம்மை குழப்பவாதிகள் என்று மட்டுமல்ல ‘மக்களுக்கு உதவாதவர்கள்’
என்று மீண்டும் மீண்டும் நிரூபிப்பவர்கள்..
இவர்களின் மென்போக்கு (தோழர்களிடம்) போலி பொதுவுடைமையாளர்களின் ஊக்க மருந்து..
கமுனிச வீழ்ச்சிக்கும், சலிப்பிற்கும் முக்கிய பங்கு ஆற்றுபவர்கள்..
இளைய சமூகத்திற்கு பொதுவுடமை பற்றிய
உண்மைப் பாடம் எடுக்கத் தவறியவர்கள்.
தவறான வழி காட்டிகள்..
II. போலி பொதுவுடமை வியாதிகள் :
பொதுவுடமை கட்சிகளில் கேக்கவே வேண்டாம்!!
இதுல மார்க்சிஸ்ட் , லேனினிஸ்ட், ஸ்டாலினிஸ்ட், மாவோஸ்ட் etc etc எல்லா குழுவும் தெளிவா மிகுதியா கலந்துருப்பவர்கள் ..
கடமையே கண்ணாய் (!!) இருப்பவர்கள்..
கொள்கைகளைக் காசாக்கும் நுணுக்கம் பெற்றவர்கள்..
தூண்டிலிடும், தூண்டிவிடும் புத்தியும்,
உண்மைத் தோழர்களின் செங்குருதி சக்தியும்,
அதில் குளிர் காயும் வித்தையும்
இவர்கள் சொத்துக்கள்!!
இந்த பொதுவுடைமை முதலாளிகளின் திறமைகள் ,
முதலாளிதுவத்தின் முதலைகளுக்கே சவால் விடுபவை..
புரட்சிக்கவி பாரதி தாசனின் பொதுவுடமை பற்றிய பாடல்
போலி பொதுவுடைமைகாரர்களின் முகத்திரையை நம்முன் கிழிவதைக் காணுங்கள்..
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம். (புதிய)
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம். (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
'ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய)
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (புதிய)
உலக அளவில் கம்மயுநிசத்தின் வீழ்ச்சி ,
மேற்கண்ட அதன் கொள்கைகளிலிருந்து வழுவியதே..
கம்முசத்தின் வீழ்ச்சின் பெரும் பங்கு ஆதிக்க பொதுவுடமை வாதிகளுடையதே தவிர அதன் கொள்கைகளின் சாராம்சத்தினால் அல்ல..
இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.. கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் மோசமான தொழில் நிலைகள் இதற்கு ஓர் கசப்பான எடுத்துக்காட்டு..
சென்ற நூற்றாண்டின் ,
உண்மை பொதுவுடைமையாளர் களின்
குருதியின் காணிக்கைதான் அங்கிங்கேனாதபடி
அனைவரும் புவி முழுமைக்கும் நாம் சுகிக்கும் இன்றைய உரிமைகள்..
புரட்சிகளின் வித்துக்கள் அவை வெவ்வேறு வடிவங்கள் தாங்கி
வந்திருப்பினும் அவை பொதுவுடைமை கொள்கைகளே !!
'வினவு'கள் போல விதிவிலக்கு இருக்கலாம்..
ஆனால் விதிவலக்குகள் காலத்தின் கரங்கள் அல்ல..
காலக் கண்ணாடி நடந்தவைகளைக் காட்டிடினும்,
போலி பிம்பங்களின் சுயநல வேட்டையில்
பொதுவுடைமைக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கிறது,
கண்ணாடியும் துகள் துகளாய் நொறுங்கித்தான் போகிறது..
இந்தியாவில் போலிகள் அதிகம்!!..
தமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்//// கீற்றில் அதிரிடையானுக்கு அவதூறு வீசும் சிங்களத் தோழர்களுக்கு நான் எழுதியது
//துரோகிகளை கொன்றதை நாம் ஒன்றும் சொல்லவில்லை. //
நீங்களே ஒத்துக் கொண்ட பின்னர் எதற்கு மறு பேச்சு
//நேர்மையானவர்களையும், தோழர்களையும் கூட கொன்றார்கள். //
துரோகத்தில் நேர்மையான துரோகம் என்று ஒன்று இருக்கின்றதா ???
புலிகளுக்கு யாரும் ‘வீரவணக்கம்’ வைக்கவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறோம், மாறாக ’வீரமரணம்’ என்று தான் குறிப்பிட்டுள்ளோம். ///
பச்சிளம் குழந்தை முதல் பாட்டி , பூட்டி வரை சிங்களத்தால் அல்லது உங்கள் தோழர்களால் கொல்லப்பட்டால் புலியாகச் சித்திரித்த நீங்கள்
ஏன் இப்போது வீரமரணம் என்று குறிப்பிடுகின்றீர்கள் ???
//// கடைசி வரை போராடி மரணித்த அணிகளுக்கு தான் எமது முழக்கம்.///
அப்படியானால் கடைசி யுத்தத்திற்கு முதல் வீரமரணம் அடைந்தவர்களை
ஏன் நீங்கள் வீரமரணம் என்று குறிப்பிடவில்லை ???
சொல்ல வந்த கருத்தை நன்றாக சொல்லியுள்ளீர்கள். நல்ல விரிவான அலசல்/
நன்றி நண்பர் அத்திரி!!!
வருகைக்கும் , கருத்துக்கும்!
அன்பு நண்பர் அறிவுமணியின் பின்னூட்டம் ஒரு ஆழமான விவாதத்திற்கு வழி சமைக்கிறது.....
அது தொடர்பில் உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்கிறேன் நண்பர் அறிவுமணி.!
நன்றி , வருகைக்கும் , கருத்துக்கும்!
தமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்//// கீற்றில் அதிரிடையானுக்கு அவதூறு வீசும் சிங்களத் தோழர்களுக்கு நான் எழுதியது
//துரோகிகளை கொன்றதை நாம் ஒன்றும் சொல்லவில்லை. //
நீங்களே ஒத்துக் கொண்ட பின்னர் எதற்கு மறு பேச்சு
//நேர்மையானவர்களையும், தோழர்களையும் கூட கொன்றார்கள். //
துரோகத்தில் நேர்மையான துரோகம் என்று ஒன்று இருக்கின்றதா ???
புலிகளுக்கு யாரும் ‘வீரவணக்கம்’ வைக்கவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறோம், மாறாக ’வீரமரணம்’ என்று தான் குறிப்பிட்டுள்ளோம். ///
பச்சிளம் குழந்தை முதல் பாட்டி , பூட்டி வரை சிங்களத்தால் அல்லது உங்கள் தோழர்களால் கொல்லப்பட்டால் புலியாகச் சித்திரித்த நீங்கள்
ஏன் இப்போது வீரமரணம் என்று குறிப்பிடுகின்றீர்கள் ???
//// கடைசி வரை போராடி மரணித்த அணிகளுக்கு தான் எமது முழக்கம்.///
அப்படியானால் கடைசி யுத்தத்திற்கு முதல் வீரமரணம் அடைந்தவர்களை
ஏன் நீங்கள் வீரமரணம் என்று குறிப்பிடவில்லை ???//
அதானே???
நண்பர் வணங்காமண் , அது அவர்களுக்கும் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்??? எல்லாம் தெரியும்!!!
சும்மா வெளிப்பூச்சுக்கு புலியெதிர்ப்புக்காரர்கள்......ஆனால் உள்நோக்கம் வேறு!!
இவர்கள் இப்படிதான் பாலா...புலம்பிக்கொண்டே இருப்பார்கள்..
சிறப்பான பதிவு தொடருங்கள்...
பா. லெமூரியன்...
பாசிச இனத்தில் இருந்து ஐனநாயகம் புலிகளாலும் வராது இடது வலது எந்தசாரிகளாலும் வராது.
ஒருவனை ஒருவன் ஏற்றுக்கொள்வது தான் ஜனநாயகம். சாதியாலும் மதத்தாலும் ஒருவனை ஒருவன் நிராகரிக்கும் இனத்திடம் அவ்வாறு நீண்டகாலமாக பழக்கப்பட்ட இனத்திடம் இருந்தே புலிகளோ கம்னியுஸ்டுகளோ வரமுடியும். பாசிச இனத்தில் இருந்து தோன்றும் அமைப்புகள் சுத்த ஜனநாயகமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது கோமாளியிசம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
Post a Comment