ஒரு புத்தகப்புழுவின் கதை….!!!
Tuesday, October 20, 2009
நன்றாகப் படித்தால் நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கும். நல்ல கம்பெனியில் வேலை கிடைக்கிற போது வாழ்க்கை ஸ்திரமாக இருக்கும்…இதுதான் அவர்களது எண்ணம்.
என் மூத்த அக்கா , பத்தாவதே முடித்திருந்தாலும் படிப்பில் படு சுட்டி….குமுதம் , விகடன் , கல்கண்டு , க்ரைம் நாவல் , சாண்டில்யன் , லஷ்மி , என்று அவள் படிக்காத இதழ்களே இல்லை என்ற அளவிற்கு..
அதனால் என்னையும் அறியாமல் , அத்தகைய வார , மாத இதழ்கள் எனக்கும் பிடித்துப் போயின…….வீட்டில் நான் உட்கார்ந்து கொஞ்ச நேரத்துக்கு மேல் கதை புத்தகம் படித்தால் என் அக்காவுக்கு டோஸ் விழும்…….அதனாலேயே என் அக்கா எனக்கு எந்தப் புத்தகத்தையும் தரமாட்டாள். மீறி எடுத்தால் பிடறியில் தட்டி பிடுங்கிக்கொண்டு போய்விடுவாள்.
அதற்கு நான் கண்டுபிடித்த உபாயம் தான் பூத்தோட்டம் போவது….அங்கே புத்தகங்கள் இரைந்து கிடக்கும். பெரியப்பா பையன் செல்வனும் நன்றாகவே புத்தகம் படிப்பான். அவன் வீட்டில் 6 வது வகுப்பையே நான்கு முறை படித்த பெருமைக்குரியவனாதலால் தண்ணி தெளிச்சு விட்டிருந்தார்கள். அவனுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் என்றால் உயிர். ஆனாலும் ரொம்ப நேரம் அங்க இருக்க முடியாது.. அதனால் வரும் போது டவுசருக்கு உள்ளே ஓரிரு புத்தகங்களை எடுத்து வந்து வீட்டுப் பொடக்காளியில் வைத்து படிக்கும் வழக்கமுண்டு.
நான் வெளியே விளையாடப் போனால் கூட கொஞ்ச நேரத்தில் என் அம்மா தேடிக்கொண்டு வந்துவிடுவார்.
“படிக்காம இங்க என்னடா வெளையாட்டு ?”
அடக்க முடியாத ஆத்திரம் வந்தாலும் அடங்கிக்கொண்டே வீடு வந்துவிடுவேன். புத்தகத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டாலும் படிப்பில் கவனம் செல்லாது….எனக்கென்னமோ பள்ளியில் வாத்தியார் சொல்லும் போதே அனைத்தும் தெரிந்துவிட்டது போலவும் , புத்தகத்தை விரித்து வைத்து வீண் என்பது போலவுமே தோன்றியது. இத்தனைக்கும் நான் தான் பள்ளியில் முதல் மதிப்பெண்.
மக்கடிப்பது எல்லாம் என் அகராதியிலேயே இல்லை. தேர்வுக்கு முதல்நாள் கதை படிப்பதைப் போலவே ஒருமுறை எல்லாவற்றையும் படித்துவிட்டாலே நல்ல மதிப்பெண்கள் எடுக்குமளவிற்கு எனக்கு இயன்றது.
ஒன்பதாம் வகுப்பிற்குப் போனேன். அங்குதான் ஆரம்பித்தது முதல் தலைவலி…….ஆங்கிலம் ….ப்ரசண்ட் டென்ஸ் , பாஸ்ட் டென்ஸ் எல்லாம் செத்த நாயாகவே தோன்றியது. எனக்கு வரவே வராது என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன். அதனால் செத்த நாய் மீது எத்தனை லாரி ஏறினால் என்ன என்கிற அளவில் அந்தப் பாடத்தை ஒதுக்கியே வைத்துவிட்டேன்.
அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் வாங்கும் நான் ,ஆங்கில இரண்டாம் தாளில் மட்டும் அய்யோ பாவம் என்று பாஸ் மார்க் போட்டால் தான் பாஸாகிற ரேஞ்சில் இருந்தேன். கொஞ்ச நாள் பார்த்த தலைமையாசிரியர் ( அவர்தான் ஆங்கிலம் எடுப்பவரும் கூட ) வீட்டுக்கு வரச்சொன்னார்……திட்டினார். ஏன் ஆங்கிலம் ரெண்டாம் தாள் மட்டும் இப்படிப் பண்ணறே? தினமும் ஸ்கூல் முடிஞ்சு ஒருமணி நேரம் இருந்து படிச்சிட்டுப் போ என்று சொன்னார்.
வேண்டா வெறுப்பாக தலையாட்டினேன்…மகிழ்ச்சியில் தலையாட்டுவதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. காரணம் இருக்கிறது.
இப்போதெல்லாம் , குமுதமும் , விகடனும் படிப்பதற்கு சிரமமேதுமில்லை. எட்டாம் வகுப்பு வரை சின்ன நோட்டுதான். ஆனால் ஒன்பதாம் வகுப்பில் பெரிய நோட்டாகத் தந்தார்கள். அதனால் அதற்குள்ளே வைத்து குமுதத்தையும் , விகடனையும் படிப்பது ரொம்பச்சவுகரியம்.
வீட்டிலிருந்து பள்ளி அரைமணி நேர நடைத் தூரம்…அங்கே இங்கே விளையாடிக்கொண்டு வீடுவர ஐந்தாகிவிடும். அதன் பிறகு ஒரு மணி நேரம் புத்தகங்களின் துணை…..அதற்கு மேல் படிக்க முடியாது. அதற்கும் ஒரு சுவாரஸ்ய காரணமிருக்கிறது. ஆறுமணிக்கு மேல் லாந்தர் விளக்குதான். ( ஆற்காட்டாருக்கு வேலை அதிகமில்லாத காலம்) …லாந்தர் விளக்கில் படிக்க வேண்டுமானால் புத்தகத்தை மல்லாக்க விரித்துதான் படிக்கவியலும்….அப்படிப்படித்தால் உள்ளிருக்கும் குமுதம் வெளியே தெரிந்துவிடும்…..அதனால் வெளிச்சத்தில் மட்டுமே அந்த டெக்னிக் செல்லுபடியாகும்.
இப்போ தினமும் ஒரு மணி நேரம் தலைமையாசிரியர் வீட்டுக்கு போய் வந்தால் படிப்பு கெட்டுடுமே என்ற கவலைதான் (!!!).
இப்படியாக எனக்கும் , வார/மாத / நாவல்களுக்கும் இடையிலான இடைவெளி குறைய ஆரம்பித்தது.
அதன் பிறகு கல்லூரி……….கல்லூரியில் சேர்ந்த பிறகும் கூட பேருந்துகளில் ஏறி அமர்ந்து கொஞ்சம் கொஞ்சம் படிப்பேன். மீண்டும் எனக்கும் , புத்தகங்களுக்குமிடையிலான உறவு துளிர்க்க ஆரம்பித்தது.
புரிகிறதோ , புரியவில்லையோ ஒரு ஹிந்து பத்திரிக்கையையோ , இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையோ வாங்கி ரெண்டு பெரிய நோட்டு மற்றும் ஒரு தட்டையான டிபன் பாக்ஸ் இவற்றுக்கு நடுவில் வைத்து விடுவேன். உள்ளே சில நாவல்களும் இருக்கும். பி.எஸ்.ஜி டெக் என்பது பாலிடெக்னிக்கிற்கும் , இன் ஜினியரிங் கல்லூரிக்கும் ஒரே பில்டிங்தான்.
கபேடீரியா என்ற ஒரு உணவு விடுதி இருக்கும். அதனருகில் நிறைய மரங்கள் இருக்கும். கொஞ்சம் உயர்தர கல்லூரியாதலால் அங்கே நெறைய சேட்டுப் பிள்ளைகளும் , வெள்ளைத் தோல் பெண்களும் அதிகம் நடமாடுவதுண்டு.
நானும் என் நண்பர்களும் ஏதாச்சும் ஒரு சிற்றுண்டி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அந்த ஹிந்துப் பத்திரிக்கையை எடுத்து வைத்து படிப்பது போல் பாவ்லா செய்வோம். எதற்கு என்று விளக்கச் சொன்னீர்களானால் அனேகமாக நீங்கள் 90 வயதிற்கு மேற்பட்டவராகவோ , 10 வயதுக்கு உட்பட்டவராகவோத் தான் இருக்கமுடியும். ஸோ நோ மோர் எக்ஸ்பளனேசன்.
கொஞ்ச நேரம் சீட்டை விட்டு அகலவில்லை என்றால் கேபடீரியா மானேஜர் வந்து எத்தனை தடவ தான்ப்பா சொல்றது ? இது பாலிடெக்னிக் பசங்களுக்கு இல்லைப்பா , இன் ஜினிரியங் பசங்களுக்கு என்று அதட்டுவார். சரி என்று கிளம்பி விடுவோம்.
என் பேருந்து 4 மணிக்கு விட்டால் ஆறுமணிக்குதான்.
அனேகமாக 4 மணி பேருந்தை பிடிக்கவேண்டுமானால் ஒரு க்ளாஸை கட்டடித்தால் மட்டுமே முடியும். அதனால் அதை முடித்து விட்டு ஒரு க்ரைம் நாவலோ , பாக்கெட் நாவலோ வாங்கிவிடுவேன்..அல்லது முந்தைய நாள் புத்தகம் மீதமிருக்கும். டி.ஜி பேக்கரி என்று நினைக்கிறேன். பேக்கரி பெயர் நினைவில் இல்லை. ஆனால் அந்த பேக்கரி முதலாளி முகம் நன்றாக நினைவிருக்கிறது. அதற்கும் காரணமிருக்கிறது.
ஒரு க்ரிம் பன் ( 1.50 ரூபாய் ) வாங்கி சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை அங்கே அமர்ந்து புத்தகத்தை படித்து விட்டு காஷியரிடம் வந்து ஐந்து ரூபாய் நோட்டை நீட்டுவேன்……இது தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஒருநாள் அந்த முதலாளி சொன்ன ஒரு வாக்கியம் இன்றும் என் மனதில் வட்டமிடுகிறது.
“தம்பி , நீங்க தெனமும் 1.50 ரூவா பன்ன சாப்பிட்டுட்டு ஒருமணி நேரம் உக்காந்து புஸ்தகம் படிச்சிட்டு ,ஐந்து ரூபாயக் கொடுத்து சில்லரை வாங்குறதுன்னா இந்தக் கடைக்கே வரவேணாம்”னு சொன்னார். அவமானத்தில் துடிதுடித்துப் போனேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்…அதற்குப் பிறகு பீளமேடு ஏரியாவில் ஒரு பேக்கரியில் கூட டீயோ , காபியோ நான் குடிக்கப்போனதில்லை.
என்.எம்.பி பேக்கரி விதிவிலக்கு..அங்கே போவதெல்லாம் அடுத்தவன் காசில் தான் என்பதால் சாப்பிடுவதற்கு கணக்குப் பார்ப்பதில்லை. நம் நண்பர்கள் நிறையப் பேருக்கு தம் அடிக்கும் பழக்கமுண்டு என்பதால் துணைக்கு என்னைக் கூப்பிட்டுச் செல்வார்கள். அம்புட்டுத்தான்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு நேரமின்மையாலும் , இரண்டாம் மூன்றாம் வருட நண்பர் , நண்பிகளாலும் புத்தகங்களுக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது…….நாட்பட , நாட்பட வாசிக்கும் பழக்கமும் குறைந்து போயிற்று.
இப்போதும் மீண்டும் நேரம் கிடைக்கத்துவங்கியிருக்கிறது. இடையில் நிறைய எழுதினேன். இப்போ படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.........இப்படியே எனக்கும் புத்தகங்களுக்குமான தொடர்பு அவ்வப்போதைய ஏற்ற இறக்கங்களோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நீங்களும் நிறையப் படியுங்கள்.....என்னைப் போல க்ரைம் நாவல்களைப் படிக்காதீர்கள்....நல்ல நல்ல புத்தகங்களைப் படியுங்கள். எனக்கெல்லாம் நல்ல புத்தகங்கள் கிடைக்கவில்லை....உங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது.......!
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். நீங்கள் ஆயிரம் செமினார்களுக்குப் போய் நிறையக் கற்றுக்கொள்வதை விட கிடைத்த புத்தகங்களைப் படியுங்கள் , வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளலாம்.வாழ்க்கையைக் கற்றுக்கொண்டால் வாழ்வு நமக்கு தேவையானவற்றைக் கற்றுக்கொடுக்கும்.
உண்மைதானே?
'‘.
16 பின்னூட்டங்கள்:
அருமையான இடுகை! இதற்குத்தான் இத்தனை நாள் இடைவெளி விட்டீங்களா? இளமைக்காலங்களை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.
//நீங்களும் நிறையப் படியுங்கள்.....என்னைப் போல க்ரைம் நாவல்களைப் படிக்காதீர்கள்....நல்ல நல்ல புத்தகங்களைப் படியுங்கள். எனக்கெல்லாம் நல்ல புத்தகங்கள் கிடைக்கவில்லை....உங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது.......!//
எனக்குக்கூட இந்த ஆதங்கம் உண்டு!
///ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். நீங்கள் ஆயிரம் செமினார்களுக்குப் போய் நிறையக் கற்றுக்கொள்வதை விட கிடைத்த புத்தகங்களைப் படியுங்கள் , வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளலாம்.வாழ்க்கையைக் கற்றுக்கொண்டால் வாழ்வு நமக்கு தேவையானவற்றைக் கற்றுக்கொடுக்கும்///
நல்ல புத்தகங்கள் ஒரு நல்ல ஆசிரியரை விட சிறந்தவை என்று சொல்வார்கள். நீங்கள் இட்ட இந்த இடுகை அதை எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறது.
//நீங்கள் ஆயிரம் செமினார்களுக்குப் போய் நிறையக் கற்றுக்கொள்வதை விட கிடைத்த புத்தகங்களைப் படியுங்கள் //
உண்மை
குமுதம் , ஆனந்தவிகடன்ல கேள்வி கேட்டிருந்தா நூத்துக்கு நூத்திபத்து எடுத்திருப்பிங்க போலயே!
நானும் இதே மாதிரி ஒளிச்சு வைச்சு கதை புத்தகம் படித்தவன் தான்...
//ஆனால் ஒன்பதாம் வகுப்பில் பெரிய நோட்டாகத் தந்தார்கள். அதனால் அதற்குள்ளே வைத்து குமுதத்தையும் , விகடனையும் படிப்பது ரொம்பச்சவுகரியம்.//
:-))
நான் கொஞ்ச நேரம் அமைதியா படிச்சுட்டு இருந்தாலே சந்தேகம் வந்து தலைக்கு பின்னாடி நின்னு பார்த்துட்டு, பின்னநதலையில ஒரு அறைவிட்டு கதை புத்தகத்தை தூக்கிட்டு போய்டுவாங்க !!! :(
ம்ம்.. பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முந்துன நாள்ல கூட மாலைமதியும், ராஜேஸ்குமார் நாவலும் படிச்சுட்டு போன காலம் அது....
:)
bala,
same blood.
But in home no body care abt me since I'm first rank.
Looks recap of mine
:))
அருமையான இடுகை! இதற்குத்தான் இத்தனை நாள் இடைவெளி விட்டீங்களா? இளமைக்காலங்களை கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.
/
நன்றி நண்பர் தமிழ்நாடன்.......இடைவெளி என்னமோ உண்மைதான்.....அதற்கான காரணத்தை தொல்லைப்பேசியில் பேசுவோம்....
****
எனக்குக்கூட இந்த ஆதங்கம் உண்டு!/
அப்போதெல்லாம் நூலகங்களும் கூட அவ்வளவாக இல்லை...ஏதேனும் புத்தகம் வாங்க வேண்டுமானால் டவுன்ஹால் விஜயா பதிப்பகத்திற்கோ இல்லை சேரன் புக் ஹவுஸுக்கோ தான் போக வேண்டும் ( கோவை)...
***
நல்ல புத்தகங்கள் ஒரு நல்ல ஆசிரியரை விட சிறந்தவை என்று சொல்வார்கள். நீங்கள் இட்ட இந்த இடுகை அதை எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறது./
நன்றி...நான் படித்த புத்தகங்கள் எனக்குச் சொன்னதை நான் இங்கே சொன்னேன். அவ்வளவுதான்.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பரே..
உண்மை//
நன்றி அய்யா , வருகைக்கும் , கருத்துக்கும்...
குமுதம் , ஆனந்தவிகடன்ல கேள்வி கேட்டிருந்தா நூத்துக்கு நூத்திபத்து எடுத்திருப்பிங்க போலயே!/
எலே...என்ன இப்பிடிச்சொல்லிப்புட்டீக? நூத்துக்கு ஆயிரமே எடுத்துருவோம்ல?
நண்றி அண்ணே..வருகைக்கும் , கருத்துக்கும்!
நானும் இதே மாதிரி ஒளிச்சு வைச்சு கதை புத்தகம் படித்தவன் தான்...
/
அப்படியா.............அதான் நமக்குள்ள அலைவரிசை ஒத்துப்போகுதோ....?
***
நான் கொஞ்ச நேரம் அமைதியா படிச்சுட்டு இருந்தாலே சந்தேகம் வந்து தலைக்கு பின்னாடி நின்னு பார்த்துட்டு, பின்னநதலையில ஒரு அறைவிட்டு கதை புத்தகத்தை தூக்கிட்டு போய்டுவாங்க !!! :(//
அந்த மேட்டருல , நான் எஸ்கேப்பு...அப்பவே டெக்னிக் எல்லாம் கத்து வச்சிருந்தேன்..
****
ம்ம்.. பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முந்துன நாள்ல கூட மாலைமதியும், ராஜேஸ்குமார் நாவலும் படிச்சுட்டு போன காலம் அது....
:)//
மாலைமதின்னு சொன்னதும் தான் இன்னும் பழைய நெனைப்பெல்லாம் வருது...எட்டாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மாலைமதில தான் புஷ்பா தங்கதுரை கதை வரும்......ஒளிச்சி வச்சி , ஒளிச்சி வச்சி நானும் செல்வனும் குருப் ஸ்டடி படிப்போம்.......ம்ஹூம்.
அப்புறம் படுதலம் சுகுமாரன் , அப்புறம் மோகன் தாஸ் இன்னும் நெறைய புதுப்புது எழுத்தாளர்கள்.........
எனக்குப் பிடிச்ச இன்னொரு கதைப்புஸ்தகம் "ராணி முத்து..." !!!
அதுலே ஜெ.ஜெ. வோட முதல் பக்க ஒவியம்தான் படு ஜோரு...
இன்னும் சொல்லிட்டே போலாம்..
ஆனா இப்ப எல்லாம் எல்லா வார இதழ்கள்லேயும் வெறும் சினிமா , சினிமா , சினிமா தான்...தெகட்டிருது.....!
இப்ப இருக்குற பசங்க எல்லாம் டீவி பொட்டிலயும் , வீடியோ கேம்ஸ்லயும் மூழ்கிடுறாங்க...உலக அறிவே தெரியறதில்ல....( புஷ்பா தங்கதுரை கதைல என்னடா உலக அறிவுன்னு விஷமமா கேக்கக் கூடாது....ஆமாம்...!)
:)
bala,
same blood//
same blood??????????? :)
****
But in home no body care abt me since I'm first rank.
//
அந்த விஷ்யத்தில நான் துரதிஷ்டசாலி...நான் பர்ஸ்ட் ரேங்காவே இருந்தாலும் படிபடின்னு நச்சிடுவாங்க.....
:)
Looks recap of mine
:))//
அனேகமாக 90களில் குழந்தைப்பருவத்தில் இருந்த நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கும்னு நெனைக்கிறேன்..
நன்றி நண்பர் யாசவி...வருகைக்கும் , கருத்துக்கும்!!!
நிறைய நாட்களுக்கு பழசை நினைத்து சில துளிகள் கண்ணீர் விட்டேன். கடந்த கால தவறுகளை எண்ணி வருந்துவதை விட இதுப்போன்ற சுவாரஸ்யங்கலை அசை போடுவது சுகமளிக்கும். நன்றிகள் பல
நல்ல பகிர்வு !!!
பத்தாவது முடித்ததுக்கு அப்பறம்தான் நூல்கள் படிக்கும் ஆவல் வந்தது, புதினம், கதை படிப்பது நேரத்தை வீணடிக்கும் வெட்டிவேலை என்று நினைத்த காலம் :)
அதனால் அப்பொழுது ஈர்த்தது பெரியார் பற்றிய புத்தகங்கள் பிறகு தேவநேயர் பற்றிய நூல்கள்.
இது எல்லாம் உங்க பதிவ படிச்சிட்டு நா எப்ப புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன்னு நினைக்குரப்ப தோன்றியது. :))
தல அருமையான
மலரும் நினைவுகள் பதிவு..
நான் ஒரு கிரைம் நாவல் தான் இதுவரை படிச்சுருக்கேன்,.. 'waste of time" ன்னு விட்டுடுவேன் " .. ஆனா நீங்க பின்னிருக்கீங்க ..
தல நீங்க TG பேக்கரிக்கு பதிலா NMB லையே இத பண்ணி இருக்கலாம்.
அப்புறம், cafeteriya ல வாங்கறது மட்டும் தான் அங்க டெஸ்க்ல சாப்டனும் , அது நம்ம வீட்டு சாப்பாட்டுக்கு ஆனா இடம் இல்லன்னு தான் canteen manager போக சொல்லுவார் ..
உங்களுக்கே தெரியும் 'Tech பசங்களுக்கு NMB ஒரு கோயில் மாத்திரினு..நீங்க 1995 to 1998 க்கே அழைச்சுட்டு போய்டீங்க..
அப்பிடியே
'டெக் சாந்தி' தியேட்டர், லைப்ரரி, Intrams, calypso, Tech day nu லைனா எல்லா ரகலைகளையும் எழுதுங்க
இன்னும் இது மாதிரி எதிர் பாக்கிறோம்..
நிறைய நாட்களுக்கு பழசை நினைத்து சில துளிகள் கண்ணீர் விட்டேன். கடந்த கால தவறுகளை எண்ணி வருந்துவதை விட இதுப்போன்ற சுவாரஸ்யங்கலை அசை போடுவது சுகமளிக்கும். நன்றிகள் பல//
நண்றி நண்பர் நவீன். நீங்கள் சொல்வது உண்மைதான்.
நல்ல பகிர்வு !!!.//
நன்றி ஞானப்பித்தன் அய்யா.
***
பத்தாவது முடித்ததுக்கு அப்பறம்தான் நூல்கள் படிக்கும் ஆவல் வந்தது, புதினம், கதை படிப்பது நேரத்தை வீணடிக்கும் வெட்டிவேலை என்று நினைத்த காலம் :)//
இதுக்கு நீங்க என்னை வெட்டிப்பையன்னே சொல்லி இருக்கலாம்.
***
அதனால் அப்பொழுது ஈர்த்தது பெரியார் பற்றிய புத்தகங்கள் பிறகு தேவநேயர் பற்றிய நூல்கள்.
இது எல்லாம் உங்க பதிவ படிச்சிட்டு நா எப்ப புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன்னு நினைக்குரப்ப தோன்றியது. :))//
பரவால்லே.......உங்க பழைய நெனப்பை கெளப்பிவிடவாவது என் பதிவு உதவி இருக்கே....
:)
தல அருமையான
மலரும் நினைவுகள் பதிவு..//
நன்றி தல....
நான் ஒரு கிரைம் நாவல் தான் இதுவரை படிச்சுருக்கேன்,.. 'waste of time" ன்னு விட்டுடுவேன் " .. ஆனா நீங்க பின்னிருக்கீங்க ..
தல நீங்க TG பேக்கரிக்கு பதிலா NMB லையே இத பண்ணி இருக்கலாம்.//
அதுலயும் ரெண்டு சிக்கல் இருக்கே......
1. க்ரைம் நாவல் அங்க உட்கார்ந்து படிச்சா பசங்க ஓட்டுவாங்க.
2. ஊருக்கு போகும் போது ரோடு க்ராஸ் பண்ண வேண்டியதில்ல....
***
அப்புறம், cafeteriya ல வாங்கறது மட்டும் தான் அங்க டெஸ்க்ல சாப்டனும் , அது நம்ம வீட்டு சாப்பாட்டுக்கு ஆனா இடம் இல்லன்னு தான் canteen manager போக சொல்லுவார் ..//
நன்றி.....சரியா நியாபகம் இல்லை...நினைவு படுத்தினதுக்கு நன்றி...
****
உங்களுக்கே தெரியும் 'Tech பசங்களுக்கு NMB ஒரு கோயில் மாத்திரினு..நீங்க 1995 to 1998 க்கே அழைச்சுட்டு போய்டீங்க..
அப்பிடியே
'டெக் சாந்தி' தியேட்டர், லைப்ரரி, Intrams, calypso, Tech day nu லைனா எல்லா ரகலைகளையும் எழுதுங்க//
இன்திராம்ஸ் , 1998 மறக்கவே முடியாதில்லையா????? எழுதுவோம்....எழுதிடுவோம்.....டெக் சரித்திரத்துலயே மறக்க முடியாத அனுபவம் ஆச்சே....
***
இன்னும் இது மாதிரி எதிர் பாக்கிறோம்..//
நன்றி....நாங்களும் தான்....
Post a Comment