எங்கூரு மாரியாத்தா - மாகாளியாத்தா நோம்பி...!

Wednesday, October 28, 2009

நெம்ப நாளா நம்மூருல நடக்குற சேதியொண்ணையும் எழுதலயேன்னு எங்க பக்கத்தூரு ராசண்ணன் நெம்ப வருத்தப்பட்டுகிட்டாருங். அதுனால நம்மூருப் பழம கொஞ்சம் பேசுலாமுன்னு இருக்கறனுங்க். ஊர உட்டு வந்து வெகு நாளாச்சிங்களள…..அதுனால பழய பழம மாறிக்கீறி போயுருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுப் போடுங்க…..!

சரிங்களா?

இதேன் அடிக்கடி இப்பல்லாம் பதிவு போடரதில்லீன்னு அல்லாரும் தபால் மேல தபாலா போட்டுத்தள்ளுறாங்க். வேலயிருக்குதுன்னும் , பொழுதில்லீனும் பொய் சொல்ல மாட்டணுங்ணா நானு. உள்ளபடி சொல்லப்போனா எழுதறதுக்கிப்பல்லாம் தோணுறது இல்லியா இல்ல சரக்கில்லயான்னு தெரியீலிங்ணாங்கறன். ஆனா, கமுயூட்டரு முன்னாடி உக்காந்தமுன்னா கை நாலு எழுத்துக்கப்புறம் நகரவே மாட்டீங்கதுங்கொ. இதென்ன எழவுண்ணே தெரியலே போங்கொ.

நம்மூருக் கத சொல்லோணும்னா ….எதச் சொல்லலாம்…? சரி எங்கூரு மாரியாத்தா நோம்பியப் பத்தி சொல்லலாமுங்களா?




மாரியாத்தா சாமி , அலங்காரத்தோட!- புகைப்படம் நன்றி : இளவஞ்சி!

எங்கூரு மாரியாத்தா கோயிலு ஊருக்குத் தெக்கால எங்கூட்டுக்கு நேரு பின்னாடி இருக்குதுங்க. நடுவால மாரியாத்தா கோயிலு , கெழவறம் ப்ளேக்கி மாரியாத்தா கோயிலு , மேவறம் மாகாளியாத்தா கோயிலு….மாரியாத்தா கோயுலுக்கும் மாகாளியாத்தா கோயுலுக்கும் நடுவால வீரமாச்சியாத்தா கோயுலு…..

வருசமொருக்கா வைகாசி மாசம் நோம்பி சாட்டுவாங்க. அதென்ன சாட்டுறது ? சித்திரத் திருவிழான்னா மதுரெயில வருசா வருசம் ஆட்டமேட்டிக்கா நடக்குதல்லங்கோ…சாட்டு நோம்பின்னு சொன்னா அப்படி வருசா வருசம் இன்ன தேதி , இன்ன கெழம க்கு நடக்காதுங்க..பெரிவீளா பாத்து இந்த வருசம் சாட்டுலாம்னா சாட்டுவாங்க…இல்லீன்னா இல்லதானுங்க….

என்க்கு அறிவு தெரிஞ்சி 1990 ஓ என்னமோ கோபுர வேல பண்ணி கும்பாபிஷேகம் பண்ணுனாங்க மாரியாத்தா கோயுலுல….அதுக்கப்பறம் நாலு வருசம் நோம்பி சாட்டுனாங்க…அப்பறம் நின்னு போச்சி போங்க……இப்ப கோயிலு மதிலு வேல நடக்குதுங். அது முடிஞ்சி கும்பாபிஷேகம் பண்ணி அதுக்கப்பறந்தேன் நோம்பி , கீம்பி உண்டு போங்க.

எங்கூருல கவண்டமாரு , நாயக்கமாரு , பலவட்டரை சாதி இவியெல்லாம் மாரியாத்தா கோயிலுல சாமி கும்புடுவாங்க்...குரும்பருன்னு ஒரு சாதி உண்டுங். அவிய கன்னடம் பேசுவாங்க். அவியெதான் மெசாரிட்டி எங்கூருல. அவிய மகாலட்சுமி கோயிலுல சாமி கும்புடுவாங்க். ஐப்பசி மாசம் குரும்பரு நோம்பி நடந்தா வைகாசி மாசம் ஊருப்பொது நோம்பி நடக்குமுங்க……….இந்த நோம்பியா அந்த நோம்பியாங்கற சண்டையிலயே நெறயா வருசம் நோம்பியே நடக்காது..கெரமாத்துல இருந்தா இதல்லாம் உங்களுக்கும் பழக்கமாயிருக்குமுங்க.!


முதல்லா பெரீவிய எல்லாம் உக்காந்து நோம்பி கீம்பி சாட்டுறதுன்னு முடிவெடுத்துட்டாங்கண்ணா , எல்லாருக்கும் குசியோ குசிதான். அடுத்த ஒரு மாசத்துக்கு ஊரு எளசுங்க எல்லோரும் ஒரு மார்க்கமாத்தேன் திரிவாங்க.

மொத வேலயே சக்கிலீனை கூப்புட்டு பறையடிக்க மொத்தமா ஒரு ரேட் பேசிடுவாங்க.ரெண்டு வழுவு இருக்குதுங்க. தெகொட்டு வளவுன்னு ஒண்ணு , அண்ணாநகர்னு ஒரு வழுவு.அவியெல்லாம் தெலுங்கு பேசுவாங்க. தப்படிக்கற செவத்தன் , பறையடிக்கிற பாவாடை இப்படி பலபேரு. பேரு காவகத்துல இல்லீன்னாலும் மூஞ்சியெல்லாம் நேத்துப் பாத்தாப்பல இருக்குது போங்க.

ஏழு நாளத்து சாட்டு , பாஞ்சு நாளத்து சாட்டுன்னு ரெண்டிருக்குத்ங். சாட்டி ஏழாநேத்து நோம்பி வச்சா ஏழு நாளத்து சாட்டு…பாஞ்சாம்(15) நாளு நோம்பி வச்சா பாஞ்சாம் நாளத்த சாட்டு…என்னிக்கு நோம்பின்னு முடிவு பண்ணிப் போட்டாங்கண்ணா எண்ணி ஏழு நாளுக்கோ இல்லாட்டி பாஞ்சு நாளுக்கோ முன்னாடி ஊருத் தண்டக்காரனும் , பண்டாரமும் தெருத்தெருவா போயி தப்புக்கொட்டி இன்ன தேதி , இன்ன தேதி , இன்ன நேரம் இன்னின்னாரு முன்னிலைல, இன்னின்னாரு பேசினபடி, இப்பிடியிப்ப்டி நோம்பி சாட்டியிருக்குதுங்கோன்னு சொல்லிப் போட்டு புள்ளையாரு கோயிலுக்குப் போயி தேங்காயொடைச்சி கப்பூரங் காட்டி சாமிக்கும்புட்டுட்டு முடிச்சிக்குவாங்க…



தப்பாக்காட்டக் காரங்கோ - புகைப்படம் நன்றி : மீனாக்ஸ்

அவ்வளவேதானுங்…..நோம்பி சாட்டியாச்சி…..!



ஊரே சுருசுருப்பாயிருமுங்க அதுக்கப்பறம்……பெரீவிய எல்லாஞ் சேந்து ஒவ்வொரு கமிட்டியாப் போடுவாங்க். அதுல மொதல்ல போடற கமிட்டி எது தெரியுமுங்களா? மங்கிலிய வரி வசுலிக்கிற கமிட்டிங்க.ஆறுச்சாமி வாத்தியாரு , மணியகாரரு , படிச்ச எளவயசுப்பசங்க நாலைஞ்சி பேரு இவியல்லாம் சேந்து ஊருல ஒருத்தரு மிச்சமுடாமா மங்கிலிய வரி வசூல் செஞ்சி போடோணும். ஒரு மாங்கலியத்துக்கு ( மாங்கல்யம் – தாலி ) ஒரு வரி , ஒரு வரின்னா அம்பது ரூவாயோ ஒரு பெரீய நோட்டோ அப்பப்ப மாறுமுங்க…கோயிலுக்குன்னு நெறைய பணமிருந்தா வரி கம்மியாப் போடுவாங்க……………..கொஞ்சம் கட்டையாயிருந்தா வரி போட்டுத் தாளிச்சிடுவாங்க……


அப்புறம் விழாக்கமிட்டி , கெரகம் / கம்பம் அமைப்பு கமிட்டி , அம்மனழைப்பு கமிட்டி , மைக் செட்டு கமிட்டி , பந்தலமைப்புக் கமிட்டி……..பூச்சட்டி அழைப்பு கமிட்டி இப்படி கமிட்டி மேல கமிட்டியா இருக்கும். ….இதுல நாஞ்சம்பந்தப்பட்ட கமிட்டியொண்ணு இருக்குதுங்க.
அதென்னன்னு கேக்கறீங்களா?

அதான் மைக் செட்டு , லைட்டு , வரவேற்பு வளைவு கமிட்டி……

எல்லா வருசமும் சூலூரு சக்தி மைக் செட்டுக்காரங்க மொத்தமா எடுத்துக்குவாங்க…அவீளுக்கு போக்குவரத்து , சோறு , மைக்செட்டு ரூமூ இதப்பாத்துகறது தான் நானு , அப்பறம் என் சோட்டுக் காரங்கப் பசங்க இவீளுக்கு வேலை. மூணா நேத்து நோம்பின்னு நெனக்கறேன்…..எல்லோரும் 9 – 10 வது படிக்கிறோம்……சக்தி மைக் செட்டுக்காரங்க ஊட்டுல நோம்பியப்போ ஏதோ விசேசம்..அதுனால அவிய மைக் செட்டுக் கட்டமுடியாதுன்னு சொல்லிப் போட்டாங்க.

நம்ம பசங்கள்ள ஒருத்தனோட ஐப்பச்சி ஊரு பள்ளபாளயம்..
“அடேய் , எங்க மாமனொருத்தரு பள்ளபாளயத்துல மைக் செட்டு வச்சிருக்கறாரு…….நம்மளே அதெய எடுத்துட்டு வந்து ஊரெல்லாம் கட்டி அமர்க்களப்படுத்திரலாம்டா” ன்னு அவஞ் சொன்னான்…………..அதுல கொஞ்சம் காசயும் மிச்சப்பருத்திலாம்னு ஆச வர , ரைட்டுன்னு முடிவு செஞ்சி எங்கப்பாருகிட்ட சொன்னோம்..

“அடத் துப்புக்கெட்டவுனுகளா…..அதல்லாம் பெரிய மனுசங்க செய்யற வேலை. பேச்சி வாக்கெல்லாம் சுத்தமா இ்ருக்கோணும்…நேரங்காலமெல்லாம் சரியா இருக்கோணும்..என்ற பேர கெடுத்துப்போடாதீங்கடா” ன்னார்……….

எங்கம்மாவோ “படிக்குற வேலய உட்டுப்போட்டு உங்குளுக்கெதுக்குடா இந்த வேலயி” ன்னாங்கோ…..

”ஊருப் பல்லுல உழுகாதீங்கடா…” ன்னுச்சி எங்க பாட்டி….!
எதயுக் கேக்கற நெலமியில நாங்கில்லை.

ஊருல ரேடியா ரிப்பேரு பண்ணற கணேசன் எங்கூட்ல தான் வாடகைக்கு கடை போட்டுருந்தாரு……அவருகிட்ட சொல்லி அவுருமூலமா “மைக் செட்டு “ கான் ட்டிராக்ட்டு எடுக்க முயற்சி பண்ணினோம். கான் டிராக்ட்டும் கெடச்சது……………………

அதுக்கப்பறந்தேன் , ஊருப்பல்லுல உழுகாதீங்கடான்னு எங்க பாட்டி சொன்னதுக்கு அர்த்தமும் புரிஞ்சது…சின்ன வயசுலே நோம்பியப்போ தொடர்ச்சியா அஞ்சு நாளைக்கு வெடிய வெடிய கொஞ்சங் கூட சந்தோஷமேயில்லாம முழிச்சிருந்த நரக வேதனை அந்த நோம்பில தான் நடந்துது…

அப்பிடியென்ன நடந்தது… ?

பெரிய பதிவா போயுருச்சிங்களா ….அதுனால அடுத்த பதிவுல சொல்றனுங்….என்ன சரிதானுங்களேன்?

( உள்ளத உள்ளபடியே சொல்லுறது தான் நம்ம நோக்கமுங்க. அதுனால சாதி சொல்லி மனுசங்கள குறிப்பிடுறதுல எனக்கு உடம்பாடே இல்லேன்னாலும் கதயின்ற அளவுல படிக்கோணும்ன்னு கேட்டுக்கறனுங்க சாமியோவ்....!)

16 பின்னூட்டங்கள்:

மதிபாலா October 28, 2009 2:17 AM  

வழக்கம் போல தமிழ்மனத்துக்கும் எனக்குஞ்சண்டை ஏத்துக்க மாட்டேங்குது....!

அதுனால நமக்கு நாமே.

தமிழ் நாடன் October 28, 2009 4:09 AM  

படிச்சி போட்டேங்கண்ணா!

ரொம்ப சுவாரசியமா போகுது. நோம்பிய சீக்கிரம் முடிங்க! அப்புறம் அந்த கெடாவெட்ட மறந்திடாதிங்கண்ணே!

மதிபாலா October 28, 2009 4:31 AM  

படிச்சி போட்டேங்கண்ணா!

ரொம்ப சுவாரசியமா போகுது. //

அப்படியா...நன்றீங்.


***

நோம்பிய சீக்கிரம் முடிங்க! //

அதெல்லாம் முடியாது.....இன்னும் நாலு பதிவுக்கு மேட்டரு கெடச்சிருக்குது ....வுட்டுருவனா????

இழுழுழுழுழுழுழ்ழுழுழுழுழுத்தற மாட்டனா...

***

அப்புறம் அந்த கெடாவெட்ட மறந்திடாதிங்கண்ணே!/

மாரியாத்தா கோயில்ல கெடா வெட்ட மாட்டாங்கண்ணா...வெஜிடேரியன் சாமி....மொளப்பாரி மட்டுந்தேன்!

நாகா October 28, 2009 5:25 AM  

அண்ணா, உங்குளுக்கு எந்த ஊருங்ணா? நம்முளுக்கு உடன்பேட்டைங்ணோவ்..

க.பாலாசி October 28, 2009 5:29 AM  

//இந்த நோம்பியா அந்த நோம்பியாங்கற சண்டையிலயே நெறயா வருசம் நோம்பியே நடக்காது//

இதுக்குண்ணேத்தான் ஊருல நாலு பெருசுங்க இருக்குமே. நீங்க சொல்றத வச்சி பார்த்தா ஈரோட்டு பக்கமா ஏதோ ஒரு கிராமத்துல நடக்கிற மாதிரி இருக்கு.

இயல்பா பேச்சு வழக்குல உங்க எழுத்துநடை பிடிச்சிருக்கு...

க. பாலாசி (ஈரோடு)

பதி October 28, 2009 8:21 AM  

முடிந்த அளவு பேச்சு நடையில் வந்துள்ளது !!!!

படிக்கும் போது சாதி குறித்து தோன்றியவற்றை நீங்கள் பின்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதால், இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை !!!

உங்களுக்கு தனிமடல் ஒன்று இட்டு சில நாட்கள் ஆகின்றது...

மதிபாலா October 28, 2009 8:43 AM  

அண்ணா, உங்குளுக்கு எந்த ஊருங்ணா? நம்முளுக்கு உடன்பேட்டைங்ணோவ்../

உடம்பேட்டைங்களா , அதெங்கிருக்குதுங்கோ? நானு கோயமுத்தூருங்ணா....

நன்றி வருகைக்கும் , கருத்துக்கும் நண்பர் நாகா.

மதிபாலா October 28, 2009 8:46 AM  

இதுக்குண்ணேத்தான் ஊருல நாலு பெருசுங்க இருக்குமே. நீங்க சொல்றத வச்சி பார்த்தா ஈரோட்டு பக்கமா ஏதோ ஒரு கிராமத்துல நடக்கிற மாதிரி இருக்கு.//

அடப்போ கண்ணு, சண்டையே அவீளுக்குள்ளதான...அப்பறமாரு போயி சமாதானப்பருத்தறது?

***

இயல்பா பேச்சு வழக்குல உங்க எழுத்துநடை பிடிச்சிருக்கு...

க. பாலாசி (ஈரோடு)//

நன்றி க.பாலாசி........வருகைக்கும் கருத்துக்கும்...நிறைய பேருக்கு இந்த பேச்சு வழக்கு புரிவதில் சிரமம் இருக்கும் என்று நினைக்கிறேன்....

ஏதாச்சும் கொஸ்டீன் இருந்தா சொல்லிப்போடுங்ணா , பின்னூடட்த்திலயே வெளக்கிப்போடறருணுங்.

மதிபாலா October 28, 2009 8:50 AM  

முடிந்த அளவு பேச்சு நடையில் வந்துள்ளது !!!!//

ஒரு சின்ன திருத்தம்...

என்னால் முடிஞ்ச அளவு...நம்ம பழமபேசியண்ணம் பாத்து கொஞ்சம் திருத்தினா அல்லாருக்கும் புரிஞ்சே போகும்போங்க..

***

படிக்கும் போது சாதி குறித்து தோன்றியவற்றை நீங்கள் பின்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதால், இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை !!!//

நன்றி....புரிதலுக்கு..

***

உங்களுக்கு தனிமடல் ஒன்று இட்டு சில நாட்கள் ஆகின்றது...//

நன்றி...இப்போதுதான் பார்த்தேன்.......சிலவாரங்கள்!! :) மன்னிக்கவும்....

பதில் அனுப்பிவிட்டுத்தான் பின்னூட்டத்திற்கே பதில் போடுகிறேன்..

மன்னிக்கவும் !!!

மன்னிக்கவும் !!!

மன்னிக்கவும் !!!

நன்றி , வருகைக்கும் , கருத்துக்கும்!

மதிபாலா October 28, 2009 8:52 AM  

ஒரு விசியம் பாத்தீங்களா நண்பர்களே....

நம்ம பதிவ தமிழ்மணத்துல சேத்திகிட்டதே பெருசு...அதுல ஆரோ ஓட்டு வேற போட்டுருக்காங்கப்பா....

நல்லாருங்க கண்ணுகளா...இந்த வருசத்துல மொதோ ஓட்டு இதான்னு நெனக்கீறேன்...


வேர் ஈஸ் த பார்ட்டி???????????????


நன்றி நன்றி ஓட்டுப் போட்ட மகராசனுக்கும் , பின்னூட்டம் போட்ட மகா மகா ராசர்களுக்கும்!!!!

பதி October 28, 2009 9:02 AM  

உங்களது பதிலுரை கிடைத்தது பாலா...

//ஒரு விசியம் பாத்தீங்களா நண்பர்களே....

நம்ம பதிவ தமிழ்மணத்துல சேத்திகிட்டதே பெருசு...அதுல ஆரோ ஓட்டு வேற போட்டுருக்காங்கப்பா...//

பெரும்பாலும் நான் படித்த இடுகைகளுக்கு உடன் ஓட்டுப் போட்டு விடுவேன் !!!

ஊரை விட்டு ரெம்ப தூரம் தள்ளியிருக்குறோம். குறைஞ்சபட்சம் இந்த ஓட்டாவது போடுவோம்னு தான். :-)

ஆனால், அது அலுவலகத்தில் இருந்தால் மட்டுமே. என்னுடைய மடிக்கணினி வழியாக தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது நடக்காத விசயம்...
:(

மதிபாலா October 28, 2009 9:31 AM  

பெரும்பாலும் நான் படித்த இடுகைகளுக்கு உடன் ஓட்டுப் போட்டு விடுவேன் !!!//

நன்றி நன்றி..

ஊரை விட்டு ரெம்ப தூரம் தள்ளியிருக்குறோம். குறைஞ்சபட்சம் இந்த ஓட்டாவது போடுவோம்னு தான். :-)
/

ஆஹா , என்ன ஒரு நல்ல எண்ணம்? பின்னுரிங்க போங்க..

///
ஆனால், அது அலுவலகத்தில் இருந்தால் மட்டுமே. என்னுடைய மடிக்கணினி வழியாக தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது நடக்காத விசயம்...
:(//

ஆமாம் தல..இன்னி வரைக்கும் ஒரு தரம் இல்லாட்டி ரெண்டு தரம் மட்டுமே தமிழ்மணத்துல ஓட்டுப் போட்டிருக்கிறேன்!.

அவ்ளோதான்.

நன்றி...

T.V.Radhakrishnan October 28, 2009 3:38 PM  

Good Post

ஆனந்தன் November 9, 2009 11:22 AM  

ஏனுங் நீங் நம்ம ஊரு பழமைய நல்ல சொனீங்க போங்க என்ற ஊருங்க திருப்புருக்கு பக்கத்துலீங் குன்னதூருங்

மதிபாலா November 9, 2009 8:41 PM  

Good Post//

நன்றி டி.வி.ஆர் அய்யா...

மன்னிக்கவும் பணி நிமித்தமாக நிறைய இடுகைகளைப் படித்தாலும் தற்போது பின்னூட்டம் போட இயலுவதில்லை..கண்டிப்பாக அப்பப்போ அட்டென் டன்ஸ் அடிக்கடி கொடுத்து விடுகிறேன்.

மறுபடி மன்னிக்க

மதிபாலா November 9, 2009 8:44 PM  

ஏனுங் நீங் நம்ம ஊரு பழமைய நல்ல சொனீங்க போங்க என்ற ஊருங்க திருப்புருக்கு பக்கத்துலீங் குன்னதூருங்/

அடத்தம்பி , குன்னத்தூருங்ளா நீங்க ? பெருமாநல்லூரு கோடு கட்டி எத்தன வாட்டி உங்க ஏரியாவுக்கு வந்துருக்கறந்தெரியுமா? கெரகத்தளவு ஊருப்போரு நிறையா மறந்து போச்சி...என்ற ஆத்தா அடிக்கடி அப்பிச்சியா மடம் போய்ட்டு வரும்போங்க.

நன்றி நண்பர் ஆனந்தன் , வருகைக்கும் கருத்துக்கும்

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP