எம் இனமே..எம் சனமே.....இனி என் செய்வாய்?
Wednesday, October 28, 2009
முதலில் இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஏதிலிகளின் படகு ஒன்று இந்தோனேசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.........எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள் ஒரு சிறு பெண். இந்தோனேசியாவின் அரசாங்கமும் கூட அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இல்லை.
மற்ற நாடுகளின் குப்பையைக்கொட்டும் இடமாக எங்கள் நாட்டை உபயோகப்படுத்த முடியாது என்றே இந்தோனேசியா அறிவித்திருக்கிறது.
அவர்கள் மனிதர்கள்...இரத்தமும் , சதையுமாக வாழும் மனிதர்கள்...நேற்றுவரை சொந்த இடத்தில் சுகமாய் வாழ்ந்த மனிதர்கள்.....குப்பைகளல்லர்...நினைக்கையிலேயே நெஞ்சு கொதிக்கிறது.
அந்தப் படகில் இருக்கும் 266 பேரும் நானும் ஒரே இனம்...ஒரே மொழி பேசுபவர்கள்.
அடுத்து கனடாவில் ஓஷன் லேடி கப்பலின் மூலமாக கனடா வின் கடல் பரப்பில் கைது செய்யப்பட்ட ஏதிலிகள்.....
கைகளை , கால்களை சங்கிலியால் பிணைத்து நீதிமன்றத்தில் நிற்க வைத்தார்களாம் அங்கே..........இன்னமும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்களில்லை........நாடின்றி , சிறைச்சாலையில் வாடுகிறார்கள் அந்தத் தமிழர்கள்...அவர்களும் நாமும் ஒரினம்..!
பிரிதொன்று.....
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சமடைந்த 78 தமிழர்களின் அரசியல் தஞ்சத்தை நிராகரிக்கப் போவதாகவும் அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போவதாகவும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ருட் அறிவித்திருக்கிறார். அவர்களை இலங்கைக்கு அனுப்பினால் என்ன ஆகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
உலகில் எங்கேயுமே ஈழத்தமிழர்கள் வேண்டாதவர்களாகிப் போனார்கள்...அவர்கள் கேட்கும் அரசியல் தஞ்சம் கூட அனுமதிக்கப்படாமல் அனாதைகளாக்கப்பட்டு விட்டார்கள்....!
அவர்கள் செய்த பாவம்தான் என்ன?
நாங்களும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று கேட்டது மட்டும் தானே?
எங்களின் பூமியை நாங்களே ஆட்சி செய்து கொள்கிறோம் என்றது மட்டுந்தானே?
அதற்காகவா இந்த உலகம் இப்படி அவர்களைத் தண்டித்தது?
காடுகளில் , மழைகளில் கால்கடக்க நடந்து , செடிப்புதர்களின் நடுவில் ஒளிந்து , தாலியை , சொந்தமான பூமியை விற்று அதைக் காசாக்கி படகுக் காரர்களிடம் கொடுத்து வேறொரு ஊருக்கு அரசியல் தஞ்சம் கோருவது எதனால்?
இலங்கை இராணுவம் கண்டால் தம் கதி அதோ கதிதான் என்று தெரிந்தும் ப்டகுகளில் அவர்கள் குடும்பம் குடும்பமாக செல்வது எதனால்?
சொர்க்க வாழ்க்கை அனுபவிக்கவா? கேளிக்கைகளில் வாழ்க்கையைக் கழிக்கவா? இல்லையே....சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை...தாங்கள் காக்கை குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்ற எண்ணத்தில் தானே? உயிர்ப்பயத்தில் தானே ?
இனிமேல் தன் சொந்த நாட்டில் தன்னால் வாழவியலாது என்ற காரணம் தானே?
அடேய் , என் இனத்தையாடா குப்பையென்றாய்? என் சனங்களையாடா ஆடுமாடுகளைப் போல் திரும்பிப் போ என்றாய்......? என் சனமே , வா வந்து என் பூமியில் வாழு என்று திமிர்க்குரலில் சொல்ல தமிழகத்தானுக்குத் தான் தைரியம் உண்டா ? தமிழகத்தை ஆள்பவனுக்குத் தான் திராணி உண்டா? அக்கறை உண்டா?
அதுசரி , தமிழகத்தான் எங்கே தன் பூமியை ஆள்கிறான்? சுதந்திரம் பெற்றது முதலாய் செங்கோட்டையின் அடிமைதானே அவன்? ஒரு அடிமை எப்படி அகதிகளை ஆதரிக்க இயலும்...? ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே...அடிமைகளல்லர்..!
பரணி , புறநானூறு இவையெல்லாம் போற்றி வளர்த்தோம்.......
அதனால் புண்ணியம் என்ன கண்டோம்?
இன்றோ போக்கிடம் இன்றித் திரிகிறோம்...யார்க்கும்
இனி நாங்கள் வேண்டாதவர்களாகிப் போனோம்.........! சீக்கிரம்
இன்னொரு சுனாமி வந்து சூறையாடிப் போகட்டும்...
இருக்கும் இன அடையாளங்கள் இல்லாது போகட்டும்...!
என் இனமே...என் சனமே.
என்ன செய்து இனி
எம் உடமை காப்பாய்?
என் இனமே..என் சனமே.
என்ன செய்து இனி
எம் பெருமை சேர்ப்பாய்?
என் இனமே..என் சனமே..
என்ன செய்து இனி
எம் நிலத்தை மீட்பாய்?
என் இனமே...என் சனமே..
என்ன செய்து இனி
எம் மக்களைக் காப்பாய்?
வேதனைத் தீயினை அணைப்பாய்?
'‘.
19 பின்னூட்டங்கள்:
dear bala,
so sad to hear this.
We people in agony. Will prolong until we never take any action.
until then I can join hands with you for this sad news.
:(
we should take action whatever we can do from oversea.
Really not interesting to see Tamilnadu administration is in very bad situation that they cannot help.
:(
தமிழ் நாடு தமிழ்நாடாக இல்லை. அது கொலைநாடாக இருக்கிறது. தமிழன் தன் ஆறாவது அறிவை பயன்படுத்த சொன்னார் பெரியார். ஆனால் ஐந்து அறிவுக்கூட வேலை செய்யாத நிலையில்தான் இருக்கிறது தமிழ்நாட்டிலே நம் தமிழினம்.
நமது சொந்த சனங்கள்
கத்திய கதறல் கேட்கவில்லை
சிந்திய ரத்தத்தை பார்க்கவிலை
அவர்களின் ரத்த கவிச்சையை கூட நுகர முடியவில்லை
பிரஞ்ஞையே இல்லாமல் அவர்களின் பிண மூட்டையின் மீது ஏறி நின்று கொலைபாதகனுக்கு சாலவை போற்று மகிழ்ந்திருக்கிறார்கள்.
அவர்களா நம் குரலை கேட்கப்போகிறார்கள்?
உங்கள் இடுகையை படிக்கும்போது கண்ணீர்தான் வழிகிறதே தவிர வேறொன்றும் செய்யமுடியாதவனாக ஒரு செயலற்ற முண்டம் போல்தான் உணருகிறேன்.
ஒரு தனி மனித ஆளுமை அதன் கூட்டுப் போராட்ட தோல்வியில் ஒரு இனத்தின் துயரம் என்பதும் அதனை உலகத் தமிழினம் கண்டு வேடிக்கை மாத்திரமே கொள்ளமுடிவதும் இதில் அண்டை வீட்டு தமிழகத்தின் சுயநலமும், செயல்படா திறனும் வேதனை அளிக்கிறது.
மனித உணர்வுக்கு வேண்டி ஒன்றுபட இயலாத மனப்பான்மை....பெருமூச்சுதான் வருகிறது.
உண்மையில் செத்துவிட தோணுகிறது மனசு அழுகிறது வேதனையில் குமுறுகிறதுஎன்ன செய்வது என்றுதான் புரியவில்லை தனிமனிதர்கள் என்ன செய்யமுடியும்?
ஒரு தனி மனித ஆளுமை அதன் கூட்டுப் போராட்ட தோல்வியில் ஒரு இனத்தின் துயரம் என்பதும் அதனை உலகத் தமிழினம் கண்டு வேடிக்கை மாத்திரமே கொள்ளமுடிவதும் இதில் அண்டை வீட்டு தமிழகத்தின் சுயநலமும், செயல்படா திறனும் வேதனை அளிக்கிறது.
;;;;
அது மட்டும் வேதனை அளிக்கவில்லை நடராஜ். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சுமூக நிலையை கெடுத்துவிட துடிக்கிறார்கள் என்ற பேச்சுஇரத்தக் கொதிப்பை மேலும் அதிகரிக்கின்றன.
வாய்ப்பிருந்தால் இன்னொரு அனுமனாகி இலங்கைக்குப் பதில் தமிழகத்தை கொளுத்த வேண்டும் என்று துடிக்கிறது
dear bala,
so sad to hear this.
We people in agony. Will prolong until we never take any action.
until then I can join hands with you for this sad news.
:(//
very true Yasavi.. Thanks for the comment.
we should take action whatever we can do from oversea..//
Yes , we should try. on what way , that we must discuss...
**
Really not interesting to see Tamilnadu administration is in very bad situation that they cannot help.
:(/
TN Gov is useless spectator and we can't expect anything from them.
தமிழ் நாடு தமிழ்நாடாக இல்லை. அது கொலைநாடாக இருக்கிறது. தமிழன் தன் ஆறாவது அறிவை பயன்படுத்த சொன்னார் பெரியார். ஆனால் ஐந்து அறிவுக்கூட வேலை செய்யாத நிலையில்தான் இருக்கிறது தமிழ்நாட்டிலே நம் தமிழினம்.
நமது சொந்த சனங்கள்
கத்திய கதறல் கேட்கவில்லை
சிந்திய ரத்தத்தை பார்க்கவிலை
அவர்களின் ரத்த கவிச்சையை கூட நுகர முடியவில்லை
பிரஞ்ஞையே இல்லாமல் அவர்களின் பிண மூட்டையின் மீது ஏறி நின்று கொலைபாதகனுக்கு சாலவை போற்று மகிழ்ந்திருக்கிறார்கள்.
அவர்களா நம் குரலை கேட்கப்போகிறார்கள்?//
சத்தியமாக அதற்கான வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது தமிழ் நாடன்..
***
உங்கள் இடுகையை படிக்கும்போது கண்ணீர்தான் வழிகிறதே தவிர வேறொன்றும் செய்யமுடியாதவனாக ஒரு செயலற்ற முண்டம் போல்தான் உணருகிறேன்.//
அதே செயலற்ற முண்டங்களில் இன்னொருவன்.
நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்!
ஒரு தனி மனித ஆளுமை அதன் கூட்டுப் போராட்ட தோல்வியில் ஒரு இனத்தின் துயரம் என்பதும் அதனை உலகத் தமிழினம் கண்டு வேடிக்கை மாத்திரமே கொள்ளமுடிவதும் இதில் அண்டை வீட்டு தமிழகத்தின் சுயநலமும், செயல்படா திறனும் வேதனை அளிக்கிறது.
மனித உணர்வுக்கு வேண்டி ஒன்றுபட இயலாத மனப்பான்மை....பெருமூச்சுதான் வருகிறது./
ஆம் , நண்பர் ராஜ நடராஜன். வருகைக்கும் , பகிர்தலுக்கும் நன்றிகள்.
உண்மையில் செத்துவிட தோணுகிறது மனசு அழுகிறது வேதனையில் குமுறுகிறதுஎன்ன செய்வது என்றுதான் புரியவில்லை தனிமனிதர்கள் என்ன செய்யமுடியும்?//
தனிமனிதர்கள் இணைந்துதான் கூட்டமாகவியலும்..ஆனால் என்ன செய்வது என்பதில்தான் தெளிவில்லை.
நன்றி நண்பர் ராம்குமார் வருகைக்கும் , கருத்துக்கும்!
......காட்டுக்கள்ளிக்குள்ள
உள்ளாடும் வாலப்போல
உள்ளூர கண்ணீர் பொங்கும்
சொல்லாம உள்ளம் பொங்கும்
பட்ட மரத்து மேலே எட்டிப்பாக்கும்
ஓணான் போல
வாழ வந்த பூமி மேல........
(வைரமுத்து எழுதினது, தமிழினத்துக்கே சரியா பொருந்துது)
-:(
//மற்ற நாடுகளின் குப்பையைக்கொட்டும் இடமாக எங்கள் நாட்டை உபயோகப்படுத்த முடியாது என்றே இந்தோனேசியா அறிவித்திருக்கிறது. //
கொடுமை :((
அவர்களை தமிழ்நாட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய இயலாதா?
வரும் செய்திகள் மிகுந்த வேதனையூட்டுகின்றன...
//ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே...அடிமைகளல்லர்..//
இப்படிச் சொல்லி சொல்லித் தான் அவர்களை இந்த நிலைக்கு நாம் கொண்டு வந்திருக்கிறோம் என எண்ணுகின்றேன். மீதி இருப்பவர்களுக்கு மலர்வளையம் வைத்தாலும் ஈனப் பிறவிகள் சென்று சால்வை போத்திவிட்டு வருவர்.
பிரியாணிக்கும், பாக்கெட் சாரயத்துக்கும் வாய் பிளப்பவர்களை "என் இனம்" என மனதால் கூட எண்ண முடிவதில்லை இப்பொழுதெல்லாம்.
(வைரமுத்து எழுதினது, தமிழினத்துக்கே சரியா பொருந்துது)
-:(//
உண்மையே ஞானப்பித்தன்.
நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்
கொடுமை :((//
கொடுமையிலும் கொடுமை...
அவர்களை தமிழ்நாட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய இயலாதா?
வரும் செய்திகள் மிகுந்த வேதனையூட்டுகின்றன...//
முடியும்...ஆனால் , அதற்கான முயற்சிகளை ஆட்சியாளர்கள் எடுக்காதது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது.
***
//ஆனால் அவர்கள் அகதிகள் மட்டுமே...அடிமைகளல்லர்..//
இப்படிச் சொல்லி சொல்லித் தான் அவர்களை இந்த நிலைக்கு நாம் கொண்டு வந்திருக்கிறோம் என எண்ணுகின்றேன். //
இருக்கலாம்.....ஆனால் அவர்களை அடிமைகள் என்று சொல்வதை அவர்களே ஒத்துக்கொள்வார்களா?
***
பிரியாணிக்கும், பாக்கெட் சாரயத்துக்கும் வாய் பிளப்பவர்களை "என் இனம்" என மனதால் கூட எண்ண முடிவதில்லை இப்பொழுதெல்லாம்.//
வெறுப்பின் உச்சகட்டம்..சபிப்பதைத் தவிர வேறென்ன செய்ய?
நன்றி நண்பர் பதி வருகைக்கும் , கருத்துக்கும்..!
அன்பு நண்பர்களுக்கு,
நிறைய தமிழ்த் தேசிய பதிவர்களும் , சில செய்தி இணைய தளங்களையும் இந்தக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றன....ஆனால் எவையுமே இத்தளத்திற்கான இணைப்பையோ , எழுதியவரின் பெயரையோ குறிப்பிடவில்லை....
சென்று சேர வேண்டிய செய்திகள் நிறைய இணையதளங்களில் பிரசுரிப்பதின் மூலம் நிறைய பேரை சென்றடைவதில் மகிழ்ச்சியே...
ஆகவே , மற்ற இணையதளங்களில் எமது கட்டுரைகளை முன் அனுமதியின்றி பிரசுரிப்பதில் எமக்கு எந்த வருத்தமும் இல்லை..
ஆனாலும் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற அறிவிப்பையோ , அல்லது யாரால் எழுதப்பட்டது என்ற தகவலையோ அங்கே தெரிவித்தால் மிகவும் நன்றி....அதுதான் இக்கட்டுரையை எழுத நேரத்தையும் , சிந்தனையையும் செலவிட்ட எமக்குச் செலுத்தும் சிறு மரியாதை என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
இது எமது தாழ்மையான வேண்டுகோள்..
நன்றிகளுடனும் ,
தோழமையுடனும்...
மதிபாலா
Yes
Very bad situation tamil people come across
So sad and our government is helpless
Post a Comment