செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

Monday, November 9, 2009

ற்செயலாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..!

அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!)

பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்சி நசன் தமிழ்ச் சிற்றிதழ்களின் சேகரிப்பாளராக பலராலும் அறியப்படுபவர். 1980 களிலிருந்து இவர் சிற்றிதழ்களைச் சேகரித்து வருகின்றார். அத்துடன் சிற்றிதழ்ச் செய்தி என்னும் இதழையும் வெளியிட்டார். சிற்றிதழ்ச் செய்தி இந்திய இதழ்கள் மட்டுமல்லாது ஈழத்து இதழ்கள், புலம்பெயர் இதழ்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டது.

பல நண்பர்கள் பொள்ளாச்சி நசனுக்கு இதழ்களையும் நூல்களையும் அனுப்பினர். அத்துடன் கனடா, பிரான்ஸ், சுவிஸ், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்தும் இதழ்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு சேகரித்துப் பாதுகாத்த நூல்களையும் இதழ்களையும் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாகவும் இலகுவாகவும் கிடைக்கச் செய்ய வேண்டும் என பொள்ளாச்சி நசன் விரும்பினார். அவ்வகையில் தமிழம் மின்னூலாக்கத் திட்டம் 09-10-2008 முதல் செயற்பட்டு வருகின்றது. அதில் இணைக்கப்பட்டிருக்கும் நூல்களை www.tamilzham.net என்ற இணைய தளத்தில் காணலாம்.!

அதே இணையதளத்தில் , தமிழைப் பயிற்றுவிக்கவும் முயற்சி செய்கிறார். 1999க்குப் பிறகு தாய்த்தமிழ் பள்ளிகளை பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியில் தொடங்கி நடத்தி வருகிறார்.

அவரை அதிகாலை.காம் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறது
.

அதனால் , செய்ற்கரிய செய்வர் பெரியர் என்ற முதுமொழிக்கு உகந்தவர் திரு.பொள்ளாச்சி நசன் என்பது உண்மைதானே?

அவருக்கு நமது நன்றிகளையும் , வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும் , பாராட்டுதல்களையும் சமர்ப்பிப்போம்..! அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.

இனி , அவர் சேகரித்து மின்னிதழாக வெளியிட்ட சில சிற்றிதழ்களிலிருந்து சில சுவாரசியமான எழுத்துக்கள்…..!


1955 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15ஆம் திகதி வெளிவந்த தமிழ்முழக்கம் சிற்றிதழ் , உயர்திரு. கவி.கா.மு.ஷெரிப் அவர்களால் வெளியிடப்பட்டது.

பெரியாரையும் , அண்ணாதுரையும் விமர்சித்து ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கட்டுரை என்னைக் கவர்ந்தது. அதில் வைக்கப்பட்டிருக்கும் முழுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டாலும் , பெரியாரை நேசிக்கும் நான் பெரியாரிடம் முரண்படும் ஒரு விடயத்தைப் பற்றி அக்கட்டுரை விரிவாக அலசுகிறது. முழுக்கட்டுரைக்கு தமிழ் முழக்கம் இதழைப் பார்க்கலாம்.

பெரியாரின் “நாம் திராவிடர்கள்” என்ற கொள்கையிலிருக்கும் முரண்பாடுதான் அது. தமிழ்த்தேசியம் என்கிற கருத்துருவாக்கம் தமிழகத்தில் வலுப்பெற இன்றும் , அன்றும் தடையாக உள்ளதே “திராவிட”வியல் கருத்தாக்கம்…..அதையே முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது திராவிடத்தால் வயிறு வளர்க்கும் கட்சிகள் வாய்பொத்திக் கொண்டிருந்த நிகழ்வுகள் காட்டுகிறது.

சுதந்திரத்திற்குப் பின்னால் வந்த பாதி ஆண்டுகள் தமிழகத்தைத் தமிழரல்லாதவர்கள் ஆண்டதும் , இன்றைக்கு இருக்கும் திமுக , பாமக , விடுதலைச் சிறுத்தைகள் , புதிய தமிழகம் தவிர்த்த அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் தமிழைத் தமது தாய்மொழியாகக் கொண்டிருக்காதவர்கள் என்ற வேதனையான உண்மையும் நம்மைச் சுட்டுகிறது. மாற்று மொழியாளர்களை நாம் நேசிக்காதவர்கள் கிடையாது. அதற்காக நம்மை நாமேதான் ஆளவேண்டுமே தவிர வேற்று மொழியாளர்கள் நம்மை ஆளவதை சகிக்க வேண்டுமானால் நாம் மெட்ராஸ் மாகாணமாகவே இருந்திருக்கலாமே?

அதே தமிழ் முழக்கத்திலிருந்த இன்னொரு அலசல் “இலங்கைச் செய்தி” என்ற தலைப்பில் வந்ததாகும். 1955 ஆம் ஆண்டே இலங்கையில் இன முரண்பாடு எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கான வரலாற்று ஆதாரம்…

இலங்கை இந்தியப் பிரதம மந்திரிகளினால் கைச்சாத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட டில்லி ஒப்பந்தத்தின் கொள்கைகளை அமல் படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லையென்றும் , ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட வாக்குறுதிகளுக்கு முற்றும் முரணாக இலங்கையரசாங்கம் நடந்து கொள்கிறது என்றும் பாரதப் பிரதமர் நேரு அவர்கள் குற்றம் சாட்டுவதாக அந்த அலசல் குறிப்பிடுகிறது.

அதோடு மட்டுமின்றி , வெகுவிரைவில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கப்போவதாகவும் , இலங்கை இந்தியர்களின் மீது இலங்கையரசாங்கம் காட்டி வரும் அநீதியான கொள்கைகளை அடியோடு ஒழித்துக்கட்ட வரும் பொதுத்தேர்தல் மக்களுக்கு வாய்ப்பினை அளித்திருப்பதாகவும் சுட்டுகிறது அவ்வலசல்…


நேருவிற்குப் பின் பிரதமரான சாஸ்திரி அவர்கள் , இந்தியாவிற்கே பாதிக்கும் மேற்பட்ட மலையக இந்தியர்களை அழைத்துக்கொண்டார் என்பது நாம் இந்திய அரசாங்கத்தின் சொதப்பல்களின் வரலாறாக குறித்துக்கொள்வது முக்கியம்…..


அதே புரட்டாசி இதழில் கவி.கா.மு.ஷெரிப் எழுதிய கவிதையொன்று உங்களின் பார்வைக்கு…

(பல்லவி)
வாளினைக் கையில் எட்டா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ - (வா)
(அநுபல்லவி)
நாளெல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ – (வா)
(சரணம்)
ஆள்வோரும் செல்வாக்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலில் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே – நீ – ( வா )

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்தக் கவிதை இன்றும் எப்படி பொருந்துகிறது என்ற உண்மையை வியந்து இந்தச்சிற்றிதழை எமக்குத் தந்த திரு.நசனுக்கு நன்றி கூறி இந்தப் பதிவினை முடிக்கிறேன்.

படங்கள் உதவி : அதிகாலை.காம்

பிரிதொரு சமயத்தில் பிடித்த இன்னொரு சிற்றிதழுடன் சந்திப்போம்…..

உயர்திரு.பொள்ளாச்சி நசனின் பணி சிறக்க வாழ்த்துவோம். நன்றி.!

13 பின்னூட்டங்கள்:

தமிழ் நாடன் November 10, 2009 1:10 AM  

இது எங்களைப் போன்றோர்க்கு முற்றிலும் புதிய செய்திதான்.அறியத்தந்ததற்கு நன்றிகள் பல.ஐயா மணிப்பிள்ளை நடேசன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

திராவிடம் என்ற கோட்பாடே என்னைப்பொருத்த வரையில் ஒரு மிகப்பெரிய பித்தலாட்டம் என்றுதான் சொல்வேன். தமிழ்நாட்டை தவிர்த்து வேறு எந்த தென் மாநிலங்களும் இந்த கோட்பாட்டை பாவிப்பதில்லை. காரணம் அவர்களுக்கு அது அவசியம் இல்லை. ஆந்திராவை ஆள்பவன் தெலுங்கன் கர்நாடகததை ஆள்பவன் கன்னடன் கேராளவை ஆள்பவன் மலையாளி. அவனவன் அவன் இனத்தை சொல்லியே ஓட்டு கேட்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் தலையெழுத்தே வேறு. இங்கு அரசியல் செய்பவர் பலரும் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள். ஆகவே அவர்களுக்கு திராவிடப்போர்வை தேவைப்படுகிறது. நான் கேட்பதெல்லாம் இதுதான். வாழ்வது தமிழ்நாட்டில் பிழைப்பது தமிழ்நாட்டில் சுரண்டுவது தமிழ்நாட்டை. அப்புறம் ஏன்அவர்கள் தமிழை தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு முழுதமிழனாக ஆகிவிடக்கூடாது? ஏன் இன்னும் திராவிடத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேண்டும்? இல்லையென்றால் நான் தெலுங்கன், கன்னடன், மலையாளி என்று சொல்லியே அரசியல் நடத்தலாமே? இருக்கவே இருக்கிறது வந்தாரை வாழவைக்கும் இருப்பவனை போட்டுத்தள்ளும் தமிழகம்!

என்றோ பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்த தொடர்பை மனதில் இறுத்தி தெலுங்கின், கன்னடத்தின், மலையாளத்தின் மீது உள்ள பாசத்தை இவர்கள் இன்னும் விடவில்லை என்பதைத்தான் இந்த திராவிடக்கோட்பாடு காட்டுகிறது.

பதி November 10, 2009 4:01 AM  

இது எனக்கு புதிய தகவல்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

SanjaiGandhi™ November 10, 2009 7:55 AM  

அட நல்ல தகவலா இருக்கே.. பெரிய்வருக்கு வாழ்த்துகள்..

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் November 10, 2009 8:32 AM  

நன்றி

மதிபாலா November 10, 2009 7:55 PM  

இது எங்களைப் போன்றோர்க்கு முற்றிலும் புதிய செய்திதான்.அறியத்தந்ததற்கு நன்றிகள் பல./

நன்றி நண்பரே.

***

திராவிடம் என்ற கோட்பாடே என்னைப்பொருத்த வரையில் ஒரு மிகப்பெரிய பித்தலாட்டம் என்றுதான் சொல்வேன். தமிழ்நாட்டை தவிர்த்து வேறு எந்த தென் மாநிலங்களும் இந்த கோட்பாட்டை பாவிப்பதில்லை. காரணம் அவர்களுக்கு அது அவசியம் இல்லை. ஆந்திராவை ஆள்பவன் தெலுங்கன் கர்நாடகததை ஆள்பவன் கன்னடன் கேராளவை ஆள்பவன் மலையாளி. அவனவன் அவன் இனத்தை சொல்லியே ஓட்டு கேட்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் தலையெழுத்தே வேறு. இங்கு அரசியல் செய்பவர் பலரும் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள். ஆகவே அவர்களுக்கு திராவிடப்போர்வை தேவைப்படுகிறது.//

உண்மைதான்...

****


இருக்கவே இருக்கிறது வந்தாரை வாழவைக்கும் இருப்பவனை போட்டுத்தள்ளும் தமிழகம்!//

அதுதானே நடந்து கொண்டிருக்கிறது நண்பரே..


நன்றி , வருகைக்கும் , கருத்துக்கும்!! பொங்கி விட்டீர்கள்...!சீரான பார்வை...

உங்கள் மொத்த பின்னூட்டத்தையும் வரிக்கு வரி ஆதரிக்கிறேன்...

இனி நாம் தமிழர் என்பதைத்தான் நமது முழக்கமாக எடுக்க வேண்டும்...!

மதிபாலா November 10, 2009 7:56 PM  

இது எனக்கு புதிய தகவல்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி/

நன்றி நண்பர் பதி...

வருகைக்கும் , கருத்துக்கும்...எனக்கும் கூட நேற்றுவரை புதிய தகவல்தான்....

மதிபாலா November 10, 2009 7:56 PM  

அட நல்ல தகவலா இருக்கே.. பெரிய்வருக்கு வாழ்த்துகள்../

வாங்க தல...சவுக்கியமா?

நன்றி வருகைக்க்கும் , பின்னூட்டத்திற்கும்!!!

மதிபாலா November 10, 2009 7:58 PM  

நன்றி/

யெப்பே பித்தா...

ஒரு நாலு வரி சேத்துத்தான் பின்னூட்டம் போடறது??? வழக்கமா ஸ்மைலி போடுவீர்...இப்போ டெவலப்மெண்டு ....மூணு எழுத்து வரைக்கும் வந்திருக்கிது...நல்லாயிருமய்யா...!

நன்றீ வருகைக்கும் , கருத்துக்கும் வெற்றிக் கதிரவன்

சிவனேசன் November 10, 2009 11:33 PM  

நல்ல செய்தி

நன்றி

சிவனேசன் November 10, 2009 11:33 PM  

வாழ்த்துக்கள் திரு.பொள்லாச்சி நசனுக்கு

மதிபாலா November 11, 2009 1:42 AM  

நன்றிகள் நண்பர் சிவனேசன்

வருகைக்கும் , கருத்துக்கும்!

ஜ்யோவ்ராம் சுந்தர் November 11, 2009 2:08 AM  

இவரது சிற்றிதழ்ச் செய்தி இதழை 90களின் ஆரம்பத்தில் பார்த்திருக்கிறேன்.

மதிபாலா November 12, 2009 10:17 PM  

உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள் பல திரு. ஜியோவ்ராம் ஜீ அவர்களே...!

தகவலுக்கு நன்றி.

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP