தூக்கம்!

Thursday, November 12, 2009

லுப்புடன் வந்திருந்தேன். மணி பதினொன்றாகி விட்டிருந்தது. வழக்கமாகவே பத்து மணியைத் தாண்டினால் வரமறுக்கும் தூக்கம் அன்றும் வரவில்லை….புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்….



இன்னும் ஒருமணி நேரம் ஆகியிருக்கும். இப்போதும் கூட தூக்கம் வரவில்லை. அப்போதுதான் திடீரென விபரீத சிந்தனை ஒன்று உருவானது…… தூக்கம் வருகிற போது நமது உணர்வோ , மனசோ , உடலோ என்ன செய்யும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஒரு குருட்டுத்தனமான ஆசை….

இம்மியும் பிசகாமல் கூர்மையாக கவனிக்க வேண்டுமெனத் தோன்றிற்று.கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு அது என்ன சிதம்பர ரகசியமா என்ன?

கவனித்தேன். ஒவ்வொரு அசைவாக கவனித்தேன். தூங்குவதற்கான முயற்சியைத் தொடங்கினேன்…அப்போதுதானே கவனிக்க முடியும்?

இடப்புறம் திரும்பிப்படுத்திருந்தேன். கையை ஆதரவாக தலைக்குக் கீழே வைத்திருந்தேன். அளவிற்கு அதிகமாக அழுத்தினேனோ தெரியவில்லை கை வலிக்க ஆரம்பித்தது. எடுத்து கையை உதறிக்கொண்டேன்.

இடையில் ஒரு மின்னஞ்சல் வந்தது. பார்த்தபின் பதிலை அனுப்பிவிட்டு கண்களை மூடிக்கொண்டேன். கைகளிரண்டையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தேன். முதுகு இலேசாக அரித்தது…சொரிந்து கொண்டேன்…அரிப்பு கொஞ்சம் அதிகமானது. போட்டிருந்த டீ-ஷர்ட்டைக் கழட்டி தூர வீசினேன்.

இப்போது மல்லாக்கப் படுத்தேன்…கைகளிரண்டையும் தலைக்குக் கீழ் வைத்துக்கொண்டேன். கண்களை மூடாமல் கொஞ்ச நேரம் திறந்து வைத்திருந்தேன்…அப்போதாவது கண்களுக்கு சோர்வாகி தூக்கம் வராதா……….ம்ஹீம் வரவில்லை…மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன். நினைவுகள் , எண்ணங்கள் சுழல ஆரம்பித்தன…

“தமிழ் எம்.ஏ” படத்தில் ஜீவா கல்லொன்றைத் தூக்கி காரில் வீசவந்தார்……..அதே தொடர்ச்சியில் “ஈ” படத்தில் தன்னைத் தானே சுட்டுக்கொல்லும் பசுபதி நிழலாடினார்…..அதே கம்பீரத்துடன் தங்கப் பதக்கம் சிவாஜி கண்முன் வந்தார்…….தங்கப்பதக்கத்தை நினைத்தவுடனே , வடிவேலுவும் – சரத்குமாரும் “தங்கப்ப” தக்கத்தை வைத்து பண்ணிய ரவுசை சிரிப்பொலியில் பார்த்ததை நினைத்துச் சிரிக்கத் தோன்றியது.


சரத்குமாரை நினனத்தவுடன் , பரிதாபமான அவரது “ச.ம.க” நினைவுக்கு வந்தது……அந்த ச.ம.க. சார்பில் நின்ற திருமங்கலம் வேட்பாளர் நினைவுக்கு வந்தார்….அதே தொடர்ச்சியில் விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றின் நேரலை நினைவுக்கு வந்து திகிலைக் கிளப்பியது….

ஒருமுறை தேமுதிக கூட்டமொன்று திருச்சியில் நடக்கையில் நடு ஊருக்குள் சிக்கிக்கொண்ட நினைப்பு வந்தது….ஏன் இந்த அரசியல்வாதிகள் இந்த மக்களை இப்படிக்கொடுமைப்படுத்துகிறார்கள் என்ற நினைவும் வந்தது. சரி நாமெல்லாம் எதையோ எழுதுகிறோம் என்ற போர்வையில் வாசகர்களைக் டெரர் ஆக்குகிறோமில்லையா என்ற அளவில் சமாதானப்படுத்திக்கொண்டேன்.


அதுவந்தது…இதுவந்தது…எது எதுவோ வந்தது…ஆனால் தூக்கம் மட்டும் வரவே இல்லை.

கைகள் மீண்டும் வலித்தது…இடதுபுறம் திரும்பிப்படுத்துக்கொண்டேன்…இப்போது வார்ட்ரோப்பின் சந்தொன்றில் டப் என்று சத்தம் வந்தது…….என்னவாயிருக்கும் ?
எலி? பல்லி ? பூனை ? பெருச்சாளி ? இல்லை வேறு ஏதேனும் ? மனசுக்குள் இலேசான பயம் வந்தது….கால் வரை போர்த்தியிருந்த போர்வையை கழுத்து வரை இழுத்து விட்டுக்கொண்டேன்…ஒரு பாதுகாப்புத்தேன்….!

இப்போது கால் அரித்தது..இலேசாக எரிவது போல் இருந்தது…மொத்தமாக போர்வையைத் தூக்கி தூர வீசினேன்….. பின்னாலிருக்கும் தோட்டத்தில் ஏதோ ஒரு சத்தம்…..ஏதாவது விழுந்திருக்குமோ ? என்னவாய் இருக்கும் ? சிந்தனை சென்று கொண்டே இருந்தது.

கடந்த வருடம் புஞ்சக் போன இடத்தில் பார்த்த பெரிய மலைப்பாம்பு ஒன்று மனசுக்குள் சம்பந்தமில்லாமல் வந்து போனது….”ச்சே…ச்சே….அவ்வளவு பெரிய மலைப்பாம்பு இங்கே நம் வீட்டுத்தோட்டத்தில் எப்படி வரும் ? வருவதற்கான வாய்ப்பு எப்படி? தோட்டத்தை ஒட்டியபடியே இருக்கும் பெரிய மரமொன்று வேறு நினைவிற்கு வந்தது….அதுல கீது ? சேசே வாய்ப்பில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்……


சின்ன வயசில் , எங்க வீட்டு பொடக்காளியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பானைக்குள் இருந்த மூன்று பாம்புகளை எங்க பக்கத்து வீட்டு ராஜா அண்ணன் அடித்தது நினைவிற்கு வந்தது…

”ராஜா” அண்ணன் இப்போது எங்கிருப்பார் ? இருந்தாலும் இந்தியாவில் இருப்பார்..இந்தோனேசியாவுக்கு எப்படி அழைத்து வருவது ?

குழப்பமாக இருந்தது..

திடீரென , அட நாம் தூங்கும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கத் தானே ஆசைப்பட்டோம்? இடையில் கண்ட நினைப்பு எதற்கு என்று தேற்றிக்கொண்டேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று லைட்டைப் போட்டுக்கொண்டேன். இப்போதாவது தூங்கலாம்…தூங்க முயற்சிக்கலாம்…

கண்ணை மூடியவுடன் சிவப்பாகத் தெரிந்தது…அல்லது அப்படித் தோன்றியது….லைட் எரிவதால் இருக்குமோ ? லைட் எரிந்தால் தூங்க முடியாதோ? மீண்டும் எழுந்து விளக்கை அணைத்தேன்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தேன்…நமீதாவிலிருந்து தெருவோரம் அன்று என்னைத் துரத்திய நாய்க்குட்டி வரை நினைவுக்கு வந்தது….கொஞ்சநேரத்தில் கண்ணுக்குள் சிவப்பாக ….அட லைட்டத்தான அணைத்து விட்டோமே????

விழித்துப் பார்த்தேன்…..!

விடிந்திருந்தது…வாட்சைப் பார்த்தால் மணி ஐந்தே முக்கால்….

தூக்கத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சி முடிவுக்கு வந்திருந்ததை எண்ணி வருந்தினேன்....தோல்வியை ஒப்புக்கொண்டேன்…….ஆபிஸில் ஒரு அப்பாயிண்ட் மெண்ட் இருந்தது நினைவுக்கு வந்தது..ஒரு அஞ்சு நிமிடம் படுத்திருந்து அப்புறம் குளிச்சிக்கலாம் என்று தோன்றியது……

அஞ்சு நிமிடம் படுத்திருந்தேன்…

எழுந்தேன்…..மணி பத்தே முக்கால்…….தூங்கிப்போயிருந்தேன்….

நினைத்து நினைத்துப் பார்த்தேன்….எப்படித் தூக்கம் வந்தது? தூக்கம் வரும்போது என்ன நினைத்துக்கொண்டேன்? மல்லாக்கப்படுத்திருந்தேனா இல்லை இடதுபுறமா? மூளையைக் கசக்கிக்கொண்டேன்.

நினைவிற்கு வரவேயில்லை.


அப்பாயிண்மெண்டைத் தவறவிட்டதாக நண்பரிடம் தொலைபேசியில் வருந்திக்கொண்டேன்…..ஆபிஸ் போவதை தள்ளி வைத்துவிட்டு கணினியில் உட்கார்ந்து கொண்டேன்….

பிறகு இப்படி டைப்ப ஆரம்பித்தேன்………..!


“அலுப்புடன் வந்திருந்தேன். மணி பதினொன்றாகி விட்டிருந்தது. வழக்கமாகவே பத்து மணியைத் தாண்டினால் வரமறுக்கும் தூக்கம்………………”

24 பின்னூட்டங்கள்:

தமிழன் வெங்கட் November 12, 2009 11:33 PM  

எண்ணங்களை வார்த்தையாகும் கலை உங்களுக்கு நன்றாக வருகிறது. அருமையாக பதிவு செய்கிறீர்கள்.

தூக்கமில்லா என் இரவுகளை நான் நினைக்கும் படி செய்துவிட்டிர்கள்.

ஜெயந்தி November 13, 2009 12:14 AM  

நானும் தூங்க வேண்டும் என்பதற்காக ஏதாவதொரு பூவை மட்டுமே நினைத்துக்கொண்டால் தூக்கம் வரும் என்ற செய்தியை நம்பி பூவை நினைத்துக்கொள்வேன். பத்து நொடிகள்தான் பூ நினைவில் இருக்கும். திரும்பவும் வேறு நினைவுகள். உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது.

தமிழ் நாடன் November 13, 2009 12:34 AM  

என்ன ஆச்சு உங்களுக்கு? திடீர்னு ருத்ரன் ரேஞ்சுக்கு எழுதறீங்க! ஐயையோ இன்னைக்கு தனியா படுக்கனுமே! தூக்கம் வருமா?

அது கெடக்கட்டும் பதிவு நல்லா வந்திருக்கு!

மதிபாலா November 13, 2009 12:41 AM  

எண்ணங்களை வார்த்தையாகும் கலை உங்களுக்கு நன்றாக வருகிறது. அருமையாக பதிவு செய்கிறீர்கள்.//

நன்றி நண்பர் வெங்கட்.

தூக்கமில்லா என் இரவுகளை நான் நினைக்கும் படி செய்துவிட்டிர்கள்.//

அப்படியா? என் கஷ்டத்தைச் சொன்னேன்..

நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்!

மதிபாலா November 13, 2009 12:44 AM  

நானும் தூங்க வேண்டும் என்பதற்காக ஏதாவதொரு பூவை மட்டுமே நினைத்துக்கொண்டால் தூக்கம் வரும் என்ற செய்தியை நம்பி பூவை நினைத்துக்கொள்வேன். பத்து நொடிகள்தான் பூ நினைவில் இருக்கும். திரும்பவும் வேறு நினைவுகள். //

உண்மை...எனக்கும் ஒரு நண்பர் சொன்னார். தூக்கம் வரலேன்னா ஒன்னுல இருந்து நூறு வரைக்கும் எண்ணினா தூக்கம் வரும்னா...அத நம்பி நான் சில நாள் ஆயிரம் வரைக்கும் எண்ணியும் தூக்கம் வரலே...தூக்கத்துக்கு சரியான மருந்து தனிமையைத் தவிர்த்தலும் , முடிந்தவரை எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளலும் என்பதுமே என் கருத்து..

கவலையைத் துறந்தால் தூக்கம் நம் கண்களை த் தழுவும் என்பது என் அனுபவ பாடம்..!

**
உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது.//


உங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் நன்றிகள் பல தோழி ஜெயந்தி....

மதிபாலா November 13, 2009 12:46 AM  

என்ன ஆச்சு உங்களுக்கு? திடீர்னு ருத்ரன் ரேஞ்சுக்கு எழுதறீங்க! //

ருத்ரன் ரேஞ்ச்சுக்கா ? இதெல்லாம் அதிகமா இல்ல????

***

ஐயையோ இன்னைக்கு தனியா படுக்கனுமே! தூக்கம் வருமா?//

வராது...வரக்கூடாது.............!!
ஹிஹிஹி.

அது கெடக்கட்டும் பதிவு நல்லா வந்திருக்கு!//

நன்றி அண்ணே....வருகைக்கும் , கருத்துக்கும்.

மதிபாலா November 13, 2009 12:46 AM  

என்ன ஆச்சு உங்களுக்கு? திடீர்னு ருத்ரன் ரேஞ்சுக்கு எழுதறீங்க! //

ருத்ரன் ரேஞ்ச்சுக்கா ? இதெல்லாம் அதிகமா இல்ல????

***

ஐயையோ இன்னைக்கு தனியா படுக்கனுமே! தூக்கம் வருமா?//

வராது...வரக்கூடாது.............!!
ஹிஹிஹி.

அது கெடக்கட்டும் பதிவு நல்லா வந்திருக்கு!//

நன்றி அண்ணே....வருகைக்கும் , கருத்துக்கும்.

T.V.Radhakrishnan November 13, 2009 2:56 AM  

மதி..அருமையான நடை...ஆமாம்..ஏன் இப்பொழுதெல்லாம் அதிகம் (!!!) எழுதறதில்ல

முத்துலெட்சுமி/muthuletchumi November 13, 2009 3:43 AM  

:) தியானத்துல மூச்சுப்பயிற்சின்னு சொல்லிட்டு அதைக் கவனிங்க ந்னு சொல்வாங்க..சொல்லிட்டு அதை சீராக்க நினைக்ககூடாது அது எப்படி வருதோ அதே போல கவனிங்கன்னு சொல்வாங்க.. ஆனா அது முடியவே முடியாது நாமா அதை சீராக்கிற முயற்சியை ஆரம்பிச்சிருவோம் அது மாதிரி இருக்கு தூக்கத்துக்கு ட்ரை செய்தது..

மதிபாலா November 13, 2009 3:47 AM  

மதி..அருமையான நடை...//


நன்றி அய்யா...

ஆமாம்..ஏன் இப்பொழுதெல்லாம் அதிகம் (!!!) எழுதறதில்ல//

உண்மைதான். இதற்கான காரணத்திற்கு நான் போன வருடத்திலிருந்து வர வேண்டும்...பொருளாதாரச் சுனாமி எங்களையும் தாக்கியதில் எழுதுவதைப் பற்றி நினைக்கக் கூட இயலாத சூழலில் இருக்கிறேன்...

எப்பவாவது எழுதணும்னு தோணினா கணினியில் அப்பப்போ எழுதுவேன்..

என்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம் , ஒன்ன எழுதுனா முடிச்சாகணும் அப்பவே........பாதி விட்டு வெச்சிட்டு , மீதி அப்புறமா எழுதணும்னு நெனச்சி விட்டுவச்ச பதிவுகள் இன்னிக்கு அநேகமா 30 சேர்ந்துருக்கும். அதுக்கப்புறம் அந்தப் பதிவுல நாலு லைன் கூட சேத்து எழுத முடியறதில்ல.

அப்புறம் , சில தனிப்பட்ட காரணங்கள் , கற்பனை வறட்சி , சப்ஜெக்ட் வறட்சி இப்படி நெறையா சொல்லலாம்.......

ஒன்றா...இரண்டா காரணங்கள் ஒரு பின்னூட்டத்தில் சொல்லி முடிக்க...

மன்னிக்கணும் , உங்க பதிவுக்கு மட்டுமில்ல , மற்றவங்க பதிவுக்கு வந்து படிச்சாலும் பின்னூட்டம் போடுறதும் கூட சாத்தியப்படுறதில்ல....வலைப்பூ பக்கம் நான் வர்றதே இல்லைன்னு நாலு பேரு சொல்லிடக் கூடாதேன்னு அப்பப்போ ஒரு பதிவு...

கூடிய விரைவில் ஃபார்முக்கு வந்துடுவேன்...அமெரிக்காவுக்கே ரிஷெஷன் தீரப்போகுதாம்....அடியேனுக்குத் தீராதா ?

என் தணியாத தமிழ் ஆர்வத்துக்காவது தீரணும்னு எல்லாம் வல்ல டாலராண்டவரையும் , யூரோ ஆண்டவரையும் , ருப்யா ஆண்டவரையும் கேட்டுக்கிடுறேன்..

"ஆஹா.....இதுவே ஒரு பதிவு சைஸுக்கு வந்துடும் போல இருக்கே.......!!"

நன்றிகள் அக்கறையுடன் கேட்டதற்கு....

தோழமையுடன்
மதிபாலா

மதிபாலா November 13, 2009 3:51 AM  

:) தியானத்துல மூச்சுப்பயிற்சின்னு சொல்லிட்டு அதைக் கவனிங்க ந்னு சொல்வாங்க..சொல்லிட்டு அதை சீராக்க நினைக்ககூடாது அது எப்படி வருதோ அதே போல கவனிங்கன்னு சொல்வாங்க.. ஆனா அது முடியவே முடியாது நாமா அதை சீராக்கிற முயற்சியை ஆரம்பிச்சிருவோம் அது மாதிரி இருக்கு தூக்கத்துக்கு ட்ரை செய்தது..//


உண்மைதான்...இதே அனுபவம் எனக்கும் ஒருமுறை நிகழ்ந்திருக்கிறது.

அதே போலத்தான் , நம்மூரில் சிம்பிளாகச் சொல்வார்கள்...இந்த மருந்த சாப்புடும் போது குரங்க நினைக்காதேன்னு...

கடைசி வரை அந்த மருந்தை அவங்களால குரங்கை நினைக்காம சாப்பிட முடியாது...

நன்றி வருகைக்கும் , கருத்துக்கும் தோழி முத்துலெட்சுமி.

பதி November 13, 2009 4:37 AM  

எழுத்து நடை நல்லா இருந்தது பாலா..

:)

மதிபாலா November 13, 2009 5:11 AM  

எழுத்து நடை நல்லா இருந்தது பாலா..

:)
//

வாங்க தலைவர் பதி. சவுக்கியமா? ஆமாம் நீங்க ஏன் எழுதறதே இல்ல?

எழுதுங்க பாஸ்.....


அப்புறம் ரொம்ப நன்றி....எழுத்து நடை , எப்போதும் போல் தான் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இன்று மட்டும் பின்னூட்டம் போட்டவர்கள் எழுத்து நடையைப் பற்றிப் பேசுவது ஏன்?

புரியவில்லை.

மற்றபடி நெம்ப நன்றி.....

எப்ப ஊருக்கு ?

பதி November 13, 2009 5:44 AM  

பாலா,

//வாங்க தலைவர் பதி. சவுக்கியமா? ஆமாம் நீங்க ஏன் எழுதறதே இல்ல?

எழுதுங்க பாஸ்.....//

எனக்கு எழுதத் தோன்றுபவற்றை எழுதத் தான் வலையுலகில் ஏராளமானோர் உள்ளனரே !!!!! படிப்பதிலேயே பெரும்பாலான நேரம் போய்விடுகின்றது நண்பரே...

:)

ஆ! இதழ்கள் November 13, 2009 10:01 PM  

தூக்கமில்லா இரவுகள் - நரகம்

T.V.Radhakrishnan November 14, 2009 5:08 PM  

Pl.let me know your e mail address

'BLUESPACE' ARIVUMANI, GERMANY November 17, 2009 1:45 PM  

14,11,9,5,3,2....??

மதிபாலா November 20, 2009 10:28 PM  

எனக்கு எழுதத் தோன்றுபவற்றை எழுதத் தான் வலையுலகில் ஏராளமானோர் உள்ளனரே !!!!! படிப்பதிலேயே பெரும்பாலான நேரம் போய்விடுகின்றது நண்பரே...

:)//

இதெல்லாம் ச்ச்சும்மா..நிறைய வாசிப்பவர்கள் தான் தெளிவாகச் சிந்திக்க முடியும்...
நமது சிந்தனைகளை எழுத்தாக்கிப்பாருங்கள்.

வாசிப்பை விட நல்லதொரு அனுபவமாக அது இருக்கும்!

வாழ்த்துக்கள்.!

மதிபாலா November 20, 2009 10:29 PM  

தூக்கமில்லா இரவுகள் - நரகம்/

மக்களே....

ஒரு வரிக் கவிதை கேள்விப்பட்டிருக்கீங்களா?

பாருங்களேன். நம்ம ஆன்ந்த சார் பின்னுருறாரு..

உண்மை ஆனந்த...

நன்றி!

மதிபாலா November 20, 2009 10:30 PM  

Pl.let me know your e mail address/

நன்றி அய்யா உங்கள் மின்னஞ்சலுக்கு..

விரிவாகப் பதில் அனுப்பி இருக்கிறேன்...

மதிபாலா November 20, 2009 10:31 PM  

4,11,9,5,3,2....??//

இன்னாபா இது? புதுவித சுடோகு வா...

ஒன்னுமே பிரியலயே??????

நன்றி. வருகைக்கும் , பின்னூட்டத்திற்கும்!

ஆ! இதழ்கள் November 22, 2009 12:04 AM  

மக்களே....

ஒரு வரிக் கவிதை கேள்விப்பட்டிருக்கீங்களா?//

ஆகா... இது எப்ப? மக்களே இத்த நம்பாதீங்க... நான் கவிஞனில்ல கவிஞனில்ல கவிஞனில்ல...

விக்னேஷ்வரி November 23, 2009 3:18 AM  

வித்தியாசமான பதிவா இருக்குங்க.

" உழவன் " " Uzhavan " November 23, 2009 10:50 PM  

//ஒரு அஞ்சு நிமிடம் படுத்திருந்து அப்புறம் குளிச்சிக்கலாம் என்று தோன்றியது……//
 
ஆபீசுலயே போயி தூங்கியிருக்கலாம் :-)

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP