Showing newest 8 of 11 posts from 1/1/09 - 2/1/09. Show older posts
Showing newest 8 of 11 posts from 1/1/09 - 2/1/09. Show older posts

கிரணாப் கிகர்ஜி - கீஜபக்சே பேசியது என்ன? முழு பேச்சு அம்பலம்.!!

Wednesday, January 28, 2009

கீஜபக்சே - வணக்கம் , வாங்க , வாங்க , நேத்து சும்மா கூப்ட்டு வரச்சொன்னதும் உடனே வந்தததுக்கு ரொம்ப நன்றி.

கிரணாப் கிகர்ஜி - ச்சே , ச்சே , இதுக்கு எதுக்கு நன்றி ? உங்க கடைக் கண் பார்வை கெடைக்காதா அப்படீன்னு ஏங்கிகிட்டு இருக்கிறவங்கள்ள நானும் ஒருத்தன். என்னை அழைத்தமைக்கு ரொம்ப நன்றி.!!!! நமக்கு கொழும்பு காட்டுநாயக்கா விமான நிலையம் பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை!!
.


கீஜபக்சே- அப்படியா , ரொம்ப சந்தோசம் , பாத்தீங்களா ? எப்படி இருக்கு ? உடனே அலுவலகத்துக்கு வந்துட்டீங்களே , சரியா சுத்திப் பாத்தீங்களா?

கிரணாப் கிகர்ஜி - இல்லை , சரியா பாக்கலை , இதோ இப்ப கெளம்பிடுவேன் இல்லியா , போகும் போது நல்லா பாக்குறேன்!

கீஜபக்சே - அதுவும் சரிதான் , உங்க மேனன் கூட ரெண்டு நாள் இருந்து நெறைய இடம் பாத்துட்டு போனார்...

கிரணாப் கிகர்ஜி - அப்படியா , சொல்லவே இல்லியே அவுரு? அப்புறம் உங்கூர்ல புலிகள் எப்படி?

கீஜபக்சே - உங்கூர்ல இல்லாத புலியா இங்க இருக்கு? நானே கிர் காட்டுல வந்துதான் புலிகளை நல்லா தெளிவா பாக்கணும்!

கிரணாப் கிகர்ஜி - கண்டிப்பா வாங்க , நானும் அந்த ஊரைச் சேர்ந்தவன் தான் , நீங்க வந்தா புலி சூப் கண்டிப்பா போட்டுத் தாறேன். ஆமாம் , இங்க ஏதோ புலிகள்னு ஒரே பேச்சா இருக்கே?

இராஜபக்சே - அதுவா , அப்படி ஒண்ணும் இல்லையே , எல்லாம் டெரரிஸ்டு.........உங்க ஊர்ல இராஜிவ் காந்திய கொன்ன டெரரிஸ்டுக தான் அவுங்க....!

கிரணாப் கிகர்ஜி- அப்படியா , அது எனக்கு தெரியாம போச்சே , வருணாகதிதான் நீங்க இலங்கைக்கு போயே ஆகணும்னு சொன்னார் , நானும் புவியியல்ல வீக்கா , அதனால அந்த ஊரை மேப்ல தேடித்தேடி அலுத்துட்டேன் , அப்புறமா டீ.ஆர் கீலுதான் நான் டிக்கெட் போட்டுத்தாரேன்னார். ப்ரீ டிக்கெட் தானே , அதான் ஒரு எட்டு வந்துட்டு போலாம்னு ....அப்புறம் நாங்க அனுப்பிச்ச பணம் எல்லாம் வந்துடுச்சா ? அஞ்சு கன்டெய்னர் ஆயுதம் அனுப்பினேனே ? சும்மாதானே அனுப்பிச்சேன் , அத கஸ்டம்ஸ்ல க்ளியர் பண்ண முடியலையாமே ? ஆமாம் உங்க ஊர்ல இருக்குற புலியையெல்லாம் இத வச்சி சுட்டுக்கொன்னுட்டா அப்புறமா உங்க மக்கள் எல்லோரும் புலியை மிருகக் காட்சி சாலையில மட்டும்தான் பாக்க முடியுமே பரவால்லையா?


கீஜபகசே - இல்ல , தமிலு மக்கள் தான் புலி வேணும் , புலி வேணும்கிறாங்க , அதனால அவுங்கள பூராம் போட்ல ஏத்தி இராமஸ்வரம் அனுப்பிடறேன்...அங்க புலிகள் இருக்கா?

கிரணாப் கிகர்ஜி - அங்க இல்ல , கொஞ்ச தூரம் போனா முதுமலைல பாக்கலாம்.....நான் வேணும்னா தமிலு மக்களுக்கு அங்க அகதி முகாம் ஒண்ணு ஏற்பாடு பண்ணறேன்....

கீஜபக்சே - ரொம்ப சவுகரியமா போச்சி , இப்பவே ஆயுதமெல்லாம் க்ளியர் பண்ணி புலிகளை பூராம் அழிச்சிடறேன்...அப்புறம் முதுமலை அகதி முகாமுக்கு தமிலர்களை அனுப்ப போட் கொஞ்சம் சார்ட்டேஜீ - கொஞ்சம் கடன் கொடுத்து உதவ முடியுமா?

கிரணாப் கிகர்ஜி - அச்சச்சொ , அது டேஞ்சராச்சே , இராமஸ்வரத்துல நான் கொடுக்கற போட்ல வந்து எறங்கினா பீமதாஸும் , சுருமாவளவனும் கொஞ்சம் குதிப்பாங்களே...வருணாகதி பரவால்லே , அடுத்த பொதுக்குழு 2010 ல கூடும் போது முடிவெடுக்க வச்சிரலாம். சைகோ இப்ப்த்திக்கு ப்ராம்ளம் இல்ல. தா.வேண்டியன் இப்பாலிக்கா தா.சீட்டு வேண்டிக்கிட்டு இருக்கார். அதனால ப்ராப்ளம் இல்லை. எதுக்கும் நான் எங்க தலைவர்கிட்ட கேட்டு சொல்லிடறேன்.

கீஜபக்சே : அப்படின்னா சரிதான்.....சாப்பிடலாமா? உங்களுக்காக ஸ்பெசலா , முல்லைத்தீவு தமிழ் இரத்தம் காச்சி வச்சிருக்கேன். ரொம்ப டேஸ்ட்டு , அந்த டேஸ்ட்டுல மயங்கி நான் இன்னும் லிட்டர் , லிட்டரா இரத்தம் வேணும்னு தன்சேகா கிட்ட ஆர்டர் பண்ணியிருக்கேன்......ஒரு வாரத்துல இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கும்.

கிரணாப் கிகர்ஜி - அப்படியா , அய் , எனக்கு ரொம்ப புடிக்கும் - ஒரு கட்டு கட்டிடறேன் , புதுக்குடியிருப்பு பொரியல் இருக்கா ?

கீஜபக்சே - அதுக்குத்தான் டிரை பண்ணறோம் , கூடிய விரைவில் கெடச்சிடும்...ஆனா இப்போதைக்கு ஆனையிறவு அவியல் இருக்கு போட்டுக்கறீங்களா?

கிரணாப் கிகர்ஜி - அது வேணாம் , எனக்கு அலர்ஜி ! புதுக்குடியிருப்பு பொரியல் வந்தவுடனே சொல்லி அனுப்புங்க , விருந்துக்கு அப்புறமும் வர்றேன். அப்புறம் இந்த முல்லைத்தீவு தமிழ் இரத்தம் ஒரு ரெண்டு பார்சல் கட்டணுமே ? எங்க குணமோகனுக்கும் , போனியாவுக்கும் கொடுக்கணும்.!

கீஜபக்சே உடனே தன்சேகாவை அழைத்து பார்சல் கட்டச்சொல்கிறார்.

கிரணாப் கிகர்ஜி - ஆமாம் , அடுத்ததா என்ன செய்யறதா உத்தேசம்?

கீஜபக்சே - நேரமாயிடுச்சி , தூங்கணும் , நாளைக்கு காலையில தன்சேகாவை கூப்பிட்டு இன்னிக்கு எத்தன லிட்டர் இரத்தம் தேவைப்படுதுன்னு ஆர்டர் கொடுக்கணும். என் தம்பிங்களுக்கு நரமாமிசம் ரொம்ப பிடிக்கும் , அதும் குறிப்பா தமிலன் நர மாமிசம்னா வயிறு நிறைய சாப்பிடுவாங்க. அவுங்க பசியோட இருக்கக் கூடாதில்லையா? அதுமட்டுமில்லாம , எங்க புத்தருக்கு தலைக்கறி படையல் வைக்கணும்!

கிரணாப் கிகர்ஜி - அப்படியா , அதுவும் சரிதான் , ஆனா புத்தர் உயிர்க்கொலை கூடாதுன்னாரே?

கீஜபக்சே - நாங்க புத்தர் சொன்னபடிதான் கேட்போம் , ஒரு உசுரை நாங்க கொல்றதில்லையே , எல்லாம் புலியடிச்சி செத்தவங்கதான் , செத்து விழுந்தவங்கள பொறுக்கறதுதான் நம்ம தனசேகாவோட வேலை.!


கிரணாப் கிகர்ஜி - அதானே பாத்தேன் , நல்ல விடயம்தான் , நான் பாராட்டுறேன்! அப்புறம் எதுக்கு இந்த ஆயுதமெல்லாம்?

கீஜபக்சே - அதுவா அது சும்மா லுல்லாய்க்கு.

கிரணாப் கிகர்ஜி - சரி , சரி பாத்து பத்தரமா இருந்துக்குங்க , புலி - கிலி அடிச்சிடப் போகுது .

கீஜபகசே - சரி அப்ப வருணாகதி ?

கிரணாப் கிகர்ஜி - அவரை அடுத்த பொதுக்குழுவுக்கு அப்புறம் பாக்கலாம். !

கீஜபக்சே - அரசியல் தீர்வு?

கிரணாப் கிகர்ஜி - மொதல்ல , புலியைக் கொல்லுங்க , அப்பாலிக்கா புலியை பாக்கறதுக்கு எல்லா ஊர் மிருகக் காட்சி சாலைக்கும் இருக்குற தமில் மக்களை அனுப்பிடுங்க. அப்புறமா முடிஞ்சா அரசியல் தீர்வை இல்லாத மக்களுக்கு அள்ளிக்கொடுத்திடுங்க.

கீஜபக்சே - அப்படீன்னா சரிதான் , ஆமாம் இந்த கஸ்டம்ல ஓவரா பணம் கேக்கறான் ஆயுதம் க்ளியர் பண்ண , பாகிஸ்தான் காரணெல்லாம் அவனே க்ளியர் பண்ணி கொடுத்திடுறான்.

கிரணாப் கிகர்ஜி - அப்படியா சேதி ? சரி நான் ஆயுதத்தோட கொஞ்சம் பணத்தையும் அனுப்பச்சொல்றேன் , அப்ப வாங்கிக்குவீங்களா??

கீஜபக்சே - அது மேட்டரு , அப்ப ஓக்கே.!

கிரணாப் கிகர்ஜி - ஓக்கே , ப்ளைட்டுக்கு நேரமாச்சி , நான் கெளம்பறேன் ,

கீஜபக்சே - ஓக்கே , போய்ட்டு வாங்க , புதுக்குடியிருப்பு பொரியல் கெடச்சவுடனே தகவல் அனுப்பறேன் ,வந்து சேருங்க.

கிரணாப் கிகர்ஜி - உங்க உத்தரவுக்கு மறு பேச்சேது ? பாப்போம்!


சம்பவங்களும் , பெயர்களும் முழுக்க முழுக்க கற்பனையே ! ஆனால் , நிஜத்திலும் , இதிலுள்ள ஷரத்தைவிட பெரிய விவாதம் நடந்திருப்பதாய் தகவலில்லை என்ற வேதனையை பதிய வைக்கும் முயற்சியே இது! பிற்சேர்க்கை.

இதை நையாண்டி என்ற பதிவில் இட்டிருந்தாலும் இது நையாண்டி அல்ல என்பதையும் புரிந்து கொள்ளவும் ,


Read more...

ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்???

Tuesday, January 27, 2009

அது நடந்து சற்றேறக்குறைய 18 ஆண்டுகள் ஆயிற்று. ஆம் , 1991 மே மாதம் உயர்திரு இராஜிவ் காந்தி கொல்லப்பட்டது முதல் இன்றுவரை தேசத்திற்கு எந்தவொரு தெளிவான அறிக்கையும் சொல்லப்படவில்லை. மக்களுக்கு யார் குற்றவாளி , என்ன மூகாந்திரம் எதுவுமே தெளிவுறச் சொல்லப்படவில்லை. புலிகள்தான் இராஜீவை கொன்றார்கள் என்ற பெரியதொரு கூச்சல் மட்டும் காங்கிரஸாரிடம் இருந்து கேட்கிறது.

இந்தச்சூழலில் தமிழ்வின் இணையதளம் தமிழன் எக்ஸ்பிரஸ் புலனாய்வுப் பத்திரிகை வெகுகாலத்திற்கு முன் வெளியிட்ட கேள்விகளை மறுபிரசுரம் செய்திருக்கிறது. பதில் சொல்லப்பட்டாகி விட்டதா இந்தக் கேள்விகளுக்கு என்பதை நாம் இந்திய அரசிடம் கேட்கவில்லை. கேட்டாலும் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை.
தமிழனின் உயிரையே மதிக்காதவர்களா இந்த கேள்விகளை மதிக்கப் போகிறார்கள்????

இனி தமிழ்வின் சிறப்புக்கட்டுரை - அப்படியே தரப்பட்டிருக்கிறது.


ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன.


தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது.

1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.

இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் 'முன் ஜோடிப்பு கதைகளை' போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.

இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். 'நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்' என்று கூட சவால் விட்டார்.

இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது.

கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து.

'விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?' என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்.

Read more...

இனி நாம் என்ன செய்ய?

Monday, January 26, 2009

இன்று காலை செய்திகளைப் பார்த்தோம். சிறிலங்கா அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருந்த முன்னூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதிர்ச்சியின் விளிம்பிற்கே இட்டுச்சென்றது இந்தச் செய்தி.........!

இந்திய நடுவண் அரசுக்கு அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுத்தாயிற்று. என்ன சேதி என்று கேட்பதைக் காணோம். தமிழன் உயிர் மசுருக்கு சமம் என்று வாழாவிருந்து விட்டார் மன்மோகன்சிங். ராசபக்சேதான் எமது கூட்டாளி , தமிழன் எனக்கு பகையாளி என்று தமிழர்களுக்குமான இந்திய அரசு சொல்லிவிட்டது. அதற்கான அர்த்தம் என்ன? தமிழர்கள் ஓட்டுப் போட்டு , தன்னை ஆள தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கம் தனது மக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறி விட்டது.

தனது மக்களின் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதே ஒரு அரசாங்கம். அங்ஙனம் பிரதிநிதித்துவப் படுத்தாமல் தனது பிராந்திய நலனுக்காக தமிழனின் உயிரை பணயம் வைப்பதென்பதை கடுகளவும் கூட யாரும் நியாயப்படுத்தி விட முடியாது.

ஆக , தன்னுள் ஒரு அங்கமான தமிழகத்தை / தமிழனை நட்டாற்றில் விட்டுவிட்டது இந்தியா. தமிழன் இயலாமையில் துடிக்கிறான். 7 கோடிப் பேர் இருந்தும் எமக்கு குரல் கொடுக்க எவருமே இல்லை என்ற சுயபச்சாதாபத்தில் இருந்து விடுபட வழி தெரியாமல் தவிக்கிறான்.

தமிழன் என்றொரு இனத்துக்கு தனி வரலாறுண்டு , தனி குணமுண்டு என்றெல்லாம் இலக்கியத்தில் படித்தது பொய்யா என்ன? இல்லை வரலாறு பொய்யில்லை , தமிழனின் வீரமும் எவனுக்கும் சளைத்ததில்லை என்பதைத்தான் என் ஈழ சகோதரன் இன்றும் காட்டிக்கொண்டிருக்கிறான். என்ன அன்று கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன் போல இன்று கூலிக்கு மாரடிக்கும் எட்டப்பன்கள் தமிழினத்தில் பெருத்துவிட்டார்கள்.

அந்த எட்டப்பன்களால் தமிழினத்தின் கறைபடிந்த வரலாற்று நிகழ்வு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. எம்மை ஆளும் சக்திகளுக்கும் , எமது உணர்வுகள் ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற ஆற்றாமையிலும் , இயலாமையிலும் புலம்பித் தவிக்கிறான் தாய்த் தமிழகத்தான். அதன் பிரதிபலிப்புத்தான் நேற்று இந்திய குடியரசு தினத்தன்று நிறைய தமிழக கிராமங்கள் குடியரசைப் புறக்கணித்து கறுப்புக்கொடி காட்டின. இதன் பிறகும் எமது செவிட்டு டெல்லிக்கு எதுவுமே ஏறவில்லை.!!!

என்ன பாவம் செய்தோம் , தமிழைப் பேசுவதைத் தவிர ? என்று என் ஈழத்தமிழன் கேட்கிறான். என் தமிழ்த் தாய் கண்ணீர் சொரிகிறார். ஈனத்தமிழர்கள் சிலர் எதிர்ப்பாட்டு பாடுகிறார்கள்.

இருக்கும் ஒரே வலுவான பிரதிநிதியான புலிகளையும் ஒழித்துவிட்டு சரி சமமான உரிமைகளைத் தரப் போகிறாராராம் ராசபக்சே ???? போய் பச்சைக் குழந்தையிடம் சொல்லிப்பாரும் , கைகொட்டிச் சிரிக்காதா ????? அந்தக் குழந்தைக்கு புரிவது கூட எம் அரச தலைவர் மன்மோகன் சிங்கிற்கும் , பிரணாப் முகர்ஜிக்கும் புரியவில்லை. அல்லது புரிந்தும் எமது இன அழிப்பிற்கு துணை போகிறார்கள்.

டெல்லிக்கு நமது உணர்வை எடுத்துச் செல்லும் பொறுப்புடைய கருணாநிதி தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறார். இராமதாஸ் எல்லாவற்றையும் கருணாநிதி மேல் போட்டுக்கொண்டு தப்பிக்க முயற்சிக்கிறார்.

யாரைக் கண்டித்து என்ன செய்ய?
யாரைக் குற்றஞ்சாட்டி என்ன செய்ய?
யாரைக் கைகாட்டி என்ன பிரயோசனம்?
இனிமேல் எதைப் பேச , எதை விட ?

எமது கண்டனங்களும் , கூப்பாடுகளும் , முறைப்பாடுகளூம் , அழுகுரல்களும் யாரையுமே சலனப்படுத்தாத போது நாம் எங்கு சென்று முறையிடுவது.???

இனி நாம் என்ன செய்ய?

ஆனால் ஒன்று , நாம் படித்த வரலாறு நமக்குச் சொல்வதெல்லாம் ஒன்றேதான். வெற்றியும் , தோல்வியும் என்றுமே நிரந்தரமானதில்லை. எமது நாள் வரும் , எமது இனத்தான் வெற்றி பெறுவான். இன்று உலகை நாம் இறைஞ்சுகிறோம். அன்று இந்த உலகம் எம்மைத் தேடி வரும். அந்த நாள் வந்தே தீரும்.!

Read more...

"அஞ்சரைக்குள்ள வண்டி" காப்பாத்தும் கலாச்சாரம்.!

Tuesday, January 20, 2009

நேற்று , ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டு கலாச்சாரப்படி பெண்களுக்கு சேலை கட்டுவதே சிறந்தது எனவும் , சுடிதார் / சல்வார் போன்ற நாகரீக உடைகளும் , ஜீன்ஸ் - டீ சர்ட் போன்ற உடைகளும் தமிழ்நாட்டு கலாச்சாரத்தை சீரழித்து விடுவதாகவும் அங்கலாய்த்துக்கொண்டார்.

அருகிலிருந்த இன்னொரு நண்பர் , ஆமாம் , ஆமாம் - சேலை போன்ற செக்ஸியான டிரஸ் அணிவதே கண்களுக்கு விருந்து என்று கமெண்ட் அடித்துக்கொண்டிருந்ததை பற்றி நாம் விரிவாகச் சொன்னால் நாம் சொல்ல நினைத்த மேட்டர் சேலை , செக்ஸியா இல்லையா என்ற பட்டிமன்ற விவாதம் போல ஆகி விடுமென்பதால் இந்த தகவலளவில் நிறுத்திக்கொள்கிறோம்.

அந்த நீண்ட விவாதம் மிகப்பல கேள்விகளை நமக்குள் எழுப்பியது. ஒரு சில கேள்விகள் உங்கள் பார்வைக்கும்!!

சேலையைக் கட்டாமல் சுடிதார் போடுவதால் நமது கலாச்சாரம் சீரழிந்து விடுமென்றால் , சுடிதாரும் போடாமல் வெறும் கர்ச்சீப்பை துணியாக்கி நடிகைகள் சினிமாவில் போடும் ஆட்டம் கலாச்சாரத்தைக் கெடுக்காதா?

காசு கொடுத்து பண்முள்ளவர்களும் , விருப்பமுள்ளவர்களும் போகும் சினிமாவிற்கு இருக்கும் சென்சார் , வீட்டு வரவேற்பரையில் நம்மை வந்து சேரும் கலாச்சார இழிவுகளை விற்பனை செய்யும் மெகா தொடர்களையும் , நடன நிகழ்வுகளையும் ஊக்குவிப்பது மட்டும் கலாச்சாரத்தைக் கெடுக்காதா?

பாலியல் கல்வி கற்றுத் தருவது கலாச்சார சீர்கேட்டிற்கு வழி வகுக்குமென்றால் , பாலியல் வக்கிரங்களையே செய்திகளாக்கி அன்றாடம் கள்ளக்காதலன் கொலை இத்யாதி இத்யாதி செய்திகளைத் தாங்கி வரும் செய்தித்தாள்கள் மட்டும் நமது கலாச்சாரத்திற்கு கெடுதல் விளைவிக்காதா?

ஜவுளிக்கடை பொம்மைகளைக் கூட மனதினுள் அம்மணமாக்கி கந்தர்வ மணம் புரியும் வக்கிர மனதுக்காரர்கள் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் புண்ணிய புருஷர்களா என்ன?

நமது கலாச்சாரம் , பண்பாடு இவற்றைப் போதிக்கும் புனித நூல்களாக அனேகம் பேர் கருதும் மகாபாரதமும் , இராமயணமும் அத்தகைய தகுதியுரியவைதானா?
தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகளாம் , ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் பொண்டாட்டியை எண்ண முடியாதாம் , ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் நமதாம் , ஆனால் பாஞ்சாலி ஐவருக்கு பொண்டாட்டியாம். இன்னும் ஆயிரம் உதாரணங்களை நம்மால் காட்டவியலும். இந்த உதாரணங்கள் எல்லாம் இத்தகைய இதிகாசங்கள் புகட்டும் நீதிகளா?

நீலப்படங்களையும் , முத்தம் பொழியும் ஆங்கிலப்படங்களையும் கலாச்சாரத்தை கெடுக்க வந்தவை என்று சொல்லிக்கொண்டே அம்பாள் தியெட்டரில் "அஞ்சரைக்குள்ள வண்டி" பார்த்த அனேகம் பேரை எமக்குத் தெரியும். அஞ்சரைக்குள்ள வண்டி காப்பாற்றும் கலாச்சாரத்தையா சுடிதாரும் , சல்வாரும் கெடுத்து விடப் போகிறது??

உடையென்பது நமது உடலை மறைக்கும் ஒரு துணி , அவ்வளவுதானே? அதிலென்ன கலாச்சாரமிருக்கிறது? கையில்லா பனியன்களையும் , தொடை தெரிய ஜீன்ஸையும் போட்டுக்கொண்டிருக்கும் மேலை நாடுகளைவிட சேலை போர்த்தி கலாச்சாரத்துடன் விளங்கும் இந்தியாவில் தான் கற்பழிப்புகள் நடக்கின்றனவே ? அதற்கென்ன செய்ய ?

உடையில் ஒன்றுமில்லை , உணர்வுகளிலும் , பார்க்கும் பார்வைகளிலுமே கோளாறு என்ற உண்மையை நாம் உணர்வதெப்போது?


Read more...

தமிழனின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்








FILE


இலங்கையில
சிறிலங்அரசதமிழர்களஒட்டமொத்தமாஅழித்திதிட்டமிட்டநடத்‌திவருமஅரபயங்கரவாதத்திற்கமுடிவுகட்ட, உடனடியாபோரநிறுத்தமசெய்யுமாறவலியுறுத்வேண்டுமஎன்றதமிழ்நாடவிடுத்வேண்டுகோளமுற்றிலுமாபுறந்தள்ளிவிட்டு, ராஜபக்அரசினஒடுக்கலநடவடிக்கைகளுக்கஇன்முகத்துடனஆதரவளித்துவிட்டுததிரும்பியுள்ளாரஇந்திஅயலுறவசெயலரசிவ்சங்கரமேனன்.

கடந்மூன்றரமாதமாதமிழ்நாடஅரசும், தமிழ்நாட்டினஅனைத்துககட்சிகளுமசட்டபபேரவையிலும், வெளியிலுமஒருமித்குரலிலவிடுத்வேண்டுகோளிற்கஎந்மரியாதையுமஇல்லஎன்பதஅயலுறவசெயலரசிங்சங்கரமேனனபயணமசந்தேகத்திற்கஇடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது.

ஈழததமிழர்களமீதகட்டவிழ்த்து விடப்பட்டுள்அழித்தலதடுக்போரநிறுத்தமசெய்திடஎன்றமத்திஅரசவலியுறுத்தமிழர்களாகிநீங்கள், தீர்மானமபோடலாம், போராட்டமநடத்தலாம், மனிசங்கிலி நடத்தலாம், உண்ணாவிரதபபோராட்டமமேற்கொள்ளலாம். ஆனால், பிரதமரமன்மோகனசிஙதலைமையிலாஐக்கிமுற்போக்ககூட்டணி அரசிற்கு, உங்களினஇனத்தஅழித்துவருமஅதிபரராஜபக்அரசுடன், “முனஎப்போதையுமவிஇப்போதஆழ்ந்த, இதமான, பலமாஉறவஉள்ளது” என்றசிங்சங்கரமேனனதன்னிடமகூறினாரஎன்றசிறிலங்அயலுறவஅமைச்சரரோகிபோகல்லகாமகூறியிருப்பது, “தமிழர்களைததாண்டிஒரநல்லுறவநாங்களசிறிலங்அரசுடனகொண்டுள்ளோம்” என்பதையதமிழனினசெவிப்பறகிழிபறைசாற்றியுள்ளது.

அதுமட்டுமா? “தமிழர்களஉட்பஇலங்கையிலவாழுமஅனைத்தமக்களுமஅமைதியுடனும், கெளரவத்துடனுமவாவழிவகுக்குமஒரஅரசியலதீர்வை, பேச்சவார்த்தையினமூலமகாவேகமாசெயலாற்வேண்டுமஎன்றஇந்திஅரசினசார்பாசிறிலங்அரசிடமவலியுறுத்தப்பட்டதாக” கொழும்புவிலஇருந்தஇந்தியததூதரகமவெளியிட்அறிக்ககூறுகிறது.


PUTHINAM
விமானமமூலமகுண்டுகளவீசியும், கனரபிரங்கி, பல்குழலபீரங்கி, எறிகணைகளசுட்டுமஒவ்வொரநாளுமதமிழர்களைககொன்றவதைத்துவருமசிறிலங்அரசினஅயலுறவஅமைச்சரிடமும், அதிபரிடமும், ‘தமிழர்களஅமைதியுடனும், கெளரவத்துடனுமவாஅமைதி வழியிலதீர்வகாவேண்டும்’ என்றகூறியுள்ளதாஅறிக்கவிடுவததமிழர்களஏமாற்றுவதமட்டுமல்ல, வெறுப்பேற்றுமநடவடிக்கையாகும்.

இலங்கஇனபபிரச்சனைக்கஅமைதி வழியிலஅரசியலதீர்வவலியுறுத்திஜப்பானஉள்ளிட்அனைத்தநாடுகளும், முதலிலதமிழர்களமீதநடத்திவருமபோரநிறுத்துமாறகோரிக்கவிடுத்துவருமநிலையில், போரநிறுத்தமகுறித்தஒன்றுமபேசாமல், தமிழர்களஅமைதியுடனும், கெளரவத்துடனுமவா‘விரைந்து’ வழிகாணுமாறி‌வ்சங்கரமேனனகூறிவிட்டவருகிறாரஎன்றால், அதனபொருள், ‘விரைந்தஅழித்துவிட்டபிரச்சனையமுடியுங்கள்’ என்பதுதானதவிர, தீர்வகாணுங்களஎன்றபொருளல்ல.


FILE
எனவதனதவெளிப்படையான, மறைமுகமாநடவடிக்கைகளினமூலமதமிழர்களினநலனஅல்லதஅவர்களுக்கஉரிமபெற்றுததருவததங்களினநோக்கமோ, கவலையஅல்என்றபிரதமரமன்மோகனசிஙதலைமையிலாஐக்கிமுற்போக்ககூட்டணி அரசும், அதனதலைமைபபொறுப்பிலுள்காங்கிரஸகட்சியுமதெளிவாதெரிவித்துவிட்டன.

கடந்ஆண்டஅக்டோபரமாதமமுதலஇன்று வரதமிழ்நாடும், உலகளாவிதமிழினமுமஒருமித்குரலிலவிடுத்கோரிக்கைகளஅனைத்தும், இலங்கவாழதமிழர்களினஉரிமைக்கஒப்புக்கொண்டசேனநாயகா, பண்டாரநாயகா, சிறிமாவஆகியோரஒப்பந்தமசெய்து, பிறகஅதனகிழித்துததூக்கி எறிந்தததைபபோமத்திஅரசாலஉதாசீனப்படுத்தப்பட்டுள்ளன.

அன்றைக்கசிங்கஆட்சியாளர்களதமிழனினஉரிமைகளைபபறித்தநெஞ்சிலகுத்தினர். தமிழ்நாடு, புதுவையிலிருந்து 40 மக்களவஉறுப்பினர்களுடனஆட்சி அமைத்காங்கிரஸகட்சி, இன்றஅவர்களினவாழ்வைக் காக்குரலகொடுத்தமிழினத்தினகோரிக்கையமறுத்தமுதுகிலகுத்தியுள்ளது.

இதற்கமேலுமஈழததமிழரகாக்கவஅல்லதஅவர்களினபிரச்சனைக்குததீர்வகாணவோ ஐ.ு.ூ. அரசநம்பிபபயனில்லை.


PUTHINAM
எப்படி ஈழததமிழனினநலனைபபுறக்கணித்து, தமிழ்நாட்டமீனவனினவாழ்வுரிமையதாண்டி, தமிழிஎதிரியாவெறி சிறிலங்அரசுடனமத்திஅரசஉறவகொண்டுள்ளதஅதற்கபதிலடியாதமிழினமமத்திஅரசைததாண்டி, நியாயமாதமிழரினவாழ்வுரிமைபபோராட்டங்களுக்கதீர்வகாஐக்கிநாடுகளசபையையும், உலநாடுகளையுமநேரடியாநாவேண்டும்.

தமிழனினசுதந்திரமும், வாழ்வுரிமையுமபேரத்திற்கஅல்லததன்னஒரவல்லரசாகாட்டிக்கொள்முற்படுமஒரஅரசினநலனிற்காகவபலியிடுவதற்கஇல்லஎன்பததமிழினமஒன்றுபட்டஎழுந்தவீறுகொண்டசெயல்பட்டநிரூபித்திவேண்டும்.


Read more...

தமிழீழத்தை / புலிகளை அங்கீகரித்தால் பாஜகவை தேர்தலில் ஆதரிப்பீர்களா ?

Tuesday, January 6, 2009

ஈழத்தமிழர் விடயத்தில் சற்றேறக்குறைய அனைத்து கட்சிகளின் நிலையும் நமக்கு தெரிந்தாகிவிட்டது.

காங்கிரஸ் பிரணாப் முகர்ஜி அவர்களை அனுப்ப மறுப்பதன் மூலமும் , விமானங்களின் குண்டு வீச்சிற்காகவும் கொஞ்சம் கூட கவலைப் படாதென்பதையும் தெளிவுற விளக்கிவிட்டது. இரண்டு முறை பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் தாக்குதலை கண்டித்த இந்திய நடுவண் அரசு ஈழத்தைப் பற்றி வாய் திறக்கவே மறுப்பது நடுவண் அரசை நடத்தும் காங்கிரஸின் நிலையை தெளிவுற விளக்கி விட்டது.

தமிழகத்தை ஆளும் திமுகவோ காங்கிரசை நம்பியே தமிழகத்தில் தனது ஆட்சியை நடத்தும் ஒரு சூழலில் இருப்பதால் தெரிந்தோ , தெரியாமலோ ஈழத்தமிழர்களை நிராதரவாக விட்டாகி விட்டது. வெறும் அனைத்துக் கட்சி கூட்டமோ , சட்டமன்றத் தீர்மானமோ , முதல்வரின் டெல்லிப் பயணமோ இந்திய அரசின் நிலையை மாற்ற உதவாது என்பதும் தெளிவுற விளங்கியாயிற்று.

அதிமுகவாவது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மதிப்பதாகவும் அதே சமயம் புலிகளை ஆதரிக்க மாட்டோம் என்று தெளிவுற செய்தி சொல்லியாயிற்று.

ஈழத்தமிழர்களை எப்போதும் ஆதரிக்கும் மதிமுக , விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல சின்னஞ்சிறு கட்சிகள் இவர்களின் குரல் எடுபடப் போவதில்லை என்றே கடந்த காலம் சொல்லுகிறது.

பாமகவோ தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைக்கிறது என்றே வெளிப்படையாக சொல்லி ஆட்சிக்கான ஆதரவை மறுபரீசிலனை செய்யப் போவதாய் சொல்லியிருக்கிறது. என்னதான் இது கூட்டணி மாற்றத்திற்கான செயலாக ஒரு சிலர் கருதினாலும் இந்தளவிற்காவது அவர்களின் நிலையை தெளிவுற சொன்னதற்காக பாராட்டப் பட வேண்டியதே.

எஞ்சிய கட்சியான பாஜக தமிழகத்தில் பெரிய அளவிலான அடையாளங்களையும் , வாக்கு வங்கியையும் கொண்டிருக்காத கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சி இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்றும் , இந்தியாவில் லட்சக்கணக்கான அகதிகள் இருப்பதால் இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை அல்ல என்றும் வலியுறுத்தியது.

சமீபத்தில் ஒரு படி மேலே போய் , புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

பொதுவாக சுயமரியாதை இயக்கத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் பலரும் , (நான் உள்பட) இந்துத்துவ அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்கள். தொடர்ச்சியாக சங் பரிவார் கும்பலையும் / பாஜகவையும் அதன் இந்துத்துவ அரசியலை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்.

எப்படி பாஜக வடமாநிலங்களில் இந்துத்துவ அரசியலை கிளப்பிவிட்டு குளிர் காயப் பார்க்கிறதோ அதே போலவே தமிழர்களின் இயல்பான ஈழ உணர்வை பயன்படுத்தி குளிர் காயப் பார்க்கிறது பாஜக என்றும் வாதத்தை முற்றிலுமாக ஒதுக்கி விட முடியாது. ஆனால் , அத்தகைய ஒரு சூழலை , ஈழத்திற்கு ஆதரவான போக்கை நாம் வரவேற்றே தீர வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு பெரிய கட்சிகள் அனைத்தும் வாய்மூடி மெளனியாகவே காட்சியளிக்கின்றன.

அதே சமயம் பாஜக அடுத்ததாக இந்தியாவை ஆளும் வாய்ப்புப் பெற்ற கட்சி என்பதனையும் , இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயம் செய்யும் வாய்ப்புப் பெற்ற கட்சி என்பதனையும் நாம் ஒரேயடியாக புறந்தள்ளிவிட முடியாது. அப்படியொரு சூழல் வரும் பட்சத்தில் , வெளிப்படையாக ஆதரவளிக்காவிட்டாலும் , தேர்தல் சமயத்தில் சொன்னவற்றிற்கு நேர்மாறாக எந்தக் கட்சியும் முடிவெடுக்க முடியாது.

ஆகவே , நமது கேள்வியெல்லாம் இதுதான்.

ஒரு வேளை , பாரதிய ஜனதா கட்சி தமிழீழத்தை அங்கீகரிப்பதாகவும் , புலிகளுக்கெதிரான தடையினை நீக்குவாதகவும் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவீர்களா / ஆதரிப்பீர்களா என்பதைத் தான்.....


அதற்கான வாக்கெடுப்பு பெட்டி வலைப்பூவின் இடது மேற்புறத்தில் இருக்கிறது. உங்கள் வாக்குகளை அதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வாக்கெடுப்பு பற்றியும் , வாக்கெடுப்பின் உள்ளாக்கம் பற்றியுமான உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களின் வாயிலாக தெரிவிக்கவும்.

நன்றிகள்.

Read more...

என்ன கொடுமை சரவணா இது??

Monday, January 5, 2009

ஒரு சில செய்திகள் , ஒரு சில நிகழ்வுகள் .....உங்களின் பார்வைக்காக...!!

செய்தி - 1

மதுரை: சில கட்சியினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று செல்போன் கொடுத்து ஓட்டு கேட்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தி - 2

திருமங்கலம்: விஜயகாந்த் கட்சியினர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை, பணம் கொடுப்பதாக தகவல் வருகிறது. மற்றவர்கள் பணம் கொடுப்பதை எதிர்க்கும் விஜயகாந்த், மட்டும் இப்படிச் செய்யலாமா என்று அஇசமக கட்சியின் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தி - 3

தொகுதியில் உள்ள 190 வாக்குச் சாவடிகளிலும் திமுகவினரே ஓட்டு களை போடுவதற்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய் வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அப்படி என்றால் நாங்கள் ஏன் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர் இதுபோன்று தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறார் என்றார் ஸ்டாலின்.

செய்தி - 4

சென்னை: திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணம் கொடுத்ததாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரம் முதல் நாளிலிருந்தே அனல் பறந்து வருகிறது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக அவர்களில் சிலரை திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

செய்தி - 5

வேட்பாளரின் வாகனத்துடன் இத்தனை வாகனங்கள்தான் செல்ல வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால் ஜெயலலிதா பிரசாரத்தில் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜெயலலிதா வாகனத்தை பின்தொடர்ந்து சென்றது. இது விதிமுறையை மீறிய செயலாகும். ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்ற
மனு‌வி‌லதிமுக வேட்பாளர் லதா அதியமான் கூறியுள்ளார்.



இத்தனை செய்திகளையும் படித்த பிறகு இந்தியாவிற்கு ஜனநாயகம் தேவையா ?

இப்படி நடக்கும் தேர்தல் நியாயமானதாக இருக்குமா?

என்ன கொடுமை சரவணா இது???

என் நியாயமான ஆதங்கம்................!!!!

ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதன் மூலம் வாக்காளர்களின் வாக்குகளை பெற முயற்சிப்பதை மட்டும் தேர்தல் கமிஷன் எப்படி அங்கீகரிக்கிறது.

போலீஸ் எஸ்.பி மேல் குற்றச்சாட்டென்றால் வேறு ஒருவரை மாற்றுகிறார்கள்.

போலிஸ்காரர்கள் மேல் நம்பிக்கை இல்லையென்றால் ரிசர்வ் போலீஸ் வருகிறது.

தேர்தல் அதிகாரிகளின் மேல் குற்றஞ்சாட்டுவது மட்டும் தவறா? ஏன் தவறு ? அவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா ? வானத்தில் இருந்து நேரடியாக கீழே வந்தவர்களா ???

எப்படி சொல்ல முடியும்? நேற்றைய தேர்தல் அதிகாரி திரு.மலைச்சாமி இன்று அதிமுகவில் எம்.பியாக இல்லையா ? நீதி வழங்கலுக்காக அமையப்பெற்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தே மேல் முறையீட்டுக்கு வழி இருக்கையில் தேர்தல் அதிகாரியை மட்டும் குற்றஞ்சாட்டக்கூடாதா ?

அதில் உச்சகட்ட கேவலம் , நரேஷ் குப்தா நல்லவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு தரப்பே சர்ட்டிபிகேட் கொடுப்பதுதான். !!!!

Read more...

கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா?

Sunday, January 4, 2009

பலமுறை கொடுக்கப்பட்ட காலக்கெடுக்களின் மத்தியில் தாக்குப் பிடித்த கிளிநொச்சியும், பரந்தனும் படையினரிடம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.


கிளிநொச்சியின் வீழ்ச்சி குறித்து தென்னிலங்கையில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சண்டையை "சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்' என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் இது தவறான கருதுகோளாகவே தெரிகிறது. கிளிநொச்சியின் இழப்பு புலிகளுக்கு பின்னடைவேவிர அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று எனக் கருத முடியாது.

கிளிநொச்சியின் வீழ்ச்சியை புலிகளின் மீளமுடியாத தோல்வியாகச் சித்தரிக்க பலரும் முற்படுகின்றனர். ஆனால் அது எந்தளவுக்குச் சரியானதென்பதை இப்போது தீர்மானிக்க முடியாது.

ஏனென்றால் இப்போதுள்ள படை வளங்களைக் கொண்டு புலிகள் தொடர்ந்தும் மரபு வழிச் சண்டைகளைச் செய்யப் போகின்றனர். கிளிநொச்சி, பூநரிக்குப் பின்னரும் மரபுவழிச் சண்டைகள் நீடிக்கப் போகிறது என்றும், கிளிநொச்சியின் வீழ்ச்சி பற்றி சூசகமாகவும்

20081109 வாரவெளியீட்டில் இதே பத்தி யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



இது எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்வு அல்ல. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான் என்பதும் ஆனால், சற்றுத் தாமதமாக நடந்தேறியிருக்கிறது என்பதும் தான் உண்மை. புலிகளின் போர் நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களுக்கு அவர்கள் கேந்திர நிலைகளைத் தக்க வைப்பதற்கு எந்தளவுக்குச் சண்டையிடுவார்கள் என்பதும் அதற்குப் பின்னர் என்ன செய்வார்கள் என்பதும் நன்கு தெரியும்.

சாதகமான இடங்களில் வலுவாக நின்று போரிடுவது, குறிப்பிட்ட இடத்துக்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது, தமது படைவளங்களைப் பாதுகாப்பதற்காக திடீர் பின்னகர்வைச் செய்வது என்று புலிகள் தமது போர் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறõர்கள்.

கிளிநொச்சி பரந்தனின் வீழ்ச்சி என்பது புலிகளால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொன்று. படையினரின் நகர்வைத் தடுத்து நிறுத்திச் சண்டையிடாமல் அணிகளைப் பின்னகர்த்திச் சண்டையிடும் உத்தியையே புலிகள் கிளிநொச்சிக்கான இறுதிச் சண்டையின் போது கையாண்டிருந்தனர்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் படையினரின் கிளிநொச்சி நோக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முறியடித்திருந்த புலிகள்

ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களின் தாக்குதலை தடுத்து நிறுத்திய புலிகள்

இரணைமடுவில் முன்னகர்ந்து நிலை கொண்ட படையினரை அரைப் பகல் சண்டையில் பின் தள்ளிய புலிகள் ஒரே நாளில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட்டுப் பின்வாங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அதற்காக இதை ஒரு தந்திரோபாயமான பின்வாங்கல் என்று நியாயப்படுத்த முடியாது. புலிகள் தமக்கு பலமுனை அழுத்தங்களைக் கொடுக்க முனையும் படையினரை ஏதோ ஒரு வில்லங்கமான களமுனைக்குள் இழுத்துச் செல்ல எத்தனிக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

1996 இல் "சத்ஜய' நடவடிக்கையின் போது ஆனையிறவில் இருந்து படையினர் மூன்று கட்டங்களாக முன்னேறியே கிளிநொச்சியைப் பிடிக்க முடிந்தது. அதற்குத் தேவைப்பட்ட நாட்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்போது புலிகள் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட்டிருப்பதன் அர்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.



ஒன்றில் படைத்தரப்பு சொல்வது போன்று புலிகள் பலவீனமடைந்திருக்க வேண்டும். அல்லது அவர்கள் மற்றொரு வியூகத்தை வகுத்துச் செயற்படத் தொடங்கியிருக்க வேண்டும். அதேநேரத்தில் புலிகள் கிளிநொச்சியை விட்டு விலகிச் சென்றிருப்பதால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக தெற்கில் செய்யப்படும் பிரசாரங்களின் வலிமையே அதிகமாக உள்ளது. அது போர்க்களத்தில் படையினரின் வலிமையைப் பிரதிபலிக்கிறதா என்பது சந்தேகமே.

கிளிநொச்சியைக் கைவிட்டு தமது பிரதான கோட்டையான புதுக்குடியிருப்பு அடங்கலான பிரதேசத்தை தக்க வைத்துக் கொள்ளப் புலிகள் முற்பட்டிருக்கலாம்.

"சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்' என்பது புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமராகவே இருக்குமே தவிர கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சமர் அல்ல.

கிளிநொச்சியில் உக்கிரமான சண்டை நடந்தது உண்மை. ஆனால் அதன் இறுதி நகர்வுகளின் போது பெரியளவில் சண்டைகள் நடக்கவேயில்லை என்பது அதைவிடப் பெரிய தான் உண்மை.



பரந்தனுக்கு வடமேற்கே கிளாலி கடலேரிப் பக்கமாக ஊடறுத்த 2ஆவது கொமாண்டோ பற்றாலியன் ஏ9 வீதியைத் துண்டித்து விட புலிகளுக்கு பரந்தனின் தேவை இல்லாது போனது.

ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் கிளிநொச்சியை விட்டு விலகத் தொடங்கியிருந்தனர். ஒரு வாரத்துக்கு முன்னரே புலிகள் கிளிநொச்சியை கைவிடும் முடிவை எடுத்திருந்தனர்.

அதற்கேற்ப அவர்கள் படையினருக்குப் பயன்படக் கூடும் எனக் கருதிய கட்டடங்களை தகர்த்திருந்தனர்.

பரந்தனை 58 ஆவது டிவிசன் கைப்பற்றிய பின்னர் கனகபுரம் துயிலும் இல்லப் பக்கமான முன்னேறிய 571 பிரிகேட், தென்கிழக்கே முன்னேறிய 572 பிரிகேட், இரணைமடுப் பக்கமாக தென்பகுதியில் இருந்து முன்னேறிய 574பிரிகேட் என்பன கிளிநொச்சிக்குள் புகுந்தன. கிளிநொச்சியையும் பரந்தனையும் கைவிடும் நிலை ஏற்படலாம் என்று புலிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆனால் அதற்குப் பின்னரும் தாக்குப் பிடித்து படைத் திட்டத்தை தாமதிக்கச் செய்ததற்கு காரணம் புலிகளின் வலுவான முறியடிப்பு திறனே என்பதில் சந்÷தகம் இல்லை.

கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது புலிகள் முறியடிப்பு அணிகளை களத்தில் வைத்திருக்கவில்லை என்றும் தெரிகிறது. தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டையிட்டிருக்கின்றனர்.

இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் கொல்லப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. புலிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை இழந்திருக்கின்ற நிலையில் ஆனையிறவைத் தக்கவைப்பது கடினமாகியுள்ளது. அவர்கள் அங்கிருந்தும் பின்விலகத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் முகமாலைகிளாலி நாகர்கோவில் களமுனைகளில் புலிகள் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டுமானால் பரந்தன் ஊடான விநியோகப்பாதை அவசியம். அது இழக்கப்பட்ட பின்னர் இந்த முன்னரணை அவர்கள் தக்கவைக்க கடுமையாகச் சண்டையி டுவார்களா என்பது சந்தேகமே.

அதேநேரத்தில் அவர்கள் இந்த முன்னரணுக்கான விநியோக வழிகளை முற்றாக இழந்து விட்டார்கள் என்றும் கருத முடியாது. சுண்டிக்குளம் ஊடாக அவர்களுக்கு மாற்றுப் பாதை உள்ளது. ஆனால் அது சிரமம் நிறைந்தது.

தற்போது புலிகள் முல்லைத்தீவு களமுனையில் எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க முனைவதாகவே தெரிகிறது. மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இருந்தவாறு சண்டையைத் தொடரும் எண்ணம் புலிகளுக்கு இருக்கலாம். அவர்களின் கவனம் இப்போது முற்று முழுதாக முல்லைத்தீவுப் பிரதேசத்தின் மீதே இருக்கிறது.

முள்ளியவளையைக் கைப்பற்றியிருக்கின்ற படையினர் ஒட்டுசுட்டானுக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதி ஊடாக வடக்கே முன்னேற முயற்சிக்கின்றனர்.

இன்னொரு பக்கத்தில் படையினர் முல்லைத்தீவை நோக்கி சிலாவத்தைப் பக்கமாக முன்னேற முற்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் படையினரை தடுத்து நிறுத்தத் தவறினால் அது புலிகளின் பிரதான கோட்டையான புதுக்குடியிருப்பைத் தக்க வைப்பது கேள்விக்குள்ளாகிவிடும். இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் கணிப்புப்படி புலிகள் இயக்கத்தில் இன்னமும் 1700 தொடக் கம் 1900பேர் வரையே இருக்கின்றனர்.

அதுவும் தொப்பிகலவை விடவும் சிறிய பிரதேசத்துக்குள் தான் இருப்பதாகவும் இந்த வருட இறுதிக்குள் அவர்களை முற்றாக அழித்துவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இப்போதைய நிலையில் புலிகளின் பலம் ஒன்று குவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எதிர்காலத்தில் நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற சமர்களை அல்லது நிலங்களைப் பிடிக்கின்ற சமர்களை நடத்த முனையமாட்டார்கள். பிரதான இராணுவ அணிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை தொடர்வதே அவர்களின் முதன்மையான இலக்காக இருக்கக்கூடும்.

நிலங்களைக் கைப்பற்றும் சமர்களை செய்யும் திட்டத்தோடு இருந்திருப்பார்களேயானால் கிளிநொச்சி பரந்தனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உச்சகட்ட முன்னுரிமை கொடுத்திருப்

பõர்கள். ஆனால் அது நடக்காததால் அவர்களின் தெரிவு படையினருக்கு எந்தளவுக்கு இழப்பை அதிகளவில் ஏற்படுத்த முடியுமோ அதற்கான உத்திகளைக் கையாள்வதாகவே இருக்கும். புலிகளின் பலம் விசுவமடு, புதுக் குடியிருப்பு, முல்லைத்தீவு பகுதிகளில் ஒன்று குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அடுத்த கட்டமாக அவர்கள் தற்காப்புச் சமர்களைத் தொடரப் போகிறார்களா அல்லது வலிந்த சமர்களை செய்வார்களா என்ற கேள்வி எழுகிறது.

நீண்டகாலத் தற்காப்புச் சமர் என்பது படையினருக்குச் சலிப்பை ஏற்படுத்தும் யுத்தமாக இருந்தாலும் தமது போராளிகளையும் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்களையும் உளவியல் ரீதியாக பலமான நிலையில் வைத்திருக்க அது உதவமாட்டாது, படைத்தரப்பு எப்படியாவது புலிகளின் பிரதேசத்தை கைப்பற்றும் இலக்குடன் முன்னேறி வரும் நிலையில் புலிகளின் அடுத்த முன்னரங்க எல்லைக் கோட்டை அவர்கள் தொடும்போது வெடிக்கப் போகின்ற சமரே சண்டைகளுக்கெல்லாம் தாய்ச் சமராக இருக்கும்.

அது பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாகவோ ஈழப்போரில் திருப்புமுனை களை ஏற்படுத்தக் கூடியதொன்றாகவோ அமையலாம். இந்தச் சமரில் வெற்றியீட்டப் போகின்ற தரப்புக்கு, இலகுவில் தட்டிப் பறிக்க முடியாத இராணுவ மேலாதிக்க நிலை மிகச் சுலபமாகக் கிடைத்துவிடும்.


நன்றி - வீரகேசரி

Read more...

Search Small Business

Book Your Flight , Oil , Coal trading , Small Business , yarn trading , apparel trading , Asia Hotels , Bali Hotels , tourism , Innovation

Try the above or click the below search button with any of the keywords which on your interest.

சேகுவேரா

“எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை
புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான
தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;”

- பொலிவியப் போர்க்களத்தில் "சே" சொன்னது.

_/\_வணக்கம்_/\_

நாமார்க்கும் குடியல்லோம் ,
நமனை அஞ்சோம்.

THIRUKURAL

"The Thirukural, one of the great books of the world, one of those singular emanations of the human heart and spirit which preach positive love and forgiveness and peace....."

The Tamil Contribution to World Civilisation - Czech Professor Dr. Kamil Zvelebil in Tamil Culture - Vol. V, No. 4. October, 1956

Unlock The Camps

Unlock The Camps
A word of thanks for helping to save the innocent

அனுப்பிய வள்ளல்கள்

Netaji


Subhas Chandra Bose'‘..It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.... Freedom is not given, it is taken.. One individual may die for an idea; but that idea will, after his death, incarnate itself in a thousand lives. That is how the wheel of evolution moves on and the ideas and dreams of one nation are bequeathed to the next......

' Netaji Subhas Chandra Bose'

Nelson Mandela's Dock Statement

at the Opening of the Defence case in the Rivonia Trial
Pretoria Supreme Court, 20 April 1964

"..Political division, based on colour, is entirely artificial and, when it disappears, so will the domination of one colour group by another...This then is what the ANC is fighting. Their struggle is a truly national one. It is a struggle of the African people, inspired by their own suffering and their own experience...During my lifetime I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination, and I have fought against black domination. I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. It is an ideal which I hope to live for and to achieve. But if needs be, it is an ideal for which I am prepared to die..."

Nations Without States

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology to respond to the community's needs. His or her job is one of service to society... intellectuals are subversive and construct a discourse which undermines the legitimacy of the current order of things. They denounce the nation's present situation within the state and offer an alternative to it by promoting the conditions and processes of conflict. In so doing they become 'creators and leaders in the production of new state structures, new Gestalts of power and ideology'..."

Nations without States:
Political Communities in a Global Age, by Montserrat Guibernau
Many Quotes are taken from www.tamilnation.org and few other websites with heartful thanks. - Mathi Bala

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP